Tuesday, November 03, 2015
Friday, October 30, 2015
எதிர்கால பயம்
பள்ளிவிழா மரக்கன்றுகள் இலவசமாய்வழங்கினார்கள்
மரக்கன்றுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கவேண்டும் என்பதற்காகவே பள்ளிதலைமையாசிரியர்
பாடுப்பட்டுசெம்மரக்கன்றுகள்சந்தனமரக்கன்றுகள் தருவித்திருந்தார்.
மரக்கன்றுகளை
வாங்கியவர்களில் ஒருவனுக்கு ஏனோ ஒரு
எண்ணம் உதித்தது.
மரக்கன்றை
நாம் நட்டு வளர்த்துவிடலாம். பதினைந்து வருடம்
கழித்து பல லட்சம் விலைபோகும் மரங்கள் இவை.
பயன்
தரும் நேரத்தில் எவனாவது வெட்டி சென்றால் என்ன செய்வது?
இந்த
கன்றை வைத்து கண்முழித்தா பாதுகாக்க முடியும் மனம் தன்போக்கில் ஒரு வாதம் வைக்க..
போடா…மடபய
மவனே..போயி குழி தோண்டு செடிய வையி..அப்புறம் பாத்துகலாம் இன்னொரு வாதம்.
வாங்கியாச்சு
வைச்சுதானே ஆகனும் என்று தனக்குள் சொல்லி..
கொல்லை
இடம் தேடி குழிபறித்து நட்டான்.
செடி
மண்ணில் வேர்ஊன்றி தன் வளர்ச்சிக்காக காத்துகிடக்க…
இரு
நாட்கள் கழித்து இணையம் நோண்டுகையில் ஒரு செய்தி.
கோவையில்கொல்லையில்
வளர்த்த சந்தனமரம் திருட்டு என்று
செய்தியின்
இணைப்புக்கான URL
அட
பாவியலா..இவன் நினைச்சது சரியாப்போச்சே…
இனி
பயப்புட்டு என்ன செய்யப்போறோம் .
மொதல்ல
மரம் வளர்ப்போம்..அப்புறம் பாதுகாப்போம் சொல்லிட்டு ..
தன்
வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
Labels:
அனுபவம்,
எண்ணங்கள்,
எதிர்பார்ப்பு
Wednesday, October 28, 2015
முகம் மாறிய சாலை
NH 67
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன லேசாய் மழை துாரல் ஆரம்பிக்க ..
போகலாமா? வேண்டாமா...மனதின் போராட்டம்.
ஆங்...அதான் வழி நெடுக மரமா இருக்குண்ணா..அப்படியே ஒண்டி ஒண்டிக்கிட்டே ஊர் போய் சேரலாம்.
கௌம்புங்க.. நண்பர் விரட்டினார்.
பசுமையான மரக்குகை முன்விரிய மழைதுாரல்கள் இடைய வண்டி பயணித்தது.
இந்தியா கடன்காரர்களின் உலகம் ஆகிவிட்டது. என்னையும் சேர்த்துதான்.
கடனில் ஓடும் இருசக்கரவாகனங்கள் நாற்சக்கர வாகனங்களின் பெருக்கம்
சாலை மூச்சு முட்டியது.
தங்கநாற்கர சாலை விரிவுபடுத்தும் திட்டத்தில் NH67 சிக்கிக்கொள்ள கணக்கெடுத்தார்கள் .
எத்தனை தலைமுறைகளை பார்த்த மரங்கள் நிழல் பரப்பின பயன் தந்தன உருப்படாத சாலை விரிவாக்க திட்டத்தில் மண்ணில் வீழ்ந்தன.
ஒரே நாளில் முழுமரமும் அடியோடு வெட்டப்பட்டு வழிநெடுகலும் வீழ்ந்து கிடக்க பதைத்த மனங்களில் என் மனமும் ஒன்று.
மரம் வெட்டாது திட்டங்கள் போடமாட்டார்களா..?
வெட்டப்பட்ட மரங்கள் ஏற்றியவுடன் வெறிச்சோடி கிடந்த சாலையின் முகம் மாறியது.
பயணத்தின் இடையே இளைப்பாறி செல்ல நிழல் தந்த மரங்கள் காணாமல் போக வெயிலே நிழலாய் பயணங்கள் தொடரும்.

Subscribe to:
Posts (Atom)