Showing posts with label என் பார்வையில். Show all posts
Showing posts with label என் பார்வையில். Show all posts
Wednesday, July 01, 2015
Friday, June 26, 2015
Wednesday, June 24, 2015
Tuesday, June 23, 2015
Monday, November 10, 2014
லோட்டா
லோட்டா தான் அன்றைய பிரச்சனையின் ஆதாரம். தண்ணீர் குடிக்க கொடுக்கும் தமிழர்களின் பழங்கால பாத்திரவகைகளில் இதுவும் ஒன்று.
இரவு 9 மணிக்கு வேலை முடித்து வீடு திரும்பினான். வீட்டு கூடத்தில் நடு நாயகமாய் லோட்டா வீற்றிருந்தது.
ஏண்டி....மதியம் சாப்பிட்டப்ப தண்ணி கொண்டு வந்து வச்ச லோட்டா தானே இது. எடுத்து வைக்கலாயா...??
முகம் தூக்கி பார்த்து முகம் கவிழ்ந்தாள்.
என்னடி நீ வேலை பாக்குறது.. இதெல்லாம் சரியா பாக்காட்டின்னா நான் திட்ட செய்வேன். அப்புறம் நீ என்ன கோச்சுக்க கூடாது.
மறுபடியும் முகம் தூக்கி என் முகபாவணை பார்த்து முகம் சுருங்கினாள்.
பேசவில்லை....
சரியான பதில் இல்லையாதலால் கோபம் வந்தது திரும்பவும் பேசினான்.
இந்த முறை பேச்சு வந்தது.
இந்தபாருங்க இது டெய்லி நடக்குதா.. இன்னிக்கு நடந்துடுச்சு அதுக்கு போயி திட்டிட்டே இருக்கீங்க...
ஆமா..திட்டுவேந்தான்... மதியத்திலிருந்து எத்தனவாட்டி போயிட்டு வந்திட்டிருக்க நடுகூடத்துலதான கெடக்கு எடுத்து வைக்கவேண்டியதானே...
சிறிது நேரம் மௌனம் நிகழ்ந்தது.
அவனால் லோட்டா எடுத்து வைக்கப்பட்டது.
நான் உன்ன ஒன்னு சொல்லாம இருக்குன்னா இது மாதிரி சின்ன விசயங்கள் தப்பு நடக்காம பாத்துக்கப்பா என்றான்.
ஏப்பா...ஒரு லோட்டா எடுத்துவைக்கமா இருந்தது இவ்வளவு அதக்களம் என்றாள்.
திரும்பவும் வாதம் செய்ய வாயெடுத்தான்.
மௌனமானான்.

Thursday, March 27, 2014
Friday, December 13, 2013
வீடு திரும்பல்
கருமேகங்கள் சூழ்ந்து கிடக்க பூமி குளிர்ந்து கிடந்தது .
காற்றின் வீச்சில் விரைந்த கருமேகங்கள் அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து தன் இருப்பை
வெளிப்படுத்தின.
ஆடுகள் சிறு தூறல் விழுந்ததுமே ஒதுங்க இடம் தேடின. அவைகள்
நடக்கும் நடைபாதைகள் எல்லாம் கடைகள் தான் காடுகள் அல்ல. மழைக்கு தப்பித்தால் போதும் என்று ஒதுங்கியது.
உஸ்…உஸ்…தே...த்தே… என்று கடைக்காரர்கள் கத்தியப்படியே ஆடுகளை விரட்டியடிக்க.. .அவைகள் அடுத்த இடம்
நோக்கி விரைந்தது.
மழை பெரிதாக பெய்யவில்லை என்றாலும் தூறலில் உடல் நனையதான்
செய்தது. பள்ளி குழந்தைகளின் வீடு திரும்பலில் சாரலுடன் காற்று அடிக்க உடைகள் நனைய முகத்தில் வழியும் மழை
நீரை துடைத்தவாறே ஓட்டமும் நடையுமாய்,
பள்ளி குழந்தைகள் செல்லும் மிதிவண்டிகளின் வேகம் கூட விரைவாக நனைந்தார்கள்.
மழையில் நனையாது ஒரு கையில் குடை மறு கையில் மிதிவண்டி காற்று வீசியது குடை பயணம்
போகும் எதிர்பக்கம் தூக்க சைக்கிளா.. குடையா.. தடுமாறிய குழந்தைகள்.
பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் வாகனங்களின் நெரிசலில்
சிக்கி தவித்த மிதி வண்டி குழந்தைகளும் ,
நடக்கும் குழந்தைகளும்நின்று
செல்கையில் நனைந்து போனார்கள்.
பள்ளிகளின்
பக்கத்திலிருக்கம் பெற்றோர்கள் தான் ஒரு குடையுடன் தன் பிள்ளைக்கு ஒரு குடையுடன்
அல்லது மழைக்கால உடுப்பு பள்ளிகள் இருக்கும் திசையில் விரைந்தார்கள்.
எதையுமே
அலட்டிகொள்ளாமல் மழையில் நனைந்தப்படி சென்ற குழந்தைகளின் குதுக்கலம் வசீகரித்தது.
குடைப்பிடித்தப்படி சென்ற குழந்தைகள் நினைத்திருக்கலாம் பாவம்...அவர்களிடம் குடை
இல்லை என்று ஆனாலும் அவர்கள் மழையில்
நனைந்து அடையும் மகிழ்ச்சியை இழந்து
விட்டிருந்தார்கள்.
ஒரு மணி நேரம்
அந்தபகுதியே அல்லோகலப்பட்டது.
Wednesday, July 24, 2013
Subscribe to:
Posts (Atom)