Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Monday, June 17, 2013

நின்றுபோன இணையம்



எங்கள் நிறுவனத்தில் பயன்பாட்டில் உள்ள இணைய   இணைப்பு பி.எஸ்.என்.எல் பிராட் பேண்ட் கேபிள் வரும் வழிதடத்தில் சீரமைப்பு பணியின்போது எங்கள் தொலைப்பேசி அலுவலகத்துக்கு வரும் முக்கியகேபிள் அறுந்துபோக  ஊரினுடைய இணைய   தகவல் தொடர்புகள்  நின்றுபோயின.

வேலைக்கு வந்தவுடன் செய்திதாள்கள் வாங்கினாலும் இணையத்தில் செய்திகள் வாசித்தால் தான் திருப்தியாய் மனதை  உணர முடிந்த கட்டாயம்.

அடிக்கடி கண்பார்வை மோடம் பக்கம் திரும்பிகொண்டேயிருந்தது. நெட் கிடைக்கலையா…நெட் கிடைக்கலையா நிறுவனத்தில் அவ்வப்போது எதிரொலித்ததை தவிர்க்கமுடியவில்லை.

நெட் அலுவலகத்தை தொடர்புகொண்டால் முக்கியமான கேபிள் அறுந்து போயுள்ளது சரி செய்கிறார்கள் என்றபதிலில் திருப்தி அடையவேண்டியிருந்தது.


முகம் பார்க்க நட்புகளின் எண்ணங்களையும் கருத்துகளையும் அடைய முடியவில்லை.  இணைய    ரீதியான விண்ணப்பபடிவங்களின் தகுதி நிலைமையை சரிபார்க்க முடியாமல் அவதி க்குள்ளானோம்.

இரண்டுநாட்களும் வராந்திர பத்திரிக்கைகள் தினசரிகளும் எங்கள் செய்திபசிக்கு உணவாயின.

கிடைத்த வசதி நின்றுபோகையில் அதனால் ஆன  சிறுபாதிப்புகள் இருக்கவே செய்தது.


LinkWithin

Related Posts with Thumbnails