Friday, April 03, 2009

ஆதரவு தரவேண்டியவர்களே மிதித்தால்

மிகுந்த மன உளைச்சலில் இருந்தான் அவன்.

பெரிய குடும்பம் அது. பெண்கள் இரண்டு பையன்கள் இரண்டு அப்பா வகையில் பயன் ஒன்றும் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கிடையே வாழ்க்கை நகர்ந்தது.

கறவை மாடு , மாடு சார்ந்த தொழிலும் தான் அவர்களின் வாழ்க்கைக்கு உதவியது. இவன் சிறுவயதிலேயே பதினைந்து வருடம் வெளியூர் சென்று வேலை ப்பார்த்து பெண்களை ஒருவாறு கரையேற்றினான்.

இவனுக்கு திருமணம் ஆனது. இடையில் இவனுடைய அப்பாவும் போய் சேர்ந்து விட குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லாததால் வேலையை விட்டு சொந்த ஊர் வந்து சேர்ந்தான். தம்பி வெளிநாட்டில் இருக்கிறான்.

இவனுடைய மனைவிக்கும் அம்மாவுக்கும் ஆகாமல் போனது. யார் இவனுக்கு ஆதரவு தர வேண்டுமோ அவர்களே வீம்பு பிடித்தார்கள்.தனி சமையல் ஒத்துழையாமை இயக்கம்.

எந்த பக்கம் பேசுவது தெரியாது நிம்மதியை தேடினான் இவன்.

Thursday, April 02, 2009

அன்புள்ள காதலா அன்புடன் 6

எனக்காய்
அவன் விடுத்த
பழக்கங்கள்

அவன் அன்பை
கண்டுபிடிக்கும்
எனது ஆவல்

நான்
இன்னமும் தடைகள்
போட்டப்படி

அவனும்
பொறுமையாய்
மிகப் பொறுமையாய்

எனக்குள்
கேள்வி மட்டும்
ஓன்று

அவன்
விரும்ப என்னிடம்
என்ன?

விடை
தெரியா வினாவாய்
என்னுள்

நிசம் அழைக்க
என் பாதங்களின்
பயணம்

அவன்
காத்திருக்கும்
இடம் நோக்கி..

அவனில்….

Wednesday, April 01, 2009

வயதுகேற்ற ஆசைகள் அதிகம் துடிப்பு அதிகம்.

எப்பா தூங்கிறதா திருச்சிக்கு அதிகாலையிலே வந்துர்றாங்க நீ மட்டும் போய் அழைச்சிட்டு வரணும் என்ன..

சரிண்ண நான் போய் அழைச்சிட்டு வர்றேண்ண..

அந்த அதிகாலை மூடுபனி எதிர் வரும் வண்டிகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை.

அரசாங்க பேருந்து ஒன்றின் மீது இவன் ஓட்டி சென்ற டாடா சுமோ மோதியது. மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் இறந்து போனான்.

வருத்தங்களை தன் மனதோடு வைத்து வெளியில் சிரித்தபடியே பேசுவான். வயது இருபது. வயதுகேற்ற ஆசைகள் அதிகம் துடிப்பு அதிகம்.

எல்லோரும் போல படிக்கதான் ஆசை . வறுமை வந்துவிட்டால் வயிற்றுக்கான பிழைப்பே பிரதானம்.வீட்டின் வறுமை தொழில் கற்று டிரைவர் ஆனான்.

ஓரிரு வருடங்கள் தான் முழுடிரைவர் ஆனான்.விதி தன் பணியை செவ்வனவே செய்துவிட்டது.

வறுமையை இவன் விரட்டினானா அல்லது இவனை வறுமை வாழ்க்கை விட்டே விரட்டியதா தெரியவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails