Showing posts with label தாய். Show all posts
Showing posts with label தாய். Show all posts

Thursday, March 18, 2010

தாய்..தாயா அவள்?














மூன்று ஆண்பிள்ளைகள் அந்தகுடும்பத்தில் அவர்களை கட்டி நல்லபடியாக வளர்க்கவேண்டிய பொறுப்பு அவர்களுடைய தாயிடத்தில் தான்.

நல்ல நாளில் நல்ல நேரத்தில் சம்பாதிக்க விமானம் ஏறிய கணவர் போனவர் போனவர்தான். வருடங்கள் ஓடியது தகவல் இல்லை .

வளரும் நிலையில் உள்ள பிள்ளைகளின் படிப்பு செலவு குடும்ப நிர்வாகம் என தடுமாற்றம் அடைந்த தாய்.

அதை யும் தாண்டி பிள்ளைகளை நல்லபடியாக நற்குணங்களுடன் வளர்க்க வேண்டும் என நினைத்தவள்.

வயதிற்குரிய அத்தனை குணங்களும் பிள்ளைகளுக்கு வரமால் இல்லை.

வயதிற்கு வந்த தன் பிள்ளைகளை அழைத்தாள். டேய் தம்பியலா.. என் பிள்ளை அங்க நின்னு தப்பு செஞ்சுது இங்க நின்னு தப்பு செஞ்சுது என்று ஊர் சொல்வது எனக்குபிடிக்காது.

உங்களுக்கு என்ன தேவையோ என்னிடம் கேளுங்கள். நான் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொன்னாள்.

சிகரெட் பிடிக்க ஆசையா என்னிடம கேளுங்கள் …

தண்ணி அடிக்க ஆசையா என்னிடம் கேளுங்கள்….

எது வேண்டுமோ வெளியில் போய் அதை செய்யாமல் வீட்டிற்கு வாருங்கள் உங்களுக்கு தேவை பட்டதை செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல..

பிள்ளைகளுக்கு முழுசுதந்திரம் கொடுத்தாள் அந்த தாய்.

கொடுத்த சுதந்திரத்தை ஒருபொழுதும் தவறாக உபயோகபடுத்தாத பிள்ளைகளாய் இருந்தார்கள்.

வெளியில் அநாயசமாக சுற்றும் பழக்கமும் குறைந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

விசேடகாலங்களில் அம்மா கையால் கறி வறுத்து வீட்டு தோட்டத்தின் மர நிழலில் மது அருந்துவார்கள். மனம் நோகாமல் அவளும் செய்து தருவாள்.

இன்றைக்கு மூன்று பிள்ளைகளும் சமுதாயத்தில் நல்ல மதிப்போட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

விளக்கமற எடுத்தேன் பிச்சுபுடுவேன் நாய போயி சம்பாதிச்சு வாடா என்று சத்தம்

தன் மகனை விரட்டி கொண்டிருந்தாள் இன்னொரு தாய்..தாயா அவள்?

Wednesday, February 18, 2009

தேடுதல் நேரம் முடிவடைய......

எட்டுமாத குழந்தை தன் தாயின் முகம் பார்த்தது. தாயின் கரங்களிலிருந்து விடுப்பட்டு கொஞ்ச தூரம் போய் விளையாடும் திரும்ப பார்க்கும் உடன் ஓடிவந்து தாயின் கரங்களுக்குள் சரணடைந்துவிடும்.

அன்றைக்கும் விளையாடியது. தாய்க்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் தனக்கு தெரிந்தவர் வீட்டில் விட்டு செல்ல முடிவு செய்து தன் குழந்தையுடன் வீட்டிற்கு வந்தாள்.

பிள்ளையும் இறங்கி விளையாடியது. குழந்தை விளையாடிய நேரம் தாய் குழந்தையை விட்டு பிரிந்தாள்.

சில நிமிடங்கள் ஆகியிருக்கும் குழந்தையின் கண்கள் தாயை தேடின அதனுடைய எல்லைகளுக்குள் இடம்பெயர்ந்து தாயை தேடியது.

தேடுதல் நேரம் முடிவடைய அதனுடைய அடுத்த செய்கை
அழுகையாக வெளிப்பட்டதுஅங்கிருந்தவர்கள் புட்டிபால் கொடுத்து தூங்க வைத்தார்கள்.

தூங்கி விழித்ததுதாயை தேடியது. விளையாட வில்லை மலர்ந்திருக்கும் முகம் வாடியது யார் தூக்கினார்களோ தூக்கியவர்களின் தோள்களில் அப்படியே படுந்திருந்தது.

முகம் வெளிப்படுத்திய அதனுடைய சோகம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அனாதை குழந்தைகள்............................

LinkWithin

Related Posts with Thumbnails