Showing posts with label குற்றாலம். Show all posts
Showing posts with label குற்றாலம். Show all posts

Tuesday, July 09, 2013

குற்றால சாரலும் சில குறிப்புகளும்


ஹான்னுட்டு… கண்கள் மேல்நோக்கியே பார்த்து கொண்டிருந்தது. 

கரும்பாறைக்களுக்கு நடுவே பட்டை வெள்ளைகோடாய்  நீர் விரைந்து பெரும்சப்தத்துடன் கீழிறிங்கியது.

காற்றில்அடித்த அருவியின்சாரல் துளிகள் சிறிதாய் முகம் நனைத்து   குளிரவைத்தது.

குளித்து குளிர்ந்தவர்கள் ஆ…..ஊ…சப்தங்கள் காதுகளை வந்தடைய தவறவில்லை.

கழுத்தில் தங்கசெயின் அணிந்தவரிடம் ”பல்லிடுக்கில் செயினை எடுத்து வைத்துகொள்ளுங்கள்”  என்று தங்கசெயின் அணியாதவர் அறிவுறுத்தினார்.

அருவிகளில் குளிக்கும் போது சோப்பு , ஷாம்பு பயன்படுத்தவேண்டாம் என வாசகம் எழுதப்பட்டிருந்தும். கடைகளில் விற்க அனுமதிக்கப்பட்டிருந்தது.  எச்சரிக்கை வாசகம் தேவையற்ற தாகவே இருக்க நிறையபேர் சேப்புநுரையால் ஷாம்பு  நுரையால் தன்னை  கழுவி  மற்றவர்களையும் கழுவினார்கள்.

குடித்த குடி சாப்பிட்ட அசைவ சாப்பாட்டினால் அருவியின் சுகம் என்னவென்று தெரியாமல் பலபேர் குளிக்க சில பேர்  அருவியின் குளியல் சுகம் அறிந்தார்கள்.

கடைதெருகளில் பொருட்கள் வாங்குவதைவிட அவர் அவர் ஊர்களில் வாங்குவது நன்மை என வியாபாரிகள் விலை ஏற்றிவைக்க பொருள் வாங்க பேரம் பேசுவது நல்லதாகப்பட்டது.

பனை நுங்கு  இளநீர் பழாப்பழம் நம்ம ஊரைவிட விலை அதிகம் தெரிந்தது.

நல்ல சூழலில் மழைமேகங்கள் பெய்து கொண்டே விரைந்து விட அடுத்த மழைமேகங்கள் வரும்வரை தன் பணியை செவ்வனே செய்யும் சூரியன்.

இரவுஅடிக்கும் காற்றில் குளிர்ந்து போகும் உடல் மனதுக்கு அமைதி கொடுத்து சூழலை ரசிக்க செய்யும்.

சுற்றியிருக்கும் மலைத்தொடர்களில் தவழும் மேகக்கூட்டங்கள் அழகை ரசித்தவாறே நடக்கும்தனிமை நன்று.

குழு குடும்பம் வீடுகள் விடுதிகளில் நிறைந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி  அருவிகளில் ஆனந்த குளியல் குளிக்க குற்றாலம்  மக்கள் கூட்டத்தால் நிறைய வருபவர்களின் வாகனங்கள் குறைந்தபாடில்லை.


மழை முகடுகளில் பெய்த மழையால் அருவிகள்  ஆர்பரித்து கொட்டி கொண்டேயிருக்க மக்கள் நனைந்து கொண்டேயிருந்தார்கள்.

Thursday, July 28, 2011

மாற்றம் வேண்டி....


இரண்டுநாள் குற்றாலம் போய் வர வாய்ப்பு கிடைத்தது.  வருடம் முழுவதும் ஒரே இடம்  . மாற்றம் வேண்டி மனது நினைக்கும் ,சூழல்கள் அமையாவிடில் இரண்டுநாட்கள்  அதே இடம் அதே மனிதர்கள்.

பொம்மை கடையில்...


மலையும் மலைச்சார்ந்த இடமும்


மனிதர்கள் இல்லா மலையும் மலைச்சார்ந்த இடமும் பார்க்கும் பொழுது எண்ணங்கள் அவ்வளவு இல்லாத மனதில் உட்கார்ந்த அமைதி.



பறத்தலில் ஓய்வு


மழையும் மழைசாரலுமாய் பயணம்.

கொட்டும் அருவி மழைமுகட்டில் தங்கியிருந்த மேகங்கள் மழையில் நனைந்த  மரங்களின் பசுமைஅழகாய் தான் இருந்தது.



கொட்டும் அருவியில் தலை நனைத்து உடலும் நனை கையில்சிலிர்த்த உடலும் மனமும், முண்டியடித்த கூட்டம் அருவிக்குள்  எனை தள்ள மூச்சு முட்டி எதிர்மனிதர்களை பலம் கொண்டு தள்ளி கொண்டே வெளியில் வந்துமூச்சை இயல்பாக்கியப்பொழுது எழுந்த நிம்மதி.

நடைமுறை வாழ்க்கைக்கு தினந்தோறும் கடமைகள் வருடம் முழுவதும் தேவை என்றாலும் வருடத்தில் சிலநாட்கள் அதையெல்லாம் தவிர்த்து செல்லும் மாற்றம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையாகவே ப்பட்டது.

LinkWithin

Related Posts with Thumbnails