Thursday, March 17, 2011

பயண ங்கள் தொடரும்


விடுமுறை  கிடைக்காத நாட்களில் கிடைத்த விடுமுறை .   நெடுநாட்கள் விடுப்பட்டு போன  வீட்டு வேலைகள் கண்முன்னே அணிவகுத்து நின்றன.

தப்பிக்க நினை த்து காரண ங்கள் சொல்லி நண்பர்களை   தேடுகையில் நண்பர்களுக்கு விடுமுறை  இல்லாதது  அப்பொழுது தான் நினை க்கு வந்தது.

நாம்  தான் செய்யவேண்டும் வீட்டு வேலை களை  கடமை யுணர்ச்சியுடன் ஆ ர்வத்துடன்    வீட்டுவேலை களை  செய்யபுக கடைசியில் கடமையாய் ஆகிப் போன து.

வேலைகளை   முடித்து களை த்து திரும்புகையில் சிரித்த மனை
வியிடம்பதில் சிரிப்பு ம்ம்ம்….என்ன   செய்ய ?

திடீரென்று ஜப்பான்  அழிவில் மனதின் எண்ணஓட்டங்கள்   அ த்தகைய சம்பவம் நடக்கும்  வரை அவர்கள்  அத்தகைய  அழிவை  பற்றி நினை த்திருப்பார்களா…. நடக்கும் நிமிடதுளிகளுக்கு முன் சிரித்தவர்கள்  எத்தனை பேர் நடந்து முடிந்த பிறகு யார் யார் எந்த திசையோ  ? அல்லது சடலங்கள் எந்த திசையோ  ?  இத்தகைய  அழிவை யாருக்காவது  முன்கூட்டியே இயற்கை  உண  ர்த்தியிருக்குமா… தெரிந்தவர்கள் தான் விபரங்கள் சொல்லவேண்டும்.

நாலு  மாதங்களில் நண்பன் ஒருவனுக்கு கல்யாண  ம்.  கல்யாண    மாப்பிள்ளை யின் உழை ப்பில் தந்தைக்கு  மிகுந்த நம்பிக்கைஎங்க நாங்க பொண் பாத்துட்டோம்.. ..

அந்த பயல தாலி வாங்க காசு வச்சுறுக்கானா கேளுங்க என்றார்.

விபரம் தெரிந்த நண்பர்கள் நண்பனிடம் சொல்ல நண்பன் முகத்தில் உண  ர்வுகள் காட்டாது நின்றான். பொறுப்பை அவன் தலையில் கட்டி விட  இனி அவனுடைய  சமார்த்தியம் தான்  அவனுடைய கல்யாணம். நாலு மாதங்கள் வரை  பொறுத்திருக்கலாம் என்று நினை த்திருக்கிறோ ம்.

தெரிந்த நண்பர் வீடு கட்ட முடிவு செய்து தன்னுடைய சொந்த இடத்தில்  வீடு  கட்ட  பண  தேவைக்கு பொண்டாட்டியின்  நகைகளை   கேட்க முதலில் சம்மதம் தெரிவித்து  தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்தபிறகு நகைகளை  தரமுடியாது என்று சண்டைப்போட  நண்பர் ஏகத்துக்கும் அப்செட்.

முதல் கோண  ல் முற்றும் கோண   லாய் தெரிய  என்ன செய்ய உண  ர்ந்து ஒத்துழைக்க வேண்டியவர்கள் மறுத்தால்  காரிய வெற்றி எப்படி என்றுதான் தெரியவில்லை .

தனிமைக்கு விருப்பப்பட்டு அருகில் உள்ள குளம் அ ல்லது வயல்வெளி என்று சென்றால் தெரிந்தவர்களின் ஏன்?  எதற்கு? என்ற கேள்விகளுக்கு பயந்தே பயண  ங்கள் தடைப்படுகின்றன .

ஆ னாலும் பயண  ங்கள் தொடரும் நம்பிக்கையில்.....

Sunday, March 13, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையானது வளரவேண்டிய வகையில் வளரமுடிவதில்லை . ஏனென்றால் பெரியவர்கள் அவனை   ஒடு்க்குகின்றனர். ” பெரியவர்கள்” என்பது உருவமற்ற பொ துப் பண்புப்பெயர். குழந்தையானது சமுதாயத்தில் ஓர் தனியன் . பெரியவ ர்கள் குழந்தையை    மாற்றுகின்றனர் என்னும்போது பெரியவர்கள்  என்பது குழந்தையைச் சூழ்ந்திருக்கும் பெரியவர்களையே குறிக்கும் .

முதல் பெரியவர் தாய். பிறகு தந்தை. பிறகு ஆ சிரியர் ஆ வர். குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து முன்னேறச் செய்யவேண்டிய ஒரு பெரும் பொ றுப்பைச் சமூகம் பெரியவர்களுக்குக் கொ டுத்திருக்கிறது.

பெரியவர்கள் என்ன  செய்கினறார்கள்?  தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து நல்வழியில் முன்னேற்ற எவ்வளவோ   முயற்சி செய்கின்றனர். இப்படி முயற்சி செய்யும்போது பெரியசிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன்? தாங்கள் தமக்குள்ளே அடைத்து வைத்திருக்கின்ற பல குற்றங்களை த் தாமே அறியாததனால் தான். 


குழந்தையிடம் தற்காலம்   நாம் நடந்துகொ ள்ளும் முறையை விட்டுவிட்டு  வேறுவிதமாக நடந்துகொ ள்ள வேண்டும். இதற்கு முதலில் செய்யவேண்டியது பெரியவர்களின் மாறுதல்  ஆகும்.

குழந்தையிடம் கூட நமக்குத் தெரியாதது எவ்வளவோ   இருக்கிறது. அதை நாம் அறியவேண்டும்.  குழந்தயை  உள்ளது உள்ள படி காணமுடியாத ஒருகுறை தன்னுள் இதுவரை இருந்து வருவதை  உணரவேண்டும்.

குழந்தையைப் பொறுத்தமட்டில் பெரியவனாவன் தன்னை  வைத்தே பிறரை மதிப்பவன் ஆ கிவிடுகிறான். குழந்தை  உள்ளத்தைப்  பாதிக்கும்  ஒவ்வொ  ன்றையும் தன்னை  அது  எவ்வாறு பாதிக்கிறதென்றே கவனித்து வருகிறான்.  இந்தக் கொ ள்கையால் தான் குழந்தையை ஓர் வெற்றுப்பொருள் என்று கருதி தான் நல்லதுஎன்று கருதுவதை எல்லாம் குழந்தையிடம் நிறைத்து வைக்கமுயல்கிறான்.

பெரியவர்கள் தான்  நன்மை  தீமைக்கு உரைகல். பெரியவர் குற்றமே   செய்யமுடியாதவர். குழந்தை அவரைப்பார்த்துத் தான் தன்னை நல்லவனாக்கிக்கொ ள்ளவேண்டும் என்ற  இத்தகைய  மனப்பான்மையைக் கொ ள்ளும்போது  நம்மை அறியாமலே நாம் குழந்தையின் தன்மையை   அழித்துவிடுகிறோ ம்.  

Saturday, March 12, 2011

புகைப்படதொகுப்பு

சுமைதாங்கி

உழைப்பு

கடமையும் பேசியும்

பிஞ்சு

மாலையும் விளையாட்டும்

LinkWithin

Related Posts with Thumbnails