Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

Monday, March 11, 2013

காற்றில் மிதக்கும் மவுஸ்


காற்றில் மிதக்கும் கம்ப்யூட்டர் மவுஸை ரஷ்யாவை சேர்ந்த வாடிம் கைபர்டின் என்பவர் புதியததாகவடிவமைத்துள்ளார்.





இந்த புதிய வடிவமைப்பில் மவுஸ் பேட் ஒன்று , காந்த வளையத்துடன் கூடிய மவுஸ் ஒன்றும் உள்ளடங்கும்.

தரையில் இருந்து 40mm உயரத்தில் சாதாரணமாக மிதக்கும் நம்முடைய கரம் பட்டவுடன் 10mm  உயரத்தில் இந்த மவுஸ் மிதக்கும்.



நம்முடைய மணிகட்டு விரல்கள் பாதிப்படைவதை இந்த புதிய மவுஸ் தடுக்கிறது.

பரிசோதனை முயற்சியில் உள்ள புதிய மவுஸ் விரைவில் சந்தைக்கு கருப்பு மற்றும் வெள்ளையில் கிடைக்க இருக்கிறது.

Saturday, February 16, 2013

கம்ப்யூட்டரால் ஏற்படும் பிரச்னைகள் (பகிர்வு)


கம்ப்யூட்டர் என்பது இன்று அநேகம் பேருக்கு 3வது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம் தான். கம்ப்யூட்டர் தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிற பிரச்சனை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர்.
அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவர்களுக்கு கண்கள் வறண்டு கண்ணீரே இல்லாமல் போகலாம். அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு......இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளாக இருக்கும்.
சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க 20-20-20 விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவில் உள்ள காட்சியைப் பார்க்க வேண்டும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடிய கண்கள் மேல் வைத்து எடுக்கலாம்.
கண்கள் ரொம்ப வறண்டு போனால், கண் மருத்துவரைப் பார்க்கவும். வறட்சியோட அளவைப் பொறுத்து தேவைப்பட்டால் கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கம்ப்யூட்டர் வேலையில் சேருவதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.
கிட்டப்பார்வையும் இல்லாமல், தூரப் பார்வையும் இல்லாமல் கம்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப் பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கிறது. ஸ்பெஷல் கோட்டிங்கோடு. நடுத்தரப் பார்வைக்கான அதை கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்க வேண்டும். பாதங்கள் தரையைத் தொடுகிற மாதிரி உட்கார வேண்டும். 90 டிகிரி கோணத்தில் உட்கார்வது சரியாக இருக்கும். கம்ப்யூட்டருக்கு ஆண்ட்டிரெப்ளெக்ஷன் மானிட்டர் போடுவது கண்களைப் பாதுகாக்கும். பொதுவாக 40ல் இருப்பவர்களுக்கு, வெள்ளெழுத்தோடு சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்த வயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காமல் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

நன்றி : தினமணி

Thursday, July 09, 2009

எதற்கும் மசிவதாக தெரியவில்லை அந்த மோடம்.


காலை வந்தவுடன் கம்ப்யூட்டரைமுடுக்கிவிட்டான். உயிர் பெற்றது கம்ப்யூட்டரில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்தான்.
இன்டர் நெட் பயன் பாட்டிற்காக USB மோடம் இணைத்திருந்தான்.

காலையிலே தன்னுடைய முழுமையான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியிருந்தது அந்த மோடம். ஒரு தடவை இரண்டு தடவை பல முறை சரி செய்ய முயற்சித்தான். அது தன்னுடைய பணியை செவ்வனே செய்யதது.

இணையத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் ஒரு புறம் இருக்க முயற்சித்தும் முடியாமல் போனதால் அவன் மனதில் ஒரு கடுப்பு உருவாகி இருந்தது.

இதனால் அவனுடைய மற்ற வேலைகளில் கவனம் சிதற ஆரம்பித்து . தொடர்ச்சியாக பயன் பாட்டில் இருந்த ஒன்று பயன் பாடாமல் போனவுடன் அந்த சூழலை சமாளிக்க மனதில் ஏற்ப்பட்ட கடுப்புடன் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

எரிச்சல் முதலில் வந்தது. தன்னுடைய கோபத்தை மோடத்தின் மேல் காட்டுவதாக நினைத்து கொண்டு அவனுக்குள்ளே திட்டி கொண்டான். எதற்கும் மசிவதாக தெரியவில்லை அந்த மோடம்.

LinkWithin

Related Posts with Thumbnails