Wednesday, January 06, 2010

கர்ணனின் கொடைத்தன்மை

டாக்டர் ருத்ரன் அவர்கள் கதாபாத்திரங்களிடமிருந்து என்ற தலைப்பில் கர்ணனின் கொடைத்தன்மை பொதுவுடைமையின் பின்புலத்தில் பிறக்கவில்லை அவனுள் இருந்த பிறப்பு குறித்த சமூகக் கணிப்பு குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையினாலேயே மேலோங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

பலவீனமான ஒன்றை மறைக்க மற்றவர்களிடம் அதிகம் காணப்படாத அல்லது மற்றவர்களிடம் இல்லாத குணம் அல்லதுமற்றவர்களிடம் இல்லாத தன்மையைப் பெற்று தன்னுடைய வாழ்க்கை சூழலில் தன்னை தொடர்ச்சியாக தக்க வைத்துகொள்வதே இயற்கை. இயற்கையின் பல மாற்றங்கள் , வரலாற்றில் பல மாற்றங்கள் நிகழ காரணமே இந்த இயற்கையின் விதி தான். பலம் பலவீனம் என அலைப் போன்ற நிகழ்வுகள் ஒன்று வாழவும் ஒன்று இறக்கவும் செய்கிறது.

ஆகையினால் கர்ணனின்கொடைத்தன்மைக்கு அவனுடைய தாழ்வு மனப்பான்மையே காரணமாக கொள்ளமுடியாது. எல்லா உயிர்க்கும் உள்ள பொதுவான பண்புதான் இது என்பது என் கருத்து.

Monday, January 04, 2010

மனிதரை நேசியுங்கள் நெருங்காதீர்கள்.



அதைச் சாதிக்கிறேன் இதை சாதிக்கிறேன் என்று போவதும் நான் தான் செய்யவேண்டும் என்று பொறுப்பைத் தலையில் சுமக்க நினைப்பதும் பிறர்கடமைகளை செய்யபுகுவதும் நிம்மதியை குழிதோண்டி புதைத்துவிடும்.

நன்றிகாட்டலாம் நன்றியை பிறர் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

கடமையை செய்து விடுங்கள் பிறர் கடமையை உணர்த்த போகதீர்கள். துடுக்குதனமும் திருட்டுதனமுமாய் சில சுகங்கள் அடைவதும் சக்தியாகவும் சமார்த்தியமாகவும் எண்ணி சிலரால் செய்யப்படும் அப்புறம் அதன் விளைவாய் அவர்கள் அடைவதை நம்மால் காணமுடியாது.அதனால் அவை நம்மையும் அப்படி நடக்க தூண்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

வெல்லத்தின் மீது ஈ எப்போதும் உண்டு

இன்பத்தின் பின் துன்பம் கட்டாயம் உண்டு.

நாளைக்கு நடப்பதை நினைத்து இன்றே குழம்பாதீர்கள் நமக்கென தேடும் நன்மைக்காக பிறரை கெடுக்காதீர்கள்.

இழப்பே கூடாது என்று எண்ணாதீர்கள் இழப்பு வந்தால் அதையே நினைத்து கொண்டிருக்காதீர்கள்.

சூழ்நிலைகேற்ப வளைந்து கொடுத்து மிக கவனமாக இருங்கள் சந்தேகத்திலேயே இல்லாமல் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுங்கள்.

மனிதரை நேசியுங்கள் நெருங்காதீர்கள்.

---ஸ்வாமி----

சந்தேகம்




















சந்தேகம்

முன் நிகழ்வுகளின்

பாதிப்புகளால்

நிகழ்ந்தவை

சரியாய்

தெரிந்து கொள்ள

ஆவலாய்

எதிர் இருப்பவர்களின்

செயல்களை

பார்க்க

தொலைந்து போன

நிம்மதி

மனித மனத்தின்

அசிங்கமான

வெளிப்பாடாய்

வேலை இல்லதாவர்களின்

மனதில் தோன்றி

தன்னை அழித்து

பிறரையும்

அழிக்கும்

மனித உணர்வு.

LinkWithin

Related Posts with Thumbnails