Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, March 09, 2016

இ-மெயில் கண்டுபிடிப்பு உண்மையும் பொய்யும் .

உண்மை எது?

பொய் எது?

கடந்த சில நாட்களுக்கு முன் படித்த செய்தி இ-மெயில் கண்டுபிடித்தது
ரேமண்ட் டாம்லின்சன்.

அதே செய்தி இப்பொழுது மறுக்கப்படுகிறது. இ-மெயிலை கண்டுபிடித்தது அமெரிக்க வாழ் தமிழர் சிவா அய்யாதுரை. அவர் அதற்கான காப்புரிமையும் வைத்துள்ளார்.

இதுவும் ஊடகங்களின் வழியாகவே  தெரியவருகிறது. ஊடகங்களின் நம்பகதன்மை ?  இதுபோன்ற விசயங்களின் உண்மை த்தன்மை எவ்வாறு அறிவது??

செய்தி வெளியிடும் முன் அதுபற்றி விரிவாக ஆராயமாட்டார்களா அல்லது வேண்டுமென்றே பரப்ப படுகிறதா தெரியவில்லை.

இ-மெயிலை கண்டுபிடித்தவர் யாரென்று தெரியாததால் ரேமண்ட் கண்டுபிடித்தார் ஊடகங்கள் சொல்லியதால் நம்புகிறேன்.

கண்டுபிடிப்பு காப்புரிமை உடையவர் எதிர்கருத்து பரப்பாவிடில் நான் முதலில் படித்த செய்தி உண்மையாக நினைத்துக்கொண்டிருப்பேன்.

அறிவியல் நேர்மை சம்மந்தப்பட்டது. அப்படியிருக்க இப்படியும் செய்திகள்.

இச்செய்தி உண்மை அல்ல என்று தெரிந்தவர்கள் உடனே தனது கருத்தை ஏதோ சமூக ஊடகத்தின் மூலம் பரப்பினால்  செய்தியின் நம்பகதன்மை கேள்விகுறியாகிவிடும்.

கண்டுபிடிப்பாளரே கண்டுபிடித்து  மறுப்பு தெரிவித்தல் என்பது அவர்களுடைய  சூழ்நிலை பொறுத்து அமைவதாகிவிடும். பொய் உண்மையாக நாமும் சந்தர்ப்பம் அமைத்து க்கொடுத்தது போல் ஆகிவிடும்.

அமெரிக்க வாழ் தமிழன் கண்டுபிடிப்பு  ..ஆகா..தானாய் வந்த மகிழ்ச்சி..கண்டுபிடிப்பின் உரிமை  இந்தியன்  கருப்பு நிறத்தவன் புலம்பெயர்ந்தவன் என்பதால் மறுக்கப்படுமானால் மிகவும் கண்டிக்கப்படத்தக்கது.

தொடர்புடைய  செய்தி

இ-மெயிலை கண்டுபிடித்தது நான்; அங்கீகாரம் வேறொருவருக்கா?- தமிழர் சிவா அய்யாதுரை ஆதங்கம்






Friday, March 04, 2016

கண்ண கட்டுதுரா சாமீ..!! - தமிழக அரசியல்

மே 16

தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது.

பத்திரிக்கை ஊடகங்கள்  இணையவழி செய்திகளின் பயணித்தலில் தமிழக அரசியல் பொதுமக்களின் மனதில் பலவிதமான உணர்வுகளை  க்கிளப்பிவிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை முன் கூட்டியே கொண்டுவந்துள்ளது.

நண்பர்களுடைய வாத பிரதிவாதங்கள் படிக்கும் பத்திரிகைகளுடைய தாக்கம் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் பக்கம் சார்ந்த  பத்திரிக்கைகளின்  கருத்துகளால் குழப்பம் குழப்பம்.

இவற்றையெல்லாம் மீறி விசயகாந்த் என்ன முடிவு செஞ்சாரு..என்ன முடிவு செய்ய போறாரு..எப்பா கண்ண கட்டுதுறா சாமீ..!!

அஇஅதிமுக  மௌனம்  தலைமையின் அதிரடி கட்சியை கலகலப்பாக்க...

பாமக விளம்பர டிரெண்ட்  திமுக- வின்  விளம்பர டிரெண்டை மிஞ்சி விட்டது  என்னவோ உண்மை தான்.

விளம்பர மாற்றம் வாக்கு மாற்றம் ஆகுங்களா??

கணஜோராக வேட்பாளர் தேர்வில் திமுக... சனநாயக கட்சில்லே... வேட்பாளர்களை முடிவு செய்யறது தலைவரா...பொருளாரா ...பொருத்து தான் பார்க்கணுமுங்க..

தேர்தலுக்கு த்தேர்தல்   தேர்தல் சமயம் கும்பிட்டு ...ஜெயித்தவுடன் நாள் கணக்கில் நாம நிக்க தலைவரு ரொம்ப பிசி..வாக்களர் நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமுல்ல....இதெல்லாம் உங்களுக்கு த்தெரியாதது கெடையாது.

ரெண்டு பெரிய கட்சி வேணாமுன்னு சொன்னாலும் மாற்று எது ??!!  பல வினாக்களை த்தொக்கியே தமிழகம் நிற்கதியாய் நிற்கிறது.

திமுக குடும்ப அரசியல் லோக்கல் அரசியல் எப்பா நெனைக்கவே  முடியல...

அதிமுக தலைமையின் தொய்வு மன்னை வகையறாக்களின்  மறு வருகை உண்டு பண்ணிவிடுமோ பயமும் இருக்கவே...

மாற்று அரசியலுக்கான நேரம் தமிழகத்திற்கு வந்துவிட்டது உண்மைதான் . ஆனா  யாரு...

தொழிலாக மாறிய இன்றைய அரசியலில் பொது சனமாகிய நாம யார கொண்டுவரலாம்..!!??
 இந்த தேர்தல ஒரு வழி கிடைக்குமா பார்க்கலாம்.


Thursday, February 25, 2016

காலை உணவும் தொட்டுக்கையும்

அட..என்னப்பா இது சக்கரபொங்கலா..வயிறு நிறையச் சாப்பிடமுடியாதே தெவட்டுமே..


என்ற அங்கலாய்ப்புடன் தொடங்கிய காலை உணவு.



ருசியாய் பாிமாறப்பட்ட சக்கரைப்பொங்கல்  சாப்பிடும்பொழுதே தெவிட்டியது.

கொத்தமல்லி துவையல் தொட்டுகிட்டு சாப்பிடுங்க தெவிட்டாது அன்பான வேண்டுகோளினால் முதல் முறையாகத் துவையலை தொட்டு க்கொண்டு சாப்பிட மீதமிருந்த சக்கரை பொங்கலும் உள்ளேபோனது.

அட..உன் யோசனை  நல்ல யோசனையாத்தான் இருக்கே... பாராட்டினேன்.

நீங்க வேற ..இன்னும் சில வீட்டுல கூட்டு இல்லாம சக்கரை பொங்கலே கிடையாதுங்க..

அப்படியா..

சாப்பாடு எவ்வளவோ முக்கியமோ அதேமுக்கியம் தொட்டுக்கைக்கு உண்டு.


நடுந்தர குடும்பம் எங்கள் வீடுகளில் கோடை ஆரம்பித்துவிட்டாலே பழைய சோறு தான் காலை உணவு அதற்கு தொட்டுக்கை சின்ன வெங்காயம் வறுத்த மோர்மிளகாய் கருவட துவையல் மிளகாய் துவையல் அச்சு வெல்லம் பாதி வருத்த கடலை என தினம் ஒன்றாய் பட்டியல் நீளும்.


வந்த தொட்டுக்கையே ஒரு நாள் விட்டு மறுநாளும் வந்தால் வம்பு நிச்சயம்.


குளிர்காலங்களில் காலை சாப்பாடு பெரும்பாலும்இட்லி தோசை   அவ்வப்பொழுது சப்பாத்தி பூரி சுடுசாதம்
இட்லி தோசை தொட்டுக்கை என்றாலே மிளகாய் துவையல்  தேங்காய் சட்னி  நல்லெண்ணெய் ஊற்றிய இட்லி ப்பொடி அரிதாக கடப்பா என்கிற சாம்பார் வெரைட்டி.

இப்படியாக  மதிய சாப்பாடு தொட்டுக்கை பற்றி எழுத நினைக்கிறேன் பார்க்கலாம்.


Wednesday, February 24, 2016

அம்மா பொறந்த நாளும் அஇஅதிமுக-வும்

நேற்றைய தினசரிகளில்  ஆளும் முதல்வருக்கு எதிராக திமுக கொடுத்த விளம்பரங்கள்  ஹாட் என்றால் அதிமுக தரப்பு கொடுத்த வாட்ஸ் அப் பதிலடியும் ஹாட்...
அகவை -68


பேருந்து நிலையம் பகுதிகளில்  வாழ்த்துகள் தெரிவித்த ப்ளக்ஸ் பொிது பெரிதாய் கட்டப்பட ...

காலையில் எங்கள் ஊர் கோவில் வாசலில் வாகனங்கள்  அதிகமாய் நின்றது .
என்ன விசேசம் என்று போய் பார்க்க ..அட...அம்மா பொறந்தநாளுக்கு ஊரு ஒன்றியம் நகரம் கவுன்சிலருன்னு அம்மாவுக்காக எல்லாரும் சாமி கும்பிட்டாங்க..

பூசை முடிஞ்சது வாகனங்கள் புறப்பட்டது.

அஇஅதிமுக கொடிமரங்கள்  இருந்த இடங்களில் எல்லாம் அதாங்க முச்சந்தி நாற்சந்திகளில் எல்லாம் இயக்க ப்பாடல்களை ஒலி பரப்பி  ஒன்றியம் கொடி ஏற்றினார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் சத்தம் குறைந்து இயக்கப் பாடல்கள்  நின்றுவிட...வெயில் தாக்கம் நின்றவர்களும் ஓடிப்போனார்கள்.

அம்மா பொறந்த நாள் முடிவுக்கு வந்தது.

அஇஅதிமுக கொடி பறக்கிறது.

Monday, February 22, 2016

காதலர் தின கின்னஸ் சாதனை

நியூசிலாந்து நாட்டை ச்சார்ந்த அன்னா கோச்ரேனே காதலர் தினத்தன்று தலைகீழ் தொங்கும் விளையாட்டில் ( Trapeze) வெப்ப காற்று பலூனில் 10000 அடிக்கு மேல் பறந்து அங்கிருந்து  தலைகீழ் தொங்கி கின்னஸ் சாதனை ப்படைத்திருக்கிறார்.

2171 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கியது முந்தைய சாதனையாக இருந்தது.





Thursday, February 18, 2016

எனை பாதித்த செய்திகள் 18-02-16

செய்தி ஒன்று

ஹாிஷ்  என்ற இளைஞர் பெங்களுரு சாலை விபத்தில் உடல் துண்டானபோதும் தான் பிழைப்பது கடினம் என்று அறிந்து  தன் உடல் உறுப்புகளை  தானம் செய்ய கெஞ்சியது எனை பாதித்தது.இறக்கும் நிலையிலும் அவரின் சிந்தனை  ரியலி கிரேட்..
செய்தி தொடுப்பு
ஹாிஷ் விபத்து
மாியாதைக்குரியவர்
செய்தி இரண்டு

அர்ஜென்டினா உள்ளுர் கால்பந்து போட்டியில் சிகப்பு அட்டை காட்டி வெளியேற்றிய நடுவரை  சிகப்பு அட்டை பெற்ற கால்பந்து வீரா் துப்பாக்கியால் சுட்டு கொன்றது எனை பாதித்தது.

இது என்ன விளையாட்டு??!!

செய்தி தொடுப்பு
சுட்டு கொன்ற கால்பந்து வீரா்

Friday, February 12, 2016

குழப்ப அரசியலும் தமிழகமும்.





சொல்லிக் கொள்ளும்படி செயல்படாத அஇஅதிமுக தலைமை.  தலைமை
எவ்வளவு சொன்னாலும் அடங்காத ஸ்டிக்கர் ஒட்டிகள் உள்ளாட்சி ஓட்டை சுகாதாரம்  சொல்லவே தேவையில்லை எனச் சொல்லும்படி குறைகள் பல இருந்தாலும்  மாவட்டம் ஒன்றியம் நகரங்களின் அதிகார ஆட்சியின்மை அஇஅதிமுக கொஞ்சம் முன்னோக்கி நிறுத்த...

தகப்பனா...பிள்ளையா போட்டியில் தி.மு.க.  பேச ஒன்றுமில்லாத நமக்கு நாமே.. இப்பொழுதே மாவட்ட செயலாளர்களிடம் அந்த அந்த மாவட்ட எம்.எல்.ஏ  நேர்முககானலுக்கு உட்கார 2சி  வசூலிக்க த்திட்டமாம் ாிப்போர்ட்டா் செய்தி ஆட்சிக்கு வந்தால் கொடுத்தவர்கள்  சம்பாதிக்க என்ன செய்வார்கள்? கடந்த ஆட்சியே அதற்கு ச்சிறந்த உதாரணம்.

மாற்று த்தேவைப்படுகிறது நிறைய க்குழப்பம் நிலவுகிறது. சந்தர்ப்பவசத்தால் அமைந்த கூட்டணியில் எல்லோருக்கும் முதல்வர் கனவாம் . நல் ஆட்சி கிடைக்குமா ??!! இன்று ஒரு சேர நின்றாலும்  அவரவர் தோரணைக்கு அவரவர் ஆட்சியானால்  என்ன செய்வது?

குழப்ப க்கட்சி தேமுதிமுக தெளிவான தி்ட்டமில்லாத கட்சியாக இன்னும் பார்க்கப்பட குழப்ப த்தலைமையை வழிநடத்தும் சாரதி மனைவி மச்சான்  இன்னமும் கற்றுக்கொள்ள ஏராளம். கூட்டணி கட்சி தேமுதிமுக.

பாஜக   காதர்கட்சி இப்பொழுது தமிழகத்தில் வேலை இல்லாதது போல் தெரிகிறது.

பாவம் தமிழ்மக்கள் இலவசத்தால் கட்டுண்டு...டாஸ்மாக்கில் மயங்கி க்கிடந்து தமிழ் ச்சமூகம் பற்றிய சுயநினைவு அற்றவனாய் வாக்குறுதிகளினால்  வசிகரீகப்பட்ட  கோடிக்கான தமிழர்களில் நானும் ஒருவனாய் சட்டமன்ற தேர்தலை நோக்கி...

Tuesday, February 09, 2016

புதிய பயணமும் சிறிய பதைபதைப்பும்.

வேற்றுமொழி வழக்கம் உள்ள புதுஇடத்திற்கான முதல்பயணம் சிறிது பதைபதைப்பு உருவாக்கியது.

பயணம் பல வினாக்களை மனதில் உருவாக்கிப்படியே இருக்க இப்பொழுது இருக்கும் சமுதாய சூழலில் பெண்களுடனான பயணம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

எப்படி ச்செல்வது?

பெரிய நகரம் சென்று அங்கிருந்து சின்ன ஊர்களுக்கு எப்படி செல்வது?

எங்குத் தங்குவது ?

நமக்கு த்தெரிந்த நபர்கள் யாரும் இருக்கின்றார்களா?

சாப்பாடு எப்படி இருக்கும்?

அங்குள்ள மனிதர்கள் அவர்களின் மொழி பழக்கவழக்கங்கள் பற்றிய மனதில் ஏற்படும் வினாக்கள் அதைப்பற்றிய விவர தேடுகையில் கிடைத்த விபரங்கள் அதைப்பற்றிய குழப்பங்கள் எல்லாம் சேர்த்து  பயணத்தைச் சுவாரசியம் ஆக்கியது.

பொதுவாக புது இடங்களுக்கு ச்செல்கையில் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் தெரியாதது கூடப் பதைபதைப்புக்கு காரணமாக இருக்கலாம்.

என்ன என்ன தேவை?  என்று சென்றவர்களிடம் விசாரித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி உடை மற்றும்  தேவைப்படும் பொருட்கள் சேகரித்து பயணத்திற்கு த்தயார்செய்தல் புதிய அனுபவம்.

விவர சேகரிக்கையில் அவர் அவர்களின் பார்வைக்கு தகுந்தமாதிரி அந்த இடங்களைப் பற்றிய பேச்சுகளை  , கிடைத்த இணைய த்தகவல்களுடன்  ஒப்பீடு செய்து ஒரு முன்முடிவுக்கு வருகையில் பயணநாள் வந்துவிட்டது.

பயணமும் ஆரம்பமாகியது புதியஅனுபங்களை நோக்கி...


Tuesday, February 02, 2016

அறுவடை அனுபவம்

கடுமையான சத்தத்துடன் நெற்கதிர்கள்  சாய்ந்து கிடந்த வயலில் இறங்கியது  அறுவடை இயந்திரம்.   நெற்கதிர்களை தூக்கி  அறுத்து உள்ளே வாங்கிக் கொள்ள மேல் உள்ள பெட்டியில் நெற்மணிகள் கொட்ட ஆரம்பிக்க வைக்கோல் சக்கையாக ஓரமாய்  விழ ஆரம்பித்தது.





ஒன்றிரண்டு நெற்கதிர்கள் ஒதுங்கின  அவ்வாறு ஒதுங்கிய நெற்கதிர்களை அறுத்தெடுக்க போட்டி போட்டு ஓடிய சிறுவர்கள் சிறுமியர்கள். நெற்கதிர்களை கசக்கி கிடைக்கும் நெற்மணிகளை கிலோ கணக்கில் கொடுத்து காசாக்கி தின்பண்டம் வாங்கி திங்கும்  ஆவலில்  அறுவடை முடிந்த வயல்வெளிகள் ஓடி ஓடி நெற்கதிர்களை சேகரிக்க நம்மைத்தான் தாக்க வருகிறார்களோ என்று பயந்து ஓடிய மாடுகள்.

அறுவடை இயந்திரத்தின் பின்புறம் விழும் நெற்மணிகளுக்காக  பறந்து பறந்து அமர்ந்த நார்ந்த குருவிகள் மற்றும் நீண்டவால் கருப்பு குருவிகள்  ஒரு சேர கூட்டம் கூட்டமாய்  பறப்பதும் அமர்வதுமாய்   வயல்வெளியை அழகை க்கூட்டியது.

அறுவடை  இயந்திரத்தின் பெட்டியை பார்த்து க்கொண்டு நின்ற வயல்காரர். பட்ட கஷ்டத்திற்கு கிடைக்கும் பலனை எதிர்பார்த்து  பெட்டி எப்பொழுது நிரம்பும் எத்துணை பெட்டி வரும் மனகணக்கில் கையை கட்டியபடியே வரப்பில் நின்று கொண்டிருக்க வேலையாள் முகமலர்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தார்.

Tuesday, January 19, 2016

செவ்வாயும் வெள்ளியும்

பசி உணர்வுகளை அலைக்கழித்தது. மதியம் 2.30  பறக்கும் ஈக்களாய் பறந்து கொண்டிருந்த இருசக்கரவாகனங்களுக்கு மத்தியில் ஓடியது  இந்த இருசக்கரமும்.

ஒவ்வொரு இடமாய் தவிர்த்து  கடைசியில் நின்றது சரஸ்வதி கபே.

பசியாய்  போய் இடம் தேடி உட்கார்ந்தவனிடம்  சாம்பார் சாதம் மட்டுமே கிடைக்கும்  என்று சொல்லப்பட...

பசி தீர்ந்தால் போதும் ...

ஒரு சாம்பார் சாதம்...

சார்..போண்டா...

முகம் பார்த்த சர்வரிடம் ..ம்ம் ...சரி...

சாம்பார் சாதமும் போண்டாவும்  பசிக்கு காலியாக மற்றவர் பேச்சுக்கு காது கொடுக்கும்  உணர்வு வர..

சர்வருக்கு டிப்ஸ் கொடுக்காமல் சென்றவரை பற்றிய பேச்சு அது.

ஏம்பா..இன்னிக்கு செவ்வா..அதான் சில்லரை கொடுக்காம வாங்கிட்டு போராரு...

 நம்ம வீட்டுல போயி பாரு செவ்வா..வெள்ளி... ஒன்னும் கொடுக்கமாட்டாக..
அவசரமன்னு நகையை கேட்டுப்பாரு ...

இன்னிக்கு செவ்வா..வெள்ளில போயி..

அதே நீ குடு ஒன்னும் சொல்லாம வாங்கிப்பாங்க...அப்ப எங்க போச்சு செவ்வாய்...வெள்ளி...

என்னமோ..செவ்வா...வெள்ளி...கிழமங்கிறது போயி..லெட்சுமி வர்ற நாளும்...போற நாளும் ஆயிடுச்சு....

அட..நீ வேறப்பா..நம்ம ஊரு சவரக்கடைக்கு வாரவிடுமுறையே செவ்வா தாம்பா..

ஒரு பய சேவிங் பண்ண முடி வெட்ட வரமாட்டான் அதான் செவ்வா வாரவிடுமுறை.

அப்படியே நீண்ட விவாதம் நடந்து கடை மாலை டிபனுக்கு தயாராகி க்கொண்டிருந்தது.

யப்பா..பூரி...இடியாப்பம் ரெடி..உள்ளுக்குள்ளிருந்து குரல் கேட்டது.




Wednesday, January 13, 2016

நாளையும் தொடரும் இந்தப் பரபரப்பு



பொங்கல் பண்டிகையின்
பரபரப்பு
கடைத்தெருவில்

குருடர்
பிச்சையெடுக்க
சிறுவன் வழிகாட்டி
மகனா என்று
தெரியவில்லை
காசு விழும்வரை
நிற்காத
டப்பாவின் குலுக்கல்

குச்சி ஊனி
கடந்து செல்லும்
பாட்டி

கரும்பையும்
வாழைத் தாரையும்
சுமந்து செல்லும்
கிராமத்துத்தலைகளும்
தோள்களும்

துணைக்குப் பிள்ளைகள்
பையில் மஞ்சள்கொத்தும்
பலசரக்கும்

இடுப்பில் கைப்பிள்ளை
கையில் ஒருபிள்ளை
இலக்கு நோக்கி
நடக்கும் பெண்மணி

மதிய பள்ளிக்கு
சிரித்தபடியே
சீருடையில் செல்லும்
சிறுவர்கள்

தலைவரிசை
வைக்க கரும்புகட்டு
ஏற்றிசெல்லும்
ஆட்டோகளும்
கார்களும்

நாளையும் தொடரும்

இந்தப் பரபரப்பு....

Tuesday, December 29, 2015

இந்தோனிசியா கசையடி தண்டனை-புகைப்படசெய்தி

இந்தோனிசியா திருமணமாகாத ஆண் பெண் பல்கலைகழக மாணவர்கள் இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் நின்றததற்காக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட ஆண்களுக்கும்  முஸ்லீம் மத ஷரியா சட்டப்படி கசையடி தண்டனை மக்கள் முன்னே வழங்கப்பட்டது  .

தண்டனை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




















Monday, December 21, 2015

தமிழருவிமணியனும் தேவைகளும்.




அதிக சம்பாதித்த உறவினர்களின் விசேடங்களுக்கு அவர்களதுஏழை உறவினன் செல்லும் போது அவர்களுக்கு  கிடைக்கும் மரியாதை என்பது கோவில் அர்ச்சகர் பிரசாதத்தை நம்கையில் அவர் கைப்பட்டு விடாமல் கொடுப்பது போன்றது.

அங்கு அவர்களுக்கு கிடைக்குமரியாதை அவமரியாதை.

ஊருக்காக உறவினன்  பெயர்போட்ட அழைப்பிதழ் ஆகா..மதித்து க்கொடுத்துவிட்டார்களே என்று இவன் விசேடங்களுக்கு ச்செல்ல  உறவினனின் பராமுகம் புன்னகைமறந்த உதடுகள்.

உள்வெறி கிளம்பும் நாமும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் செய்ததை நாமும் செய்துகாட்ட வேண்டும் என்கிற துடிப்பு.

வாய்ப்பு கிடைத்தவர்கள் வெற்றியாளராக கிடைக்கப்பெறாதவர்கள் இன்னமும் உறவினர்களின் பராமுக அவமதித்தலுக்கு உள்ளாகவேண்டும்.

கிட்டதட்ட நாகரீக உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நம்தேவைகளை மற்றவர்கள் கவனிக்கும்விதமாக ஊர் மெச்சும் வாழ்வு வாழ க்காசு தேவை.

ஆசைப்பட்டு த்தான்  ஓடவேண்டும் தேவைகளை  குறைத்தால் கஞ்சன் , கருமி  பட்டங்கள் ஒட்டிக்கொள்வதில் ஆச்சரியமில்லை.

தமிழருவிமணியன் பேச்சை கேட்கநேர்ந்ததுபேச்சின்முடிவில்

நாகரீக உலகில்  தேவைகளை அதிகரித்து க்கொண்டே செல்வது நாகரீகமல்ல தேவைகளை குறைத்து க்கொள்வதுதான் நாகரீகம் என்று சொன்னார்.

இச்சமுதாய ஓட்டத்தில் மணியன் கருத்தோடு முரண்படத்தான் முடிந்தது.


ஒத்துபோதல் என்பது...!!???

Friday, December 18, 2015

தினக்காலண்டர் வேண்டுமா? தி.மு.க.வில் சேருங்கள்.




ஈரோடு மாவட்டம் கொல்லாங்கோயில் பேரூராட்சி முன்னாள் தலைவர்  கே.எம்.பாலசுப்ரமணியம்  தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக வருகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க.தினசரி காலண்டர் இலவசமாகத் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.


காட்சியின் மானம் போகிறது என்று மற்ற தி்.மு.க.வினர் கோபம் காட்டினாலும் தம்பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். தலைமைக்கு புகார் தரப்பட்டு்ள்ளதாம்.

பாலசுப்ரமணியமோ என்னுடைய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும்  உறுப்பினர் சேர்கையில் பொய் க்கணக்கு காட்டி  நான் சீட்டு வாங்க பிறர்மாதிரி முயற்சிக்க வில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் கட்சியின் மானம் மரியாதைப்பற்றி பேசுபவர்கள்  பொதுகூட்டம் மாநாடு போன்றவற்றிக்கு ஆள்சேர்க்க ரூபாய்200 ம் கோழி பிரியாணியும் கொடுப்பதை என்னவென்று செல்வது எதிர்க்கேள்வி கேட்கிறார்.

எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே! பாவம் தி.மு.க.




Sunday, December 13, 2015

தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை-பகிர்வு


தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள்.
சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது.
மலிவு விலை மருந்து
தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தொற்றுநோய் ஏற்பட்டாலோ, விஷக் காய்ச்சல் வந்தாலோ என்ன செய்வார்கள்? எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்?
பயப்படத் தேவையில்லை. இதற்கு மிக மலிவான சித்த மருந்து உள்ளது. தொற்று நோய்கள் தாக்காமலும், விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் வராமலும், டெங்கு, சிக்குன் குன்யாவை விரட்டவும், சளி, இருமல், தும்மலைத் தடுக்க இருக்கவே இருக்கிறது மகா சுதர்சன சித்த மாத்திரை. இந்த மாத்திரையில் 45 வகை மூலிகைகள் மற்றும் படிகாரம் கலந்துள்ளது.
தீரும் நோய்கள்
அனைத்து வகை காய்ச்சல் (விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குன்யா, டைபாய்டு, மலேரியா, குளிர் காய்ச்சல்), சளி, இருமல், தும்மல், மூச்சடைப்பு, உடல்வலி, தலைவலி, தலை பாரம், மூட்டு வலிகள், தொற்று நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக, ஆஸ்துமா, நாள்பட்ட சர்க்கரை நோய், தோல் நோய்கள், எய்ட்ஸ், புற்று நோய் ஆகிய அனைத்துக்கும் தீர்வு தரும் ஒரே மருந்து, இந்த மகா சுதர்சன சித்த மாத்திரை.
மாத்திரை அளவு
ஒரு வயதிலிருந்து ஐந்து வயதுவரை ½ மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். ஐந்து வயதிலிருந்து 15 வயதுவரை ஒரு மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். 15 வயதிலிருந்து எந்த வயதினருக்கும் இரண்டு மாத்திரை மூன்று வேளை. ஆகாரத்துக்குப் பிறகு வெந்நீரில் சேர்த்துச் சாப்பிடவும். நோயின் தீவிரத்துக்கேற்ப ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை தரலாம். இதனுடன் மருத்துவரின் ஆலோசனை பெற்று நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்ளவும்.
உணவு
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இட்லி, இடியாப்பம், அரிசிக் கஞ்சி, பருப்பு கலந்த சாதம் போன்றவை. தேவைப்பட்டால் ஆங்கில மருந்தைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பலன் அதிகம், பக்க விளைவு தடுக்கப்படும். அனைத்துச் சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கிறது. விலை மிக மிகக் குறைவு.
உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வேறு பல நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து மகா சுதர்சன மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் ஆலோசனை பெற்று அனைவரும் காலை இரண்டு மாத்திரை, இரவு இரண்டு மாத்திரை உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல், சகல நோய்களையும் கட்டுப்படுத்திச் சங்கடங்களை நீக்கும்.
கட்டுரையாளர், திருச்சி இ.எஸ்.ஐ. சிறப்பு நிலை சித்த மருத்துவர்

நன்றி  : http://tamil.thehindu.com/ 

சிம்புவும் சிறுபிள்ளைதனமும்

பீப் பாடல் பிடித்தால் கேளுங்கள் பிடிக்காவிட்டால் கேட்காதீர்கள் சிம்பு அறிக்கை .பொதுமக்களாகிய நாம் இவருக்கு பெரிய புண்ணாக்குன்னு மரியாதை கொடுத்தா நமக்கு இவரு கொடுக்குற பதில் மரியாதை இதுதான்.

எல்லாம் பப்ளிசிட்டியாக்கும்....

பத்து பேர் விருப்படுற மனுசன் யாருமே பொதுமக்களுக்கு புடிக்காத ஒரு செயல செஞ்சா..விமர்சனம் வந்தா... மரியாதை பதில் சொல்ல கடமைப்பட்டவன்.

திமிரா நடந்தா..திமிரா பேசினா.. மக்களாகிய நாமதான் கொடுக்கனும் தீர்ப்பு.

தொடர்புடைய பதிவுகள்.

'பீப் பாடல்' பிடிக்காவிட்டால் கேட்காதீர்: 'சர்ச்சை' சிம்பு ஆவேசம்

http://avargal-unmaigal.blogspot.com/2015/12/beep-song-puts-simbu-anirudh-in-soup.html

Tuesday, December 08, 2015

யோகாசனம் -2015 புகழ்பெற்ற இன்ஸ்டாக்ராம் புகைப்படங்கள்

2015 இன்ஸ்டாக்ராமில்  மில்லியன் யோகாசன புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

மில்லியனில் அதிகம் பார்வையிடப்பட்ட பகிரப்பட்ட   சிறந்த புகைப்படங்கள்
























LinkWithin

Related Posts with Thumbnails