Wednesday, July 14, 2010

குறி பார்க்கும் பிள்ளை



மடித்துப் போன  கீற்றின்
வழியே இறங்கும்
மழைத்துளிகள்
வருசமாகியும் மாற்றப்படாத
வீட்டின் மேற்கூரை
அம்மா சொல்
உணர்த்தியும்
கவலைப்படா அப்பன்
போக்கு
அப்பனுக்கு தப்பாமல்
பிறந்த பிள்ளையின்
போக்கும் அப்பா
வழியே..
கருமேகம் பார்த்தவுடன்
குறி பார்க்கும் பிள்ளை
மழை பெய்யகூடாது
மனதில் எண்ணம்
நான் என்ன செய்ய?
அம்மாவின் திட்டலுக்கு
அப்பாவின் பதில்
பெய்த மழை
நனையாது தப்பிக்க
வீட்டினுள் புலம்பெயர்
 உயிர்ப்புகளாய்..

Saturday, July 10, 2010

நான் யார் ?



நான்  யார் ?   ஊர் எல்லையை  தாண்டி  தோப்புல  இருக்குற   வீரப்பன் மவன்  முனியாண்டி. 

அதான்   நீயா இல்ல வேற  எதாவதுமா ?

அய்யா என்ன கேக்குறியோ? 

இல்லடா நீ சொல்லற முனியாண்டியா   இல்லாட்டி  முனியாண்டின்னு வேறு எதுமா?

வீரப்பன் மவன்தாங்க நான்.

என்னங்க ஆத்தா ஊத்தி தர்ற கஞ்சிய குடிச்சுட்டு வய வேலக்கு போறது. சாங்காலம்   வேல முடிஞ்ச கையோட  வூட்டுக்கு வர்றது இதாங்க வேல..

எல  முனி இந்த மடைய  பாரு…

எல முனி  அந்த வயல தண்ணி கெடக்கா பாரு … வயகாரு கூப்புடறப்ப தெரியுங்க நாந் தான் முனியாண்டி

இத தாண்டி  வேற முனியாண்டிங்கிற எதுங்க ?

நான் யாரு  நம்ம மனசுல கேள்வி கேட்டு கிட்ட  இருந்தா  நீ முனியாண்டி யான்னு சந்தேகம் வந்துறுச்சுன்னா  நீ யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கான முதப்படி சொல்றாங்க

அய்யா சாமி  நாளக்கு  காத்தால  நடவு எல்லா வயலுக்கு தண்ணி பாய்க்கனும்  அதாங்க நமக்கு  எண்ணமா இருக்கு

இதயும்  தாண்டி நான்   கேள்வி கேட்டேன்னா  நாள வவுத்து பாடு சங்கடங்க…

Wednesday, July 07, 2010

சமாதானம்

ஆயிரம் சமாதானங்கள்  சொன்னான். சமாதானம் சொல்லஅவனுடைய மனது   தயாராகவே  இருந்தது.  அவன் செய்த செயல்களால்    துயரங்களுக்கு உள்ளானாலும் திரும்ப திரும்ப  தான் செய்வது சரிதான்  என்று வாதங்கள் புரிந்து  தன்னுடைய வழியே செல்ல ஆரம்பித்தான்.

இவன் உழைப்பால்  மட்டுமே   குடும்ப  நடத்த வேண்டிய  நிலையில் இவனுடைய சமாதானங்கள்  மென்மேலும்  குடும்பத்தினுடைய பலத்தை பலவீனமாக்கி கொண்டிருந்தது.

எடுத்து சொல்பவர்கள் எடுத்து சொன்னார்கள் மௌ    னமாய் அக்கறையாய் கேட்பான்.  ஒன்றை முடிவு செய்து  அவன் வழியில் செல்வான்   கேட்பதற்கும் செய்வதற்கும் தொடர்பே இல்லாது இருக்கும்

வாழ்க்கை  சூழல் நெருக்க ஆரம்பிக்க  அதற்கான   முன் சோதனைகளை தர ஆரம்பிக்க உழைக்க நினைத்தாலும் உழைக்க முடியா சூழல்.

நிற்க வே ஓடுகிறான். சரியாக நிற்கும் வரை ஓடதான் வேண்டும். வாழ்க்கை  வாய்ப்புகளும் காலங்களும் தான் வளமாக்கும். காலங்களையும்  வாய்ப்புகளையும் தவறவிட்டவர்கள்  துன்பபட்டுதான்  ஆகவேண்டும்.

பணம் தான்  வாழ்வாகி விட  பணம் சம்பாதிப்பதற்கான   வழிகள் இருந்தும்  சம்பாத்தியம்  பண்ணாது  வாய்ப்புகள்  வீணாக    துன்பங்கள் நிரந்தரமாக ஆரம்பித்தது.

LinkWithin

Related Posts with Thumbnails