ஈரோடு மாவட்டம் கொல்லாங்கோயில் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.எம்.பாலசுப்ரமணியம் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக வருகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க.தினசரி காலண்டர் இலவசமாகத் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.
காட்சியின் மானம் போகிறது என்று மற்ற தி்.மு.க.வினர் கோபம் காட்டினாலும் தம்பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். தலைமைக்கு புகார் தரப்பட்டு்ள்ளதாம்.
பாலசுப்ரமணியமோ என்னுடைய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் உறுப்பினர் சேர்கையில் பொய் க்கணக்கு காட்டி நான் சீட்டு வாங்க பிறர்மாதிரி முயற்சிக்க வில்லை என்றும் கூறுகிறார்.
மேலும் கட்சியின் மானம் மரியாதைப்பற்றி பேசுபவர்கள் பொதுகூட்டம் மாநாடு போன்றவற்றிக்கு ஆள்சேர்க்க ரூபாய்200 ம் கோழி பிரியாணியும் கொடுப்பதை என்னவென்று செல்வது எதிர்க்கேள்வி கேட்கிறார்.
எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே! பாவம் தி.மு.க.








