Wednesday, April 29, 2009

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய குடும்பம்.


அவருக்கு உடல்நிலை சரியில்லாத போனது. மிக மோசமாக உடல் நிலை பாதிக்கபட்டது. மருத்துவரிடம் காட்டி சரி செய்தார்கள்.

ஒரு மாத இடைவெளி திரும்பவும் வீட்டு தலைவருக்கு உடல்நிலை சரியில்லாத போனது. திரும்பவும் மருத்துவர் கூடுதலாக ஜாதகம் பார்க்கப்பட்டது.

ஜாதகம் பார்த்தவர் கோவில் ஒன்றுக்கு பரிகாரம் வீட்டை வாஸ்து பார்க்கவேண்டும் சொல்லிவிட்டு தன் பணியை முடித்து கொண்டார்.

வாஸ்து பார்ப்பவர் அழைத்து வரப்பட்டார். வாஸ்து கணிப்பவர் வந்தார் வீட்டு நிலை சரியில்லை சமையல் செய்யும் இடம் அமைந்தது சரியில்லை அதை மாற்றிவிடுங்கள் என்று கூறி தனக்குரிய தொகையை பெற்றுக்கொண்டு தன் பணியை செவ்வனவே செய்ய வீட்டின் நிலையை மாற்றி அமைக்க நிலையை பெயர்த்தார்கள் பழைய வீடு அது நிலையோடு சேர்ந்திருந்த சுவரும் சேர்ந்து விழ சுவரையும் புதிததாக கட்ட வேண்டிய நிலைமை.

பார்த்தார்கள் வீட்டையும் புதிததாக கட்டிவிட்டார்கள். மருத்துவ செலவு வீட்டு செலவு என பொருளாதார நெருக்கடியில் சிக்கியது குடும்பம். மன அமைதியை தேட வேண்டிய ஒன்றாக இருந்தது.

வீட்டிற்கு குடிப்போனார்கள் போன கொஞ்ச நாட்களில் திரும்பவும் வீட்டு தலைவருக்குஉடல்நிலை சரியில்லாமல் போனது.

வேறு இடம் போய் விடலமா என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ நல்லது கெட்டது இரண்டையுமே பார்த்த வீடு இன்று சரியில்லாமல் போனது.

காரணம் மனித மனமா அல்லது வீட்டின் கெட்ட காலமா..

Monday, April 27, 2009

முகம் பார்க்க காசு நஷ்டம்

அந்த பகுதியில் பிரபலமான கடை தேநீர் அருந்த வடை பஜ்ஜி சாப்பிட ..

அண்ணா ஒரு டீ வடை ஒன்னு கொடுங்க என்றான்.

வடையும் டீயும் வந்தது. வடை எடுத்து ஒரு கடி அவன் முகம் உடனே சுருங்கியது.

அண்ணா ஒரே உப்புண்ணா என்று சாப்பிடமால் ஒதுக்கி வைத்துவிட்டு தேநீர் அருந்தி முடித்தான்.

காசு கொடுக்க கல்லா பெட்டி அருகே சென்றான். எவ்வளவு காசு என்றான் டீ வடையும் சேர்த்து ஆறு ரூபா கொடுங்க என்றார் கடை முதலாளி.

வடைக்கு சேத்துமாண்ண காசு என்றான் .

ஆமாம் என்றார். இன்னக்கு உப்பு அதிகமாயிடுச்சுப்பா என்றார்.

எண்ண உங்களுக்கு உப்பு அதிகமுன்னு முன்னடியே தெரியுமில்லே சொல்லவேண்டியதானே என்றான்.

முதலாளி ஒன்றும் சொல்லவில்லை.

அவன் தினமும் டீ அருந்தும் கடை நல்ல பழக்கவழக்கம்.
ஒன்றும் சொல்ல முடியாமல் வடைக்கும் சோ்த்து காசு கொடுத்தான்.

முகம் பார்க்க காசு நஷ்டம் இவனுக்கு ஆன செலவை ஈடுகட்ட விற்பனை செய்யும் கடை முதலாளி என்ன செய்ய..

Sunday, April 26, 2009

காதல் அன்பு பாசத்திற்கு அர்த்தமாகுமா?

ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காத சுயநல எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தொடர்நிகழ்வு காதலாகிறது.

எனக்குரியவள் அல்லது எனக்குரியவன் என்ற பற்றுதலுடன் செய்யப்படும் செயல்கள் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகள் தான் காதலில் நிகழும் அன்பாக கருதப்படுகிறது.

எவ்வாறு இருந்தாலும் இருவருக்கு உட்பட்டே எல்லா நிகழ்வுகளும் எல்லா பகிர்தலும் எல்லைகளுக்கு உட்பட்டே நிகழ்வதால் காதலை வேண்டுமானால் பாசத்திற்கு உட்படுத்தலாம்.

எல்லாவற்றிலும் அன்பு தானாகவே நிகழும். பாசத்தினுடைய முற்றிய நிலை தான் அன்பு.

காதல் என்றால் காமம் என்று சொல்லும் இந்த சமுதாயத்தில் காதல் அன்பு பாசத்திற்கு அர்த்தமாகுமா தெரியவில்லை?

LinkWithin

Related Posts with Thumbnails