Tuesday, June 08, 2010

சண்டை

ஓட்டமும் நடையுமாக ஒரு பெண் ரோட்டு திசைநோக்கி சென்றாள். மிக குறைந்த இடைவெளியில் மோட்டார் சைக்கிளில் இருவர் வேகமாய் செல்ல…


சென்றவர்கள் ஒரே இனத்தவர்கள். ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை என்று நினைத்த வேளையில் சத்தம் போட்டப்படியே  ஆண்களும் பெண்களும் ஓடி வந்துகொண்டிருந்தார்கள்.

முப்பது வருசமா இங்க இருக்கோம் இது மாதிரி நடக்கல..
நாங்க மனசுங்க கெடையாத… நீதி நியாயம் கெடையாத…என்று
சத்தம் போட்டப்படியே செல்ல..

போய் கொண்டிருந்த ஆண்கள் இருவரை இடைமறிக்க.. நேத்து எங்க பையன்களுக்கு அவங்க பையன்களுக்கு பிரச்சனை ரெண்டு பேருக்குள்ளேயும் அடிதடி நடந்துருக்குங்க.

இப்பவந்து யாரோ பத்து பேரு வந்துஆம்பள பொம்பளன்னு பாக்காமா அடிக்கிறாங்க அதான் கேஸ் கொடுக்க போறோம்.

அதுகுள்ளாகவே ஊர் பெரியவர்கள் போலீசுக்கு போன் செய்து கிராம பஞ்சாயத்த பேசிக்கிறோம் எப்.ஜ.ஆர் போடவேண்டாம் என்று சொல்ல போலீஸ் சார்கள் அன்றைக்கு கேஸ் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

மறுநாள் காலை  எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் கூட ஆரம்பித்ததுபஞ்சாயத்தார்கள் சிலபோ் பிரச்சனைக்குரிய இரு இனத்தவர்களும் வந்திருந்தார்கள்.



ஓருஇனத்தவர் மட்டும் அதிகமாய் வந்திருந்தார்கள். பஞ்சாயத்து ஆரம்பித்தது இரு தரப்பாரை கூப்பிட்டு விசாரித்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்பம் முதலே ஒருவரை பார்த்து ஒருவர் வேகமாய் பேசி கொள்ள ஆரம்பிக்க…

நீ ஆம்பளயா இப்ப அடிடா பாப்போம் என்று கத்த..

நீ சும்மா இரு எதிர்தரப்பு பதில் சொல்ல..

திடீரென்று இரு இனத்தவர்களும் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள். யார் யார் எங்கு இருக்கிறார்கள். யாரை காப்பாற்றுவது  ? எப்படி அடிபடாமல் தப்பிப்பது என்றே தெரியாமல் போனது?

துரத்தி துரத்தி ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள ஆரம்பித்தார்கள்.   அய்யோ…அய்யா….

அவன  புடிடா …அவன புடிடா….

அய்யா அங்க துரத்தி அடிக்கிறாங்கய்யா….

பொதுவில் உள்ளவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது.

Friday, June 04, 2010

வாத விவாதங்களாய் வாழ்க்கை

வாத விவாதங்களாய்  போகும் வாழ்க்கை.    தலைதூக்கும்  ஈகோ.   தன்னை நினைக்காதவனை நான் நலம் விசாரிப்பதா தங்கையின் வீம்பு. எனக்கு மரியாதை  தராத  நீ இருந்தாலென்ன போனால் என்ன?  தேவை எனக்கு மரியாதை.

கஷ்டப்பட்டுஆளாக்கிய சொத்து அய்யோ  போகிறதே கதறும் அப்பன் கவலைபடாத பிள்ளைகள்.  இப்பதான் தெரியுது நான் செஞ்ச தப்பு புள்ளங்களா சரியா வளக்கல அப்பனின்  புலம்பல்.

குடும்பம் ஆகி புள்ளை பிறந்து தன் தகுதியை நிலை நாட்டாத அண்ணன் அக்கா உறவுகளுக்கு சேவை. வீட்டில் குழப்பம். என்னங்க நம்ம குடும்பத்த பாருங்க? எடீ எனக்கு தெரியுமடீ பதில் சொல்லி  கணவன்.

டேய் நேரம் கிடைச்சப்ப உழைச்சு காசு சேருடா? எல்லாத்துக்கும் உதவும் நண்பனின் புலம்பல் அலட்சியம் செய்தவன் வாழ்வு உழைத்தால் இன்றைக்கு சோறு. எங்கும் வராமல் உழைக்கும் நண்பன்.

கழுகு கண்ணாய் தன் லாபம்  மட்டும் பார்க்கும் பேசும்.பேச்சு  இனிப்பு  மயங்கி விழவைக்கும் கண்கள் பார்த்து சிரிக்கும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் ஓர் கணக்கு நம்பியவர்கள் ஏமாற்றபட்டவர்கள்.  ஒரு வட்டம் போய் அடுத்த வட்டம். அடுத்த வட்டம் போய் இன்னொரு வட்டம்  தொடரும் வாழ்க்கை.

பகுத்தறியும் இது தான் வாழ்வு என்று ஏட்டு படிப்பு வாழ்க்கை .  எதையும் தன்னுள் சிந்தித்து வெளிதள்ளும்  அல்லது தன்னுடன் இணைக்கும். இடம் அடைய  தகுதிகளை உருவாக்கி  இடம் நோக்கி பயணம் ஆகிறது.

வீராப்பு  முன்கோபம் புரிய வைக்க நிறைய பேசி னாலும் நான் சொன்னது தான்  வாழ்வு பிடிவாத வாழ்வு .  நல்லது நிறைய இருந்தும் எடுபடாமல்  போனது.

மனித வாழ்வு நாடகம் நேரங்கள் மாற வேடங்கள் மாறும். விருப்பமா விருப்பம் இல்லையா தேர்ந்தெடுக்க உரிமை கிடையாது வேடங்கள் ஏற்று நடித்து தான் ஆக  வேண்டும். நகம் கடித்து கொண்டிருக்கிறது.


விதி

முள் படுக்கை
ஆயிரம் முட்கூர்களின்
துளைப்பு
வலியில் வாழ்வு
உணர்வில் மயக்கம்
நான்கு கைகள்
யாரோ
கை கால்களை
பிடித்து மேல்தூக்கி
வலி வேதனை
மறக்க திரும்பவும்
முள் படுக்கை
வலியில் வாழ்வு

LinkWithin

Related Posts with Thumbnails