Monday, December 28, 2009

தேவ ராஜதந்திரமும் அரக்கமுட்டாள் தனமும்.

மார்கழி மாதம் காலையிலே ஆன்மீக பிரசங்கி ஒருவா் கோவிலில் பிரசங்கம் செய்தார். விரதங்கள் வழிபாடுகள் பற்றிய கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

அதில் தேவர்கள் அமிர்தம் வேண்டி கடலை கடைய ஆட்கள் நிறைய தேவைப்பட்டார்களாம். தேவர்களை விட தாண்டி அரக்கர்கள் நிறையப் பேர் இருக்க அவர்களுடைய சக்தியை பயன்படுத்தி கொள்வதற்காக கடலை கடைந்தவுடன் கிடைக்கும் அமிர்தத்தில் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுகடலை கடைந்தார்கள்.

அமிர்தம் வந்தது. மரணத்தை வெல்லகூடிய அந்த மருந்தை தேவர்கள் மட்டுமே உண்ண விரும்பி தேவர் ஒருவர்பெண் வேடமிட்டு அரக்கர்களை ஏமாற்றி அவர்களே அமிர்தத்தை உண்டதாக புராணம்.

என்ன அநியாயம் ?

அமிர்தம் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு பாதி தராமல் ஏமாற்றியது ராஜதந்திரம்.

அதைப்பெறாமல் பெண்பித்தர்களாய் அலைந்து அமிர்தத்தை இழந்தது அரக்கர்களின் முட்டாள்தனம்.

கொஞ்சமும் புரியாமல் அய்யா தாங்கள் இப்போது சொன்ன அல்லது படித்த மேற் சொன்ன கதைக்கு என்ன அர்த்தம் என்று கேட்க...

நல்லது இப்படிதான் நடக்கும் என்பதற்கு உதாரணம் தேவர்களும் கெடுதல் செய்பவர்கள்கெட்டு அழிந்து போவதற்கு உதாரணமாகஅரக்கர்களை காட்டுகிறார்கள் என்று சொல்ல கொஞ்சம் தலை சுற்றியது.

இந்த கதைக்கு வேறு காரணம் ஏதோ இருக்க அவர் அவர்களுக்கு தோன்றியப்படிகாரணங்களை உருவாக்கி கொள்வதுதான் ஆன்மீகமா தெரியவில்லை.

Friday, December 25, 2009

ஓர் மாலைப்பொழுது














வெள்ளை மேகங்கள்

நிறைந்த வானம்

திட்டு திட்டாய்

இடை இடையே

கரு மேகங்களின்

தலைக்காட்டல்

சூரியன் மறைந்து

போன மாலை

காற்றசைவு இல்லா

மரங்களின் இருப்பு

பறந்து போன

காக்கைகள்

பறந்து அமர்ந்த

அத்துப் பூச்சி

இருட்டிய மாலை

இரைத்தேடிய

ஒற்றை கழுகு

Tuesday, December 22, 2009

நாட்டு கோழி

பெரிய இடம் பேரனுக்கு பொறந்த நாள் கொண்டாடினாங்க. குறிப்பிட்ட ஒரு நூறு பேருக்கு வாழ்த்த இல்லீங்க சாப்பிடஅழைத்தார்கள்.

பிரியாணி தயிர்சாதம் இனிப்பு பச்சடி நாட்டு கோழி வறுவல் முட்டை சாப்பாட்டு வகையறா முடிவு செய்யப்பட்டு சமையல்காரர் சமைக்க தேடப்பட்டார்.

சொந்த ஊரில் நன்றாக பிரியாணி செய்பவரிடம் கேட்டார்கள். எப்பா நாலு மரக்கா பிரியாணி...ஒரு மரக்கா தயிர் சாதம்..பாக்கி வகையறா செய்யனும் எவ்வளப்பா கேட்டார்கள்.

சமையல்காரர் ஆயிரம் ரூபா கொடுங்க என்று கேட்க..

இந்தாப்பா நூறு ரூபா புடி வந்து பேசிக்குவோம் .

எப்பங்க சமைக்கனும் கரெக்டா ஞாயிற்று கெழம வந்துருப்பா..

சரிங்க என்று சமையல்காரர் அகல..

ஞாயிறு அன்று பிரியாணி சமைக்கப்பட்டு வீட்டுகாரரிடம் ஒப்படைத்துவிட்டு சமையல்காரர் கிளம்பினார்.

நான் வறேங்க...

எவ்வளோ வாங்கியிருக்க..

நூறு ரூபா கொடுத்தீஙக..

இந்தா பாக்கி நாலு நூறு மடித்து கொடுக்க..

சமையல்காரர் அதிர்ந்து என்னங்க..

வச்சுகப்பா போதும்.

அதெல்லாம் கட்டுபுடியாவது கொடுங்க என்று கேட்க.. ஏதோ வேணுமுன்னா நூறு குறைச்சிகிட்டு பாக்கிய கொடு சார்.

தெரிஞ்சவர் கூப்பிட்டா நீ என்னப்பா இந்தா மேலும் ஐம்பது கொடுக்கப்பட..

என்னமோ போங்க உழைக்கறவனுக்கு காலம் கெடையாது சார் ஏமாத்தறவனுக்குதான் காலம். இன்னம் கொடு சார் என்று கேட்க..

உன்ன வந்து கூப்பிட்டாருல அவர வரசொல்றேன் பேசிகி்ப்பா என்று நகர்ந்தார்.

காசு இருந்து என்ன பண்ண மனசு இல்லயே என்று மனதில் நினைத்தப்படி இடம் அகன்றார் சமையல்காரர்.

LinkWithin

Related Posts with Thumbnails