Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Saturday, May 07, 2016

பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன் - பகிர்வு

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. வேலையும் கிடைக்கப் போவதில்லை. பயனற்ற இந்த பட்டங்களை அளிக்கும் கல்வி மையங்களை வங்கிகள் அடையாளம் காண வேண்டும். அதில் படிக்க மாணவர்கள் கல்விக் கடன் கோரினால் அதை அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

கல்வியை வணிக நோக்கில் நடத்தி பணம் சம்பாதிக்கும் முறையற்ற கல்வி மையங்களால் வங்கிகளின் கடன் சுமைதான் அதிகரிக்கும். 

மிகவும் உயர்ந்த தரத்திலான பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணம் மிக அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கக் கூடும். இருப்பினும் தகுதிபடைத்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

திறமையான மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது வங்கிகளின் மூலம்கிடைக்கு கல்விக் கடன். அவ்விதம் கடன் வழங்கும் வங்கிகள், அந்தத் தொகையை மாணவர்கள் திரும்ப செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அவ்விதம் படித்து முடித்த மாணவர்கள் வேறு வேலை கிடைக்காமல் கடைசியில் குறைந்த ஊதியம் கிடைக்கும் பணிக்குச் செல்ல நேரிடும். அப்போது அவர்களால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமத சூழல் ஏற்படும்.

இதுபோன்ற லாப நோக்கிலான கல்வி மையங்களை அடையாளம் காண வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. வெறுமனே கல்விக் கடனை வழங்கி அவர்களை கடனாளி ஆக்கி உதவாத பட்டத்தை பெற வைப்பதில் என்ன பயன் இருக்க முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

தனியார் கல்வி மையங்களில் எப்போதுமே கல்விக் கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்திலும் இது அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது என்றார்.

இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதால் இனி பட்டமளிப்பு விழாவில் பேச்சைக் குறைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வரலாம் என வேடிக்கையாகக் குறிப்பிட்டார் ராஜன்.

இப்போது உங்களிடம் நான் பேசிய வார்த்தைகளில் ஏதேனும் ஓரிரண்டு வார்த்தைகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் நினைவில் வைத்திருந்தீர்களானால் நானும் ஒரு சாராசரி பட்டமளிப்பு விழா பேச்சாளராவேன். ஆனால் பெரும்பாலும் யார் பட்டம் அளித்தார்கள் என்பதே பலருக்கும் நினைவில் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் கூறியது எங்கு நினைவிருக்கப் போகிறது.

தாராள சந்தை என்பதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஆனால் முன்னேறிய நாடுகளில் கூட செல்வந்தர்களுக்குச் சாதகமாகவே சந்தைப் பொருளாதாரம் உள்ளது.

மிக அதிக ஊதியம் வழங்கும் பணிகளுக்கு திறமை மிக அவசியம். இதற்குரிய சூழலில் படித்து வரும் மாணவர்களுக்கு இது எளிதாகக் கைகூடுகிறது என்றார் ராஜன்.

நன்றி - தி இந்து

Thursday, April 07, 2016

வை .கோ -நாவன்மை


இரண்டு நாட்களாய் ஊடகங்களுக்கு வை.கோ போட்ட தீனி அவரது உணர்ச்சி வசப்படலில் வெளிவந்த வார்த்தைகள்.

உளறுகிறார் என்று விசயகாந்தை சொல்வார்கள். வை.கோ வை சொல்ல நாட்கள் வெகு தூரமில்லை என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

தி்மு.க வில் இருக்கும்போது தஞ்சை திலகர் திடலில் வை.கோ பேசுகிறார் என்றால் எங்கள் ஊர் இளவட்டங்கள் பஸ் ஏறி சென்று கேட்பார்கள்.

அவரது நாவன்மை அவரை அடையாளப்படுத்தியது என்பது தான் உண்மை.

இன்று எங்கே போனது..??!!

அரசியல் எதிரி தி்.மு.க என்று ஆனபிறகு அவர்கள் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் எத்தகைய தந்திரத்தையும் பயன்படுத்தலாம் . எதிர்ப்பவர் நிதானத்தில் தான் அவருடைய வெற்றி.
அத்தகைய நிதானம் வைகோவிடம் எங்கே போனது..???

மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய அவரது ஆளுமை...அவரது பேச்சினால் ஒன்றுமே இல்லாத கூட்டணியாகி விடக்கூடாது என்பதில் தான் அவருடைய முழுகவனமும் இருக்கவேண்டுமே தவிர  அவசரப்பட்டுக் கொட்டும் வார்த்தைகளில் அல்ல..

ஆகா...எப்படியோ திராவிட கட்சிகளுக்கு எதிரான சரியான போட்டியாக மக்கள் நலக் கூட்டணியை தமிழக மக்கள் மனதில் விதைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் வைகோவின் நாவன்மை செயல்பட வேண்டும்.

பார்க்கலாம்....





Tuesday, April 05, 2016

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட ”மூன்செட்“ புகைப்படம்

மாா்ச் 28 சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவு மறைவு புகைப்படம். 




Friday, March 11, 2016

கருத்து சித்திரம் பகிா்வு - தி இந்து

பல நூறு  வாா்த்தைகள் விளக்குவதை ஒரு  சித்திரம் விளங்க வைத்துவிடும்.


Monday, February 22, 2016

காதலர் தின கின்னஸ் சாதனை

நியூசிலாந்து நாட்டை ச்சார்ந்த அன்னா கோச்ரேனே காதலர் தினத்தன்று தலைகீழ் தொங்கும் விளையாட்டில் ( Trapeze) வெப்ப காற்று பலூனில் 10000 அடிக்கு மேல் பறந்து அங்கிருந்து  தலைகீழ் தொங்கி கின்னஸ் சாதனை ப்படைத்திருக்கிறார்.

2171 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கியது முந்தைய சாதனையாக இருந்தது.





Monday, December 28, 2015

ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிடமிருந்து ராம்டி நகரை மீட்டெடுத்த ஈராக்கிய படைகள்- புகைப்பட செய்தி

ஈராக் கடந்த மே மாதம் இழந்த ராம்டி நகரை அமெரிக்க  வான்வெளி தாக்குதல் உதவியுடன்  ஈராக்கிய படை மீட்டுள்ளது.

நகரின் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் புகைப்படங்கள்  கீழே...
















Wednesday, December 23, 2015

சீனத் தத்துவ ஞாநி லாவோ ட்சு வார்தைகள்



இந்த உலகத்தில் கடினமான விசயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன.

இந்த உலகத்தில் பெரிய விசயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன.

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது.

ஒன்பது மாடிக் கோபுரம்
சிறிய மண் குவியலிலிருந்து எழும்புகிறது.

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது.

எனவே  பெரிய விசயங்களை
ஞாநி  ஒருபோதும் செய்யமுயல்வதில்லை

அதனாலேயே,  பெரிய விசயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது.

Sunday, December 20, 2015

சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள்- பகிர்வு

தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் லண்டனில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையை செய்கிறது.

இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது.
இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின் கவசமாக இருந்து பாதுகாக்கிறது.
கிழக்கு லண்டனில் இருக்கும் ஷார்டித் மற்றும் டால்ஸ்டன் பகுதியிலுள்ள குடிக்குப் பேர்போன இரண்டு இடங்களில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹக்னி உள்ளுராட்சி சபைக்குள் இருக்கும் சாலையோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் செய்யும் அசுத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் (இந்திய மத்திப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்) செலவாகிறது.
இப்படி சாலையோர சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது அபராதம் விதித்தும் அவர்களில் பலர் திருந்தவில்லை என்கிறார் ஹக்னி உள்ளூராட்சி சபையின் ஃபெர்யல் டெர்மிசி. “அபராதம் அவர்களை திருத்தவில்லை. தங்களின் சிறுநீரால் தாங்கள் குளிப்பாட்டப்படுவோம் என்கிற அச்சமாவது அவர்களை திருத்தும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்கிறார் அவர்.
இப்படி அதிகப்படியான சிறுநீர் கழிக்கப்படும் சுவர்களுக்கு பூசப்படும் பிரத்யேக மேல்பூச்சு, தன்மீது விழும் எந்த திரவத்தையும் வேகமாக திருப்பியடிக்கவல்லது. அதாவது இத்தகைய சுவர்கள் மீது ஒருவர் சிறுநீர் கழித்தால் அந்த சிறுநீர் கழித்தவர் மீதே அந்த ஒட்டுமொத்த சிறுநீரும் வேகமாக திருப்பியடிக்கப்படும். சிறுநீர் கழித்தவருக்கு அவரது சிறுநீராலேயே குளியல் நடக்கும். மேலும் இதன்மூலம் அங்கே கழிக்கப்படும் சிறுநீர் சுவற்றில் ஊறி அந்த குறிப்பிட்ட சுவர் ஈரமாவதில் இருந்தும் கறையேற்படுவதில் இருந்தும் அதனால் துர்நாற்றம் வீசுவதில் இருந்தும் தடுக்கப்படுகிறது.
குடிப்பவர்கள் தங்கள் குடியை ரசித்துக் குடிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறும் டெர்மிசி, அதே சமயம் அங்கே வசிப்பவரின் சுவரையும், சுகாதாரத்தையும் அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
பேட்மென் ரோ பகுதியில் இருக்கும் நஃபீல்ட் ஹெல்த் நிறுவனத்தின் அலுவலக நிர்வாகி மோனிகா. தமது அலுவலகச் சுவர்களில் கழிக்கப்படும் சிறுநீரை சுத்தப்படுத்தும் பணியை அகற்றுவது தினசரி தலைவலி என்கிறார் அவர்.
தினமும் தனது அலுவலகத்தைத் திறந்ததும் முதல் வேலையாக அலுவலகத்தின் பக்கவாட்டில் இருக்கும் தீவிபத்துக்கால அவசர வழியை ஒட்டி கழிக்கப்பட்டிருக்கும் சிறுநீரை சுத்தம் செய்வது தனக்கு மிகவும் சிரமமான செயலாக மாறிவிட்டது என்று அவர் புகார் செய்கிறார். சிறுநீர் மட்டுமல்ல, பல சமயம் வாந்தியும் எடுத்துவைப்பார்கள் என்பது கூடுதல் அவலம்.
“இதையெல்லாம் தண்ணீர் குழாயை வைத்து நீரை பீய்ச்சியடித்து சுத்தப்படுத்துவதற்குள் தலைவலி வந்துவிடும். குறிப்பாக வார இறுதி நாட்களில் அந்த பக்கம் போகவே முடியாத அளவுக்கு துர்நாற்றமெடுக்கும்”, என்பது மோனிகாவின் புகார்.
இந்த புதிய சுவர்ப்பூச்சு குறித்து அவரிடம் சொன்னதும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ரொம்ப நல்ல யோசனை”, என்றார் அவர்.
இந்தத் தெருவில் கூடுதல் விளக்குகளை பொருத்துவதும் கூட இந்த பிரச்சனையை குறைக்கும் என்பது அவரது கூடுதல் யோசனை.
இந்த திரவத்தை திருப்பியடிக்கும் சிறப்புப் பூச்சை அமெரிக்காவில் இருக்கும் அல்ட்ராடெக் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. இதை பூசும்போது கண்ணுக்குத் தெரியாத ஒருவித கவசமாக இந்த பூச்சு சுவர்களை காக்கவல்லது.
பிரிட்டனுக்குள் ஹக்னி உள்ளூராட்சி சபைதான் இந்த சிறப்பு பூச்சை பயன்படுத்தும் முதல் உள்ளூராட்சி நிர்வாகம் என்று கருதப்படுகிறது. இந்த பூச்சுக்காக, முதல் கட்டமாக இரண்டு இடங்களின் பரிசோதனைக்கு ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் எந்த சுவர்களில் இதை பூசப்போகிறோம் என்பதை உள்ளூராட்சி நிர்வாகம் வெளியில் சொல்லவில்லை.
“தன் மேல் வந்து விழும் சிறுநீரை பெய்தவர் மீதே சுவர்கள் திருப்பியடிக்கும்போது சிறுநீர் கழிப்பவர்கள் தானாகவே தெரிந்துகொள்வார்கள்”, என்பது பாதிக்கப்பட்டப் பகுதிவாசிகளின் கருத்து.

நன்றி : http://tamil.thehindu.com/

Friday, December 18, 2015

தினக்காலண்டர் வேண்டுமா? தி.மு.க.வில் சேருங்கள்.




ஈரோடு மாவட்டம் கொல்லாங்கோயில் பேரூராட்சி முன்னாள் தலைவர்  கே.எம்.பாலசுப்ரமணியம்  தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக வருகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க.தினசரி காலண்டர் இலவசமாகத் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.


காட்சியின் மானம் போகிறது என்று மற்ற தி்.மு.க.வினர் கோபம் காட்டினாலும் தம்பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். தலைமைக்கு புகார் தரப்பட்டு்ள்ளதாம்.

பாலசுப்ரமணியமோ என்னுடைய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும்  உறுப்பினர் சேர்கையில் பொய் க்கணக்கு காட்டி  நான் சீட்டு வாங்க பிறர்மாதிரி முயற்சிக்க வில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் கட்சியின் மானம் மரியாதைப்பற்றி பேசுபவர்கள்  பொதுகூட்டம் மாநாடு போன்றவற்றிக்கு ஆள்சேர்க்க ரூபாய்200 ம் கோழி பிரியாணியும் கொடுப்பதை என்னவென்று செல்வது எதிர்க்கேள்வி கேட்கிறார்.

எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே! பாவம் தி.மு.க.




Thursday, December 17, 2015

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆளும்கட்சிக்கு அற்புதமான வாய்ப்பு

சென்னை மழை பலவிதமான விமர்சனங்களை ஆளும்கட்சிக்கு  ச்சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிய  ஒரு வாய்ப்பைச் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.

கூவம், அடையாறு,பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவு.

செய்யவேண்டியது

பாராட்டுகள்

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அரசு சென்னையிலும் எந்த ப்பாரபட்சமும் இல்லாமல் உடனடியாக செயலாற்ற தொடங்கினால்  எதிர்க்கட்சிகளுக்கு பலத்த பின்னடைவை கொடுக்கும் செயலாக அமைந்துவிடும்.

மக்களுக்கும் நம்பிக்கை வரவைக்கும் செயலாக அமைந்துவிடும்.

அஇஅதிமுக அரசின் மிகப்பெரிய பலவீனம் உள்ளாட்சி துறை.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளும்அரசை விமர்சித்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பாகச் சென்னை மழை வெள்ளத்தைப்பயன்படுத்தினாலும் தப்பிக்கும் வாய்ப்பாக ச்சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது.

ஆளம்அரசு பயன்படுத்தி கொள்ளுமா...!!??

Saturday, December 05, 2015

டெய்லி இதெல்லாம் செஞ்சாக்க வாழ்க்கையில பெரிய மாற்றம் கிடைக்குமாமே..!!



1. இன்னிக்கு என்ன செய்யப்போகிறோமுன்னு காலையிலே திட்டமி்டல்.

2. கைப்பேசி இல்லாத காலைச்சாப்பாடு.

3. கண்ணாடியப்பாத்து சிரிங்கப்பா...

4. 15 நிமிட  படிப்பு.

5. 10 நிமிட தியானம்.

6. நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ஈடுபாட்டுடன் பேசுங்கப்பா..

7. உங்களோட ஸ்மார்ட்போன்  மூலமாக த் தினசரி ஒரு போட்டோ .

8. எது மகிழ்ச்சிய உண்டுபண்ணிச்சுன்னு எழுதிபாருங்கப்பா..

9. எது மகிழ்ச்சிய உண்டு பண்ணலேன்னு ஏன்னு எழுதிபாருங்க..

10. பொண்டாட்டியோ குழந்தையோ அன்பான அரவணைக்கப்பா..


என்னோட வாழ்க்கையில  ஆறு விதி தவறாம இடம் பெற்றுவிடும்.  மீதி  உள்ளத இனிமேதான் முயற்சிக்க வேண்டும்.
 முயற்சிப்போம் மாற்றம் பெறுவோம்.

Wednesday, December 03, 2014

அதிவேகம் விவேகமல்ல! (பகிர்வு)



பிரதமர் நரேந்திர மோடியின் அவசரம் புரிகிறது. "வளர்ச்சி' என்கிற கோஷத்தை முன்வைத்து அசாதாரண தேர்தல் வெற்றியை ஈட்டியிருப்பதால், இந்தியாவை விரைந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டுக்குரியவை. இந்தியாவை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக மாற்ற வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் முனைப்பு வெற்றி பெறுமானால், வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமாகக் குறையும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
இதெல்லாம் சரி. ஆனால் பிரதமர் மோடி தனது அதிவேக வளர்ச்சித் திட்டத்திற்கு சீனாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருப்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதுவரை, பிரதமர் மோடி சீனாவைப் பற்றி முன்வைத்த கருத்துகளை அவர் சற்று நினைத்துப் பார்த்தால், இந்த அளவுக்கு சீனாவுடன் நேசக்கரம் நீட்ட அவர் முன்வர மாட்டார். கூடாது.
சீன அதிபரின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது, சென்னைக்கும் தில்லிக்கும் இடையே 3,200 கோடி டாலர் முதலீட்டில் 1,754 கி.மீ. தொலைவுக்கான அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. சீன ரயில்வே அதிவேகமானது என்பது மட்டும்தான் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மிகவும் பாதுகாப்பில்லாத ரயில்வே சீனாவில் இயங்குகிறது என்பதை அங்கே அடிக்கடி நடக்கும் விபத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஜப்பானும், பிரான்ஸூம்தான் விரைவு ரயில் தயாரிப்பு, போக்குவரத்தில் முன்னணி வகிக்கின்றனவே தவிர சீனாவல்ல. கடந்த மாதம் மெக்சிகோ சீனாவுடன் விரைவு ரயிலுக்காகச் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, ரத்து செய்திருக்கிறது என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவை உலக நாடுகளின் உற்பத்திக் கேந்திரமாக்கும் முனைப்பு பல சீனத் தயாரிப்பாளர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. "தேய்பிறைத் தொழில் துறைகள்' என்று சீனாவால் புறக்கணிக்கப்படும், தவிர்க்கப்படும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடக்கூடும் என்று தெரிகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடுகளில் ஒன்றான "க்ளோபல் டைம்ஸ்' என்கிற தினசரியில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது. "இந்தியாவின் நம்பிக்கை சீனாவின் தேய்பிறைத் தொழில் நிறுவனங்களில் இருக்கிறது' என்கிற தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில், உற்பத்தித் துறையில் சீனா அடைந்திருக்கும் வெற்றி ரகசியத்திலிருந்து மோடி அரசு பாடம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்.
பழைய தொழில்நுட்பமும், அதிகமாக சுற்றுப்புற மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும் சீனாவில் மெல்ல மெல்ல மூடப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளை வியத்நாம், லாவோஸ், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இடமாற்றம் செய்து வருகிறது சீனா. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் வியத்நாமில் சீனாவுக்கு எதிரான போராட்டமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி, ரசாயனம், இரும்பு உருக்கு, மோட்டார் உதிரிப் பாகங்கள் போன்ற தொழிற்சாலைகளுக்கான உற்பத்திச் செலவு சீனாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதனால், அந்தத் தொழிற்சாலைகளை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள ஏனைய ஆசிய நாடுகளுக்கு மாற்றும்படி, சீன அரசு தொழிலதிபர்களை வலியுறுத்துகிறது. அதனால்தான் சமீபகாலமாக, சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் நடத்துபவர்கள் இந்தியாவுக்கு அடிக்கடி வருகிறார்கள். இங்கே தொழிற்சாலை நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இப்போது சீனாவும் அமெரிக்காவைப்போல, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை வெளிநாடுகளில் நிறுவுவது என்கிற முதலாளித்துவ மனப்போக்குக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தரம் குறைந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு உலகச் சந்தையில் விற்பது என்கிற சீனாவின் உத்திக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவை உலக உற்பத்திக் கேந்திரமாக்கும் திட்டம் மிகவும் வசதியாக இருக்கிறது. இதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
அதிவிரைவான பொருளாதார முன்னேற்றம் என்பது சாத்தியமல்ல. மிதமிஞ்சிய அவசரமும் வேகமும் விவேகமாகாது என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்து செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, சீனாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது என்பது ஆபத்தை விலைகொடுத்து வாங்கியதாகிவிடும்.
சீனாவைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்றோ, சீனாவுடன் போர் தொடுக்க வேண்டும் என்றோ நாம் கூறவில்லை. இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்!

Monday, July 29, 2013

உலகின் முதல் கப்பல் வடிவிலான ரிசார்ட்

தென் கொரியா ஜியாங்டன்ஜின் கடற்கரை நகரில் உலகின் முதல் கப்பல் வடிவிலான சன் குருயீஸ்  என்ற ரிசார்ட்  அமைந்துள்ளது.

165 மீட்டர் நீளம் 45 மீட்டர் உயரம் கொண்டது. 211 அறைகள் கொண்ட இந்த ரிசார்ட்டில்  ஹோட்டல்  ரெஸ்ட்ராண்ட்  நைட்கிளப்  நீச்சல் குளம்  என அனைத்து வசதிகளும் உள்ளது.







LinkWithin

Related Posts with Thumbnails