Thursday, December 03, 2015

பெய் மழையே பெய்




பெய் மழையே பெய்

பெய்து
உருவாக்கினாய்தடம்

மனிதர்களின் ஆசை
அழிந்ததடங்கள்

வீதிகள் ஆறாகின
குடியிருப்பு குளமாகியது

உன் தடத்தில்
அரசியல்
உன்தடம் தடுமாறிப்போனது

மக்கள்
மாக்கள் ஆகி
திரியத்தான்

அரசியலும்
அரசியல் கட்சிகளும்

பெய் மழையே பெய்
நீ இயற்கை

மனித நாகரீகத்தால்
நலிவடைந்த
உன் வழித்தடங்கள்

வீதி ஆறுகளும்
குடியிருப்பு குளங்களும்
இயற்கையே…

Wednesday, December 02, 2015

லாரி ஏற்றியும் உடையாத மோட்டோ X FORCE கைப்பேசி

மோட்ரோலா நிறுவனம் மூன்று வருட ஆராய்ச்சி முடிவில் லாாி ஏற்றியும் உடையாத தொடு திரை கைப்பேசி  தயாரித்துள்ளது.

5.4 இன்ச்   தொடுதிரையின் அளவு 5 அடுக்குகளால் உருவாக்கப்பட்டது.

தூக்கி எறிந்தும் , லாரி ஏற்றியும் பரிசோதனை செய்துபார்ததில்   மோட்டோ கைப்பேசி உடையவில்லை.




Tuesday, December 01, 2015

மாஸ்டர் ஆப் வாய்ஸ் E.M.நாகூர் ஹனீபா

சில நாட்களுக்கு முன் “ இறைவனிடம் கையேந்துங்கள்”  ஹனீபா பாடலைக் கேட்டேன்.

காந்தக் குரலோன். அடுத்த அடுத்த நாட்களில் திரும்ப திரும்ப மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

வீட்டில் இருக்கும்பொழுதும் முணுமுணுத்தபடியே இருந்தேன்.

சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் முஸ்லீம் அன்பர்கள் திருமணம் என்றால் இவருடைய பாடல்கள் முதல் நாளிலிருந்தே  ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

இப்பொழுது  யாரும் திருமணங்களுக்கு பாடல்கள் போடுவதில்லை.
காலம் மாற்றங்களில் கரைந்துப்போன சடங்காய்  அவருடைய குரலையும் கேட்டு நாட்களாகிவிட்டது.

தனிமையில் இருந்துகொண்டு தூரத்தில் அமர்ந்து கேட்கையில்  ஆகா ..அற்புதம் தான்  இவருடைய பாடல்கள்.

இசையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

மிகவும் பிடித்தப்பாடல்கள்

இறைவனிடம் கையேந்துங்கள்..


அருள்மழை பொழிவாய் ரஹ்மானே...




LinkWithin

Related Posts with Thumbnails