Monday, December 17, 2018

சீத்துவாலை

சீத்துவாலை

அடர்ந்த பனி காலை கண்விழித்தல்  என்பது கொஞ்சம் கடினம் தான்.

மனது சொல்லியவுடன் எழுந்துவிட்டால் பிரச்சனை இல்லை.  அவ்வாறு செய்யாவிடில் அன்று காலை எல்லாவேலைகளையும் முடித்து  அவசரகதியில் வேலைக்கு செல்ல வேண்டும்.

முதல் நாள் அசைவ விருந்தொன்று  மனைவி சாப்பிடததால் ...

ஏங்க...இன்னிக்கு என்ன வாங்கி தா்றீங்ங்க..

கேள்வி கணைகளுடன் மனைவியின் முகம் பார்த்தேன். என்ன வேணும்?

ஏதாவது வாங்கி கொடுங்க...

சரி...

விளையாட்டு மைதானம் சென்று உடற்பயிற்சிகள் முடித்து எனது இருசக்கர வாகனம்  எங்கள் ஊர்  மீன்மாா்கெட் நோக்கி பயணிக்க..

தெரிந்த முகங்களின்  வணக்க புன்னகைகளை வாங்கி பதில் புன்னகையில் பயணம் தொடர்ந்து...

பயணம் மீன் மார்கெட் சென்றடைய  மீன் மார்கெட்டில் தொிந்த வியாபாரிகளின் புன்னகைக்கு பதில் புன்னகை செய்து.

நாட்டு மீன் தேடினேன்.

டிசம்பா்  மாதங்களில் கிடைக்கும்  கெழுத்தி, சிலேப்பி,சாரு பொடி(சின்ன கொண்டைமீன்) குறவை,ஆரா,விறா துரும்பு இந்த மீன்வகைகளில் என் தேடல் கெழுத்தி மீனாய் இருக்க...

கண்களின் தேடல் கெழுத்தி...

தேடலின் முடிவில்  கெழுத்தி மீன் ஒரு கடையில் தென்பட ..

கூடவே இன்னொரு மீன்வகை இடம் பெற்றிருக்க...

தம்பி சீத்துவால வாங்கிட்டு போங்க சூப்பார இருக்கும் என்றார் வியாபாரி..

எவ்வளோ கிலோ....


200 தம்பி... என்று நெகிழி பையில் எடுத்து போட ஆரம்பித்தார்.

பத்து மீன்கள் ஒரு கிலோ...

பணம் கொடுத்து மீன் வாங்கி பத்திரப்படுத்தி...

அண்ணா மீன் நல்லாயிருக்கும்ல..?!

நல்லாருக்கும்...போ தம்பி...

வண்டி எடுத்தேன்..

அண்ணா என்ன பேரு சொன்னீங்க..

சீத்துவாலை என்றார் புன்னகையுடன்..

சீத்துவாலையுடன் நான் பயணித்தேன்.

எப்படி இருக்குமோ என்ற  ஐயப்பாட்டுடன் என் வீடு நோக்கிய பயணம் தொடர்ந்து.



Thursday, December 13, 2018

சாம்சங் நோட் 2 -வில் சுட்டவை

சூாியன் மறைவு எப்பொழுதுமே ரம்மியமானது.

என்னுடைய மாலைநேர பயணங்களில் எனக்கு பிடித்த சூரியன் மறைவு காட்சிகள் உங்களின் பார்வைக்கு...













Monday, December 03, 2018

தலை வலிக்கிறது

நமக்கு மன்னிக்கவும் எனக்கு வரும்  தலைவலி பசியினால் வருவது.

நல்லா பசிக்கும்பொழுது சாப்பிடாமல் இருந்தால் மெல்லிய வலியாக ஆரம்பித்து  சாப்பிட்டு பசி தீா்த்தால் கூட  குறிப்பிட்ட மணிநேரங்கள் தீரா துன்பம்.

ஆனால் இந்த தலைவலி...

பணதட்டுபாடு

செய்தே ஆகவேண்டிய செலவினங்களுக்கு பணம் இல்லா சூழலில் நடைபெறும் இடையறா சிந்தனை ...

கடன் கேட்க துணிவில்லாமல் மாற்றுவழிகளில்  பணதட்டுபாட்டிற்கு வழிகள் தேடி ..

ஏதும் அற்ற சூழல் காரணம் தலைவலி.

என்ன செய்ய...

வரும் வழி ஒன்று போகும் வழி பல..பல..

இடையறா சிந்தனைகள் தொடர்ந்து கொண்டிருக்க தலைவலி தொடர்கிறது.

தலைவலிக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails