Thursday, October 29, 2009

பெண்-2- சித்தினி

பிடியானைப்போலும் என்று உவமிக்குமாறு நடக்கும் தளர்ந்த அசைந்த நடையும் பெண்மையின் பண்புகள் மிகுதியாக அமைந்திருக்கின்ற பண்பும் மென்கொடி போலத்தளர்ந்து ஓசிகின்ற அழகுமிக்க திருமேனியும் வலம்புரிச் சங்கு போன்று விளங்கும் கழுத்தும் எப்போதுமே நன்மை விளைவிக்க கூடியதான சொற்களை பேசும் இயல்பும் நடனம் இசை ஆகிய கலைகளில் ஈடுபாடும் உயர்ந்த இதழ்களும் உயரமோ குட்டையோ என்று சொல்ல இயலாதபடி நடுத்தரமாக விளங்கும் தோற்றமும் சுருக்கமாக உண்ணும் இயல்பும் இனிமையான சுவைப் பண்டங்களை விரும்பும் விருப்பமும் சித்திர வேலைப்பாடுகளில் நிறைந்த ஆடைகளை விரும்பும் தன்மையும் உடையவள்.

இது சித்தினி வகை.

Tuesday, October 27, 2009

பெண் -1- பத்மினி

பெண்களில் நான்கு வகை பத்மினி , சித்தினி , சங்கினி , அத்தினி என்று வகைப்படுத்தபட்டுள்ளனர்.

செண்பக மலரோ என்று சொல்லும்படியான சிவந்த மேனி வண்ணமும் பண்பட்ட சொற்களையே பேசும் இயல்பும் எப்போதும் பொய்மையே கலவாத வாய்மையும் பிறர் கண்பார்வையிலே வீழ்ந்தரியாத கானகத்து மானைப்போன்ற மிரண்ட சுபாவமும் உடைய மாதர்கள்.

அறிவழகு உடையவரான சான்றோரையும் வேதசாஸ்திர விற்பன்னர்களையும் பல பல தேவர்களையும் உள்ளத்து அன்புடன் பணிந்து போற்றும் பக்தியும் எள்ளுச் செடியிலே விளங்கும் புத்தம்புது மலர் போன்று விளங்கும் மூக்கினையும் நடைபழகும் பிள்ளைப்போல வெள்ளையன்னம் போன்று தளர்ந்தசையும் நடையும் வெண்மையான மெல்லிய ஆடைகளிலும் வெண்மையான மலர்களிலும் விருப்பம் தூயதும் இனிய சுவை நிறைந்ததுமான உணவினைச் சிறுகவே உண்ணும் இயல்பும் ஒளிரும் வாள் போன்ற ஒளி வீசும் நெற்றியுடையவள்.

இது பத்மினி வகை.

அவனின் நினைவுகளால் அவள் …




















சொன்னவன் சொல்லி சென்றவன் அவன் நினைவுகளை என்னோடு விட்டு சென்றவன். அவனின் நினைவுகளால் அவன் இல்லா நேரங்களை சமன் செய்ய தூரம் சென்றவனின் முகம் வாட்டி வதைக்க வாடிநின்றவளின் முகம் வேதனைகளை வெளிப்படுத்தியது.

அவனோடு உரையாட எதிர்பார்த்தவளின் பரிதவிப்பு ஒற்றைகால் கொக்காய் அவனின் வருகை நோக்கி என்னுடைய எதிர்பார்ப்பு.

வந்தவன் வரும்போதே கண்களால் பேச அர்த்தங்களை அகராதியில் தேடியப்படியே என்னிடம்அவனதுஉரையாடல் நேரங்களால் நிரம்பிபோன மனது.

நிரம்பியமனது உரையாட வார்த்தைகள் இல்லாது பிரிய எத்தனிக்க பிரிந்து போய் திரும்பவும் பேச எத்தனித்த என் மனது. அவனின் மனதும் .

தனிமையின் இருப்புகளில் ஒருவரோடு ஒருவர் மனதுகளில் உரையாடியப்படியே செயல்கள்பைத்தியம் .

அவனின் நினைவுகளால் நான் …

LinkWithin

Related Posts with Thumbnails