Monday, December 07, 2009

காணாமல் போன பாம்பு






குளம் குளத்தின் ஓரமாய் சென்ற வாய்க்கலின் தினமும் இறங்கி கால் அலம்பும்இடம் அருகே பாம்பு ஒன்று காத்திருக்கும் தன்னுடைய இரைக்காக அங்குள்ள கல்லின் மீது தன்னுடைய உடலை சுருட்டியப்படி தலையை தூக்கியவாறு நிற்கும்.

நடக்கும் சத்தம் கேட்டவுடன் ஓடி மறைந்துவிடும். தினசரி பார்வையில் படும் அதைப்பற்றிய பயம் இல்லாது வாய்க்காலுக்கு வருவதும் போவதுமாக இருந்தேன்.

ஒருநாள் இன்னொரு பாம்பை பார்த்தேன் தலையை மட்டும் தண்ணீரின் வெளியே நீட்டியப்படி நின்றது. சத்தம் கேட்டவுடன் தலையை உள்ளுக்குள் இழுத்தப்படி மறைந்தது.

மறுநாள் செல்ல அந்தபகுதி வந்தவுடன் மனது மிகுந்த எச்சரிக்கை உணர்வை ஏற்ப்படுத்தியது. கண்களை உன்னிப்பாக்கி அந்தபகுதி யை ஆராய்ந்தப்படியேச் செல்ல முதல் நாள் தண்ணீரில் மறைந்து காணாமல் போன பாம்பு இன்றும் இரைக்காக படுந்திருந்தது தன்னுடைய நீண்ட உடலை சுருட்டியப்படி தலையை மேல் நோக்கியே வைத்திருந்தது.

சத்தம் கேட்டவுடன் மெதுவாய் ஊர்ந்து அருகில் இருக்கும் வளைக்குள் தன்னை இருத்தி கொண்டது. இரண்டு அடிகள் முன்னோக்கி ச்செல்ல அடுத்த பாம்பு வரவேற்றது வழக்கம் போலவே அதுவும் நகர்ந்து செல்ல மனது பயப்பட ஆரம்பித்தது.

அன்று முதல் அந்தபகுதி வந்தவுடனே மனதின் பரிதவிப்பு தொடங்கிவிடும். பயமும் எச்சரிக்கை உணர்வும் கலந்த கலவையாக அந்தபகுதிக்கு செல்வது போவதுமாக இருக்கபாம்பு குடும்பம் தொடர்ந்து அந்தபகுதியில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது.

Friday, December 04, 2009

சரிதானா?
















எண்ணங்கள்

தோன்றா மனது

பெரிய சுமையாய்

என்னுள்ளே

அறியாது

புரியாது

ஒன்றுமே இல்லாது

மார்பின் மையம்

சுமையாய்

மனம் என்ன?

எண்ணங்கள் என்ன?

குழப்பமில்லை

மகிழ்ச்சி இல்லை

மார்பின் மையம்

சுமையாய் இருக்க

எண்ணங்கள் தோன்றா

மனது சரிதானா?


Tuesday, December 01, 2009

அவரும் அப்படிதான்


தொழில் சார்ந்த வெற்றிகள் ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை சமுதாயத்தில் நிலைத்திட செய்யும். தோல்விகள் அவர்கள் வாழ்ந்த சூழலைப் பாதித்து மனதிற்கும் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைத்துவிடும்.

தொடர் போராட்டமாய் வாழ்வு தொடர் வெற்றிகளும் தொடர் தோல்விகளும் காலங்கள் தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

வளர்ந்த சூழல் வாழ்வு அமைந்த விதம் அவ்வப்போது மேலும் வளர ஊக்குவிப்பவர்கள் அமைந்த வாழ்க்கை வெற்றிகரமான வாழ்வாக மலர்ந்து விடுகிறது.

சூழல் சரியாக அமையாதவர்களின் வாழ்வு அவ்வளவாக மலர்ந்து விடுவதில்லை.

அவரும் அப்படிதான் தந்தை விட்டுப்போன தொழில் நன்றாக செய்தார்கள் நன்றாக செழித்து வளர்ந்தது. வசதி மேம்பாடு அவரை யாராவது மதிய வேளைகளில் சாப்பிட கூப்பிட்டால் ஏ.சி. அறையில் தான் நான் சாப்பிடுவேன் என்பார். அப்படியே செய்தார் தானே தொழில் சிறந்தவன் என்று மார்தட்டவும் தவறவில்லைதான் அவர்.

ஆரம்பிக்க கூடாத இடத்தில் கடை ஆரம்பித்தார் பெரும் செலவு செய்து ஆரம்பித்த கடை சரியானப்படி கல்லா கட்டவில்லை. விட மனமில்லாமல் தொடர்ந்து நடத்தப்போய் பெரும் நட்டம் வந்தது இருந்த தொழிலும் கைவிட்டு போனது. பெரும் கடன் வந்தது.

வாழ்ந்த விதம் சமாளிக்க முடியாமல் குடும்பம் நிர்வாகமே நடத்த திறமையின்றி போனார். மனைவி பிள்ளைகள் பிறந்த இடம் சென்றனர். இவரது அண்ணன் வீட்டில் இவரது சாப்பாடு என்று ஆனது.

எங்கு சென்றாலும் கார் தான் என்று இருந்தவர் தன்னுடைய பிள்ளைகளின் சைக்கிளை ஓட்டி கொண்டு இருக்கிறார்.

வெளியில் அதிகம் செல்வது கிடையாது. செய்த தொழில் அவ்வப்போது கிடைக்கும் கமிசன் தொகையில் தான் அவரது வாழ்வு. பல லட்சங்கள் கடனாளியாக இன்னமும் நகரத்தின் வீதிகளில் அவர்.

அவரை தெரிந்தவர்கள் அய்யோ பாவம் என்று சிலபேர் இவனுக்கு வேணும் என்று சில பேர் காதுபடவே பேசி…

LinkWithin

Related Posts with Thumbnails