அட…நேத்து
குறிகோள் உடும்பு பிடியா பிடிச்சுங்கப்பா சொன்னாங்க…சரின்னு ஞாபக
படுத்திகிட்டாச்சு.
நான்காவது நாள்
என்ன சொல்லப்போறாங்கன்னா நம் சுற்றியிருக்கிறவங்க கிட்ட அன்போட இருக்கறது.
இதுக்கு ரெண்டு விதிய கட்டயாம கடைப்பிடிக்க
சொன்னாங்க...
- நாம்மோட சொல்லிலும் செயலிலும் நேர்மையா இருக்கனும். மத்தவங்க நம்மள பத்தி
குறை சொல்ல கூடாது.
- நாம செஞ்சுப்புட்டு
எதிர்பார்க்காம இருக்கோனும்.
வீணாகிற குடிநீர் குடிநீர் குழாய நிப்பாட்டுதல் வழியில கிடக்கிற ஆனிய தூக்கி அந்தான்ட போடுறது
சுற்றியிருக்கிறவங்க கிட்ட சிரிச்ச முகமா இருக்கறது
இது மாதிரி சின்ன சின்ன விசயங்கள் நிறைய பெரிய மாற்றங்கள கொண்டு
வருமுன்னு அன்னக்குதான் அவனுக்கு
தெரிஞ்சுது.
இவ்வளோ நாளா தெரியாம போச்சப்பா...பரவாயில்ல இன்னிக்கு
தெரிஞ்சுகிட்டோம்ல இனி அப்படியிருக்கலமா?!
கட்டாயம் மாறி தான் ஆகனும்.
தொடரும்.


No comments:
Post a Comment