Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Thursday, March 24, 2016

சுசீலா ராமன் பாடல் புதிய அனுபவம்

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் நண்பரின் வழியாக  “ வேல் உண்டு வினையில்லை ” பக்திபாடல் வீடியோவாக வந்து விழுந்தது.

ஓட விட்டுப்பார்த்தேன் யாரென்று தேடி ஓடினேன் இணையத்துக்கு ..

சுசீலாராமன்  வீடியோபாடல் அதுவாக தஞ்சை ப்பூர்விகமாய் லண்டன்வாழ் தமிழராக இசை ஆல்பத்தில் அசத்துகிறார்.

தமிழ் பக்தி பாடல்களை  வேறுவிதமாகப் பாடிய அவருடைய குரல்வளம் கிரேட்ங்க..

ஓரே மாதிரியாக க்கேட்ட பாடலை வேறு இசையிலும் வித்தியாசமான குரலிலும் கேட்டது புதிய அனுபவத்தை க்கொடுத்தது.

அவரை பற்றி மேலும் அறிய..
https://en.wikipedia.org/wiki/Susheela_Raman

அவருடைய இசையை நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.


Saturday, November 15, 2014

யானி

நேற்று  தி இந்து இணையதளத்தில் இசைமேதை யானி பற்றி படித்தேன். ஆர்வமாய் இணையங்களில் தேடினேன்.

இசை வீடியோக்கள் சிலவற்றை பார்த்தேன்.  அவரது இசை அனைவரையும் கட்டிபோட்டதில் ஆச்சரியமில்லைதான்.

ரசித்தேன் உள்வாங்கி ருசித்தேன்.

ஓர் உயரிய உண்மை கலைஞனுக்கு வணக்கம் செய்கிறேன்.

யானி -எல்லைகளை உடைத்த இசைநதி



Friday, October 11, 2013

`ஹாங் இசைக்கருவி


இசைக்கருவியைப்பற்றி மேலும் அறிய

http://en.wikipedia.org/wiki/Hang_(instrument)

Tuesday, March 05, 2013

ஆறு வயது குழந்தையின் அற்புதமான பிரேக் டான்ஸ்

பிரான்ஸ் பாரிசில் நடைப்பெற்ற ஆரம்பகட்ட நடனபோட்டி ஒன்றில் ஆறு வயதான பெண் குழந்தையின் பிரேக் டான்ஸ் காணொளி



Monday, March 04, 2013

சிவமணி ...சிவமணி தான்

யு டியூப் அப்படியே மேஞ்சப்ப சிவமணி டிரம்ஸ் வீடியோ க்ளிப் பார்த்து அசந்திட்டேன்.


Thursday, February 14, 2013

ஜென்டைமேளமும் ஏமாற்றமும்


அலுவலகம் நோக்கியபயணத்தில் இருசக்கரவாகனம் விரைந்து கொண்டிருந்தது.   கேரள பாரம்பரிய இசையான  ஜென்டைமேளத்தின் இசை  தூரத்தில் இருந்து காதுகளில் விழுந்தது.

இருசக்கரவாகனம் விரைந்து மண்டபத்தை நெருங்க இசையின் ஒலியும் வேகமாய் காதுகளை வந்தடைந்து  ரசிக்க செய்ய...

மண்டபத்தை நெருங்க சில பல மீட்டர்கள் முன்னால் மனது

அந்த மண்டபத்துல யாருப்பா இது இவ்ளோ பெரிய நிகழ்ச்சி வைத்திருக்கிறது. அது வரவேற்பு மண்டபத்தான் ஆன  யாரு....

வினாகளும் விசாரணைகளும் தொடர்கிறது மனதில் வண்டி  மண்டபத்தை நெருங்கியது.  ஒலி பெருக்கியின் வாயிலாக இசை காதை துளைக்க இருசக்கரவாகனத்தில் சென்றப்படியேகண்கள் தானாய் மண்டபத்தினுள்  பார்க்க ஜென்டை மேளம் நடப்பதற்கான நிகழ்வே அங்குதெரியவில்லை.

அட ..பாவியளா...  மனது நினைக்க..

இசை  மீண்டும் காதுகளை வந்தடைந்து ரசிக்க செய்து கொண்டிருந்தது.

நீங்களும் பார்த்து ரசிக்கலாமே..


LinkWithin

Related Posts with Thumbnails