Monday, November 09, 2015

நாளை தீபாவளி

சூரியனை காணோம். கருமேகங்கள்  வானம் முழுவதும் வியாபித்திருக்க குளுமையான சாரலும் துாரலுமாய்  இன்றைய காலைப்பொழுது .


நாளை தீபாவளி..

சிறுவனாய் இருந்து  தீபாவளி கொண்டாடி  அடைந்த சந்தோசம் குடும்ப பொறுப்பேற்றவுடன் இல்லாமல் போனது ..

அதிக செலவின பண்டிகைகளில் இதுவும் ஒன்று .

சுற்றுபுற கிராம மக்கள் கூட்டமாய் வந்திறங்கி மழைத்தூரலில் நனைந்தப்படியே பொருட்கள் வாங்குவது தடைப்படவில்லை.

கருமேகங்கள் விலகவில்லை .

தீபாவளி திருநாளுக்கு மட்டும் புது துணிகள் எடுப்பவர்கள் உண்டு. நடுத்தர குடும்பங்களில் வருடாந்திர துணிமணி எடுப்பது என்றால்  தீபாவளி திருநாளுக்காக மட்டும் தான்.

அப்பொழுது  எடுத்த புது துணிகளை வைத்து கொண்டுதான் சொந்தகாரர்களின் விசேஷங்கள்  கோவில் திருவிழாக்களை சரிக்கட்ட வேண்டும்.

கிராம குடும்பங்கள்  கடைத்தெருவுக்குள்  சென்று கொண்டிருக்கிறார்கள்.

மழைத்தூரல் நிற்கவில்லை.

நடைப்பாதை வியாபாரிகளின் வியாபாரம்  விறுவிறுப்பாக நடைப்பெறுகிறது.

உழைக்க வெளிஊர் சென்றவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும் வைபவம் தீபாவளி.

கடைத்தெருவுக்குள் புதுமுகங்கள் அதிகமாய் தெரிகிறது.

கடைத்தெரு ஓய மணி 12  ஆகும்.

வருவார்கள்  ... வாங்குவார்கள்  ... செல்வார்கள்....

நாளை தீபாவளி.








Saturday, November 07, 2015

ஆந்தை Vs சிறிய பருந்து உணவுசண்டை

உணவுக்கான போட்டி உயிர்களுக்கிடையே சகஜம்.

 உழைத்து பெற்ற உணவை       இன்னொரு உயிர் தட்டிபறிப்பது என்றால் போராட்டமும் சண்டையும் சாதாரண நிகழ்வு.


உணவுக்கான போட்டியில் இருபறவைகளுக்கான போராட்டத்தை நார்த்தம்பர்லேண்ட் சேர்ந்த புகைப்படகலைஞர் கிரிஸ் கேஸ்டலின் எடுத்த புகைப்படங்கள்.












Tuesday, November 03, 2015

வான் அடக்கம் (திபெத்)

திபெத் நாட்டில் லாரங் பள்ளதாக்கு கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் உள்ளது.

சில புத்த பிரிவை சேர்ந்தவர்களும் மங்கோலிய இனத்தவரும்  இறந்தவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிணதின்னி கழுகுகளுக்கு படைப்பதன் மூலம் இறந்தவர்களுடைய ஆன்மா சொர்க்கத்திற்கு செல்வதாக நம்புகிறார்கள்.













LinkWithin

Related Posts with Thumbnails