Monday, November 23, 2015

சைனா பப்ளிக் டாய்லெட்

நவம்பர் 19 உலக டாய்லெட் தினம்.

சைனாவில் அமைந்துள்ள டாய்லெட்ஸ் புகைப்படங்கள்.
கலர்புல் கலெக்சன்

கேமரா வடிவ டாய்லெட்

UFO டிசைன்

ஆடம்பரமான டாய்லெட்



மார்டன் ஆர்ட்

பாலைவனத்தில் தற்காலிகமாக அமைக்கப்படும் டாய்லெட்

பாரம்பரிய டாய்லெட்

புத்தக கண்காட்சியில் தற்காலிக டாய்லெட்

பெண்களின் பார்வையில்

யானை வடிவம்

கோட்டை வடிவம்

Friday, November 20, 2015

காய்கறி வேண்டாம் வற்றல் போதும்..!!

பருவமழை தமிழகம் முழுவதும் மிக தீவிரமாய் பெய்ய எங்கள் ஊரில் அதிகம் பெய்யவில்லை.

எங்கள் பக்கத்து ஊரில் உள்ள இயற்கை எரிவாயு ஊற்றில்  வெளிப்படும் இயற்கை எரிவாயு தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால்  பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு வரும் மழை மேகங்களை நீர்த்து போக செய்துவிடும்  என்று காரணமாய் சொன்னார்கள்.

எங்கள் ஊரில் மழையி்ன் பாதிப்பாக காய்கறி விலை ஏற்றத்தை சொல்லலாம்.


எப்பொழுதும் நான் வாங்கும் காய்கறியின் விலை ரூ 110  வரும் அதே அளவுள்ள காய்கறிகளை மழைக்குப் பின்பு மார்கெட்டில் வாங்கினேன் ரூ 170 வந்தது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

முன்பெல்லாம் மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வற்றல் போடும் காய்கறிகள் விலை மலிவாக கிடைக்கும் காலங்களில்  மொத்தமாய் வாங்கி வற்றல் போட்டு வைத்து விடுவார்கள்.

வடகமும் சேர்த்து போட்டு விடுவார்கள்.

மழைக்காலம் ஆரம்பித்தவுடன் காய்கறிகளும் தரமில்லாதவையாக கிடைக்கும். எங்களை போன்ற வீடுகளில் மழைக்காலங்களி்ல் வற்றல் குழம்பு, கருவாட்டு குழம்பு , ரசம் இவை தான் அதிக இடம் பிடிக்கும்.

பழையன மறத்தலில் விரைவில் காய்கறி வற்றல், வடகம் இடம் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மழையினால் காய்கறியின் விலை ஏற்றம் வற்றலை நினைக்க வைத்தது.



Thursday, November 19, 2015

சன் ஆப் கான்கார்ட்

ஏர்பஸ் மற்றும் ஏரியன் நிறுவனத்தால் அமெரிக்காவில் தயாரிக்கப்படவுள்ள AS2 சன் ஆப் கான்கார்ட் சூப்பர் சோனிக் விமானம் வருகிற 2021 ம் ஆண்டு பரிசோதனை ஓட்டமும் 2023 ல் வியாபரா  ரீதியாக தன் ஓட்டத்தை துவக்கஉள்ளது.

12 நபர்கள் செல்லக்கூடிய விமானத்தின் நீளம் 170 அடி  உயரம் 22 அடி விமான இறக்கைகளின் பரப்பு 61 அடி மணிக்கு 1960 km/h வேகத்தில் செல்லும் இந்த விமானம் நியூயார்க் -லண்டன்  இடையே உள்ள தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும்.







LinkWithin

Related Posts with Thumbnails