
சுற்றி திரியும்
சிறிய பட்சிகளோடு
பறந்து திரிய ஆசை
பட்சிகள் பறக்கின்றன
அண்ணாந்து பார்க்க
ஏக்க பெருமூச்சு என்னில்
இயலாமை கொப்பளிக்க
ஒளி குறைந்த கண்களாய்
கால்களின் பலம்
குறைய…
ஒற்றைகல்லில் ஓய்வு
பார்வையில் பட்ட
சுற்றிதிரியும் ஓர்
ஒற்றைசிட்டு
இடுக்கிய கண்களை
அகல விரிக்கிறேன்
அதன் உலகம்
மகிழ்ச்சியாய்
அங்கும் இங்கும்
பறந்து பறந்து
அதனிடத்தில் சோர்வின்
சுவடுகளை தேடுகிறேன்
கவலையின் சாயல்களை
ஆராய்கிறேன்
சோர்வும் அதற்குசுகமாய்
தெரியும் போலும்
கவலையும் அதற்கு ஊக்கமாய்
தெரியும் போலும்
No comments:
Post a Comment