Showing posts with label காசு. Show all posts
Showing posts with label காசு. Show all posts

Saturday, September 19, 2009

தான் வாழ காசு தேவை



வாழ்க்கைக்கு காசு தேவை . காசுக்கான போராட்டத்தில் அவன் அவனையே இழந்தான். சமுதாயத்தில் வாழ்க்கையை வசதிகளோடு தன்னிடம் காசு இருந்தும் காசு சேர்த்து கொண்டே இருப்பவர்கள் உண்டு.

தான் வாழ தன்னை உயிர்ப்பித்து கொள்ள வே காசு அவசியமானது. தனது முன்னோர்களால் ஒன்றும் ஆகாதபட்சத்தில் தன்னை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தி கொள்ள காசு தேவை. அதைப் பெற்று தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல.

தன்னையே இழந்து நிறைய வேதனைப்பட்டு நிறைய உழைத்து தான் ஆக வேண்டும். அதற்கிடையே வாழ்க்கையில் ஏற்படும் அவமானங்களையும் அவமதிப்புகளையு ம் தன் உணர்வு எந்த மனிதானலும் ஏற்று கொள்வது மிகக்கடினமே. ஆனாலும் வாழ்ந்தாக வேண்டும். மனதுக்குள்ளே அழ வேண்டியது தான்.

அடிக்கடி விரக்தியின் எல்லைகளை தொட்டு விட்டு திரும்ப இருப்பவனை பார்த்து பார்த்து இருக்கும் நிலைமையும் கொடுத்துகொண்டு அவன் இன்னமும் காசுக்காய் அலைந்தப்படி..


Thursday, January 22, 2009

அந்தகாசுக்கு சோழி இருக்குங்க..

எப்பா நாளக்கு நீ பாட்டுக்கு ஏமாத்திபுடாத காலையில வீட்டுக்கு வேலக்கு வந்துரு..

காத்தால ஒம்பது மணிக்கு வந்துறேங்க..

சரி..சரி ..வந்துடுப்பா..

மறுநாள் காலை ஒன்பது மணி என்ன வேலங்க எனக்கு ...

அந்த மரம் இருக்குல்ல அதுல கிளய கழிச்சு வேலிய அடைக்கனுப்பா

அப்புறங்க..

அங்க புல்ல செதுக்கி ஒழுங்கு பண்ணிருப்பா..

சரிங்க.

பாத்துட்டு இரு இந்தா வந்துறேன்.

போயிட்டு வாங்க.. நான் பாத்துக்குறேன்

வேலை முடிந்தது வந்துட்டாங்களா..

இந்தாவந்துருவாங்கப்பா.... வீட்டுகார அம்மா

வீட்டு கொழம்பு காகறி அரிசி வாங்கி்ட்டு போவனும்மா.. வந்துருவாங்களாம்மா..

வந்துருவாங்க..வந்துருவாங்க உட்காரு..

என்னப்பா வேல முடிச்சிட்டியா..

முடிச்சுட்டேங்க..

நாளக்கும் வந்துரு வேல இருக்கு அதோட
சேத்து இன்னய சம்பளத்த வாங்கிக்கலாம்

இல்லங்க அந்தகாசுக்கு சோழி இருக்குங்க..

நா இல்லேன்னு சொல்லல...

நாளக்கு வா சேத்து வாங்கிக்கலாம்.

உழச்ச கூலியும் கெடக்காம புள்ளங்தீனி வூட்டு அரிசி என்ன செய்ய என்றப்படி பாத்து ஏதாவது இருந்தா கொடுங்க...

LinkWithin

Related Posts with Thumbnails