Showing posts with label பிடித்தது. Show all posts
Showing posts with label பிடித்தது. Show all posts

Monday, July 15, 2013

அறிவார்ந்த ஊழல்

காந்தி யுகத்தின் கடைசிப்பொழுதுகளில் நேர்மையின் நிறம் மாறத்தொடங்கியது.

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேகன்களுக்குப் பற்றாகுறை நிலவியது. தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க அமைச்சகம் முடிவெடுத்தது.

ஒரு தனியார் நிறுவனம் 50 வேகன்களுக்கு 50 ஆயிரம் லஞ்சம் தர இசைந்தது. முன்பணமாக 22 ஆயிரம் ரூபாய் கைமாறியது.

கோப்பில் ”Approved”  என்று எழுதிக் கையொப்பமிட்டார். கையெழுத்தானதை அறிந்த நிறுவனம் மீதிப்பணம் தராமல் போக்குக்காட்டியது. அமைச்சர் விடுவாரா? பாடம் புகட்ட முடிவெடுத்தார்.

‘Approved’-க்கு முன்னால் “not’  என்று எழுதிவைத்தார். செய்தியறிந்த நிறுவனம் அலறியடித்து வந்து அமைச்சரிடம் மீதிப்பணம் தந்தது.

மகிழ்ச்சியடைந்த அமைச்சர்.

அடித்தல் திருத்தலின்றி “not’ உடன்“e’ சேர்த்தார். அவ்வளவுதான். ‘Note: Approved’ என்றானது.

இதற்குப்பெயர்தான் அறிவார்ந்த ஊழல்.


(ஊருக்கு நல்லது சொல்வேன் புத்தகத்திலிருந்து)

Monday, May 27, 2013

படித்தவுடன் சிரித்த கவிதை


"தாத்தா...
யானை தெரியலை'
திருவிழாக் கூட்டத்தில்
எக்கி எக்கிப்
பார்த்த குழந்தை சொன்னது.
"இரு தூக்கிக் காண்பிக்கிறேன்'
என்றார் தாத்தா.
"யானை
ரொம்பக் கனம்...
தூக்கிருவியா?'
என்றது குழந்தை.

மு. பழனி இராகுலதாசன்.

Tuesday, March 09, 2010

உங்களுக்கு பிடிக்குமா..




















மனித சுவாசிப்புகள்

நின்றுதான் போகும்

ஆயுதங்கள் சுவாசிக்க தொடங்கினால்

-விஜய குமாரன்-


நேருவின் படத்தை

பார்த்தவன் கையில்ரோஜா

குத்தி கொள்ளதான் சட்டையில்லை

-ராஜ ராஜன்-


குப்பைதொட்டியில் குழுந்தையின்

அழுகுரல்

தெருநாய் சலித்துகொண்டது

ச்சே..இன்னமொருபங்காளி

-கீதாசரஸ்வதி-


எழுந்திருக்க மனமில்லை

தலையணைக்குள்

உன் ஞாபகங்கள்.

-விஜயகுமார்-

Friday, August 07, 2009

படித்தவுடன் பிடித்தது

ஒருவன் கங்கை ஆற்றில் இறங்கி ஜலத்தை தன் இரண்டு கைகளாலும் இறைத்துக் கொண்டிருந்தான். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த வைதீகர் ஒருவர் இதைக்கண்டு “அப்பா ! தண்ணீரை ஏன் வீணாய் இறைக்கிறாய்?” என்றார்.

ஒருவன்: “ சென்னையிலுள்ள என் தென்னந்தோப்பு வாடிப் போவதாகக் கேள்விப்பட்டேன் அதற்காக இக்கங்கை நீரை இறைக்கின்றேன்.”

வைதீகர்: என்னப்பா! அடி வண்டல் முட்டாளாக இருக்கிறாயே! சென்னையிலுள்ள தென்னந்தோப்பிற்கு கங்கையிலிருந்து ஜலம் இறைத்தால் போகுமா? இந்தச் சொற்ப அறிவுகூட உனக்கு இல்லாமற்போனது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

ஒருவன் : ஓய் வைதீகரே! கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போக வேண்டாம் . சற்று நேரத்திற்கு முன் தாங்கள் நடத்திய காரியம் நினைவிருக்கிறதா? தர்ப்பணம் செய்வதாகச் சொல்லி நீங்கள் இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளி இறைத்த கங்கை நீர் மேக மண்டலம் சந்திர மண்டலம் நஷத்திர மண்டலம் இவைகளையெல்லாம் தாண்டிப் பல கோடி மைல்களுக்குப்பாலுள்ள மோஷலோகத்தில் வசிக்கும் பிதுர்களுக்குப் போய் சேர்கின்றபோது சில நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள சென்னைக்கு ஏன் கங்கை நீர் சேரக்கூடாது?

-ஆனந்த விகடன்-

படித்தவுடன் பிடித்தது பிடித்தவுடன் சிந்திக்கவும் செய்ததது.

LinkWithin

Related Posts with Thumbnails