கருமேகங்கள்
ஒளி மறைக்க
இருண்ட காலை
இன்னமும் விடியவில்லை
சினுங்கிய பிள்ளை
பறவைகளின் சப்தம்
எட்டி ஒலித்த
பால்காரரின் குரல்
விடியாத காலையை
விடிந்ததாக சொல்ல
விரைவாய் வெளியேறிய
காற்றின் சப்தத்துடன்
வருகையை உணர்த்திய
குடிநீர் குழாய்
அம்மாவின் வேகம்
அதிகரிக்க
நிரம்பி வழியும்
குடம்
பொங்கி வழியும்
பால் பாத்திரம்
வினாடிகள் திகைத்து
அடுப்பு நோக்கி
விரையும் கால்கள்
துணிபிடித்து
இறக்கிய கையுடன்
குரல் கொடுக்கும்
அம்மா
சினுங்கும் பிள்ளை
குடிநீர்குழாய்
நோக்கிகோபமாய்
அம்மாகுடம்
தூக்கி திரும்பவும்
குரல் கொடுக்க
இன்னமும் போர்வைக்குள்
அடிவாங்கும் பிள்ளை
No comments:
Post a Comment