Thursday, June 20, 2013
Wednesday, June 19, 2013
உள்ளுர் மனிதர்கள் முதல் உலகநாடுகள் வரை ஒற்றாடல்
கடந்த
சில நாட்களாக பத்திரிக்கைகளில் அமெரிக்க அரசின்
உளவு துறை உளவுவேலைகளின் உண்மை தன்மை போட்டுடைத்த சிஐஏவின் முன்னாள்
பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென்முக்கிய செய்தியாகி போனார்.
ஜி8 நாடுகளின் தலைவர்களை பிரிட்டன் உளவு
பார்த்ததையும் அவரே போட்டுடைக்க… அரசுகளின் ராஜதந்திரங்களில் உளவு மிக முக்கியம்.
திருவள்ளுவர்
மிக அழகாக..
”ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.”
பொருள்
ஒற்றரால்(நாட்டு நிகழ்ச்சிகளை ) அறிந்து அவற்றின்
பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழிவேறு இல்லை.
உலகநாடுகள்
முதல் சாதாரண மனிதர்கள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. உளவு பார்த்து சொல்லப்படும்
செய்திகள் பொறுத்தே அவற்றுக்கான முக்கியதுவம் அளிக்கப்பட இடைவெளியே இல்லாது
ஒற்றாடல் என்பது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
எங்கள்
கிராமங்களில் ஒற்றாடல் என்பது பெண்களிடத்தில் தான் இயல்பாக குறிப்பிட்ட
வீடுகளுக்கு சென்று நடக்கும் நிகழ்வுகள் பேசப்படும் செய்திகளை அனுமானித்து பிறர் செய்தி வாங்குபவரிடம் இலவசமாய் செய்திகள்
சொல்லப்படும்.
அவை
தகுந்தநேரத்தில் செய்திக்கு உரியவர்களிடம் சொல்லப்படும்.
அதனால்
இன்றளவும் குடும்பபெண்களிடத்திலிருந்து குடும்பத்தினுடையஆண்களுக்கு செய்திகள்
சொல்லப்பட்டு கொண்டேயிருக்கும்.
செய்திகளின்
தன்மை பெரும்பாலும் கள்ளஉறவுகள் குடும்பசண்டைகள் பற்றியே சுழலும்.
ஓராயிரம்
நபர்களின் பாதுகாப்பில் மேலும் மேலும் பிரச்சனைகள் ஏற்படும்போது தனிமனிதர்களின்
தகவல்கள் மிக தீவிரமாய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
சரியா…தவறா….அவரவர்களின்
பார்வையை பொறுத்தது.
ஓர்
சிறந்த அரசின் ஒற்றாடல் கள் இப்படிதான் இருக்கவேண்டும் என இலக்கணம் வகுக்கும்
வள்ளுவர்.
”எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.”
Monday, June 17, 2013
நின்றுபோன இணையம்
எங்கள்
நிறுவனத்தில் பயன்பாட்டில் உள்ள இணைய
இணைப்பு பி.எஸ்.என்.எல் பிராட் பேண்ட் கேபிள் வரும் வழிதடத்தில் சீரமைப்பு
பணியின்போது எங்கள் தொலைப்பேசி அலுவலகத்துக்கு வரும் முக்கியகேபிள்
அறுந்துபோக ஊரினுடைய இணைய தகவல் தொடர்புகள் நின்றுபோயின.
வேலைக்கு
வந்தவுடன் செய்திதாள்கள் வாங்கினாலும் இணையத்தில் செய்திகள் வாசித்தால் தான்
திருப்தியாய் மனதை உணர முடிந்த கட்டாயம்.
அடிக்கடி
கண்பார்வை மோடம் பக்கம் திரும்பிகொண்டேயிருந்தது. நெட் கிடைக்கலையா…நெட்
கிடைக்கலையா நிறுவனத்தில் அவ்வப்போது எதிரொலித்ததை தவிர்க்கமுடியவில்லை.
நெட்
அலுவலகத்தை தொடர்புகொண்டால் முக்கியமான கேபிள் அறுந்து போயுள்ளது சரி செய்கிறார்கள்
என்றபதிலில் திருப்தி அடையவேண்டியிருந்தது.
முகம்
பார்க்க நட்புகளின் எண்ணங்களையும் கருத்துகளையும் அடைய முடியவில்லை. இணைய
ரீதியான விண்ணப்பபடிவங்களின் தகுதி நிலைமையை சரிபார்க்க முடியாமல் அவதி
க்குள்ளானோம்.
இரண்டுநாட்களும்
வராந்திர பத்திரிக்கைகள் தினசரிகளும் எங்கள் செய்திபசிக்கு உணவாயின.
கிடைத்த
வசதி நின்றுபோகையில் அதனால் ஆன
சிறுபாதிப்புகள் இருக்கவே செய்தது.
Subscribe to:
Posts (Atom)
























