முதல் நாள் திருமணத்துக்கு போக முடியவில்லை. மறுநாள் வரவேற்புக்கு சென்றான். அன்றைக்கு கறி விருந்து. திருமணம் இவனுடைய நண்பனுக்கு பெண் வீ்ட்டிலிருந்து வந்திருந்தார்கள்.
கறி விருந்து என்றாலே மது யாராவது வாங்கி கொடுத்துவிட வேண்டும் இல்லாவிடில் மாப்பிள்ளை அதற்காக செலவு செய்ய வேண்டும் இது எழுதபடாத விதி.
செலவு செய்யவில்லையென்றால் நாங்களும் போய் எவ்வளவோ கரைச்சு பாத்தோம் கரைய மாட்டேங்கிறான் என்று சொல்வார்கள். இன்னம் சில போ் சேர்ந்து குடிக்கறப்ப நல்ல குடிச்சான் இவன் செலவு பண்ணமாட்டேங்கிறான் கஞ்ச பய என்பார்கள்.
இதற்கு பயந்தே கல்யாண பட்ஜெட்டில் இதற்குரிய தொகை உண்டு.
வரவேற்புக்கு வருவோம்.
பெண் வீட்டாரில் இருவர் குடித்துவிட்டு பந்தியில் அமர்ந்தார்கள் கோழிகறி கப்பில் வைத்திருந்தார்கள். ஆளுக்கு ஒரு கப் காலி செய்தார்கள்.
பந்தி வாடிப்பவரிடம் நான் பெண் வீட்டுகாரன் இன்னும் ரெண்டு கப் கோழிகறி கொண்டு வாருங்கள் என்று சொல்ல அவரும் வாங்கி வைக்க அதுவும் காலி.
குடித்த இருவரும் திரும்பவும் கேட்க வைப்பவர் ஒதுங்கி கொண்டார். இப்பொழுது மாப்பிள்ளை அண்ணன் கொண்டு வைத்து வைக்க அதுவும் காலி .
திரும்பவும் என பத்து முறை புது சொந்தம் சாப்பாட்டினால் முரண்பாடுகள் உருவாகி விட கூடாது என மாப்பிள்ளை அண்ணன் பொறுமையாய் கொண்டு வந்து வைத்தபடி இருந்தார்.
அதற்குள் இரண்டு பந்திகள் முடிந்தது.
இப்படியும் மனிதர்கள்.
No comments:
Post a Comment