Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Monday, April 30, 2012

கலைஞரும் ஈழமும்



கடந்த சில நாட்களாக  செய்திதாள்களில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.

இவரது அறிக்கைகளை  படிக்கையில் ஏதோ மனது குறுகுறுக்கிறது.

தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்?   என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும் இருக்கிறார்கள்.

இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள் அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.

நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது அனுபவிக்க???

கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது?  தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.

Wednesday, May 25, 2011

தமிழால் தப்பிக்க நினைக்கும் முன்னாள் முதல்வர்.


தோ்தல் முடிவுகள் தி.மு.க.  எதிராக அமைந்ததும் ஒற்றைவரியில் தன்னுடைய கருத்தை  வெளியிட்டு அமைதியான  முன்னாள் முதல்வர் தனது மகள் கனிமொழி
கைதினால் ஒரு நீண்ட  அறிக்கையை  வெளியிட்டுள்ளார்.


முன்னாள் முதல்வரின்  அறிக்கையை இச்சுட்டியில் காண்க…

தான் பிறந்தது வள ர்ந்தது சம்பாதித்தது எப்படி?  என திரும்பவும் தமிழக மக்களுக்கு தான் எப்படி என்பதை உண  ர்த்த கடமைப்பட்டுள்ளார்.

காலங்கள் மாற மக்களின் மனோ பாவமும் மாறுகிறது. தன்னுடைய தமிழால்(அறிக்கையால்) தமிழக மக்களின் மனதை மாற்ற முயல்கிறார் அல்லது சமாதானம் செய்யமுயல்கிறாரா தெரியவில்லை???!!!

இவருடைய அறிக்கையை அவருடைய கழக கண்மணிகளே நம்பாதபட்சத்தில் தமிழக மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

தற்பொழுது ஒவ்வொரு குடும்பத்தில் படித்த இளை ஞ ர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் மூலமாகவே 2ஜி ஊழல் படிக்காதவர்களையும்  சேர்ந்தது உண்மை.

முன்னாள் முதல்வரின் குடும்பவாரிசுகளுக்கு உண்டான சொத்துபட்டியலை   இச்சுட்டியில் காண்க…

http://savukku.net/home/857-2011-05-21-06-43-43.html

Sunday, December 19, 2010

பாமர விவசாயி -2ஜியும்



2G  யை ப்பற்றி தெரியாத  விவசாயி  இருவர். கலைஞர் தெரியும் கனிமொழியை தெரியும் . ஆர்.ராசா வை   இப்பொழுது தான் தெரியும்.

என்னங்க  ஆயிரம் கோடி ரூபாயா கொள்ள அடிச்சுப்புட்டாங்க ...உண்மை தாங்களா...

டி்வி் போட்டு போட்டு காட்டுறாங்க என்னங்க அது.

இன்னொ  ரு விவசாயி       நீ வேற  இலட்சம் கோடிக்கு மேலன்னு சொல்லுறாங்க...

கலைஞருமாங்க செஞ்சாரு இத...

எல்லாருக்கும் பங்கு வராமாய டி.வி.  ல்ல  போடுறான்.

நிவாரணம் கொடுப்பாங்களா..

போனாவாட்டி மாதிரி கெடையாது. அந்தந்த வயல பாத்துதான் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க...

இன்சூரன்ஸ் கட்டுன்னு பணம்.

தஞ்சை மாவட்டத்துல தான் பாதிப்பே  இல்லேன்னு சொல்லுறாங்க...

பாதிச்ச வயல் மட்டுதான்கொடுப்பாங்க போலிருக்கு..

தேர்தல் வருதுல்ல   கலை ஞரு ஒரு தள்ளு தள்ளுவாருன்னு சொல்லிகிட்டாங்க..

அத நம்பிதான்  இன்சூரன்ஸ் கட்டிருக்கேன்.

அட ஏங்க...போன  மழைக்கு முத மழை பேஞ்சுதுல்லஒரு பயிரு   அழிஞ்சு போவாத  பெரும் விவசாயிய்க  இலட்ச  கண   க்குல  நிவாரணம்  வாங்குனாவோ.....

என்னமோ   பாப்போம் மேல  உக்காந்துகிகட்டு  இலட்சம் கோடின்னு சாதரண  மா   அடிக்கிறான்.

நாம   ஏக்கருக்கு ஆயிரம் அறிவிப்பானா...ஐயாயிரம் அறிவிப்பானா அவன் வாய்ய  பாக்க வேண்டியது தான்.

LinkWithin

Related Posts with Thumbnails