Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, January 18, 2017

யார் அவர் யாரோ...!!??

இரு பெரும்கழங்களின் தலைகள் இல்லா புதிய தமிழகம்.

புதிய தலைமைகளின் கீழ் இரு பெரும்கழங்கள்  .

தமிழக அரசியல்களம் நொண்டுகிறது.

புதிய தி.மு.க தலைமை தன்னுடைய அரசியல் அனுபவத்தினால் செயல்தலைவராய் முன்னிறுத்திக் கொள்ள...

அ.தி.மு.க வின் புதிய தலைமை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தடுமாறுகிறது.

பகட்டு அரசியல் வெற்று வாதங்களும் இனி தமிழகத்தில் எடுபடா சூழலில் தமிழக மக்களின் துயர் களைய...தமிழக முன்னேற்றத்தில் பங்கெடுத்து செல்லும் ஓரு புதிய தலைமையின் தேவை தமிழகத்திற்கு அவசியம்

Saturday, May 21, 2016

அரியணை ஏறிய அஇஅதிமுக ..!!?? எதிர்கட்சியாம் திமுக

சபாஷ் ... பலமான போட்டியில் வெற்றி வாகை சூடிய அஇஅதிமுக.. நிறையவே பாடுபட்டு வெற்றியை இழந்த திமுக.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற நியதியை உடைத்தற்காகத் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் .

திமுக-வை திரும்பவும் குழிக்குள் தள்ள க்காரணம் உண்டு  என்றால் அது கட்டபஞ்சாயத்தார்கள் நிறைந்த திமுக. தமிழகத்தின் சிறுஊர்களில் கூடப்   போன திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட  ஏழைகள்...அய்யோ அவர்களா..??!!
என்று நினைக்க வைத்தது உண்மை.

திமுக திரும்பவும் தன்னைச் சீர்திருத்தி குறைகளைக் களைந்து புதுபித்து க்கொள்ள மறுபடியும் ஐந்து வருடங்கள் தமிழகமக்கள் வழங்கியுள்ளார்கள்.
வாரிசுகளின் வேட்பாளர் நியமனம்   பழைய வேட்பாளர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களே கட்சி அதிகாரத்தில் தொடர்வது புதிய விளம்பர பாணியில் பழைய திமுக -வின் முகம் தென்பட்டது.

ஊடகங்கள் சுட்டிக்காட்டிய 2ஜி ஊழல் ஈழப்பிரச்சினை  திமுக-வின் நிரந்தர கறைகளாய் வரலாற்றில் பதிந்த ஒன்றை இன்றைய வளரும் தலைமுறை மறக்கவில்லை .

பலர் வாய் மூட  அறிக்கைகள் விட்டு  ச்சொல் ஒன்றாய் செயல் ஒன்றாய்  ஆனதால் திமுக தலைவர் இந்தத் தேர்தல் தோல்வியை அறுவடை செய்தார்.

தமிழக மக்கள் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்கும் வாய்ப்பினை திமுக வழங்க ச்சட்டசபையினுள் இருந்து மக்கள் பிரச்சனைகளை  எடுத்து ப்பேசி  ஆளும் அதிமுக-வை  தறிகெட்டு ஓடும் குதிரையாக  இல்லாமல் ஆக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக உண்டு .

பார்க்கலாம்...திமுக-வின் செயல்பாடுகளை வரும் காலங்களில்....

அதிமுக திரும்பவும் அரியணை  செயல்படா முதல்வர் செயல்படா அரசு என்பதை னை மாற்ற முயலவேண்டும்.

படிப்படியாக மதுவிலக்கு முதல்படியை இந்த அரியணை ஏறியவுடன் மக்களுக்குத் தெரிவிக்க முதல்வர் கடமைப்பட்டுள்ளார்.

முந்தைய அரசாக இல்லாமல்  செயல்படும் அரசாய் மாற்ற மக்கள் மிகசரியாக  சிறந்த எதிர்க்கட்சி யை வலுவான நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளார்கள்.

கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தொந்தரவு கிடையாது அதனால் கிடைத்த நற்பெயர் மட்டுமே அதிக வித்தியாசம் இல்லாத இந்த வெற்றியை  அதிமுக விற்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.

இன்னமும் தன்னை சீர்துர்க்கி திருத்தி க்கொள்ளவேண்டிய நிலையில் அதிமுக உள்ளது  என்பதும் மறுப்பதற்கில்லை.

பார்க்கலாம்...வரும் காலங்கள் சொல்லும்....



Saturday, April 16, 2016

கோடையும் தேர்தலும்

சொன்னீங்களே... செஞ்சீங்களா... இது  தி.மு.க தொலைக்காட்சி விளம்பரம்.

சொன்னதை ச்செய்தோம் சொல்லாததையும் செய்தோம்..இது  அஇஅதிமுக தொலைக்காட்சி விளம்பரம்.

அனுபவித்த தமிழக மக்களுக்கு த்தெரியும். மக்களின் அறியாமையைப்  பயன்படுத்தி அதிகாரம் பெறத்துடிக்கும்  இரு திராவிட கட்சிகளுக்கு விரைவில் சங்கு ஊத  எந்த மாற்றுச்சக்தி வரப்போகிறதோ தெரியவில்லை.

மநகூ சாதிக்குமா...??!!

கோடை வெயில் உக்கிரம் உடம்பில் வழியும் வியர்வை எடுத்து ச்சொல்ல..
ஜனநாயக திமுக -வில் வேட்பாளர்களை மாற்றக்கோரி அறப்போராட்டங்கள் தமிழகத்தில் அங்கங்கே நடப்பது விசித்திரம்.

அப்பவா..பிள்ளையா போட்டியில்  திமுக .

அஇஅதிமுக பிரசாரத்தில் மயக்கமடையும் பெண்களும் ஆண்களும் கோடையில் விசுவாசமா அல்லது வாங்கிய காசுக்கான உழைப்பா..??
அந்தந்த பகுதி அஇஅதிமுக  நிர்வாகிகளுக்கே வெளிச்சம்.

பலமுனை போட்டியில்  தேர்தல் போட்டி என்னவோ அஇஅதிமுக -திமுக என்பதை  விளம்பரங்களும் பிரச்சாரங்களும் காட்ட மற்ற கட்சிகளின் விளம்பரங்களையும் பிரசாரங்களையும்  தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

எல்லாம் காசு தாம்பா...!!

கோடையும் தேர்தலும் அனல் பறக்கிறது.






Monday, April 11, 2016

இந்தியா டுடேவின் அம்மா நாடு அனிமேஷன்

நம்ம கண்ணுக்கு இப்பதான் மாட்டிச்சி...நல்லா இருந்திச்சி...அதான்  பகிர்ந்துகிட்டேன்.

அம்மாநாடு

Thursday, April 07, 2016

வை .கோ -நாவன்மை


இரண்டு நாட்களாய் ஊடகங்களுக்கு வை.கோ போட்ட தீனி அவரது உணர்ச்சி வசப்படலில் வெளிவந்த வார்த்தைகள்.

உளறுகிறார் என்று விசயகாந்தை சொல்வார்கள். வை.கோ வை சொல்ல நாட்கள் வெகு தூரமில்லை என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

தி்மு.க வில் இருக்கும்போது தஞ்சை திலகர் திடலில் வை.கோ பேசுகிறார் என்றால் எங்கள் ஊர் இளவட்டங்கள் பஸ் ஏறி சென்று கேட்பார்கள்.

அவரது நாவன்மை அவரை அடையாளப்படுத்தியது என்பது தான் உண்மை.

இன்று எங்கே போனது..??!!

அரசியல் எதிரி தி்.மு.க என்று ஆனபிறகு அவர்கள் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் எத்தகைய தந்திரத்தையும் பயன்படுத்தலாம் . எதிர்ப்பவர் நிதானத்தில் தான் அவருடைய வெற்றி.
அத்தகைய நிதானம் வைகோவிடம் எங்கே போனது..???

மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய அவரது ஆளுமை...அவரது பேச்சினால் ஒன்றுமே இல்லாத கூட்டணியாகி விடக்கூடாது என்பதில் தான் அவருடைய முழுகவனமும் இருக்கவேண்டுமே தவிர  அவசரப்பட்டுக் கொட்டும் வார்த்தைகளில் அல்ல..

ஆகா...எப்படியோ திராவிட கட்சிகளுக்கு எதிரான சரியான போட்டியாக மக்கள் நலக் கூட்டணியை தமிழக மக்கள் மனதில் விதைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் வைகோவின் நாவன்மை செயல்பட வேண்டும்.

பார்க்கலாம்....





Friday, March 04, 2016

கண்ண கட்டுதுரா சாமீ..!! - தமிழக அரசியல்

மே 16

தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது.

பத்திரிக்கை ஊடகங்கள்  இணையவழி செய்திகளின் பயணித்தலில் தமிழக அரசியல் பொதுமக்களின் மனதில் பலவிதமான உணர்வுகளை  க்கிளப்பிவிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை முன் கூட்டியே கொண்டுவந்துள்ளது.

நண்பர்களுடைய வாத பிரதிவாதங்கள் படிக்கும் பத்திரிகைகளுடைய தாக்கம் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் பக்கம் சார்ந்த  பத்திரிக்கைகளின்  கருத்துகளால் குழப்பம் குழப்பம்.

இவற்றையெல்லாம் மீறி விசயகாந்த் என்ன முடிவு செஞ்சாரு..என்ன முடிவு செய்ய போறாரு..எப்பா கண்ண கட்டுதுறா சாமீ..!!

அஇஅதிமுக  மௌனம்  தலைமையின் அதிரடி கட்சியை கலகலப்பாக்க...

பாமக விளம்பர டிரெண்ட்  திமுக- வின்  விளம்பர டிரெண்டை மிஞ்சி விட்டது  என்னவோ உண்மை தான்.

விளம்பர மாற்றம் வாக்கு மாற்றம் ஆகுங்களா??

கணஜோராக வேட்பாளர் தேர்வில் திமுக... சனநாயக கட்சில்லே... வேட்பாளர்களை முடிவு செய்யறது தலைவரா...பொருளாரா ...பொருத்து தான் பார்க்கணுமுங்க..

தேர்தலுக்கு த்தேர்தல்   தேர்தல் சமயம் கும்பிட்டு ...ஜெயித்தவுடன் நாள் கணக்கில் நாம நிக்க தலைவரு ரொம்ப பிசி..வாக்களர் நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமுல்ல....இதெல்லாம் உங்களுக்கு த்தெரியாதது கெடையாது.

ரெண்டு பெரிய கட்சி வேணாமுன்னு சொன்னாலும் மாற்று எது ??!!  பல வினாக்களை த்தொக்கியே தமிழகம் நிற்கதியாய் நிற்கிறது.

திமுக குடும்ப அரசியல் லோக்கல் அரசியல் எப்பா நெனைக்கவே  முடியல...

அதிமுக தலைமையின் தொய்வு மன்னை வகையறாக்களின்  மறு வருகை உண்டு பண்ணிவிடுமோ பயமும் இருக்கவே...

மாற்று அரசியலுக்கான நேரம் தமிழகத்திற்கு வந்துவிட்டது உண்மைதான் . ஆனா  யாரு...

தொழிலாக மாறிய இன்றைய அரசியலில் பொது சனமாகிய நாம யார கொண்டுவரலாம்..!!??
 இந்த தேர்தல ஒரு வழி கிடைக்குமா பார்க்கலாம்.


Wednesday, February 24, 2016

அம்மா பொறந்த நாளும் அஇஅதிமுக-வும்

நேற்றைய தினசரிகளில்  ஆளும் முதல்வருக்கு எதிராக திமுக கொடுத்த விளம்பரங்கள்  ஹாட் என்றால் அதிமுக தரப்பு கொடுத்த வாட்ஸ் அப் பதிலடியும் ஹாட்...
அகவை -68


பேருந்து நிலையம் பகுதிகளில்  வாழ்த்துகள் தெரிவித்த ப்ளக்ஸ் பொிது பெரிதாய் கட்டப்பட ...

காலையில் எங்கள் ஊர் கோவில் வாசலில் வாகனங்கள்  அதிகமாய் நின்றது .
என்ன விசேசம் என்று போய் பார்க்க ..அட...அம்மா பொறந்தநாளுக்கு ஊரு ஒன்றியம் நகரம் கவுன்சிலருன்னு அம்மாவுக்காக எல்லாரும் சாமி கும்பிட்டாங்க..

பூசை முடிஞ்சது வாகனங்கள் புறப்பட்டது.

அஇஅதிமுக கொடிமரங்கள்  இருந்த இடங்களில் எல்லாம் அதாங்க முச்சந்தி நாற்சந்திகளில் எல்லாம் இயக்க ப்பாடல்களை ஒலி பரப்பி  ஒன்றியம் கொடி ஏற்றினார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் சத்தம் குறைந்து இயக்கப் பாடல்கள்  நின்றுவிட...வெயில் தாக்கம் நின்றவர்களும் ஓடிப்போனார்கள்.

அம்மா பொறந்த நாள் முடிவுக்கு வந்தது.

அஇஅதிமுக கொடி பறக்கிறது.

Friday, February 12, 2016

குழப்ப அரசியலும் தமிழகமும்.





சொல்லிக் கொள்ளும்படி செயல்படாத அஇஅதிமுக தலைமை.  தலைமை
எவ்வளவு சொன்னாலும் அடங்காத ஸ்டிக்கர் ஒட்டிகள் உள்ளாட்சி ஓட்டை சுகாதாரம்  சொல்லவே தேவையில்லை எனச் சொல்லும்படி குறைகள் பல இருந்தாலும்  மாவட்டம் ஒன்றியம் நகரங்களின் அதிகார ஆட்சியின்மை அஇஅதிமுக கொஞ்சம் முன்னோக்கி நிறுத்த...

தகப்பனா...பிள்ளையா போட்டியில் தி.மு.க.  பேச ஒன்றுமில்லாத நமக்கு நாமே.. இப்பொழுதே மாவட்ட செயலாளர்களிடம் அந்த அந்த மாவட்ட எம்.எல்.ஏ  நேர்முககானலுக்கு உட்கார 2சி  வசூலிக்க த்திட்டமாம் ாிப்போர்ட்டா் செய்தி ஆட்சிக்கு வந்தால் கொடுத்தவர்கள்  சம்பாதிக்க என்ன செய்வார்கள்? கடந்த ஆட்சியே அதற்கு ச்சிறந்த உதாரணம்.

மாற்று த்தேவைப்படுகிறது நிறைய க்குழப்பம் நிலவுகிறது. சந்தர்ப்பவசத்தால் அமைந்த கூட்டணியில் எல்லோருக்கும் முதல்வர் கனவாம் . நல் ஆட்சி கிடைக்குமா ??!! இன்று ஒரு சேர நின்றாலும்  அவரவர் தோரணைக்கு அவரவர் ஆட்சியானால்  என்ன செய்வது?

குழப்ப க்கட்சி தேமுதிமுக தெளிவான தி்ட்டமில்லாத கட்சியாக இன்னும் பார்க்கப்பட குழப்ப த்தலைமையை வழிநடத்தும் சாரதி மனைவி மச்சான்  இன்னமும் கற்றுக்கொள்ள ஏராளம். கூட்டணி கட்சி தேமுதிமுக.

பாஜக   காதர்கட்சி இப்பொழுது தமிழகத்தில் வேலை இல்லாதது போல் தெரிகிறது.

பாவம் தமிழ்மக்கள் இலவசத்தால் கட்டுண்டு...டாஸ்மாக்கில் மயங்கி க்கிடந்து தமிழ் ச்சமூகம் பற்றிய சுயநினைவு அற்றவனாய் வாக்குறுதிகளினால்  வசிகரீகப்பட்ட  கோடிக்கான தமிழர்களில் நானும் ஒருவனாய் சட்டமன்ற தேர்தலை நோக்கி...

Friday, December 18, 2015

தினக்காலண்டர் வேண்டுமா? தி.மு.க.வில் சேருங்கள்.




ஈரோடு மாவட்டம் கொல்லாங்கோயில் பேரூராட்சி முன்னாள் தலைவர்  கே.எம்.பாலசுப்ரமணியம்  தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக வருகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க.தினசரி காலண்டர் இலவசமாகத் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.


காட்சியின் மானம் போகிறது என்று மற்ற தி்.மு.க.வினர் கோபம் காட்டினாலும் தம்பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். தலைமைக்கு புகார் தரப்பட்டு்ள்ளதாம்.

பாலசுப்ரமணியமோ என்னுடைய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும்  உறுப்பினர் சேர்கையில் பொய் க்கணக்கு காட்டி  நான் சீட்டு வாங்க பிறர்மாதிரி முயற்சிக்க வில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் கட்சியின் மானம் மரியாதைப்பற்றி பேசுபவர்கள்  பொதுகூட்டம் மாநாடு போன்றவற்றிக்கு ஆள்சேர்க்க ரூபாய்200 ம் கோழி பிரியாணியும் கொடுப்பதை என்னவென்று செல்வது எதிர்க்கேள்வி கேட்கிறார்.

எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே! பாவம் தி.மு.க.




Thursday, December 17, 2015

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆளும்கட்சிக்கு அற்புதமான வாய்ப்பு

சென்னை மழை பலவிதமான விமர்சனங்களை ஆளும்கட்சிக்கு  ச்சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிய  ஒரு வாய்ப்பைச் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.

கூவம், அடையாறு,பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவு.

செய்யவேண்டியது

பாராட்டுகள்

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அரசு சென்னையிலும் எந்த ப்பாரபட்சமும் இல்லாமல் உடனடியாக செயலாற்ற தொடங்கினால்  எதிர்க்கட்சிகளுக்கு பலத்த பின்னடைவை கொடுக்கும் செயலாக அமைந்துவிடும்.

மக்களுக்கும் நம்பிக்கை வரவைக்கும் செயலாக அமைந்துவிடும்.

அஇஅதிமுக அரசின் மிகப்பெரிய பலவீனம் உள்ளாட்சி துறை.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளும்அரசை விமர்சித்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பாகச் சென்னை மழை வெள்ளத்தைப்பயன்படுத்தினாலும் தப்பிக்கும் வாய்ப்பாக ச்சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது.

ஆளம்அரசு பயன்படுத்தி கொள்ளுமா...!!??

Tuesday, May 27, 2014

நிறைய எதிர்பார்ப்பு

மோடி பிரதமர் .

அவரது சிந்தனை செயல்வடிவம் பெறப்பொறுத்திருக்க வேண்டும்.

ஒரு மாநில அரசியல்வாதி தேசிய அரசியல்வாதியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறார்.

வாத விவாதங்கள்  அவரைப்பற்றி முன்னெடுத்து வைக்கப்பட   பொறுமையாய்   காத்திருப்போம்.

மோடி பிரதமா்.

காங்கிரஸ்  கவிழ்ந்தது.

தி.மு.க. தோற்றது.

பெரும் ஊழல்வாதிகளையே வேட்பாளர்களாக தேர்தலில் நிற்க வைக்கும் தைரியம் தி்.மு.க. விற்கு மட்டுமே உண்டு.

அ.தி.மு.க. சில பல கணக்குகளால் வெற்றியை ரசிக்க முடியாமல் நிறையவே தள்ளாடுகிறது.

தமிழகத்தை இன்னும் இன்னும்  சீர்மைப்படுத்த வேண்டிய செயல்கள் நிறையவே இருக்க  அ.தி.மு.க . தலைமை அவசரப்பட்டதாகவே தெரிகிறது.

தே.மு.தி.க . விற்கு சினிமா பாணி வசனங்களும் செய்கைகளும்  மக்கள் மத்தியில் ஓரளவிற்கு மேல் எடுப்படாது என்பதை இந்தேர்தல் உணர்த்தியிருக்கும்.

Monday, September 30, 2013

கொஞ்சம் அரசியல்.

நாகை நகரம் பா.ஜ.க  என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்ட
வேன்கள் பா.ஜ.க. கொடி தாங்கி  நாகையிலிருந்து திருச்சி நோக்கி  விரைந்து சென்றுக்கொண்டிருந்தன.

மதியம் 12 மணியளவில் எனது இருசக்கர வாகனபயணம்  மிக கவனமுடன்  நிகழ்ந்தது.

இடையே இடையே மரநிழல்களில் ஒவ்வொரு வேனை நிப்பாட்டி தயாரித்த கொண்டு வந்திருந்த பட்டைசாதம் பாக்கு மட்டை தடடுகளில் விநோயிக்கப்பட்டது.

வருங்கால பிரதமர் … மோடி  குரொலிகளுக்கு குறைவில்லை.

அ.தி.மு.க.    , தி.மு.க. வண்டிகளின் அணிவகுப்பையே பார்த்த கொண்டிருந்த கண்களுக்கு  தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பொதுமக்கள் மக்கள் மத்தியில்   மோடி திருச்சிக்கு வருகை புரிந்த நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்தது.

மறுநாள் மறந்து போனார்கள் திருவாளர்கள் பொதுமக்கள்.

முந்தைய நாட்களில் பா.ஜ.க.   எங்கள் ஊரில் இருப்பதை அந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தெரிந்து கொள்ளலாம் .


இத்தகைய சூழலில்  இக்கட்சியின் திடீர் எழுச்சி    மோடியை மையப்படுத்தி தான் என்று சொல்வதில் ஒன்றும் மோசமில்லை   தான்.

Tuesday, September 17, 2013

கொஞ்சம் அரசியல்.

காங்கிரஸ் கட்சி இருக்குவரைக்கும் நாம் உருப்புடமுடியாது.  தகவல் தொடர்பு விரிவாக இல்லாத காலங்களில் எந்த ஒரு திட்டத்துக்கும் மாநில  அரசை குறைசொல்வது வாடிக்கை.

மத்திய அரசின் மாநில அரசுக்குரிய பங்களிப்புகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக  மக்கள் தெரிந்து கொண்ட நிலைமையில் காங்கிரஸ் கட்சி பற்றி மக்களின் எண்ணம் தி்.மு.க.  வை தமிழகத்தில் பெருத்த அடி கொடுத்து  ஆட்சியை விட்டு இறக்கியது மாதிரி காங்கிரஸை    மக்கள்  மத்தியில் இருந்துஇறக்க வேண்டும்.


அதே நேரத்தில் பா.ஜ.கட்சியினரின்     ஒற்றுமையின்மை ஒரு பக்கம் பயத்தை விளைவித்து கொண்டிருக்க எப்படியோ நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி   பாரதீய ஜனதா கட்சி  தன்னை நிலைப்படுத்தி கொள்ள நினைக்கிறது.

மாநில அரசியலில் நிர்வாகத்தில் தன்னை முனனிலைப்படுத்தி கொண்ட மோடி  தேசிய அரசியலில்  ஜொலிப்பாரா என்ற வினாவினையும் ஆச்சரியங்களையும் ஊடகங்கள் பிரபலப்படுத்தாமல் இல்லை.

அதற்கு ஒரே தீர்வு மக்களாகிய நாம் ஒரு வாய்ப்பு வழங்குவதை பொறுத்தே அமையும்.

அதற்குள்ளாகவே தற்போதையதமிழக முதல்வரை  பிரதமர் நாற்காலிக்கு  அழைத்து செல்ல வாய்வழியே சில தலைவர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.


தமிழக அரசின் பல திட்டங்கள் இன்னமும் முழுமையாக  தமிழகத்தை            சென்றடையாமல் இருக்க அ.தி.மு. க. ஆட்சியின் முழுபலனை இன்னும்  தமிழகமக்கள் அனுபவிக்கவில்லை. மாநில அரசியலே இன்னும் சரிப்படுத்த படாத நிலையில் அவரை பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்வது எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை.

தமிழக மக்களின் மனபோக்கு  அ.தி.மு.க. ஆட்சியில் ஓ.கே. சொல்லுமளவிற்கு சென்று கொண்டிருக்கதமிழக மக்களை  தன்பக்கம் திருப்ப தி்.மு.க. படாதபாடு  பட்டு கொண்டிருக்கிறது  என்பது உண்மை.


தி.மு.க. தலைவரின் வார்த்தை ஜாலங்கள் தமிழகத்தில் இனி எடுப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்விகள்.  ஏனென்றால் அவரது மயக்கும் வார்த்தை விளையாட்டுகளில்  மயங்க அவர் வயதுகேற்ற ஆட்கள் தமிழகத்தில் மிகவும் கம்மி.


வரவிருக்கும் லோக்சபா தேர்தல்களின் முடிவுகளில் தலைவர்களின் முகத்திரை கிழியும் வரை காத்திருப்பது மக்களாகிய நம் கடமை.

Tuesday, March 12, 2013

கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார்

முதல் நாளே தி.மு.க . அரசியல்வாதிகளால் டெசோ பந்த் கடைகள் அடைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள் கல்லுாரிகள்   ஆட்டோ பேருந்துகள் இயங்கின.

சாதாரண ஒரு குடிமகன் சொன்னது.

ஆட்சியில் இருந்தப்ப  இலங்கை பிரச்சனையை சரிபார்க்க முடியல...இப்ப பந்த் பண்ணி என்ன புண்ணியம்.

நம்மல கருணாநிதி ரொம்ப ஏமாத்துகிறார் என்று  சொன்னார்.




சமூகவலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்து.
 
“தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை மாணவர் அமைப்பு போன்று எந்த அமைப்பால் முன்னெடுக்கபட்டாலும்  அதனுடைய உடனடி பலனை அறுவடை செய்யபோவது அ தி மு க தான்  ஏனென்றால் இந்த போராட்டம் தீவிரமாகும்போது போர் உச்சகட்டத்தில்  ஆட்சியில் இருந்த தி மு க  வின் செயலற்ற தன்மைதான் பேசுபொருளாக மாறும் அது அ தி மு க விற்கு வாக்குகளாக மாறும் இதுதான் சட்டசபை தேர்தலிலும் நடந்தாது

உண்மையில்  கருணாநிதிக்கு பயமெல்லாம் ஜெயலலிதாவின் மேல்தான் அதனால் தான் இந்த டெசோவெல்லாம்  ஆளும் கட்சி இதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்

என்னை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராத அளவுக்கு  ஆளும் கட்சி இதை ஆதரிக்கிறது

ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் கருணாநிதி அதை வைத்து அரசியல் செய்துவிடுவார்.”

சுட்டது  என் மனவானில்   ரதி  அவர்களின் தளத்திலிருந்து.

Saturday, February 16, 2013

ஊரை நிறைக்கும் முதல்வர், தளபதி பிறந்தநாள் வாழ்த்து


வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்



பிப்ரவரி 25  ல் 65  வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வரே....

தங்க தாரகையே....

மாற்றான் செய்த தவறை மாற்றி கொண்டிருக்கும் தவப்புதல்வியே...

என்னின் உயிரே...

கழகத்தின் நிரந்தர புரட்சி தலைவியே...

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் என்று அ.இ.அ.தி.மு.க  அவர் அவர்களின் பொருளாதாரத்திற்கு தகுந்தாற்போல்விளம்பரங்கள் ஊரை நிறைக்க போட்டியாக
தி.மு.க. முன்னோடிகளும் கழக கண்மணிகளும் தளபதிக்கு வாழ்த்துகள் சொல்லியவண்ணம் விளம்பரங்கள்




மார்ச் 1 ல் 60 வது பிறந்தநாள் காணும்

எங்கள் பாசமிகு தளபதியே....

சிறைக்கும் சித்ரவதைக்கும் அஞ்சாநெஞ்சம் கொண்ட எங்கள் ஆருயிர் தளபதியே...

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.

Monday, April 30, 2012

கலைஞரும் ஈழமும்



கடந்த சில நாட்களாக  செய்திதாள்களில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.

இவரது அறிக்கைகளை  படிக்கையில் ஏதோ மனது குறுகுறுக்கிறது.

தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்?   என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும் இருக்கிறார்கள்.

இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள் அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.

நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது அனுபவிக்க???

கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது?  தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.

Wednesday, March 21, 2012

ஜனத் தலைவர் யார்?


இது பாரதி சொன்னது... யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ  ,

யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறாற உண்பதற்குஉணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே  என மனமிரங்கி கண்ணீர் சொரிகிறானோ

யாவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ

யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ  ..

அவன் ஒருவனே ஜனத் தலைவன்.



இன்று….

தன் மானத்திற்காக தொண்டனி்ன் உயிரை ப்பறிப்பவன்.

தன் குடும்ப வாரிசுகாக  தன் கட்சியினரையே  கட்சியை விட்டு நீக்குப்பவன்.

சுவிஸ் வங்கியோ இன்னும் வேறு ஏதேனும் வங்கியிலோ கணக்கு வைத்திருப்பவன்.

நிலம் பறி்ப்பவன்

ஆட்கடத்தல் அடித்தடி கொலை  செய்பவன்.

இவர்களே இன்று ஜனத்தலைவர்கள்.

இது இந்தியா…..

Tuesday, January 24, 2012

.ஒரு சொல் முடிந்த அத்தியாயம்


சமீபத்தில் எங்கள்பகுதிகளில் அதிகம் பேசப்பட்ட செய்தி தமிழக முதல்வரின் தோழியின் விரட்டியடிப்பு தான்.



எங்கள் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க வின் உடன் பிறப்புகள் அகம் மகிழ்ந்து கிடப்பது தான் உண்மை.

ஒழிந்தது சனியன்….

பார்க்கதான் பட்டை போட்ட நல்லவர் திவாகரன் மிக மோசமான ….பொறுக்கி  அ.தி.மு.வி னாராலே பேசப்படும் அவலம்.

இவ்வளவு  அவமானங்களையும் பொறுத்து கொண்டதன் பின்னனி தமிழக முதல்வரின் உயிர்தோழி  , தோழியின் உறவினர்கள் அரசில் எதையும் சாதிக்கவல்லவர்களாய்  இவர்கள் இருந்தது தான்.

இவர்களின்  விரட்டலில் யாரும் கவலைப்பட்டவர்கள் என்பது கிடையாது.

இவர்கள் செய்தது நம்பிக்கை துரோகம் இவர்களை விட்டு வைக்ககூடாது என்பதே இப்பகுதி மக்களின் ஆவலாய் உள்ளது.

இன்னமும் சூடு குறையாமல் அவர்களைப்பற்றிய செய்திகள் வாசிக்கப்படுகின்றன.


இருக்கும் இடம் அறிந்து தன் எல்லைகளை  அறியாததால் வந்த வினை  அதிகார மையத்தின் ஒரே சொல்  இவர்களை புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகிவிட்டது.

பலமணிகள் காத்து கிடக்க தரிசனம் தருவார்கள் .
ஆனால் இன்றைய  நிலைமை தன் இடம் தெரிந்தால்  தனக்கு ஆபத்து. 

பாவம் இவர்கள்…..

Sunday, June 12, 2011

இன்றைய முதல்வர் கடந்த முதல்வர் அடுத்து யார்?



பயண த்தின் இ டையே     ரசாங்க அ  லுவலகத்தைப்பார்த்தேன்.   அ லுவலகத்தின்  வெளிப்புறத்தில் ” அம்மா” வின் முகம் ப்ளக்ஸில்தெரிந்தது.

அ ம்மா ஆ  ட்சியில் எ ன்று திட்டங்கள் பட்டியல் இ டப்பட்டிருந்தன.

இதுவே தேர்தலுக்கு முன்பு பார்க்கும் அரசுஅலுவலகங்களில் எல்லாம்  ”கலைஞர்”  முகம் தான்எங்கும் ஐந்து வருடமாக  எங்கும் இருந்தவர் இன்று கிழிந்து தொங்குகிறார்.

கலைஞரின்விளம்பர ப்ளக்ஸ் அனை த்தும்  மளிகைசாமான்கள் காயப் போட பயன்படுகிறது.

” அம்மா ” விளம்பர ப்ளக்ஸ்  நாம் வெறுக்க அல்லது கிழிந்து தொங்குவதைப் பார்க்க இன்னும் ஐந்துவருடங்கள் பொறுத்து இருக்கவேண்டும்.

இவர்களின் இருவர்முகங்கள் மக்களுக்கு பார்த்து பார்த்து போரடித்து  விட்டது.

நாம் முதல்வராய் வேறு முகங்கள் பார்க்கவேண்டும் என்றால் அந்ததகுதி அடுத்தது யாருக்கு????


பலவீனம் அடைந்துகிடக்கும் தி.மு.க.வின் மு.க.ஸ்டாலினா??!!  அல்லது வளர்ச்சியின் படிக்கட்டில் இருக்கும் தே.மு.தி.க. வின் கருப்பு எம்.ஜி. ஆ ரா??!!
தெரியவில்லை.


இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாம்  பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பொறுத்துதான்  ஆக வேண்டும்.

பார்க்கலாம் இன்றைய முதல்வரின் நாளையசெயல்பாடுகளையும் கடந்த முதல்வரின் கட்சியின் செயல்பாடுகளையும்…..

Thursday, June 02, 2011

தயாநிதி நீங்களுமா இப்படி??????


தயாநிதிமாறன் ஊழல்செய்தி இன்றைய செய்திதாள்களின் ஹா  ட். அவருடைய  தந்தை முரெசாலிமாறன் சொன்னதாய் நான் படித்தது ஏனோ   நினைவுக்கு வந்தது.

முரெசொலி மாறன்  தன் மகன்களிடம் சொ ன்னது இது தானாம். ” உன் ஊ ரில் நீ ஒரு பழையஇரும்புகடை வைத்து பிழைப்பு நடத்தினாலும் ஊ ரிலேயே சிறந்த பழைய இரும்புகடை  எதுவென்றால் அது உன்னுடையதாகதான் இருக்கவேண்டும்.”


தயாநிதி தகவல்தொடர்பு அமை ச்சராக இருந்தகாலக்கட்டத்தில்  அத்துறைப் பெற்றவளர்ச்சியை பார்த்தப்பொழுது முரெசொலிமாறன் சொன்னதை நினைவில்கொண்டு தயாநிதியின்செயல்களை பெருமையுடன் பார்ப்பதுண்டு.

தயாநிதி தந்தையின் சொல்லை காப்பாற்றுகிறார். அமை ச்சராக இருந்தால் இப்படியல்லவோ   இருக்கவேண்டும் என்றும் நினைத்ததுண்டு ஆனால் அதற்கு பின்னால் இன்றைய செய்திதாள்களில் தயாநிதியை ப்பற்றிய செய்தியை  ப்படித்தவுடன் எனக்குள் நானே வெட்கபட்டேன்.

தயாநிதியின் ஊழல்செய்தி அறிய இச்சுட்டியை காண்க….


தயாநிதி நீங்களுமா இப்படி??????

LinkWithin

Related Posts with Thumbnails