Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts
Tuesday, November 17, 2015
Tuesday, July 23, 2013
புளியம் பூ தொக்கு..ஆகா என்ன ருசி..!!??
அன்றைய சில்லுகோடு ஆட்டம் கலைந்தவுடன் நாளைக்கு என்ன
செய்யவேண்டும் என்று தீர்மானிக்க ஒன்று கூடினார்கள். நாலைந்து சிறுவர்களும் சிறுமிகளும்…
என்ன
செய்யலாம் என்று யோசித்தவாறே அந்த குழுவை வழிநடத்தும் பையன் அண்ணாந்து
பார்த்தான் மேலே சாரை சாரையாய் பூ
மொக்குமாய் புளியம்பூ தொங்கி கொண்டிருந்தது.
ஆ…டேய்…நாளைக்கு
புளியம் பூ தொக்கு செய்யலாம்டா..என்று கேட்க
ஹய்…செய்யலாமே…
யார்…யார்..என்னென்ன
கொண்டு வருவீங்க…சொல்லுங்கப்பா என்றது தலைமை டவுசர்.
நான்
உப்பு
நான்
பட்டமிளகாய்
நான்
கொட்டாங்குச்சி
எல்லாம்
கரெக்டா நாளைக்கு பதினோரு மணிக்கு வந்துடுங்க..
மறுநாள்
சிறிது முன்னயும் பின்னயுமாய் ஒன்று கூடிய சிறுவர்கள்.
தாங்கள்
எடுத்து வர ஒப்புகொண்டதை சொன்னப்படி எடுத்து வந்திருக்க தலைமை டவுசர் வர காந்திருந்தார்கள்.
தலைமை
டவுசர் வந்ததும் உப்பு பட்டமிளகாய் கொட்டாங்குச்சி கொடுக்கப்பட…
டேய்
..வாங்கப்பா…புளியம் பூ பறிக்க…
புளியம்
மரங்கள் நிறைந்தப்பகுதிக்கு சென்று அவர்
அவர் உயரத்திற்கேற்றவாறு பறித்து ஒன்று சேர்த்தார்கள்.
எல்லோரும்
வாங்க தலைமை டவுசர் கூப்பிட…
எங்க
போவோம்? என்று எதிர் கேள்வி
கூட்டத்திலிருந்து கேட்கப்பட…
அந்த
கொட்டாய் தான்.
விவசாயபணிகளில்
தேவையில்லாமல் பாரவண்டி அந்தகொட்டகையில் நிப்பாட்டியிருந்தார்கள்.
வாங்க
போவோம் என்று பாரவண்டியில் ஏறி எல்லோரும்
உட்கார்ந்தார்கள்.
டேய்
..இந்த கொட்டாங்குச்சியில கொஞ்சமா தண்ணி…சப்பட்டையாய் கருங்கல் ஒன்னு எடுத்து வா…
ஓடினான்..உடனே
திரும்பினான் .
பாரவண்டியில
உள்ள பலகை துடைக்கப்பட்டு புளியம் பூக்கள் மொட்டுகள் அத்தனையும் ஒன்று சிறிதாய்
அரைத்தார்கள்.
நசுங்கிய
பூக்கள் சக்கையாய் ஆனது .
போதும்..போதும்…
இந்தா
உப்பு மிளகாய் ரெண்டையும் சேத்துக்கோ…
அவைகளையும்
சேர்த்து இன்னும் அரைத்தார்கள்.
துவையல்
பதத்துக்கு முன்னாடி நிலைமையில் மசிந்தும் மசியாமலும்….
நிப்பாட்டு..போதும்.
என்று
சொல்லியப்படியே…தலைமை டவுசர்
கொட்டாங்குச்சியில் அரைத்த புளியம் பூ தொக்கை எடுத்து வைத்தது.
ரைட்…வாங்க
…சாப்பிட…
என்று
எல்லோரும் கையிலும் உரப்பு புளிப்பு
உப்பு ருசிகலந்த புளியம் பூ தொக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால்
இன்று சிறுவர்கள் இருக்கிறார்கள் புளியம்
பூ தொக்கு தயாரிக்கபடவில்லை.
Wednesday, July 13, 2011
வற்ற தொடங்கிய குளம்
குளம் வற்றதொடங்கியது.
பக்கத்தில் உள்ளகிராமங்களில்
மீன்பிடித்து முடித்தபிறகே கடைசியில் எங்கள் ஊ ர் கிராமத்தில் மீன்பிடிப்பார்கள்.
பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக
ஆள் போட்டு கண்காணித்து மீன்களைப்பிடித்து விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.
அந்த பதினைந்து நாட்களும் சிறுவர்
சிறுமியர்களுக்கு கொண்டாட்டம் தான்.
சேற்றில் புதையுண்டு கிடக்கும் மீன்களை
குளம் காவல் காப்பவரை ஏமாற்றி பிடித்து செல்வதில் அவர்களுக்குமிகப்பெரிய
சந்தோசம் .
காவலாளி முதுமையடைந்து கண்பார்வை மங்கியது இவருடைய பலவீனமாகவும்
சிறுவர்களுடைய பலமாகவும் மாறி அன்றைக்கு அவர் அவர்கள் வீட்டுக்குரிய குழம்பிற்கு
தேவையான மீன்களை பிடித்து செல்வதில்
தான்அவர்களுடைய வெற்றி .
காவலாளியும் பெண்களை முன்னிலைப்படுத்தி தனக்கு தெரிந்த அத்துனை
கெட்டவார்த்தைகளை திட்டியும் அதையெல்லாம் துச்சமென மதித்து அவர்களுடைய
ஈடுப்பாடு மீன் பிடித்தலில் இருக்கும்.
காவலாளி யின் இளம் வயது மகன்கள்
வந்து யாராவது ஒரு சிறுவனை
நையப்புடைக்கையில் மற்ற சிறுவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள்.
இது வருடந்தோறும் நடக்கும் ஒரு
திருவிழா நிகழ்வு.
| இரைக்காக வட்டமிடும் கழுகு |
இதுத்தவிர குறிப்பிட்ட அளவு
கழுகுகளும் கொக்குகளும் குளத்தை ஆக்ரமித்து கொள்ளும். பத்து தடவை முயற்சித்து ஒரு மீனை தூக்கி செல்லும் சில கழுகுகள்.
மெதுவாய் நடந்தே சிறு சிறு மீன்களை தனக்கு விருந்தாக்கி கொள்ளும் கொக்குகள்.
எல்லா கழுகுகளும் மீனை தூக்குமா
என்பதும் சந்தேகமே….
Monday, June 06, 2011
பழசு
சிங்கத்தினுடைய மாட்டு வண்டி வருகிறதென்றால் மற்ற மாட்டுவண்டி ஓட்டிகளுக்கு பயம். ஒதுங்கி வழி கொடுத்துவிடுவார்கள்.
பூரணி காளைகள் பூட்டிய வைக்கோல் வண்டிதான் அ வனுடைய ஆயுதம் . மற்றவர்கள் வைக்கோல் வண்டியை பள்ளம் பார்த்து இறக்கிவிடுவதில் இந்த சிங்கம் என்கிற சின்னைய்யன் மிகசாமர்த்தன்.
எதிர்ப்பவர்களை உண்டு இல்லை என்று சொல்லக்கூடிய உடல்வாகு வைக்கோல் வண்டியை அவ னது காளையை ஓட்டும் அழகே..அய்யோ..இன்னும் கண்ணில் நிற்கிறது என்று அவனுடைய சமகாலத்து பெரியவர்பெருமூச்செறிந்தார்.
இன்றைக்கெல்லாம் அதுமாதிரியான மனுசங்க கெடையாது. வேளைக்கு பெரிய பித்தள சட்டியில் ஒருபடி அரிசி வடிச்சசாதம் சாப்பிடுவார்கள். கறி எடுத்த ஒரு சப்பை தான் எவ்வளோ மீனு…எப்பாடி….அவங்க பாத்த வேலையும் அந்தமாதிரி…
கடைசில பயலுக்கு குஷ்டரோகம் வந்திருச்சி…எத்தன பேரு வயித்தெரிச்சலோ… ஆமா இவன் போற வழி ல எத்தன வைக்கோல் வண்டி போனாலும் அத்தனையும் குடசாச்சு விட்டுறுவான்.
பொண்டாட்டி வேறு ஆம்படையான் பாத்தாள்…இவனுக்கு தெரிஞ்சு போச்சு வெண்ணாத்துல கொண்டுவந்து ஆள காலிப்பண்ணி தூக்கிபோட்டுட்டு போயிட்டான்.
நாடு சுதந்திதரத்துக்கு முன் பிறந்த தற்பொழுது வாழும் பெரியவர் ஒருவரின் கதையாடல் தான் மேற்சொன்னது.
பொம்பள பொறுக்கிய இருந்திருப்பாரு அதனால குஷ்டரோகம் வந்திருக்கும் என்று கேட்க…
என்னன்னு தெரியல….
கும்பகோணத்துல அப்ப நிறைய தேவடியா வீடுகள் உண்டு பிரியப்பட்டவங்க தெரியாம போயிட்டு வந்துருவானுங்க…
இன்னொருத்தன் பொண்டாட்டிய பாக்கறதெல்லாம் அப்பரொம்பகம்மி…சமுதாயத்துல அசிங்கம் சொல்லிட்டு அத செய்யவே மாட்டானுங்க…
என் கம்மாணாட்டி வீட்டுல இருக்கற பொஞ்சாதி பாக்கமுல்லயாம் …இவருக்கு இன்னொரு வீடாம்.. என்று திட்டுவார்களாம்.
அப்போ எல்லா பொருளும் வெல ரொம்பவும் கம்மி..சுதந்திரம் அடைஞ்சுது ரெண்ட அனா வித்த ஆட்டுகறி இன்னிக்கு கிலோ இருநூற்றி அம்பது ம்ம்ம்….என்ன செய்ய….
Tuesday, April 12, 2011
கிராமங்களில் மனிதர்கள்.
பொழுது சாயும் முன்னே வீட்டை அடைந்துவிட வேண்டும் என்ற வேகம் தெரிந்தது அவனுடைய வண்டி ஓட்டுதலில்சமமான பாதை யிலும் குண்டு குழியுமான பாதையில் வண்டி பயணித்தது.
பெண்ணுடன் பயண ம் என்பதால் சீரான வேகத்தில் தான் வண்டி சென்றது. காலை யிலிருந்து கல்யாண ம் , கோவில் என்று செல்ல இருட்டு முன்னே ஊ ர் திரும்பிவிடவேண்டும் என்ற அவசரம்.
கிராமங்களின் இடையே செல்லும் பாதை அ வசர தேவை என்றால் நான்கு கிலோ மீட்டருக்கு அ ப்பால் ஏதாவது கிடைக்கலாம்.
பெண்ணுடன் பேசியப்படியே வண்டி ஊ ர் நோக்கி பயணித்தது.
புதிததாக தார் சாலைப் போடுவதற்காக கருங்கல் சாலை அமைந்திருந்த சாலை யில் வண்டி அ லை ந்தது.
என்னடா ..இது அலைகிறது என்று வண்டியை நிப்பாட்டினான். வண்டி பின்சக்கரம் காற்று இறங்கி தாரையோ டு ஒட்டியிருக்க …இங்கேயும் அ ல்லாது அங்கேயும் அ ல்லாது நடுவில் மாட்டிக்கொ ள்ள….
வ ண்டியை தள்ளினால் குத்தியிருக்கும் ஆ னியினால் டியூப் பயன்படுத்த முடியாமல் ஆகிவிடும். அப்படியே வண்டியை நிப்பாட்டினான்.
அ வனும் பெ ண்ணும் இறங்கி நின்றார்கள். பெண்ணை உற்றுபார்த்தார்கள் அவனை உற்றுபார்த்தார்கள் தன்வழியே சென்றார்கள்.
மோ ட்டார் சைக்கிளில் வந்த நடுவய துகாரர்கள் தன்னுடைய வண்டியை நிப்பாட்டி ஏன்? என்ன விசாரிக்க…
அவனுக்கு நிம்மதி வந்தது. வண்டி பஞ்சர்என்று சொல்ல..
இருங்க தம்பி ஒன்னும் கவல படாதீங்க இதோ நான் பையன வர சொல்றேன் என்று அ ங்கிருந்தப்படியே கைப்பேசியில் தொடர்பு கொ ண்டு மெக்கானிக் பையனை அழைத்தார்.
எப்பா…அவங்க லேடீஸ் கூட நிக்கிறாங்க சீக்கிரம் வாப்பா என்று சொல்லி…
ஒட்டிட்டு பாத்து போங்கப்பா என்று தன் வழியே சென்றார்.
சிறு நன்றியை கூட எதிர்பார்க்கவில்லை .
அவர் சொ ல்லிய பையன் விரைவாய் தன் செயல் முடித்துகொ டுக்க…. இவன் நிம்மதியடைந்தான்.
பத்துக்கு ஆ றுபேர் பார்த்தப்படியே செல்ல இருவர் கேட்டால் செய்யலாம் என்ற ரீதியில் பார்க்க இருவர் மட்டுமே தனாய் உதவ முன்வந்தார்கள்.
பொழுது சாயும் முன்னே அவன் ஊ ர்போய் சேர்ந்திருப்பான்.
Saturday, July 11, 2009
கிராம நெலம்.
அது கிராமம் கிராம பஞ்சாயத்து உண்டு. ஊர் முக்கியஸ்தர்கள் கிராம திருவிழா கிராமத்திற்கான தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக கிராம பஞ்சாயத்தாக தங்களை கட்டமைத்து கொண்டார்கள்.
ஒவ்வொரு கிராம கூட்டத்தின் போதும் கூச்சலும் குழப்பமும் அதிமாகவே இருக்கும்.
அன்றும் அப்படிதான்கிராம நிலத்த இன்னிக்கு ஏலம் உட்டே ஆவனும் என்றார் ஒருவர்.
கிராம வரவு செலவு பாக்கம நெலத்த ஏலம் போட முடியாதுங்கே ஆமாம்.
நாலங்சு வருசமாவுது கணக்கு பாத்து ஒரு செலவும் உருப்படியா செஞ்சபாடில்ல அதனால கணக்க பத்தி பேசுங்க அப்புறம் பாத்துகலாம் இன்னொரு கிராமத்தார்.
கணக்கு பாக்குறப்படி பாருங்க அதுக்கு ஏம்பா நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொல்றீங்க என்றார் கிராம தலைவர்.
ஒருத்தரடோ விருப்பத்துக்கு கிராமம் கட்டுபடாது எல்லாருடோ வார்த்தையும் கேளுங்க கூட்டத்தில் ஒருவர்.
நானும் கிராமத்துல ஒருத்தன் தான். எனக்கு எங்கருத்த சொல்ல அதிகாரம் உண்டு நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொன்னவர்.
எப்பா அவரு ஒன்னும் சும்மா சொல்லல அவரு கேக்கறதும் கரெக்டுதான் .
ஊரு பாக்குற நீங்க கிராம திருவிழா நடத்துல அஞ்சு வருசம் ஆச்சு தெருவுக்கு சாமி வந்து கேட்டா காரணம் சொல்றீங்க..
வர்ற வருமானம் எங்க போச்சு சொல்லிட்டு கிராம நெலத்த ஏலம் விடுங்க..
நீங்க பாக்குறபடி பாருங்க ..நெலம் ஏலம் உட்டாவுனும்..
முடியாதுங்க.. எல்லாத்தயும் சரி பண்ணிட்டுதான்.
அதெல்லாம் இப்ப முடியாது.
யேவ் ..இங்கவாய்யா நான் பாட்டுக்கும் கத்திகிட்டு கெடுக்குறேன். ஏன் உனக்கு நெலம் வேண்டாமா…
அதான் நீ பேசுறீய அப்புறம் நான் என்ன..
உங்க விருப்பதான் கிராமமுன்னா நாங்க எதுக்கு என்றபடி எழுந்து சென்றார்கள்.
கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.
ஒவ்வொரு கிராம கூட்டத்தின் போதும் கூச்சலும் குழப்பமும் அதிமாகவே இருக்கும்.
அன்றும் அப்படிதான்கிராம நிலத்த இன்னிக்கு ஏலம் உட்டே ஆவனும் என்றார் ஒருவர்.
கிராம வரவு செலவு பாக்கம நெலத்த ஏலம் போட முடியாதுங்கே ஆமாம்.
நாலங்சு வருசமாவுது கணக்கு பாத்து ஒரு செலவும் உருப்படியா செஞ்சபாடில்ல அதனால கணக்க பத்தி பேசுங்க அப்புறம் பாத்துகலாம் இன்னொரு கிராமத்தார்.
கணக்கு பாக்குறப்படி பாருங்க அதுக்கு ஏம்பா நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொல்றீங்க என்றார் கிராம தலைவர்.
ஒருத்தரடோ விருப்பத்துக்கு கிராமம் கட்டுபடாது எல்லாருடோ வார்த்தையும் கேளுங்க கூட்டத்தில் ஒருவர்.
நானும் கிராமத்துல ஒருத்தன் தான். எனக்கு எங்கருத்த சொல்ல அதிகாரம் உண்டு நெலத்த ஏலம் போட முடியாதுன்னு சொன்னவர்.
எப்பா அவரு ஒன்னும் சும்மா சொல்லல அவரு கேக்கறதும் கரெக்டுதான் .
ஊரு பாக்குற நீங்க கிராம திருவிழா நடத்துல அஞ்சு வருசம் ஆச்சு தெருவுக்கு சாமி வந்து கேட்டா காரணம் சொல்றீங்க..
வர்ற வருமானம் எங்க போச்சு சொல்லிட்டு கிராம நெலத்த ஏலம் விடுங்க..
நீங்க பாக்குறபடி பாருங்க ..நெலம் ஏலம் உட்டாவுனும்..
முடியாதுங்க.. எல்லாத்தயும் சரி பண்ணிட்டுதான்.
அதெல்லாம் இப்ப முடியாது.
யேவ் ..இங்கவாய்யா நான் பாட்டுக்கும் கத்திகிட்டு கெடுக்குறேன். ஏன் உனக்கு நெலம் வேண்டாமா…
அதான் நீ பேசுறீய அப்புறம் நான் என்ன..
உங்க விருப்பதான் கிராமமுன்னா நாங்க எதுக்கு என்றபடி எழுந்து சென்றார்கள்.
கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.
Subscribe to:
Posts (Atom)



