Showing posts with label படித்தது. Show all posts
Showing posts with label படித்தது. Show all posts

Monday, March 07, 2016

பந்தயக் குதிரைகளும் பக்குவப்படுத்தும் கலையும் - பகிர்வு

தேசிய புகழ்பெற்ற ’இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பை’ குதிரைப் பந்தயங்களுக்காக இந்தியாவின் முக்கிய பந்தய மையங்களிலிருந்து வந்திருந்த குதிரைகள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலும், குதிரைப் பந்தயங்களில் ஜெயிக்கும் குதிரை களைப் பற்றித்தான் ஆர்வத்துடன் விசாரிக்கப்படுகின்றன. அந்த குதிரைகள் பந்தயத்துக்காக எப்படித் தயார் படுத்தப்படுகின்றன என்பதை கேட்டால் அது ஒரு பெரிய கலை என்கிறார்கள்.
இந்தியாவில் புணே, மும்பை, ஆமதாபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் குதிரை பண்ணைகள் உள்ளன. இங்கு உயர் வகை குதிரை இனங்களை உருவாக்குவதற்காக வெளிநாடு களிலிருந்து குதிரை ஜோடிகள் விமானம் மூலம் இறக்குமதி செய் யப்படுகின்றன. இவைகளை ’ஸ்டாலின்’ என்கிறார்கள். இவற்றின் மூலம் இனவிருத்தி செய் யப்படும் குதிரைகள்தான் பந்தயத் தில் ஓடவிடப்படுகின்றன.
கருவுற்று ஆறாவது மாதத்தில் குதிரை குட்டியை ஈனும். ஒரு குதிரை அதிகபட்சம் ஐந்து குட்டிகள் வரைகூட ஈனும். பிறந்து சில நாட் களிலேயே 400 கிலோ எடையை தொட்டுவிடும். ஓராண்டு காலத் துக்கு இந்தக் குட்டிகள் அதன் போக்கிலேயே சுதந்திரமாக புல் தரைகளில் உலவவிடப்படும். இந்தக் காலகட்டத்தில் குதிப்பது, உதைப்பது, கடிப்பது என குட்டிகள் மிகவும் மூர்க்கத்தனமாகவே இருக் கும். சுவரில் மோதி காயம் ஏற் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, குட்டிகள் குதித்துத் திரியும் பகுதி களில் மென்மையான தடுப்பு வேலி போட்டிருப்பார்கள்.
பிறந்ததுமே குதிரை குட்டி களின் பிறப்பை பதிவு செய்ய வேண் டும். இதற்காகவே புணேயில் பதிவு மையம் உள்ளது. குதிரை குட்டி யின் இனம் அதன் தாய், தந்தை குறித்த விவரங்கள் அனைத்தையும் இங்கே பதிவு செய்து முறைப்படி பாஸ்போர்ட் பெற்றால்தான் அந்தக் குதிரையானது பந்தயத்தில் ஓட அனுமதிக்கப்படும்.
இரண்டு வயது தொடக்கத் திலேயே ’ஸ்டேபிள்’ எனச் சொல்லப் படும் பிரத்யேக அறைகளுக்குள் குதிரைக் குட்டிகள் அடைக்கப் படும். அப்போதே ரேஸ்கோர்ஸ் மைதானங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கே பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியும் அளிக்கப்படும். காலை யில் ஓட்ஸ், கொல்லு, மதியம் வெறும் தண்ணீர், மாலையில் கேரட், இரவில் புல். இவைதான் குதிரைகளுக்கான தினசரி டயட். சென்னை பண்ணையில் உள்ள குதிரைகளுக்கு மைசூரிலிருந்து பிரத்யேகமாக புல் தருவிக்கப்படு கின்றன. பராமரிப்புக்காக மட்டுமே ஒரு குதிரைக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. அதேசமயம், என்னதான் தீனி கொடுத்தாலும் குதிரையின் எடை 460 கிலோவை தாண்டவிடமாட்டார்கள்.
தினமும் குதிரைகளின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதற்கா கவே இரவு பகலாக 2 கால் நடை மருத்துவர்கள் பண்ணையில் பணியில் இருப்பார்கள். 2 வயது முடியப்போகும் தருவாயில் குதிரைகள் கிளாஸ் ஒன் ரேஸில் களமிறக்கப்படும். களத்துக்கு வரும் குதிரைகளின் திறமையைப் பொறுத்து அவற்றின் மதிப்பும், ஓடும் ரேஸ்களின் தரமும் உயரும்.
பண்ணையிலிருந்து ரேஸ் கோர்ஸ் மைதானங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் குதிரை களைக் கொண்டு செல்வதற்கு ஃப்ளோட் (Horse Float) என்று சொல்லப்படும் பிரத்யேக வாகனங் களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஃப்ளோட்டில் 6 குதிரைகள் வரை நிறுத்தலாம். உயர் வகை குதிரைகளை கொண்டு செல்வ தற்கு குளிரூட்டப்பட்ட ஃப்ளோட் களும் உண்டு.
சென்னை பண்ணையிலிருந்து கொல்கத்தாவுக்கு மட்டும் ரயிலில் பிரத்யேக வேகன்களில் பந்தயக் குதிரைகள் எடுத்துச் செல்லப்படு கின்றன. இந்த வேகன்கள் குதிரை களை நிற்கவைக்க வசதியாக மரக் கட்டைகள் அடிக்கப்பட்டு உள்ளுக் குள் ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு குளிரூட்டப்படும். ஆந்திரா சென்ற தும் மீண்டும் வேகனில் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்டு குளிரின் பதம் காக்கப்படும். அதேசமயம், என்னதான் ஊட்டி ஊட்டி வளர்த் தாலும் பந்தயக் குதிரைகளுக்கு 4 ஆண்டுகள்தான் மதிப்பு. 6 வயதுக்கு மேல் அவை பந்தயத் துக்கு லாயக்கற்றவைகளாக ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
இப்படி ஒதுக்கப்படும் குதிரை கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு குதிரை பண்ணையில் ஓரங்கட்டி நிறுத்தப்படும். பந்தயத்துக்கு தயாராகும்போது கோடி ரூபாய் வரை விலை மதிக்கப்படும் இந்தக் குதிரைகள், ஓடிக் களைத்த பிறகு ஆயிரங்களில் மதிக்கப்பட்டு பிற உபயோகங்களுக்கு விற்கப்படு வது பரிதாபத்துக்குரிய விஷயம்.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தள்ளாட்டத் துடன் ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகள் இப்படிக் கழிக்கப் பட்டவைதான். சென்னை மாநகர காவலில் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான குதிரைகள் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சொந்த மானவை. குதிரைகளின் அதிகபட்ச ஆயுள் காலம் 9 ஆண்டுகள்.
பெரிய குதிரைப் பண்ணைகள்
இந்தியாவை பொறுத்தவரை சென்னையில் எம்.ஏ.எம்.ராமசாமி யின் குதிரைப் பண்ணை, பெங்களூருவில் விஜய்மல்லையா வின் குதிரைப் பண்ணை, மும்பை யில் துஞ்சு பாய் என்பவரின் குதிரைப் பண்ணை மற்றும் துபாயைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரின் குதிரைப் பண்ணை இவைகள்தான் இந்தியா வின் பெரிய குதிரைப் பண்ணை கள். புணேயில் உள்ள குதிரை பண்ணை குளிரூட்டப்பட்டது.
உலகின் டாப் 10 பந்தயக் குதிரை இனங்கள்
இங்கிலாந்தின் துரோப்ரீட் வகை குதிரைதான் பந்தயக் குதிரைகளில் முதல் தரமானது. இதற்கு அடுத்த நிலையில் அரபு நாடுகளின் அரேபியன், அமெரிக்காவின் ஸ்டாண்டர்டுப்ரீட் மற்றும் குவார்ட்டர் ஹார்ஸ் இனங்கள் உள்ளன. இவைகளுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் பெயின்ட் ஹார்ஸ் மற்றும் அப்பாலூசா குதிரைகளும் வட அமெரிக்காவின் மஸ்தாங், நெதர்லாந்தின் ஃபிரைசியன், அமெரிக்காவின் மார்கென், அயர்லாந்தின் ஜிப்சிவேனர் குதிரைகளும் உள்ளன. குதிரை பயிற்சியாளர்களில் ஹாங்காங் பயிற்சியாளர்களும் ஜாக்கிகளில் அயர்லாந்து ஜாக்கிகளும் பிரமாதமாக பேசப்படுகின்றனர்.
கிண்டியில் கில்லி அடித்த குதிரைகள்
கிண்டியில் நேற்றுமுன்தினம் நடந்த ஸ்பிரிண்டர்ஸ் கோப்பை பந்தயத்தில் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களூரு குதிரை ஆதமும் (ஜாக்கி: டிராவர், பயிற்றுநர்: ஷராஃப்) ஸ்டேயர்ஸ் கோப்பை பந்தயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த குதிரை டின் டினாபுலேஷனும் (ஜாக்கி: சவுகான், பயிற்றுநர்: தேஷ்முக்) முதலாவதாக வந்து தலா ரூ.50 லட்சத்தைத் தட்டிச் சென்றன. நேற்று நடந்த இன்விடேஷன் கோப்பை பந்தயத்தில் பெங்களூருவைச் சேர்ந்த டெசர்ட் காட் (ஜாக்கி: டேவிட் ஆலன், உரிமையாளர், பயிற்றுநர்: பத்மநாபன்) என்ற குதிரை கோப்பையை கைப்பற்றி ரூ. 1 கோடியை தட்டிச் சென்றது.

நன்றி  : தி இந்து

Monday, August 26, 2013

அணு ஆயுத முத்திறன் (படித்தது)

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் ஜெர்மானிய சப்மரீன்கள் (நீர்மூழ்கிக் கப்பல்கள்) அட்லாண்டிக் கடலில் பிரிட்டிஷ் போர்க்கப்பல்களைத் தாக்கி பெரும் சேதம் விளைவித்தன. அதே போரின்போது ஜப்பான், ராட்சத சப்மரீன்களை உருவாக்கி அந்த சப்மரீன்களுக்குள் விமானங்களை வைத்து அமெரிக்காவின் மேற்குக்கரை வரை அனுப்பியது. இவையெல்லாம் அணுகுண்டுகளும் நீண்ட தொலைவு செல்லும் ஏவுகணைகளும் உருவாக்கப்படுவதற்கு முன் நடந்தவை. அப்போதைய சப்மரீன்கள் டீசலினால் இயங்கியவை.
சப்மரீன்களில் டீசல் எஞ்சின்களை பயன்படுத்துவதில் பெரிய பிரச்னை உண்டு. கடலில் மூழ்கியபடி அதிக தொலைவு செல்வதானால் நிறைய டீசல் எண்ணெயை கையோடு கொண்டு சென்றாக வேண்டும். தவிர, டீசல் எஞ்சின்கள் சத்தம் மற்றும் புகையை எழுப்புபவை. கடலுக்கு அடியில் எழும் ஒலிகளைப் பதிவு செய்ய நுட்பமான கருவிகள் உள்ளன. ஆகவே டீசலினால் இயங்கும் சப்மரீன்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். எனவே மின்சார பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்கள் உருவாக்கப்பட்டன. சப்மரீன் கடல் மட்டத்துக்கு மேல் வந்து மிதக்கும். அப்போது டீசல் எஞ்சின்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் சப்மரீன் நீருக்குள் மூழ்கி விடும். இதில் உள்ள பெரிய பிரச்னை சப்மரீன் அடிக்கடி மேலே வந்தாக வேண்டும். இதன் மூலம் அந்த சப்மரீன் தான் இருக்கின்ற இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
இரண்டாம் உலகப்போர் முடியும் கட்டத்தில் அமெரிக்கா முதல் தடவையாக அணுகுண்டை உருவாக்கி அதை 1945 ஆம் ஆண்டில் வெடித்து சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்களைத் தயாரிக்கலாயிற்று. சப்மரீன்களில் அணுசக்தியைப் பய்ன்படுத்துவதில் பல வசதிகள் உள்ளன. சப்ம்ரீனில் இருக்கும் அணு உலையானது தொடர்ந்து 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு செயல்படக்கூடியது. ஆகவே போதுமான உணவு கையிருப்பு இருக்குமானால் அணுசக்தி சப்மரீன் தொடர்ந்து பல மாத காலம் நீருக்குள் இருக்க முடியும். கடலின் எந்த மூலைக்கும் செல்ல முடியும். அங்கிருந்தபடியே எதிரி நாட்டைத் தாக்க முடியும்.
அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்கள் வடிவில் பெரியவை. அவற்றினுள் பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளைப் பொருத்தலாம். ஏவுகணைகளின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்தலாம். நீருக்குள் மூழ்கியிருந்தபடியே இந்த ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (ரஷியா தலைமையில் ஒன்றிணைந்திருந்த கூட்டமைப்பு) இடையே கடும் விரோதப் போக்கு நிலவிய காலகட்டத்தில் (1990 வரை) இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு பல நவீன அணுசக்தி சப்மரீன்களைத் தயாரித்தன.
இன்னமும் சரி, அமெரிக்காவிடமும் ரஷியாவிடமும்தான் நிறைய அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்களின் எண்ணிக்கை அதிகமில்லை. சீனாவிடமும் அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் சொந்தமாக அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளது. உலகில் அணுசக்தி சப்மரீனைப் பெற்றுள்ள ஆறாவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியா தயாரித்துள்ள அணுசக்தி சப்மரீனின் பெயர் அரிஹந்த் என்பதாகும். "எதிரியை நிர்மூலமாக்குபவன்' என்பது இதன் பொருள்.
இந்த சப்மரீனில் இடம் பெற்றுள்ள அணு உலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் செயல்பட ஆரம்பித்தது. இனி இது கடலுக்குள் இருந்தபடி பல சோதனைகளை நடத்தும். எல்லாம் முடிந்து அரிஹந்த் இந்திய கடற்படையில் இடம் பெற இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
அரிஹந்துக்கான அணு உலை கல்பாக்கத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள அணு உலைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
இந்திய அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள (தாராப்பூர் அணுமின் நிலைய முதல் யூனிட், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை நீங்கலாக) அணு உலைகள் அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துபவை. இயற்கை யுரேனியத்தால் அவ்வளவாகப் பயன் இல்லை. யுரேனிய உலோகத்தில் அடங்கிய அணுக்களில் யுரேனியம்- 235 எனப்படும் அணுக்களும் உள்ளன. அவைதான் முக்கியமாகத் தேவை. இந்த வகை அணுக்களே பிளவு பட்டு தொடர்ந்து ஆற்றலை அளிக்கும். வெப்பத்தை அளிக்கும். அதைக் கொண்டு நீராவியை உண்டாக்கி மின்சாரம் தயாரிக்கலாம்.
இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யு-235 அணுக்கள் 0.7 சத விகித அளவுக்கே உள்ளன. மீதி அணுக்கள் யு-238 வகையைச் சேர்ந்தவை. எனினும் பெரும் செலவு பிடிக்கிற, அத்துடன் மிகவும் சிக்கலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி யுரேனியக் கட்டியில் யு-235 அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். இதை செறிவேற்றுதல் என்று கூறுவார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் யு-235 அணுக்களின் அளவு அதாவது செறிவேற்றப்பட்ட யுரேனியம் சுமார் 4.5 சதவிகித அளவுக்கு உள்ளது. ஆனால் அணுசக்தி சப்மரீனில் இடம் பெறுகிற அணு உலையில் யு-235 அளவு, குறைந்தது 25 சதவிகித அளவுக்கு இருந்தாக வேண்டும். அரிஹந்த் சப்மரீனில் இத்தகைய அணு உலை இடம் பெற்றுள்ளது. இது கல்பாக்கத்தில் கட்டப்பட்டதாகும். இந்த அளவுக்கு செறிவேற்றப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலை இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
சப்மரீனுக்காக அணு உலையை தயாரிப்பது சிக்கலானது. அது நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடாது. வடிவில் சிறியதாக இருக்க வேண்டும். தவிர, சப்மரீன் நீருக்குள் செல்லும் போது மேலும் கீழுமாக அசையும். சில சமயம் திடீரென வேகம் அதிகரிக்கும். ஆகவே சப்மரீனில் இடம் பெறுகின்ற அணு உலையானது எல்லாவித ஆட்டங்களுக்கும் அசைவுகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, சப்மரீன் என்பது விசேஷ கலப்பு உருக்கினால் தயாரிக்கப்படுவதாகும். அமெரிக்கா ஒரு கால கட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விதித்த தடை காரணமாக எந்த நாடும் இப்படியான விசேஷ உருக்கை இந்தியாவுக்கு விற்க முன் வரவில்லை. இந்திய நிபுணர்கள் பெரும் பாடுபட்டு இவ்வித விசேஷ கலப்பு உருக்கைத் தயாரிப்பதில் வெற்றி கண்டனர். அதைத் தொடர்ந்தே அரிஹந்த் சப்மரீனை உருவாக்குவது சாத்தியமானது.
அரிஹந்துக்கான அணு உலையை கல்பாக்கத்தில் வைத்து அதன் செயல்பாடு குறித்து நிபுணர்கள் திருப்தி அடைந்த பிறகே அது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த அரிஹந்த் சப்மரீனில் இடம் பெற்றது.
அணு உலை என்பது கதிரியக்கத்தைத் தோற்றுவிப்பதாகும். அந்த கதிரியக்கம் சப்மரீனில் பணியாற்றும் மாலுமிகளை பாதிக்காதபடி விசேஷ ஏற்பாடுகள் உள்ளன. சில கார்களில் எஞ்சின் பின்புறம் அமைந்திருக்கும். அது போல அரிஹந்தின் பின்புறத்தில்தான் அணு உலை இடம் பெற்றுள்ளது. அதை அடுத்து ஏவுகணைகள் இடம் பெறுகின்றன. சப்மரீனில் செங்குத்தாக அமைந்த நீண்ட குழல்களில் இந்த ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும். ஏவுகணைகள் சுமார் மூன்று மாடி உயரம் கொண்டவை. இவற்றின் முகப்பில் அணுகுண்டுகள் இடம் பெற்றிருக்கும். அரிஹந்த் மூழ்கிய நிலையில் இருந்தாலும் ஏவுகணைகளை எதிரி இலக்கை நோக்கிச் செலுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் அரிஹந்த் சப்மரீனில் சில நூறு கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். பின்னர் 3500 கிலோ மீட்டரில் உள்ள எதிரி இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறும்.
இந்தியா 1998-ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தியபோதே "அணு ஆயுத வல்லரசு' என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. ஆனால் ஒரு நாடு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைப் பெற்றால் மட்டும் போதாது. அணுகுண்டுகளை நிலத்திலிருந்து (ஏவுகணைகள் மூலம்) வான் வழியாக (விமானங்கள் மூலம்), கடல் மார்க்கமாக (அணுசக்தி சப்மரீன்கள் மூலம்) என மூன்று வழிகளிலும் எதிரி நாட்டை நோக்கிச் செலுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். இது அணு ஆயுத முத்திறன் எனப்படும். இப்போதுள்ள அளவில் அமெரிக்காவும் ரஷியாவும் இத்திறனைப் பெற்றுள்ளன. சீனாவுக்கும் இத்திறன் உண்டு. அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளதன் மூலம் இந்தியாவும் இத்திறனைப் பெற்று விட்டது. அணுகுண்டுகளைச் செலுத்துவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டத்தை பிரான்ஸýம் பிரிட்டனும் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டன. ஆகவே இந்த இரு நாடுகளுக்கும் அணு ஆயுத முத்திறன் கிடையாது. பாகிஸ்தானுக்கும் கிடையாது.
சீனாவும் சரி, பாகிஸ்தானும் சரி, இந்தியாவிடம் நட்புறவு காட்டுவதாகச் சொல்ல முடியாது. பாகிஸ்தான் நான்கு முறை இந்தியா மீது ஆக்கிரமிப்பு நடத்திய நாடு. சீனா ஒரு தடவை தாக்கியுள்ளது. இந்த இரண்டுமே அணுகுண்டுகளை வைத்துள்ளவை. இப்படியான சூழ்நிலையில்தான் இந்தியா அணு ஆயுத முத்திறனைப் பெறுவதில் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது.

நன்றி : தினமணி

Thursday, August 22, 2013

தலைமுறைகளை இணைத்தால் மன அழுத்தத்தை தவிர்க்கலாம் (பகிர்வு)

தாத்தா மற்றும் பாட்டிகளோடு, அவர்களது பேரன் பேத்திகள் நன்கு விளையாடி மகிழ்ந்தால், இருவருக்குமே மன அழுத்தம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது நமக்கு புதிய செய்தி அல்ல. நாம் ஏற்கனவே வாழ்ந்து அறிந்த செய்திதான். ஆனால், அதை நாமே மறந்துவிட்டு தற்போது அவசர கதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறிய குடும்பங்களாகிவிட்டதால் தாத்தா பாட்டிகளோடு, பேரக் குழந்தைகள் கொஞ்சி மகிழ வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
தனியாக ஓரிடத்தில் வயதான காலத்தில் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தாத்தா, பாட்டிகளும், பள்ளி, பள்ளி முடிந்து டியூஷன், இதர பயிற்சிகள் என பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கும் பேரன், பேத்திகளும் ஒரே இடத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, கொஞ்சி மகிழ்ந்து, விளையாடி, கதைகளைச் சொல்லி, கேட்டு, பாடல்கள் பாடி, அதனைக் கேட்டு வாழ்ந்து வந்தால், இரு தலை முறையினருக்குமே மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
ஆனால், இதற்கெல்லாம் நமக்கெங்கு நேரம் என்றில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களை சந்திக்க வழி ஏற்படுத்தி, இரு தலைமுறைக்கும் இடையே பெற்றோர் ஒரு பாலமாக இருந்தால், உங்கள் மூத்த தலைமுறையும், எதிர்கால தலைமுறையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நன்றி : தினமணி

Friday, August 16, 2013

வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர் (பகிர்வு)

ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் செழிப்பும் சீர்மையும் அந்த நாட்டிலுள்ள இயற்கை வளங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையில் முன்னேற்றம், கல்வியாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றினால் மட்டும் அமைவதன்று. ஒவ்வொரு வீட்டினரின் பங்களிப்பும் அதில் அடங்கியிருக்கிறது. ஒரு நாடு என்பது பல சமுதாயங்களின் கூட்டமைப்பு ஆகும்.
சமுதாயம் என்பது பல வீடுகளில் வாழும் மக்களின் தொடரமைப்பு ஆகும். சமுதாயத்தின் அடிப்படை அமைப்பாக குடும்பம் விளங்குகிறது. குழந்தைகளுக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். பெற்றோர்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்.
ஒரு வீடானது, மக்களை நல்லவர்களாக அடையாளப்படுத்தும் பண்புகளான அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து தூண்களைத் தாங்கியதாகவும், தூய்மை, நல்லறிவு, இரக்கம், பொறுமை ஆகிய நான்கு சுவர்களைக் கொண்டதாகவும், அமைதியை கூரையாகவும், சிரத்தையை தளமாகவும், இறை வழிபாட்டினை வாயிலாகவும், அருள் அதனுள் வீசும் காற்றாகவும், ஆனந்தம் அங்கு நிகழும் இசையாகவும் கொண்டு அமைய வேண்டும்.
அப்போதுதான் அந்த வீட்டிலுள்ளவர்கள் அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத் தன்மை, அறம் சார்ந்த பண்புகள் ஆகியவை உடையவர்களாக இருப்பார்கள்.
நாம் வசிக்கும் வீடே அறிவு வளர்ச்சிக்கும் ஒழுக்கலாற்றுக்கும் களனாக அமைகிறது. ஒழுக்க இயல்புகள் வீட்டின் வழிதான் அமையும். "குலஞ்சிறக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்' என்கிறார் கம்பர். உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் உலைகளனாக ஒருவனுக்கு அவன் வீடு அமைகிறது. வீட்டில் உள்ள முதியோரும், பெற்றோரும், உற்றார் உறவினர்களும் எந்நிலையில் இருக்கிறார்களோ, அந்நிலையில்தான் அங்கு வளரும் குழந்தைகளும் இருப்பார்கள். அந்த வீட்டில் அன்பு வாசம் வீசினால், அவர்களின் பண்பு நலன்கள் வெளியிலும் அவ்வாறே மணம் வீசும். ஒருவன் வீட்டிலிருந்து என்ன மனநிலையில் கிளம்புகிறானோ அந்த மனநிலையில்தான் வெளியில் அவன் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும். எனவே, ஒருவனின் நன்மையும், தீமையும் அவனுடைய வீட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகளில் தான் அமைந்துள்ளது.
அதாவது, ஒருவனுக்கு இரு கண்களாக இருக்கும் கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையுமே அவனுக்கு கற்றுத் தருவது அவன் வசிக்கும் வீடே.
ஒழுக்கம் என்பது ஒருவன் தன் உயர்வை விரும்பி தனக்கு என சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதாகும். நமக்கு தீமை செய்வாரும் நாமே, நமக்கு நன்மை செய்வாரும் நாமே என்பதை உணர்ந்து வீட்டிலுள்ளவர்கள் செயல்பட்டால், சமுதாயமும் நாடும் நேரிய வழியில் செல்லும்.
கூடையிலுள்ள ஒரு அழுகிய பழம் அடுத்தடுத்த பழங்களை அழுக வைத்திடும். ஒரு தொற்று நோய் ஓரிருவருக்குவரினும் அது ஊரையே பலியாக்கி விடும். அதுபோல, ஒரு வீட்டில் துன்பமும் வன்முறை எண்ணமும் காழ்ப்புணர்ச்சியும் துளிர் விட்டால், அது அந்த வீட்டிலுள்ளவர்களை அழிப்பதோடு, சமுதாயத்திற்குள் புரையோடிய புண்ணாகி பின்னர் நம் உயிராகிய நாட்டையே அழிக்க முற்படுகிறது. ஒரு நல்லவனின் உள்ளம் சார்ந்தது சாராதது எதையும் கெடுக்காது.
எனவே, வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவோடு நல்லுணர்வோடு தாங்கள் கெடாத தன்மையோடு பிறர் கெடாமல் இருக்கத் தக்க சூழலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவர் விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் கெட்டுப் போவதில்லை. இல்லையெனில் வீட்டில் யார் பெரியவர், யார் சம்பாதிக்கிறவர், யார் அறிவாளி, யார் அறிவிலி, படிக்காதவன், படித்தவன் ஆகிய தன்னுணர்ச்சி, தற்பெருமை, அகங்காரம், தன்நலம் ஆகிய களைகள் முளைத்து வீட்டையே அழித்து சமுதாயத்திற்குள் அவப்யெரையும் உண்டாக்கி நாட்டையே இன்னல்களுக்கு உள்ளாக்கும்.
அரசு குடிமக்களைக் காக்கும் கடன் கொண்டதாயினும், வீடே பெற்ற மக்களை வழி நடத்தும் பொறுப்பு வாய்ந்தது. எனவே, நாம் வாழும் வீடு ஒரு கோயிலாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு தெய்வங்கள் என்றால், நமது உற்றார் உறவினர்கள் நமக்கு காவல் தெய்வங்கள். நாம் செய்யும் நல்வினை, தீவினைகளைப் பொறுத்தே நம் வாழ்வும் அமையும்.
ஒருவன் வீட்டின் சூழ்நிலையைப் பொறுத்தே அவன் வாழ்வில் சொர்கமும் நரகமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் பாரதியாரும், "வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழ தகுந்த இடத்திற்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். விடத்தக்கது வீடு என்ற பிற்கால உரை ஒப்பதக்கதன்று. வீடு துயரிடம் ஆவதற்கு காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே' என்கிறார்.
ஒரு நாள் ஈசாப் ஏதென்ஸ் நகருக்கு சென்றிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம் வந்து "ஏதென்ஸ் நகர மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா' எனக் கேட்டான். உடனே ஈசாப், "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன் "ஐயோ என் வீடு ஒரு சண்டைக்காடு யாரிடமும் ஒற்றுமை இல்லை' என்றான். ஈசாப் "அப்படியானால் ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார்.
இன்னொருவன் வந்து அதே கேள்வியை அவரிடம் கேட்டான். அவனிடமும் ஈசாப் "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன் "என் வீடு ஒரு அமைதிப் பூங்கா, அங்கு எப்போதும் அன்பு மணம் வீசும், ஒருவரையொருவர் பழிப்பதில்லை' என்றான். அப்போது ஈசாப் "அப்படியானல் ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார்.
வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவும் நல்லன்பும் நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையவராக இருந்தால் நாடும் அவ்வாறே இருக்கும். எனவே, உண்மையான மகிழ்ச்சி என்பது அவரவர் வீட்டில்தான் இருக்கிறது. வெளியில் எங்கும் தேடிப் போக வேண்டியதில்லை. உள்ளம் அமைதி பெறவே உறையுள்.

நன்றி : தினமணி

Monday, August 12, 2013

சீனா சாதிக்காததை இந்தியா சாதிக்குமா? (பகிர்வு)

சந்திரனுக்கு வெற்றிகரமாக சந்திரயானை அனுப்பிய இந்தியா இப்போது செவ்வாய் கிரகம் மீது கண் வைத்துள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமானால் வருகிற நவம்பர் மூன்றாம் வாரத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி இந்திய விண்கலம் செலுத்தப்படும்.
சந்திரனுக்கு இந்தியா 2008 அக்டோபரில் அனுப்பிய விண்கலம் சந்திரயான் என்று பெயர் கொண்டதாக இருந்தது. செவ்வாய்க்குச் செல்ல இருக்கும் விண்கலத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதற்கு மங்கள்யான் என பெயரிடப்படலாம் என்று கருதப்படுகிறது(இந்தி மொழியில் செவ்வாய்க்கு மங்கள் என்று பெயர்).
மங்கள்யான் திட்டம் நிறைவேறுமானால் உலகில் செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியன ஏற்கெனவே இதைச் சாதித்துள்ளன. செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதையே வேறு விதமாகச் சொன்னால் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதில் சீனாவை இந்தியா முந்திக் கொண்டது என்று கூறலாம்.
இந்தப் பெருமையைப் பெறும் நோக்கில் தான் மங்கள்யான் திட்டத்தில் இந்தியா முனைந்துள்ளதாக ஒரு கருத்து உண்டு. நிபுணர்கள் சிலர் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் வீண் செலவு என்றும் இந்த நேரத்தில் இந்தியா இதில் ஈடுபடத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். இந்திய விண்வெளி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயரும் இவ்விதமாகவே கூறுகிறார்.
விண்கலங்களை காவு கொள்ளும் கிரகம் என்ற பெயர் செவ்வாய்க்கு உண்டு. கடந்த பல ஆண்டுகளில் செவ்வாய் நோக்கி செலுத்தப்பட்ட சுமார் 40 விண்கலங்களில் 19 மட்டுமே வெற்றி கண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்குச் சொந்தமானவை.
ஒரு விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதென்பது வேறு. செவ்வாய்க்கு அனுப்புவது என்பது வேறு. சந்திரன் எப்போதும் பூமியைச் சுற்றிக் கொண்டிருப்பது. பூமியிலிருந்து சந்திரன் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியைச் சுற்றி வருகின்ற காரணத்தால் சந்திரன் எப்போதும் கிட்டத்தட்ட அதே தொலைவில் இருப்பதாகும்.
செவ்வாய் சமாச்சாரம் வித்தியாசமானது. செவ்வாய் கிரகமும் சரி, பூமியும் சரி வெவ்வேறு வட்டங்களில் இருந்தபடி சூரியனை சுற்றுபவை. ஆகவே செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையே குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என்பது உண்டு. செவ்வாய்க்கும் பூமிக்கும் குறைந்தபட்ச தூரம் சுமார் 5 கோடி கிலோ மீட்டர், அதிகபட்ச தூரம் 40 கோடி கிலோ மீட்டர். பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் மிகக் குறைவாக இருக்கின்ற சமயத்தில்தான் செவ்வாயை நோக்கி விண்கலம் செலுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் இதில் பல சாதகங்கள் உள்ளன என்பதே. அந்த வகையில் 26 மாதங்களுக்கு ஒரு முறை இந்த வாய்ப்பு கிட்டும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்படியான வாய்ப்பு ஏற்படுகிறது. இதைவிட்டால் அடுத்து 2016 ஜனவரியில் தான் இப்படியான வாய்ப்பு கிட்டும். இப்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த ஆண்டிலேயே மங்கள்யானை செலுத்த இந்தியா முனைப்பாக உள்ளது.
செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தைச் செலுத்துவதானால் அதற்கு சக்திமிக்க ராக்கெட் தேவை. அமெரிக்கா 2011 நவம்பரில் செவ்வாய்க்கு செலுத்திய கியூரியாசிடி விண்கலத்தை சுமந்து சென்ற அட்லஸ் - 5 ராக்கெட் அப்படிப்பட்டது. அது ஐந்து முதல் 13 டன் எடை கொண்ட விண்கலத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. அந்த ராக்கெட்டில் திரவ ஹைட்ரஜனும் திரவ ஆக்சிஜனும் எரிபொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன.
இத்துடன் ஒப்பிட்டால் வருகிற நவம்பரில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தை செலுத்த இருக்கும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் குறைந்த திறன் கொண்டதே. அந்த ராக்கெட்டினால் அதிகபட்சம் 1300 கிலோ (1.3 டன்) எடையைத்தான் சுமந்து செல்ல இயலும். ராக்கெட்டின் திறன் குறைவு என்பதால் உயரே கிளம்பியதும் ஒரே பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிப் பாய்ந்து செல்ல இயலாது.
இதைச் சமாளிக்க பெல் புரூனோ என்ற அமெரிக்க கணித நிபுணர் உருவாக்கிய பாணியிலான சுற்றுப்பாதையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கும். அதாவது இந்திய ராக்கெட் உயரே சென்றதும் நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்ற முற்படும். அப்படிச் சுற்ற ஆரம்பிக்கும்போது மங்கள்யானும் ராக்கெட்டும் ஒரு கட்டத்தில் பூமியிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டரில் இருக்கும். அப்போது ராக்கெட் எஞ்சினை சில நிமிஷ நேரம் இயக்குவர். இதன் காரணமாக ராக்கெட் சீறிப் பாய்ந்து மறு முனையில் அதிகத் தொலைவை எட்டும். மறுபடி 500 கிலோ மீட்டர் உயரத்துக்கு வரும்போது மீண்டும் ராக்கெட் எஞ்சின் இதே போல இயக்கப்படும். இதனால் மறு முனையில் மேலும் அதிகத் தொலைவை எட்டும். இப்படி ஐந்து தடவை செய்வர். மறு முனையில் ராக்கெட் சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டிய நிலையில் கடைசியாக வேகமாக உந்தப்பட்டு செவ்வாயை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும்.
ஒருவர் தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து மேலும் கீழுமாக ஊஞ்சலாடுகிறார். ஒவ்வொரு தடவையும் காலை வேகமாக உந்தும் போது ஊஞ்சல் மேலும் மேலும் உயரே செல்கிறது. ஒரு கட்டத்தில் அவர் ஊஞ்சலிலிருந்து ஒரே தாவலில் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் போய் குதிக்கிறார். மங்கள்யான் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பெல் புரூனோ பாதை இப்படிப்பட்டதே.
பத்து மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயை சுற்றி வர ஆரம்பிக்கும். சந்திரனுக்கு இந்தியா அனுப்பிய சந்திரயான் இப்படியான பாதையில் தான் சென்றடைந்தது.
மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிய பின் செவ்வாய் கிரகத்தை மிக நீள் வட்டப்பாதையில் சுற்றிச் சுற்றி வரும். அப்போது அது ஒரு கட்டத்தில் செவ்வாய்க்கு மேலே 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். பிறகு மங்கள்யான் 80,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விலகிப் போய் விடும். அடுத்த சுற்றில் மறுபடி 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். மங்கள்யானின் சுற்றுப்பாதையை மாற்றி அமைக்க முடியுமானால் அது எப்போதும் சீராக 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி செவ்வாயை நன்கு ஆராய இயலும். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் சுற்றுப்ப்பாதையைத் திருத்தி அமைக்க மங்கள்யானில் போதுமான எரிபொருள் இராது. காரணம் அது வடிவில் சிறியது என்பதே. மங்கள்யானை கூடுதல் எரிபொருளுடன் பெரிய வடிவில் தயாரிப்பதென்றால் பி.எஸ். எல்.வி ராக்கெட்டினால் அதை உயரே கொண்டு செல்ல இயலாது.
கடந்த 2001-ஆம் ஆண்டில் அமெரிக்கா செவ்வாய்க்கு அனுப்பிய மார்ஸ் ஒடிசி என்ற விண்கலமும் ஆரம்பத்தில் மிக நீள் வட்டப் பாதையில்தான் செவ்வாயை சுற்ற ஆரம்பித்தது. அவ் விண்கலத்தில் இருந்த எரிபொருளைப் பயன்படுத்தி அதன் சுற்றுப்பாதை சீராக்கப்பட்டது. பின்னர் அது செவ்வாயை எப்போதும் சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி சுற்றிவர ஆரம்பித்தது. இதனை உயரே செலுத்த, சக்தி மிக்க ராட்சத ராக்கெட் பயன்படுத்தப்பட்டது என்பதால் அதிக எடை உடைய கூடுதல் எரிபொருள் கொண்ட மார்ஸ் ஒடிசி விண்கலத்தை அனுப்ப முடிந்தது
சொல்லப்போனால் மங்கள்யானில் இடம் பெறுகின்ற சில கருவிகளின் மொத்த எடை வெறும் 15 கிலோ. ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ராக்கெட்டுகளை பெரிய லாரி என்று வர்ணித்தால் இந்திய ராக்கெட் ஒரு சிறிய வேன். இப்படிக் கூறுவது இந்திய பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை மட்டம் தட்டுவதாக ஆகாது.
ஜி.எஸ்.எல்.வி என்னும் பெரிய ராக்கெட்டை தயாரிப்பதில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். அது மூன்று டன் விண்கலத்தை உயரே செலுத்தக்கூடியது. ஆனால் அந்த ராக்கெட்டை உருவாக்குவதில் இன்னும் முழு வெற்றி கிட்டவில்லை. ஆகவேதான் மங்கள்யானை நம்மிடம் உள்ள சிறிய ராக்கெட்டின் திறனுக்கு ஏற்றவகையில் சிறியதாகத் தயாரிக்க வேண்டியதாயிற்று. இந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டைவிட மேலும் திறன் கொண்ட ராட்சத ராக்கெட் ஒன்றும் உருவாக்க்கப்பட்டு வருகிறது. அதை உருவாக்கி பல தடவை சோதித்து வெற்றி கண்ட பின்னர் செவ்வாய்க்கு நாம் நிறைய எடை கொண்ட மேலும் நிறைய கருவிகளையும் கொண்ட பெரிய மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்துவதில் ஈடுபட்டிருக்கலாம். அதை விட்டு அவசர அவசரமாக சிறியதொரு விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்புவதில் அர்த்தமில்லை. செவ்வாய்க்கு எதையாவது ஒன்றை இப்போதே அனுப்பி ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
ஆனாலும் சிறிய விண்கலத்தாலும் பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்ய இயலும் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
1958-ஆம் ஆண்டில் அமெரிக்கா அனுப்பிய எக்ஸ்புளோரர் -1 என்னும் மிகச் சிறிய (எடை வெறும் 13 கிலோ) செயற்கைக்கோள்தான் பூமிக்கு மேலே சுமார் 1000 கிலோ மீட்டர் உயரத்தில் வான் ஆலன் கதிர்வீச்சு மண்டலம் இருப்பதை கண்டுபிடித்துக் கூறியது.
செவ்வாய்க்கு இந்தியா அனுப்பும் மங்கள்யான் விண்கலத்தின் பிரதான நோக்கம் செவ்வாயில் மீத்தேன் வாயு உள்ளதா என்று கண்டறிவதாகும், செவ்வாய்க்கு அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிடி எனப்படும் நடமாடும் ஆராய்ச்சிக் கூடம் ஓராண்டுக்கும் மேலாக செவ்வாயில் அங்குமிங்கும் நடமாடி வருகிறது. செவ்வாயில் மீத்தேன் வாயு இல்லை என்பதாகவே கியூரியாசிடி இதுவரை நடத்திய ஆய்வுகள் காட்டியுள்ளன.
கியூரியாசிடி கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை மங்கள்யான் கண்டுபிடித்து விடுமா என்று கேட்டால் அது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் மங்கள்யான் எதையும் கண்டுபிடிக்காமல் போனாலும் அது ஒரு சாதனையை நிகழ்த்தியதாகவே கருதப்படும். அதாவது சீனாவினால் சாதிக்க முடியாத ஒன்றை இந்தியா சாதித்ததாகிவிடும்.

நன்றி : தினமணி

Monday, August 05, 2013

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! (பகிர்வு)

கொள்கை பரப்புதல்' அறிவியல் துறைதான். அதையே முன்னாளில் "கணக்கு' என்ற சொல்லாலும் குறித்தனர். அதிலும் சமயக் கணக்கு என்பது அயிவை, ஆசீவகம், சாங்கியம், சைவம், நிகண்டம், பிரமம், பூத (பௌதிக) வாதம், பௌத்தம் (புத்தி), மந்திரம், வைதிகம், நியாயம், வைசேடிகம், வைணவம் போன்ற பல சிந்தனை வாதங்களைப் பதிவு செய்கிறது மணிமேகலைக் காவியம். "கணக்கர்' எனும் சொல் - மொழி, இலக்கியம், சமயக் கொள்கை பரப்புவோரைக் குறிப்பதாகவே விளங்கிற்று. நீதி இலக்கியங்களான "பதினெண் கீழ்க் கணக்கு' நூல்கள் வேறு என்னவாம்?
ஆசீவகவாதியின் கொள்கையைப் பாருங்கள். வண்மையுடைய நில அணு, நிலம் சேர்ந்து ஆழும் நீர் அணு, குறுக்கிட்டு அசைதலை உண்டாக்கும் காற்று அணு, எரிந்து மேல் நோக்கி எழும் நெருப்பு அணு ஆகிய நான்கும் ஒருவித ஆதியும் அந்தமும் அற்றுவிளங்கும் "பரமாணுக்கள்' என்கிறது. திட, திரவ, வாயு, "பிளாஸ்மா' ஆகிய நான்கு இயற்பியல் நிலைகள் இவை.
ஒவ்வொரு அணுவையும் சிறப்புத் தன்மையுடன் ஆராயாதவர்கள் பஞ்ச பூதங்களையும் அறிய மாட்டார். பூதம் என்றால் பேய், பிசாசு என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்துக்கொண்டு இருக்கிறோம். "பொருள்' என்பதே அதன் பொருள். பூத அறிவியலே பௌதிகம். இதனை உணராமல், மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்னர், ""..ஒரு மயிர் அறியார், சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்'' (மணிமேகலை 27: 148 - 149) என்கிறார் சீத்தலைச் சாத்தனார் ("ஷீர்' - ஸ்ரீதலை சாத்தனார்?). அதாவது தனித் தனி உரோமத்தையும் இழைபிரித்து அறியாமல், மொத்தத் தலைமுடியையும் கொத்தாகப் பார்ப்பது முறை அல்ல என்பது அவர் அறிவியல் பார்வை. அற்புதமான அறிவியல் பகுதிறன் சிந்தனை.
அணுக்கள் ""..ஒன்றி ரண்டாகிப் பிளப்பதும் செய்யா;/ அன்றியும் அவல் (நெல் பதர்) போல் பரப்பதும் செய்யா;/ உலாவும், தாழும், உயர்வதும் செய்யும்..'' (மணிமேகலை 27: 127 - 132). நிலையாக ஓரிடத்தில் நில்லாது. அங்கிங்காக இடம்பெயரும் என்பதே இன்றைய இயற்பு வேதியியலில் "பிரௌனியச் சலனம்'. தாழும், இறங்கும் அலைவு நிலை.
அதுமட்டுமா, கருமை, கருநீலம், பசுமை, செம்மை, பொன்நிறம் (மஞ்சள்), வெண்மை ஆகிய ஆறு நிறங்களின் பிறப்பு பற்றிய செய்திகள் (27: 150-153) வானவில் வண்ணங்களைச் சுட்டுவன அல்லவா? மணிமேகலைக் காலத்தின் ஆசீவக வாத அறிவியல். அதனை இன்றைக்கு மதக்கொள்கை என்று தவிர்க்கிறோம்.
நிகண்ட வாதப்படி, ""காலம் - கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும், ஏலும் கற்பத்தினெடு நிகழ்ச்சியும்'' (மணிமேகலை 27: 191-192) என்பதில் "கணிகம்' என்பது சிறு இம்மி என்றும், "கற்பம்' என்பது அபிதான சிந்தாமணிப்படி கோடி கோடி கோடி அளவு என்றும் அறிகிறோம். அதனாலேயே "காலம்' என்பது அணு முதல் அண்டம் வரை பரவியது என்னும் கருத்துப் பெறப்படும். இன்றைய நவீன "கால - வெளி' பற்றிய அறிவியல் கொள்கை. இதனை மதத்தோடு பொருத்தி அங்கலாய்ப்பானேன்?
""பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு உரிய'' (27; 257) என்கிறது வைசேடிக வாதம். விஷ்ணு - வைஷ்ணவம் என்ற உரிச்சொல் ஆனது போல, விசேடம் இங்கு வைசேடிக(ம்) ஆயிற்று என்க. அதாவது சிறப்பு வாதக் கொள்கை இது. பொருளின் அளவு மற்றும் குணம் ஆகிய இரண்டுமே ஒரு வேதி வினை நடைபெற அவசியம் என்பதில் மதம் எங்கே இருக்கிறது?
வேதி இயக்கவியல் (கெமிக்கல் கைனட்டிக்ஸ்) படித்தவர்களுக்குத் தெரியும் எந்தவொரு வேதி வினை நடப்பதற்கும் போதிய பொருளும் தரமும் தேவை. அறிவியல் தேட்டத்தின் தொடக்கம் இது அல்லவா?
காலத்தோடு ஒத்து கருத்தான புதுச் சிந்தனைகள் மலரட்டும். அறிவியல் வளரட்டும். தமிழ் தொடரட்டும். மொழி அறிஞர்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். அழியும் மொழிகள் பட்டியலில் இடம்பெறாமல் காக்க இது ஒன்றே வழி.
""யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' (அகநானூறு 149) என்று எருக்காட்டூர் தாயங் கண்ணனார் பாடுகிறாரே. சேர நாட்டுச் சுள்ளி ஆற்றினில் ரோமானியர் கப்பலில் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றனர். யவனருடன் பேரம் பேசி உரையாடி அல்லவா வணிகம் செய்து இருக்க வேண்டும்? அப்படியானால் தமிழின் ஒலிவடிவத்திலும் புதிய சொற்கள் நடைமுறையில் இயல்பாக ஊடுருவி இருக்கும்.
இத்தனைக்கும் கன்னித் தமிழ் மாறாமல் காப்போம் என்று யாரேனும் குறுக்கிட்டுத் தடுத்து இருந்தால் கணினித் தமிழ் என்னவாகும்? சிந்துபாத்தின் லைலா மாதிரி தமிழ்த்தாய், பெட்டிக் குறளையாகவே முடங்கி இருப்பாள்.
அறிவியல் தமிழில் அவசரத் தேவைகளும் நடந்துள்ளன. சொல்லப்போனால், மின்னணு போன்ற பல கலைச்சொற்கள் கொஞ்சம் துல்லியம் அற்ற வகையிலும் உருவாக்கப்பட்டு விட்டன. இன்று மின்சாரம் தாங்கிய அணு ஒன்று மட்டுமா? பாரியான்கள், ஹேட்ரான்களில் எத்தனையோ உள்பிரிவுகள், நுண்துகள்கள், இம்மிகள். நேர் அல்லது எதிர் மின் அணு - அயனி என்பதே இயற்பியல் உண்மை.
ஆங்கிலத்திலும் இதே சிக்கல் உண்டு. "பிரிக்கப்பட முடியாதது' என பொருளில் "அ - டோமாஸ்' என்கிற கிரேக்கச் சொல் அடிப்படையில் "ஆட்டம்' (அணு) பிறந்தது. இன்று அணுவைப் பிரிக்கவும் பிளக்கவும் முடிகிறதே!
அவ்வாறே, காகிதத் துணுக்குகளைக் கவர்ந்து இழுக்கும் அரக்கு, லத்தீனில் கிரேக்கத்தில் "எலக்ட்ரா'. பிரகாசம் என்று பொருள். இதுவே மின் கவர்தலைக் குறிக்கும் கலைச்சொல். "எலக்ட்ரிசிட்டி' (மின்சாரம்), "எலக்ட்ரான்' (மின்னணு) ஆகி, மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) துறையும் ஆயிற்று. அன்றைய அரக்கு எங்கே? நவீன எலக்ட்ரானிக்ஸ் எங்கே?
ஒருமுறை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தினுள் கழிவறைக்கான இந்தி வாசகப் பலகை கண்டேன். "ப்ரசாதன் கக்ஷ'. அது என்ன, பிரசாதம் தரும் அறையா? பிறகுதான் புரிந்தது, கோயில் பிரசாத(ம்) வேறு. இச்சொல்லில் "த' என்பது இந்தியின் மூன்றாவது வர்க்க எழுத்து. கழிவறைச் சொல்லுக்கோ நான்காவது வர்க்க எழுத்து.
இன்னொரு "நல்ல' சுவையான சொல். நல்ல மிளகு, நல்லெண்ணெய் எல்லாம் உடலுக்கு நல்லவைதாம். அது என்ன, நல்ல பாம்பு? பஞ்சாமிர்தமா தருகிறது? உண்மையில் தெலுங்கு மொழியில் "நல்ல' என்றால் "கரிய' என்றே பொருள். நெடுநல் (நீண்ட இருள்) வாடை, நெடுநல் (நெடிய கரிய) யானை போன்ற சங்க காலக் கலைச்சொற்களுக்கும் தவறான பொருள் கொள்வானேன்?
"பொன்னிக் கரை கண்ட பூபதி' கட்டிய காவிரியின் வட கரைக்கு "கரிகாலக் கரை' என்பதே வழக்கு. கரிகால் சோழன் என்ற பெயரின் அடைமொழியுமே நாம் கொடுத்ததுதான். ""செல்குடி நிறுத்தப் பெரும்பெயர் கரிகால் வெல்போர்ச் சோழன்'' (அக நானூறு -141) என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இடையில் "வெல்போர்' ஏன்? அப்படியானால் கரிகால் தனி உரிச்சொல்லோ? கருத்த கால் உடையவன் என்று சொல்லிப் பழகிவிட்டோம்.
"கரி-கால'(ன்) என்பது ஒரு பொருள் குறித்த இருமொழிச் சொல்லாகவும் இருக்கலாம். கால(ô) என்றால் வடமொழியில் கரிய என்று பொருள். இன்றைய கேரளத்தின் மல-"பார்' (பஹார் என்றால் வடமொழியில் மலை), நடு - "சென்டர்' (ஆங்கிலத்தில் மையம்), "கேட்' - வாசல் போன்ற இருமொழிச் சொற்றொடர் அது.
ஆக, ராப்பாடி குடுகுடுப்பைக்காரன், "நல்ல காலம் பொறக்குது' என்று அச்சுறுத்துகிறான். ""உனக்கு கெட்ட காலம் பிறக்கிறது. அதனால் எனக்கு பிச்சை இட்டால் நன்மை உண்டாகும்'' என்கிறானோ என்னவோ? அதுவும் சரியாகத்தான் இருக்கும்.
பூமத்திய ரேகையில் உட்கார்ந்துகொண்டு ""சூரியன் உதிக்கும் திசை கிழக்கு'' என்று பாடம் சொல்லித் தரலாம். துருவப் பிரதேசங்களில் ஆறுமாத காலம் சூரியன் உதிப்பதே இல்லை. உதிக்கிற திசை கிழக்கும் அல்ல. ஆசிரியர் சொல்லித் தந்த முதல் வகுப்புப் பாடத்தை நம் நாட்டில் மட்டும் நெட்டுரு போட்டு ஒப்பிக்கலாம். மதிப்பெண் கிடைக்கும்.
அதிலும் வட துருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் மார்ச் 19 அன்று அடிவானில் சூரியன் உதிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உயர்ந்து எழும். ஜூன் 21 அன்று மட்டும் தலை உச்சிக்கு நேர் மேலாக நிற்கும். செப்டம்பர் 24 அன்று அடிவானில் மறையும். அவ்வளவுதான். அங்கு உதயமும், அஸ்தமனமும் எல்லாம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டுமே.
அதாவது வட துருவத்தில் பகல் என்பது ஆறு மாத காலம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்காதா பின்னே?
அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. மறுபரிசீலனைக்கு மடை திறந்து விடுவதே அறிவியல் சிந்தனையின் ஆரம்பம்.
வளர்ந்துவரும் புதிய துறைகளுக்கு ஏற்ப மொழியியலாரும் தங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு துறைசார் அறிஞர்கள் மட்டும் மண்டிக் கிடக்கும் தனி அறைக்குள் கதவையும் உள்தாள் இட்டு, பல்துறை அறிவுக்கும் "நவதாள்' பூட்டுப் போட்டு அவஸ்தைப்படுவானேன்?
மொழி என்பது வெறும் ஒலியா, எழுத்தா? தொன்று தொட்டு பட எழுத்து, குறியீட்டுத் தமிழி (பிராமி), வட்டெழுத்து, கண்ணெழுத்து தொடங்கி, கணினி வரை தமிழின் வரிவடிவம் மாறி வந்திருக்கிறது. நெகிழும் மொழியே நிலைக்கும். இலக்கணம் என்ற பெயரில் இறுக்கிப் பிடித்தால் நொறுங்கிப் போகும்.
"கொங்குதேர் வாழ்க்கை' என்று சொன்னால் அந்நாளில் மன்னவருக்கே புரிந்தது. இன்று இது என்ன பங்குச் சந்தைக் குறியீடா என்றுதான் நம் பிள்ளைகள் கேட்கிறார்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் தமிழ் முக்கியம். இன்று நடக்கும் தொழில்நுட்ப யுகத்தின் அறிவியல் தமிழே கால வெள்ளத்தில் தமிழ் மரபாக நிலைக்கும். இதுவரை பதிவாகாத அறிவுச் செய்திகளைத் தமிழில் முன்வைக்க வேண்டும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறைகளுக்கு அப்பால் நவீனத் தொழில்நுட்பங்களையும், அறிவியல் சிந்தனைகளையும் உள்வாங்கிய புதிய இலக்கணங்களும் காலத்தின் கட்டாயம். அதனால் மொழி அறிஞர்களும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மொழி வளர்ச்சி என்பது வெவ்வேறு காலச் சூழலில் உள்வாங்கிய கலைச்சொற்கள், சிந்தனைகள், கருத்துகளின் சேர்மானங்களைப் பகுப்பாய்வு செய்வதும் ஆகும். வடசொல், திசைச்சொல், திரிசொல் எனப் பல்வேறு கலைச்சொற்களும் காலம் காலமாக தமிழில் கலந்தன. மொழியும் நிலைத்து வளர்ந்தது.
புரட்சிக் கவியே "தமிழ் வளர்ச்சி' வேகத்தில் தகத்தகாயத் தமிழை "(ஸ்)தாபிக்கிறாரே'!

கட்டுரையாளர்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் விஞ்ஞானி.

நன்றி : தினமணி

Saturday, July 27, 2013

அன்புடன் அப்பா... (பகிர்வு)

நகைச்சுவை உணர்வு என்பது ஓர் அருமருந்து. என் அப்பா எனக்குக் கொடுத்த சொத்துகளில் விலை மதிக்க முடியாததும் நான் பொக்கிஷமாகக் கருதுவதும் அதைத்தான். வாழ்க்கையில் இடர்கற்கள் வரும்பொழுதெல்லாம் சிரிக்க முடிந்தால் சரியாமல் இருக்கமுடியும்.  "அப்பாக்களின் ஊர்வலம்' பார்ப்போம்.
 ஹுமாயூன் இளைஞராக இருக்கும்பொழுது கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இறந்து விடுவாரென்றே அவர் தந்தை மொகலாய சக்ரவர்த்தி பாபர் பயந்தார். அவர் சந்தித்த ஒரு மகான், ""உன்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒன்றைத் தியாகம் செய்தால் மகன் பிழைப்பான்'' என்றார்.
  ""உன்னிடம் இருப்பதில் விலை மதிக்க முடியாதது கோஹினூர் வைரம், அதைக் கொடுத்து விடு'' என்றார். அதற்கு பாபர் பதிலளித்தார், ""கோஹினூர் என் மகனுடையது. என்னுடைய சொத்தை அல்லவா நான் தியாகம் செய்ய வேண்டும்? ஏன் அரசாங்கத்தையே நான் தியாகம் செய்தால்கூட அது பெரிதல்ல. என்னுயிரை நான் தியாகம் செய்கிறேன் என்னருமை மகனுக்காக, அதுதான் விலை மதிக்க முடியாதது''.
  மகனின் அருகே நின்று ""அல்லாவே, என் உயிரை எடுத்துக்கொள், என் மகனுடைய உயிரைத் தந்து விடு'' என்றார். சிறிது நேரத்தில் பாபர் கீழே விழுந்தார், படுத்த படுக்கையாகிவிட்டார். ஹுமாயூன் பிழைத்துக் கொண்டார். மன்னர் பாபர் மறைந்தார். பாபரின் மனைவி என்ன செய்தார் என்ற தகவல் இல்லை. இந்த அப்பாதான் பிள்ளைக்கு உயிரைக் கொடுத்தார் என்று சரித்திரக் கதை சொல்கிறது.
 இராம காதையைப் பார்ப்போம். மகனைப் பிரியப்போகிறோம் என்று மன்னர் தசரதன் அரற்றுகிறார். ""புகழின் புகழே'', ""மெய்யின் மெய்யே'' - மகன் காட்டுக்குச் சென்ற பின் உயிர் தாங்குமா, இனி எப்படி உயிர் வாழ்வது என்று கதறுகிறார். பிறகு ராமரும், தம்பியும் மிதிலை பெற்ற தங்கமும் காட்டிற்குச் சென்றுவிட்டார்கள் என்று அவரிடம் தகவல் கூறும் பொழுதே உயிர் பிரிகிறது. தாயார் கோசலை 14 வருடங்கள் காத்திருந்து மகன் திரும்ப வருவதையும் பார்க்கிறாள். தசரதனைக் குற்ற உணர்வு கொன்றது என்று சொல்லாதீர்கள். அதுவும் இருக்கலாம். ஆனால் புத்திர சோகம் என்றாலே தசரதன்தான் மனதில் நிழலாடுவார், கோசலை அல்ல. தாய்மார்கள் கோபம் வேண்டாம். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல தாயார்களின் மகிமையைக் கூறிவிட்டு தந்தையைப் பற்றியும் கூற வேண்டும் இல்லையா?
 நிகழ்காலத்திற்கு வருவோம். இரண்டு நேர்காணல் தேர்வில் நான் தேர்வு செய்பவர்கள் குழுவில் இருந்தேன். ஒன்று முன்சீப் தேர்வுக்கானது. இன்னொன்றில் மாவட்ட நீதிமன்றங்களின் தாற்காலிகக் கணினி அலுவலர்கள்.
 முதலில் சட்டம் பற்றியும், பின் பொது அறிவு, நிகழ்காலச் சம்பவங்கள் பற்றியெல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் சில வித்தியாசமான கேள்விகள் கேட்போம்.
 முன்சீப் தேர்விற்கு வந்த ஒரு பெண்ணிடம் கேள்வி கேட்டேன். ""நீங்கள் தேர்வு செய்யப்பட்டு முன்சீப் பதவி ஏற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீதிமன்றத்தில் அமர்கிறீர்கள். ஒரு பெரிய வழக்கறிஞர், கப்பல் போல ஒரு காரில் வருகிறார். சுற்றி அவருடைய இளையோர் படை. உங்களுக்குத் தெரியும் உங்கள் ஒரு மாதச் சம்பளத்தைவிட ஒரே நாளில் அவர் வாங்கும் தொகை அதிகம் என்று. அப்பொழுது உங்களுக்கு என்ன தோன்றும்? இந்த வேலைக்குப்போய் வந்துவிட்டோமே என்றா?''
 அந்தப் பெண்ணின் கண்களில் கோபம் கலந்த கண்ணீர் மின்னியது.
 ""மேடம், என் அப்பா நான் நீதித்துறைக்கு வந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அரசாங்க சம்பளத்திற்கு மேலே ஒரு ரூபாயை அவர் கை தொட்டது கிடையாது. என்னையும், என் சகோதரிகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். எனக்கு எப்படி மேடம் அப்படியெல்லாம் தவறான எண்ணம் தோன்றும்? என் அப்பா அப்படி என்னை வளர்க்கவில்லை''.
 சபாஷ் அப்பா! நம் பெற்றோரை மிஞ்சியது இல்லை. இந்த அப்பா நன்னெறியை வாழ்ந்து காட்டியுள்ளார்.
 இன்னொரு பெண். இன்னொரு தேர்வு. இன்னொரு அப்பா. இன்னொரு கேள்வி.
 ""உங்களுக்கு ஆதர்ச ஆணோ, பெண்ணோ யார்?''
 ""அப்படி யாரும் தோன்றவில்லையே''
 ""ஒருவருமே இல்லையா? இவர் மாதிரி வாழ வேண்டும். இவர் அறிவுரைதான் என் மந்திரம் இப்படி...?''
 ""ம்ம், என் அப்பா மேடம்''.
 ""வெரிகுட்''
 ""அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்''
 ""ம்ம்''.
 ""என் அப்பா, தன் வேலையைக் கவனத்துடன் கருத்தாய் செய்வார். என்னிடம் இங்கு வருவதற்கு முன் சொன்னார் - உனக்கு இந்த வேலை கிடைக்க என் வாழ்த்துகள். அப்படிக் கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள். கார்ப்பரேஷனில் தெரு கூட்டும் வேலை கிடைத்தால் உன்னைவிட சிறப்பாக யாரும் அந்த வேலையைச் செய்ய முடியாத அளவிற்கு நீ செய்ய வேண்டும் என்று. இதை நான் மறக்கக்கூடாது, மறக்கவும் மாட்டேன்''.
 சபாஷ் அப்பா நெ.2! செய்யும் தொழிலே தெய்வம் என்று பெண்ணுக்கு உணர்த்திவிட்டீர்கள். அம்மா அன்பைக் காட்டுவதுபோல அப்பாவால் முடியாமல் போகலாம். அதற்குப் பல காரணங்கள். உடல் ரீதியாக, மனோதத்துவ ரீதியாக இருக்கலாம். இதனாலேயே அம்மாக்கள், பெற்றோர்கள் போட்டியில் சூப்பர் ஸ்டார் கோப்பையைப் பெற்றுவிடுகிறார்கள். அப்பாக்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காட்டத்தான் திருச்சிக்கு அருகில் "ஒரு அப்பா' வந்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். அவர் "நான் தந்தை மட்டுமல்ல, தாயுமானேன்' என்று உலகத்திற்குக் காட்டினார்.
 எவ்வளவு தந்தைகள் நிலத்தை விற்று குழந்தைகள் படிக்க வேண்டுமென்று தங்கள் வாழ்க்கை அந்தஸ்தைக் குறைத்துக் கொள்கின்றனர். இந்த வாழ்க்கையின் குரூர நெரிசலில் கசங்கி குனிந்து ஒடுங்கிப் போகிறார்கள். ஆண்கள் அழுவதில்லை, அதனாலேயே அவர்களுடைய சோகங்கள் வெளிவருவதில்லை.
 அம்மாக்களுக்கு மக்கள் செய்வது பிடிக்கவில்லை என்றாலும்கூட ""அப்பாவுக்குப் பிடிக்காது'' என்றுதான் சொல்வார்கள். இதில் இரண்டு விளைவுகள். "அம்மா நல்லவள், அப்பா தான் தடங்கல்' என்று பிள்ளைகள் எண்ணலாம். இன்னொன்று அப்பாவுக்கு ஏன் பிடிக்கவில்லை. மகன் / மகள் தன் முடிவை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சுமுகமாகப் பேச ஒரு இடம் ஏற்படுகிறது. இதனாலேயே மக்கள் அம்மாவிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை அப்பாவிடம் எடுக்க மாட்டார்கள்.
 அப்பாவிடம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை. உதாரணம், பிள்ளை சிகரெட் பிடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா அப்பொழுது வருகிறார். உடனே அந்த சிகரெட் துண்டைத் தரையில் தேய்த்து, இருமுறை கைகளில் ஊதி நாற்றம் வருகிறதா என்று பார்த்து, வளையமிடும் புகை வட்டங்களை கைகளால் விரட்டி... ""அட, வாங்கப்பா! எப்ப வந்தீங்க?'' (இவ்வளவு சிரமம் ஏன்? அந்த சிகரெட்டை ஊதித்தான் ஆக வேண்டுமா என்ன?) இப்படி தந்தையிடம் காலம் காலமாக இருந்து வரும் மரியாதை எல்லை இன்று "இல்லை'யாகிக் கொண்டிருக்கிறது. அப்பாக்கள் கவனம் - நீங்கள்தான் உங்கள் குழந்தைகளின் கண்களில் "ஆதர்ச ஆணாக' இருக்க வேண்டும்.
 இப்பொழுது ஒரு கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். "ஒன்-அப்' என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை. இங்கிலாந்தில் பிரசுரமாகிறது. அது விவாகரத்தினாலோ, மரணத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ தனியாகக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்காக நடத்தப்படுகிறது. அபிஜித் தாஸ் குப்தா என்ற அப்பா எழுதிய கடிதம். தலைப்பு ""விவாகரத்தினால் தனியாகிப் போன இந்திய அப்பா''. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே:
 ""அவள் என்னைவிட்டு ஏன் போனாள் என்று தெரியும். ஆனால், குழந்தைகளின் காப்புரிமை வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை என்று புரியவில்லை. நம் நாட்டு நீதிமன்றங்களில் அம்மா காப்புரிமை கேட்டால் எளிதாகக் கிடைத்துவிடும்''.
 ""ஆறு வருடங்கள் பழகி, பின்பு மணந்து, பதின்மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின் போய்விட்டாள். ஒன்பது வருடங்கள் ஆகின்றன.  இந்த ஒன்பது வருடங்களில் நான் என் வேலையையும் செய்துகொண்டு என் பெண்ணையும், பிள்ளையையும் வளர்த்துவிட்டேன். இன்று என் பெண்ணுக்கு வயது 21''.
 ""அப்பொழுதெல்லாம் காலை நேரம்தான் கடினமான நேரம். கண் விழித்தவுடன் என் 6 வயதுப் பையனும், 12 வயதுப் பெண்ணும் அம்மாவைத்தான் தேடுவார்கள்''.
 ""என் வாழ்க்கை எனக்கு நிறைய ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளது. பிள்ளையைத் தோளில் தூக்கி பள்ளிக்கூட பஸ்ஸில் கொண்டுவிட்டு, வளர்ந்துவரும் பெண்ணுடன் ஓய்வு நேரம் செலவழித்து...''
 ""என் மனைவியை, குழந்தைகளைப் பார்க்க அனுமதிப்பது என்று முதலிலேயே முடிவு செய்து கொண்டேன். அவள் வருவாள். கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தும் என் குழந்தைகளுக்காக. ......அவர்கள் தங்கள் பெற்றோர்கள் சிண்டைப் பிடித்துச் சண்டை போடுவதைப் பார்க்கக்கூடாது என்பதற்காக''.
 ""நல்ல பொறுப்புள்ள குழந்தைகளாக அவர்களை வளர்த்துவிட்டேன். இன்றும் அவள் வருகிறாள். நண்பர்களாகத்தான் இருக்கிறோம்''.
 இதைப் படிக்கும்பொழுது எனக்குத் தோன்றியது, ""நீ ஆண்பிள்ளை அழக்கூடாது'' என்று சொல்வது எவ்வளவு தவறு என்று. இந்தத் தந்தையின் தலையணை நிச்சயம் நனைந்திருக்கும். அவர் மனைவியைத் திட்டாதீர்கள். பாதிக்கப்பட்டவரே நட்புடன் நடத்தியிருக்கிறார்  நமக்கென்ன? தனியாக குழந்தைகளை வளர்ப்பது எளிதல்ல. அதுவும் ஒரு தந்தைக்கு கஷ்டம் அதிகம். மதிப்பெண்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். முதுமையிலும் கூட தனியாகிப் போகும் தந்தையின் தனிமை எனும் வாளுக்கு கூர்மை அதிகம்.
 ஒரு "பழைய பழைய' விளம்பரப்பாட்டு நினைவுக்கு வருகிறது.
 ""அப்பா, அப்பா கடைக்குப் போறியா?
""ஆமாங்கண்ணு, என்ன வேணும் சொல்லு''
 தந்தையைப் போற்றுதும்!

நன்றி : தினமணி

Sunday, July 21, 2013

பாட்டு பாடினால் இதயத்துடிப்பு சீராகும் (பகிர்வு)

மக்கள் இன்றைய பரபரப்பான சூழலில் தங்களை தளர்த்தி கொள்வதற்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. மூளையை எப்போதும் இயக்கத்திலே வைத்திருக்கின்றனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் மக்கள் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கி மனதை அமைதிப் படுத்துவதே இல்லை. பெரும்பாலானோர் வாயை திறந்து பாடுவதற்கு வெட்கப்படுவர். இதனால் ஏராளமான விஷயத்தை இழக்கின்றனர்.
நாள் முழுவதும் வாயை திறந்து பேசாமல் இருந்தால், வாய் ஒருவித துற்நாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணர்த்திருக்கிறீர்களா? சிலர் வாயை திறந்து பேசுவதற்கும் தயக்கப்படுவர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
மனதில் உள்ள அழுத்தங்களை போக்க வாயை திறந்து மற்றவர்களிடம் பொது விஷயத்தையோ, நல்ல தகவல்களையோ பரிமாறி கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லையெனில் நமக்கு பிடித்த பாடல்களை பாடலாம்.
பாடுவதினால், இதய துடிப்பு சீராக துடிக்கின்றது. இதயத்திற்கு செல்லும் நரப்புகளின் இரத்த நாளங்கள் விரிவடைந்து, சரியான விகிதத்தில் இரத்தம் செல்கின்றது. இதை தவிர மூளைக்கு செல்லும் நரம்புகளும் புத்துணர்ச்சி அடைந்து உற்சாகம் ஏற்படுகிறது.
அதனால் தான் என்னவோ? குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் ஒரே இடத்தில் கூடி இறை வணக்கம் செய்கின்றனர். ஒருங்கிணைந்து பாடும் போது இதயம் சீராக துடித்து, மூளை புத்துணச்சி அடையும்.
பாடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதயம் நன்றாக இயங்குவதோடு மன அமைதியும் பெறும்.

நன்றி : தினமணி

Friday, July 19, 2013

இந்தியாவின் சொந்த "ஜி.பி.எஸ்.' திட்டம் (பகிர்வு)

அதென்ன "ஜி.பி.எஸ்.' என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24 செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே "ஜி.பி.எஸ்.' என்று சொல்லலாம். மேற்கொண்டு ஜி.பி.எஸ். பற்றி விளக்க முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும். இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் போதும். இவற்றின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வதுதான் முக்கியம்.
தமிழகத்தில் உள்ள ஒரு லாரி நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்த ஒரு நேரத்திலும் இவை இந்தியாவில் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதை லாரி நிறுவனத் தலைமையகத்தில் ஒரு திரையில் புள்ளிகள் வடிவில் காண முடியும். இதற்கு ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்கள் உதவும்.
சென்னை போன்ற பெரு நகரில் ஓடுகின்ற பஸ்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதையும் இதேபோலக் கண்டறிய முடியும். ஹைதராபாத் நகருக்கு ஒருவர் காரில் செல்கிறார். அவரது காரில் ஜி.பி.எஸ். தொடர்பு வசதிகள் உள்ளன. ஹைதராபாதின் விரிவான மேப்பைக் காட்டும் "சில்லு' ஒன்றை அவர் காரில் உள்ள கருவியில் செலுத்துகிறார். அவர் ஹைதராபாதில் வழி தெரியாமல் அலைய வேண்டியதில்லை. காரில் உள்ள திரையில் தெரியும் வரைபடத்தைப் பயன்படுத்தி எந்த இடத்துக்கும் செல்ல முடியும். பாகப் பிரிவினையாக நிலங்களைச் சரியாகப் பங்கிட்டளிக்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும்.
மலைப்பாதையில் நடந்து செல்கின்ற ஒருவர் வழி தவறிவிட்டால் அவர் தம்மிடமுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் தாம் இருக்கின்ற இடத்தை அறிந்துகொள்ள இயலும். பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் இடுப்பில் ஜி.பி.எஸ். தொடர்புக் கருவியைப் பொருத்திவிட்டால் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ள இயலும். ஒரு நாயின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி இருந்தால் அந்த நாய் தொலைந்து போனாலும் கண்டுபிடித்து விடலாம். ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்களுக்கு இப்படி எவ்வளவோ பயன்கள் உள்ளன.
ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்களுக்கு வேறு முக்கியமான பயன்பாடும் உண்டு. போர்க் காலத்தில் எதிரிகளின் நிலைகளைக் குறி பார்த்துத் தாக்கவும் அவை உதவும். சொல்லப் போனால் அமெரிக்க ராணுவம் போர்களில் உதவத்தான் ஜி.பி.எஸ். ஏற்பாட்டை உருவாக்கியது.
இராக் மீது அமெரிக்கா நடத்திய போரின்போது அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இராக் அருகே உள்ள கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு போர்க் கப்பலிலிருந்து செலுத்தப்பட்ட "குரூஸ்' ரக ஏவுகணை ஒன்று இராக்கின் தலைநகரான பாக்தாத் நகரில் இராக்கிய உள்துறைக் கட்டடத்தை மட்டும் குறி பார்த்துத் தாக்கி நிர்மூலம் செய்தது. ஏவுகணைக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்? ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் இதற்கு உதவின. சரி, அமெரிக்க ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களுக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்?
தேசப் படங்களைக் காட்டும் அட்லஸ் புத்தகத்தில் எந்த ஒரு தேசத்தின் படமாக இருந்தாலும் அதில் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் கோடுகள் போடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். வடக்கு தெற்காக உள்ளவை தீர்க்க ரேகைகள். கிழக்கு மேற்காக உள்ளவை அட்ச ரேகைகள். இக்கோடுகள், மேப்புகளில் உள்ளனவே தவிர பூமி மீது இப்படிக் கோடுகள் கிடையாது. எனினும் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாக அறிய இக்கோடுகள் உதவியாக உள்ளன.
"காந்தி நகரில் மூன்றாவது பிரதான சாலையும் ஐந்தாவது குறுக்குத் தெருவும் சந்திக்கின்ற இடத்தின் முனையில் உள்ள பெட்டிக் கடை' என்று அடையாளம் கூறுகிறோம். இப்படித்தான் இந்த இரண்டு ரேகைகளும் (கோடுகள்) சந்திக்கிற ஓர் இடத்தை அவை குறிக்கின்றன.
உதாரணமாக உடுமலைப்பேட்டை 10.36 (வடக்கு) அட்சரேகையும் 77.17 (கிழக்கு) தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. உடுமலைப்பேட்டைக்கு சற்று வடக்கே உள்ள ஒரு கிராமத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாக இருக்கும். மிகத் துல்லியமாகக் கணக்கிட்டால் அக்கிராமத்தின் பஜார் தெருவில் உள்ள பாத்திரக்கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் ஒரு விதமாகவும், பாத்திரக் கடைக்கு இரண்டு கடை தள்ளி அமைந்த ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாகவும் இருக்கும்.
அக்கிராமத்தின் மிகத் துல்லியமான மேப்புகள் இருந்தால் பாத்திரக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் மிகச் சரியாகக் கண்டறிய முடியும்.
பூமியைச் சுற்றிச்சுற்றி வருகின்ற விசேஷ வகை செயற்கைக்கோள்கள் மூலம் பூமியின் எந்தப் பகுதியையும் மேலிருந்தபடி படம் பிடித்து மிகத் துல்லியமான மேப்புகளைத் தயாரித்து விட முடியும்.
பாக்தாத் நகரின் மிகத் துல்லியமான மேப்புகள் அமெரிக்காவிடம் இருந்த காரணத்தால்தான் அமெரிக்க "குரூஸ்' ரக ஏவுகணையால் குறிப்பிட்ட கட்டடத்தை மட்டும் தாக்கி அழிக்க முடிந்தது. இப்படியான ஏவுகணைகளின் கம்ப்யூட்டர்களில் மேப்புகள் தகுந்த வடிவில் இடம் பெறும். குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் குறிப்பிட்ட அட்ச ரேகையும் சந்திக்கிற இடத்தைத் தாக்கும் வகையில் ஏவுகணையில் ஆணை இடம் பெற்றிருக்கும். அது இடத்தைக் குறி தவறாமல் தாக்குவதற்கு ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்கள் ஓயாது அனுப்பும் சிக்னல்கள் உதவுகின்றன. இந்த செயற்கைக்கோள்களிலிருந்து வெறும் சிக்னல்களும் துல்லியமான நேரமும் தொடர்ந்து வெளிப்பட்டிருக்கும். இவைதான் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன.
மேலே சொல்லப்பட்ட விவரத்திலிருந்து மிகத் துல்லியமான மேப்புகள் மிகவும் முக்கியமானவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அமெரிக்காவிடம் இப்படியான மேப்புகளைத் தயாரிப்பதற்கான செயற்கைக்கோள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேப்புகள் துல்லியமாக இல்லாவிடில் பிரச்னைதான். ஒரு சமயம் கொசாவோ போரின்போது அமெரிக்கா செலுத்திய ஏவுகணை தவறுதலாக சீனத் தூதரகக் கட்டடத்தைத் தாக்கியது. பழைய மேப்பைப் பயன்படுத்தியதால் இப்படித் தவறு ஏற்பட்டதாக சீனாவிடம் அமெரிக்கா விளக்கம் அளித்ததால் விஷயம் பெரிதாகவில்லை.
இந்தியாவிடமும் இத்தகைய செயற்கைக்கோள்கள் உள்ளன. இந்தியா 2005-ஆம் ஆண்டில் மேப்புகளைத் தயாரிப்பதற்கென "கார்ட்டோசாட்-1' செயற்கைக்கோளை ஏவியது. அதைத் தொடர்ந்து மேலும் இவ்வகையான மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. மேலும் துல்லியமான மேப்புகளைத் தயாரிக்க 2014-ஆம் ஆண்டில் ஐந்தாவது "கார்ட்டோசாட்' செலுத்தப்பட இருக்கிறது. இவை உலகின் எந்த ஒரு பகுதியையும் படம் பிடித்து "மேப்' தயாரிக்க வல்லவை.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்களின் சிக்னல்களை எந்த ஒரு நாடும் பயன்படுத்தலாம். தகுந்த தொடர்புக் கருவிகளைக் கொண்டு இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பயன்பாடுகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் ஒன்று. ஜி.பி.எஸ். ஏற்பாடு முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். அமெரிக்கா நினைத்தால் உலகில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் சிக்னல்கள் கிடைக்காதபடி செய்ய முடியும். அல்லது தவறான சிக்னல்கள் கிடைக்குமாறு செய்ய முடியும். இராக் போரின்போது அமெரிக்கா இவ்விதம் செய்தது.
ஆகவேதான் ரஷியா பல செயற்கைக்கோள்களைச் செலுத்தி சொந்தமாக ஜி.பி.எஸ். மாதிரியிலான ஏற்பாட்டைச் செய்து கொண்டுள்ளது. அதன் பெயர் "கிளோனாஸ்'. சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் இப்படி சொந்த ஜி.பி.எஸ். ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவும் இதேபோல சொந்த ஏற்பாட்டைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளது. அதன் முதல்படியாகத்தான் இதற்கான முதலாவது செயற்கைக்கோள் ஜூலை முதல் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒன்று வீதம் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்படும். இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ். செயற்கைக்கோள்கள் போலவே செயல்படும். ஆனால், இதில் முக்கிய வித்தியாசம் உண்டு. அமெரிக்காவின் ஜி.பி.எஸ். ஏற்பாடு உலகம் தழுவியதாகும். ரஷியா, சீனா ஆகியவற்றின் ஜி.பி.எஸ். மாதிரியான ஏற்பாடுகளும் இதே போல உலகம் தழுவியவை.
ஆனால், இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாதிரியான ஏற்பாடு பிராந்திய அளவிலானது. அதாவது இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம். தவிர இந்திய எல்லையிலிருந்து சுமார் 1,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். அதன்படி சவூதிஅரேபியாவின் ஒரு பகுதி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்காசிய நாடுகள், நேபாளம், மத்திய ஆசிய நாடுகள், சீனாவின் கணிசமான பகுதி, மியான்மர், மலேசியா, பல தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.
அமெரிக்க ஜி.பி.எஸ். மாதிரியில் இந்தியா மேற்கொண்டுள்ள திட்டமானது "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.' என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான ஏழு செயற்கைக்கோள்களும் அமெரிக்க ஜி.பி.எஸ். போலவே மக்கள் பயன்பாட்டுக்கென ஒரு வித சிக்னல்களை அனுப்பும். தவிர, ராணுவக் காரியத்துக்கென வேறுவித சிக்னல்களை அனுப்பும். இந்தியா அந்த வகையில் எதிரி நாட்டின் ராணுவ இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்குவதற்குத் திறன் பெற்றதாகிவிடும்.
"கார்ட்டோசாட்' செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா ஏற்கெனவே மிகத் துல்லியமான மேப்புகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தியாவிடம் "பிரம்மோஸ்', "நிர்பய' போன்ற திறன் மிக்க "குரூஸ்' ரக ஏவுகணைகள் உள்ளன. ஜி.பி.எஸ். மாதிரியிலான செயற்கைக்கோள்கள்தான் பாக்கியாக இருந்தது. 2016 வாக்கில் இந்த ஏழு செயற்கைக்கோள்களும் செயல்படத் தொடங்கியதும் இந்தியா வல்லரசு நாடுகளுக்குரிய திறனைப் பெற்றதாகிவிடும்.
மக்களுக்கான பயன்பாட்டைப் பொருத்தவரையில் இந்தியா மேற்படி ஏழு செயற்கைக்கோள்களுடன் தொடர்புகொள்ளும் வசதி படைத்த தகுந்த கருவிகளை விரைவில் உருவாக்கும். அப்போது பொது மக்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் நிறுவனங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர் பலன் பெறுவர் .
எதிரி நாட்டுடன் ஒரு போர் மூண்டால் இந்தியாவின் இந்த ஏழு செயற்கைக்கோள்களும் நாட்டைக் காப்பதில் முக்கியப் பங்காற்றும்.
அதே நேரத்தில் இவை மக்களின் பல்வேறு உபயோகங்களுக்கென புரட்சிகரமான புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துபவையாகவும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் இத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.

நன்றி : தினமணி

Thursday, July 18, 2013

சரித்திரம் திரும்புகிறதா... (பகிர்வு)

இன்றைய ஊடகங்களின் எல்லா பதிப்புகளிலும், ஊழல் மற்றும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து வரும் செய்திகள் சுயலாபத்துக்காக, பொது நன்மையை விட்டுக்கொடுக்க எந்த ஒரு மனிதனும் தயங்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தும்வகையில்தான் உள்ளன; எனவே இன்றைய இளைஞர்கள் நம் நாட்டின் சமீபத்திய சரித்திரத்தின் அடிப்படை அம்சங்களையும் அவற்றின் விளைவுகளையும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவை என்ன என்று பார்ப்போம்.
ஒரு நாடு பொருளாதாரத்தில் தள்ளாடினாலும், ராணுவ பலமின்றி இருந்தாலும் சர்வதேச நாடுகளின் மத்தியில் மரியாதை இல்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பது சரித்திரம் நமக்குப் போதிக்கும் உண்மை. அந்தத் தத்துவத்தை மனதில் நிறுத்திப் பார்த்தால் நமது நாட்டின் கௌரவம் படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டு நாம் மரியாதை இழந்து கூனிக்குறுகும் வகையில் நம்மைத் தாக்கி 1962-ஆம் ஆண்டு வெற்றி கண்டது சீனத்தின் ராணுவம். அதன் விளைவாக அன்றைய பாகிஸ்தானிய அரசு நம்மை எதிர்த்துப் பல நடவடிக்கைகளைத் தொடங்கி, காஷ்மீர் மாநிலத்தை நம்மிடமிருந்து தட்டிப்பறிக்க முயற்சித்தது.
1965-ஆம் ஆண்டு இந்தச் சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே எதிர்பார்க்காத வகையில் அதுவரை இந்தியாவை முழு மனதுடன் ஆதரித்து வந்த சோவியத் யூனியன் பாகிஸ்தானுடனும் நட்பு பாராட்டி மெதுவாக இந்திய அரசிடம் ""நீங்கள் உங்களின் சகோதர நாடான பாகிஸ்தானுடன் நட்பு பாராட்ட வேண்டும்; தேவைப்பட்டால் நாங்கள் உங்கள் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் சமரசம் செய்து வைக்கிறோம்'' எனப் பேச ஆரம்பித்தது.
அதுவரையிலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்பது சோவியத் யூனியன் என்ற நிலைமையும் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்திருப்பது அமெரிக்கா என்பதும் சர்வதேச அரசியலில் வெளிப்படையாக இருந்த ஓர் அம்சம். ராணுவத் தளவாடங்களுக்கு சோவியத் யூனியனிடமும், பொருளாதாரத்தை நடத்திச் செல்ல அமெரிக்காவின் தயவில் ஐ.எம்.எஃப் எனும் சர்வதேச வங்கியிடம் கையேந்த வேண்டிய பரிதாப நிலைமையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இருந்தது. ராணுவ பலமும், பொருளாதார முன்னேற்றமும் இல்லாத நிலைமையில் நாம் இருந்ததே இந்த நிலைமைக்கான அடிப்படைக் காரணங்கள்.
இந்த நிலைமையில் விவசாயத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததால் உணவுத் தட்டுப்பாடு நம் நாட்டை வாட்டி வதைத்தது. மக்களின் பசியைப் போக்க அமெரிக்காவின் இலவச உணவு தானிய நன்கொடைத் திட்டமான "பி.எல். 480'-இன் மூலம் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
அந்த நேரத்தில் அன்றைய உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சி. சுப்பிரமணியத்தின் "பசுமைப் புரட்சி' திட்டத்தின் மூலம் இந்திய விவசாயம் துள்ளிக் குதித்து வளர்ச்சியடைந்தது. இதே நேரத்தில் நமது நாட்டின் சிறு மற்றும் குறுந்தொழில்களும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தன. பொருளாதாரம் முன்னேறியதைக் கண்ட சோவியத் யூனியன் பழையபடி இந்தியாவை முழு மனதுடன் எல்லா நடவடிக்கைகளிலும் ஆதரிக்க ஆரம்பித்தது. பொருளாதாரத்தில் தன்னிறைவுடனும் சர்வதேச அரசியல் அரங்கில் இடதுசாரி கொள்கைகளை ஆதரித்தும் இந்தியா வெளிவிவகாரங்களில் தனது நிலைமையை உயர்த்திக் கொண்டது.
1962-இல் சீனத்தின் ராணுவத் தாக்குதலில் தலைகுனிய நேர்ந்த நமது நாடு, சரியான ராஜதந்திர முறைகளைக் கையாண்டு அமெரிக்க அதிபர் நிக்சன், சீனாவின் மாசேதுங் மற்றும் பாகிஸ்தானின் யாகியா கான் ஆகியோரின் கூட்டு முயற்சியை முறியடித்து 1971-ஆம் ஆண்டு வங்காள தேசத்தை உருவாக்கி நமது எதிரி நாடான பாகிஸ்தானை இரண்டாக உடைத்தது.
ஆனால் இந்த உயர்ந்த நிலை 1990 வாக்கில் சரிய ஆரம்பித்தது. நமது பொருளாதாரச் சிக்கலின் உச்ச கட்டமாக நமது கையிருப்பு தங்கத்தை பன்னாட்டு நிறுவனங்களில் அடமானம் வைத்து, கடன் வாங்கி நமது நிதிநிலைமையைச் சமாளித்தோம். அந்த காலகட்டத்தில்தான் சோவியத் யூனியன் எனும் வலுவான தேசம் உடைந்து பல நாடுகளாகச்சிதறி சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் அதிகாரம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
அன்றைய அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எந்தவிதமான அணு ஆயுத ஆராய்ச்சிக்கான உதவிகளும் செய்யக்கூடாது என ரஷியாவை நிர்பந்தித்து வெற்றி கண்டது. அதற்கு முக்கியமான காரணம் நமது நாடு ஒரு அணுகுண்டை சோதனைக்காக வெடித்துக் காட்டி உலகின் அணு ஆயுதங்களைக் கொண்ட சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதுதான்.
அடுத்து வந்த பிரதமர் நரசிம்ம ராவின் அரசு தொடங்கிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்தது. 1998-ஆம் ஆண்டில் நாம் நடத்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையினால் கோபமுற்ற மேலை நாடுகள் பொருளாதாரத் தடையை நம் நாட்டிற்கு எதிராக முடுக்கிவிட்டன. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தத்தினால் முன்னேறிய - தன்னிறைவில் இருந்த நம் நாடு அந்தத் தடைகளைத் தாக்குப்பிடித்து மேலும் முன்னேறியது.
இதைக் கண்டு அசந்துபோன அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இந்தியாவுக்கு விஜயம் செய்து இரண்டு நாடுகளும் நட்பு பாராட்டி பல திட்டங்களை இந்தியா நிறைவேற்ற அமெரிக்கா உதவிகளைச் செய்யும் என உறுதி அளித்தார். அடுத்து வந்த வாஜ்பாயின் அரசு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுவடையச் செய்து பல நிதிநிலை சீர்திருத்த நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி பணவீக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது.
இந்தியாவின் மீது பல நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டு இந்தியா ஒரு "அணு ஆயுத' நாடு என்பது சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது. அடுத்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தீவிரப் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் உலக அளவில் நமது நாட்டின் மதிப்பு அதிகமாகி, "ஜி-8', "ஜி-20' மற்றும் "பிரிக்ஸ்' எனப்படும் சர்வதேச அமைப்புகளில் இந்தியா அங்கம் வகித்தது.
ஆனால், கூட்டணி அரசின் பல நடவடிக்கைகள் ஓட்டு வங்கி அரசியலாக உருவெடுத்தது. இதற்கு முக்கியமான காரணம் கூட்டணியில் பங்குபெற்ற பல பிராந்தியக் கட்சிகள் பணம் சேர்த்து மாநில அரசியலில் முன்னேறும் கலாசாரத்தைப் பின்பற்றத் தொடங்கின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பிலிருந்த காங்கிரஸýம் பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தது. மக்களைக் கவரும் வண்ணம் பல வாக்கு வங்கி இலவசங்கள் நடைமுறைக்கு வந்து மத்திய நிதி நிலைமையை பாதித்தன.
முதன்முதலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து நிதிநிலைக்கு ஒவ்வாத தொடர் திட்டங்களைத் தொடங்கி வைத்தது எனலாம்.
1991-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி நிலைமைக்கு முக்கியமான காரணம் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நிறைவேற்றிய விவசாயிகளின் கடன்களை ரத்து செய்த திட்டம்தான் என்பதைப் பலரும் மறந்துவிட்டனர்.
கூட்டணி கலாசாரத்தில் கட்டுக்கோப்பான நிர்வாக முறைகள் தளர்த்தப்பட்டு நிறைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. மத்திய அரசின் துண்டுவிழும் நிதிநிலை அறிக்கை முதல் காரணம். அரசின் சேமிப்புகள் பணமாக்கப்பட்டு ஓட்டு வங்கித் திட்டங்களுக்கான மானியங்களாகச் செலவிடப்படுவது நமது வருமானத்தில் 3.9 சதவிகிதமாக இருந்தது தற்சமயம் 4.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது இன்னொரு காரணம்.
நம்மிடம் நிறைய நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிர்வகிக்கப்பட்டு நமது மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பரிதாபமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நல்லமுறையில் தொழில் வளர்ச்சியை எட்டியிருந்த தென்மாநிலங்களான ஆந்திரம், தமிழ்நாடு போன்றவற்றிலும்கூட அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்வதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தனக்குத் தனி வழியமைத்து நற்பெயரைச் சம்பாதிக்கும் குறுகிய எண்ணத்துடன் சுற்றுச்சூழல் விதிகளை வகுக்கும் மத்திய அமைச்சர் ஒருவரால், நம் நாட்டில் பெருந்தொழில்கள் முதலீடுகளைச் செய்து தொழில்துறை வளர்ச்சியடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இந்தியாவில் தங்கள் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்அமெரிக்காவை உள்ளடக்கிய சர்வதேச அமைப்பான "பிரிக்ஸ்' இன்றைய நிலைமையில் இந்தியாவை விலக்கிவிட்டு சர்வதேசத் தொழில்களின் முதலீட்டிற்கு உகந்த நாடாக இந்தோனேசியாவைச் சேர்த்துக் கொள்ளலாமா என யோசிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே காலகட்டத்தில் தொழில் வளர்ச்சியில் நம்மைவிடவும் அதிகமாக முன்னேறி சர்வதேச மரியாதையையும் சீனா பெற்று வருகிறது. சமீபத்தில் டர்பனில் நடந்த "பிரிக்ஸ்' மகாநாட்டிற்கு வந்த சீன அதிபர் சி ஜின் பிங்க்கையும் ரஷிய அதிபர் புதினையும் விழுந்து விழுந்து உபசாரம் செய்தார் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா. ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதே மகாநாட்டிற்குக் கலந்துகொள்ள வந்திருந்தும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இதே அவமதிப்பு சிறிய நாடான மாலத்தீவு நடந்துகொள்ளும் விதத்திலும் சமீபகாலங்களில் தெரிய வருகிறது என்பதைப் பல வெளிநாட்டு அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர்.
பக்கத்து நாடான வங்கதேசம் முதல் நமது நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகள் வரையில் முழுக்கவனத்துடன் வெளிநாட்டுக் கொள்கையின் நெளிவுசுளிவுகளைத் திறமையுடன் ஆளுமை செய்யும் அரசியல் தலைமை கூட்டணி அரசுக்கு உண்டா என்ற கேள்வி எழுகிறது. நம் நாட்டின் ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும், வாகனங்களையும், ஹெலிகாப்டர்களையும் வாங்குவதில்கூட ஊழல் தலைவிரித்தாடும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
இங்கிருந்து நாம் எங்கே பயணிப்போம் என்ற கேள்விக்குப் பதிலே இல்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறி ஊழல்கள் தொடர்ந்தால் நமக்கு விடிவுகாலம் இல்லை என்பதை நமது இளைஞர்கள் உணர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
கட்டுரையாளர்: பணி நிறைவுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.

நன்றி: தினமணி

Monday, July 15, 2013

அறிவார்ந்த ஊழல்

காந்தி யுகத்தின் கடைசிப்பொழுதுகளில் நேர்மையின் நிறம் மாறத்தொடங்கியது.

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேகன்களுக்குப் பற்றாகுறை நிலவியது. தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க அமைச்சகம் முடிவெடுத்தது.

ஒரு தனியார் நிறுவனம் 50 வேகன்களுக்கு 50 ஆயிரம் லஞ்சம் தர இசைந்தது. முன்பணமாக 22 ஆயிரம் ரூபாய் கைமாறியது.

கோப்பில் ”Approved”  என்று எழுதிக் கையொப்பமிட்டார். கையெழுத்தானதை அறிந்த நிறுவனம் மீதிப்பணம் தராமல் போக்குக்காட்டியது. அமைச்சர் விடுவாரா? பாடம் புகட்ட முடிவெடுத்தார்.

‘Approved’-க்கு முன்னால் “not’  என்று எழுதிவைத்தார். செய்தியறிந்த நிறுவனம் அலறியடித்து வந்து அமைச்சரிடம் மீதிப்பணம் தந்தது.

மகிழ்ச்சியடைந்த அமைச்சர்.

அடித்தல் திருத்தலின்றி “not’ உடன்“e’ சேர்த்தார். அவ்வளவுதான். ‘Note: Approved’ என்றானது.

இதற்குப்பெயர்தான் அறிவார்ந்த ஊழல்.


(ஊருக்கு நல்லது சொல்வேன் புத்தகத்திலிருந்து)

LinkWithin

Related Posts with Thumbnails