Showing posts with label விவசாயி. Show all posts
Showing posts with label விவசாயி. Show all posts
Friday, March 11, 2016
Friday, February 08, 2013
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசே ஏற்கும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்ததற்கு இணங்க, டெல்டா பகுதிகளில் உள்ள 5 லட்சத்து 45 ஆயிரம் விவசாயிகளுக்கான 27 கோடியே 67 லட்சம் ரூபாய் பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தியுள்ளது. பயிரிழப்பை அளவிட்டு, விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து நிதி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நான் பின் வருவனவற்றை இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கின்றேன்.
மத்திய அரசின் பேரிடர் நிவாரண வரையறைபடி, நெற்பயிரை இழந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 2,429 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும். மாநில பேரிடர் நிவாரண வரையறைபடி, ஏக்கர் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்க இயலும். இருப்பினும், இந்த 4,000 ரூபாய் நிவாரணத் தொகை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இதுவன்றி, பயிர் இழப்புக்காக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஏக்கர் ஒன்றுக்கு, 8,692 ரூபாய் வரை பெற இயலும் என்றும் தெரிவித்து இருந்தேன். இங்கே பல உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, காப்பீட்டு நிறுவனம், குசைமய அடிப்படையில், 5 கிராமங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அறுவடை சோதனைகளை மேற்கொண்டு, அந்த சோதனை முடிவுகளின் அடிப்படையிலும்; கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற சராசரி விளைச்சலின் அடிப்படையிலும்; காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயிக்கும். இவ்வாறு, காப்பீட்டு நிவாரணத் தொகையை நிர்ணயம் செய்யும் போது 100 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால் தான், ஒரு ஏக்கருக்கு முழுக் காப்பீட்டுத் தொகையான 8,692 ரூபாய் கிடைக்கும். 50 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு சுமார் 4,350 ரூபாய் தான் காப்பீட்டு நிவாரணத் தொகையாக கிடைக்கும். மேலும், சோதனை அறுவடை செய்து முடிக்கப்பட்டு, காப்பீட்டு நிவாரணத் தொகை பெறுவதற்கு தாமதம் ஏற்படும். இதனைத் தவிர்க்கும் வகையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழு காப்பீட்டு நிவாரணத் தொகையை முன் கூட்டியே தமிழக அரசு வழங்கும். இதன்படி, 50 விழுக்காட்டிற்கு மேல் மகசூல் பாதித்துள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளின் 3.61 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 15,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். அதாவது, பேரிடர் நிவாரணம், வேளாண் பயிர்க் காப்பீடு, மற்றும் சிறப்பு கூடுதல் நிவாரணம் என மொத்தமாக, ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் உடனடியாக விவசாயிகளுக்கு எனது தலைமையிலான அரசால் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 541 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
காவேரி டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசே பயிர்க் காப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளதால், 50 விழுக்காட்டிற்கும் குறைவாக பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கும், அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சராசரி பயிரிழப்புக்கு ஏற்ப, காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன், இந்த நிவாரணம் வழங்கப்படும்.
Tuesday, December 25, 2012
தஞ்சாவூரும் தண்ணீர் பஞ்சமும்
வயலில் நட்ட நெற்பயிர்கள் முக்கால்வாசி சூழலை தாண்டி வந்து நெற்மணிகள் கருபிடிக்கும் சூழலில் உள்ளது. தட்டு தடுமாறி இதுவரை நட்டவயல்களுக்கு தண்ணீர் கிடைத்துவிட்டது.
இனிதான் தண்ணீர் மிக அவசியம் என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை விவசாயிகள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
போர்செட் பம்புகள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை. வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் தண்ணீருக்காக போர்செட்காரர்களை அணுகி வியாபாரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு ஏக்கருக்கு ரூ 1500 அல்லது மூன்று மூட்டை நெல் என்கிறப்படி பேரம் பேசிகொண்டுள்ளார்கள். இது ஏற்றதாழ்வுகளுக்கு மற்றும் மனிதநேயத்துக்கு உட்பட்டது.
மழை இதோ பெய்துவிடும் அதோ பெய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்க ஒரு மழையுடன் தன் இருப்பை வெளிகாட்டி வானம் மூடிகொண்டது.
குறுவை சாகுப்படி போர்செட் விவசாயிகளுக்கு பெருத்தலாபத்தை தனியார் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு விளைந்த இடத்துக்கே போய் எடுத்து கொண்டு கொடுக்க சாதாரண வாய்க்கால் விவசாயிகளுக்கு சம்பா கை கொடுத்துவிடும் நம்பிக்கையில் கடன் வாங்கி செய்தவர்கள் நிறையவே இருக்கதான் செய்கிறார்கள்.
இன்னும் சில மாதங்களில் இயற்கை என்ன செய்யபோகிறது? அரசாங்கம் என்ன செய்யபோகிறது என்று பார்ப்போம்.

Saturday, December 25, 2010
Sunday, December 19, 2010
பாமர விவசாயி -2ஜியும்
2G யை ப்பற்றி தெரியாத விவசாயி இருவர். கலைஞர் தெரியும் கனிமொழியை தெரியும் . ஆர்.ராசா வை இப்பொழுது தான் தெரியும்.
என்னங்க ஆயிரம் கோடி ரூபாயா கொள்ள அடிச்சுப்புட்டாங்க ...உண்மை தாங்களா...
டி்வி் போட்டு போட்டு காட்டுறாங்க என்னங்க அது.
இன்னொ ரு விவசாயி நீ வேற இலட்சம் கோடிக்கு மேலன்னு சொல்லுறாங்க...
கலைஞருமாங்க செஞ்சாரு இத...
எல்லாருக்கும் பங்கு வராமாய டி.வி. ல்ல போடுறான்.
நிவாரணம் கொடுப்பாங்களா..
போனாவாட்டி மாதிரி கெடையாது. அந்தந்த வயல பாத்துதான் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க...
இன்சூரன்ஸ் கட்டுன்னு பணம்.
தஞ்சை மாவட்டத்துல தான் பாதிப்பே இல்லேன்னு சொல்லுறாங்க...
பாதிச்ச வயல் மட்டுதான்கொடுப்பாங்க போலிருக்கு..
தேர்தல் வருதுல்ல கலை ஞரு ஒரு தள்ளு தள்ளுவாருன்னு சொல்லிகிட்டாங்க..
அத நம்பிதான் இன்சூரன்ஸ் கட்டிருக்கேன்.
அட ஏங்க...போன மழைக்கு முத மழை பேஞ்சுதுல்லஒரு பயிரு அழிஞ்சு போவாத பெரும் விவசாயிய்க இலட்ச கண க்குல நிவாரணம் வாங்குனாவோ.....
என்னமோ பாப்போம் மேல உக்காந்துகிகட்டு இலட்சம் கோடின்னு சாதரண மா அடிக்கிறான்.
நாம ஏக்கருக்கு ஆயிரம் அறிவிப்பானா...ஐயாயிரம் அறிவிப்பானா அவன் வாய்ய பாக்க வேண்டியது தான்.
Thursday, March 05, 2009
தற்கொலை செய்தால் ரூபாய் 2 லட்சம்.

உலக வர்த்தக மயம் வறட்சி கடன் தொல்லை ஆகிய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராமகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து விவசாயக் கடன்களைதள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
பஞ்சாப் அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. பஞ்சாப் விவசாயிகளின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. பஞ்சாப் அரசும் மத்திய அரசு உதவித்தொகையை நிராகரித்துவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக பஞசாப்பில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.
கடந்த திங்கள் கிழமை கூடிய பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்தில் “விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை அளிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் காக்கும் அரசின் அறிவிப்பைப் பார்த்தீர்களா..

Subscribe to:
Posts (Atom)