Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Monday, March 07, 2016

பந்தயக் குதிரைகளும் பக்குவப்படுத்தும் கலையும் - பகிர்வு

தேசிய புகழ்பெற்ற ’இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பை’ குதிரைப் பந்தயங்களுக்காக இந்தியாவின் முக்கிய பந்தய மையங்களிலிருந்து வந்திருந்த குதிரைகள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலும், குதிரைப் பந்தயங்களில் ஜெயிக்கும் குதிரை களைப் பற்றித்தான் ஆர்வத்துடன் விசாரிக்கப்படுகின்றன. அந்த குதிரைகள் பந்தயத்துக்காக எப்படித் தயார் படுத்தப்படுகின்றன என்பதை கேட்டால் அது ஒரு பெரிய கலை என்கிறார்கள்.
இந்தியாவில் புணே, மும்பை, ஆமதாபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் குதிரை பண்ணைகள் உள்ளன. இங்கு உயர் வகை குதிரை இனங்களை உருவாக்குவதற்காக வெளிநாடு களிலிருந்து குதிரை ஜோடிகள் விமானம் மூலம் இறக்குமதி செய் யப்படுகின்றன. இவைகளை ’ஸ்டாலின்’ என்கிறார்கள். இவற்றின் மூலம் இனவிருத்தி செய் யப்படும் குதிரைகள்தான் பந்தயத் தில் ஓடவிடப்படுகின்றன.
கருவுற்று ஆறாவது மாதத்தில் குதிரை குட்டியை ஈனும். ஒரு குதிரை அதிகபட்சம் ஐந்து குட்டிகள் வரைகூட ஈனும். பிறந்து சில நாட் களிலேயே 400 கிலோ எடையை தொட்டுவிடும். ஓராண்டு காலத் துக்கு இந்தக் குட்டிகள் அதன் போக்கிலேயே சுதந்திரமாக புல் தரைகளில் உலவவிடப்படும். இந்தக் காலகட்டத்தில் குதிப்பது, உதைப்பது, கடிப்பது என குட்டிகள் மிகவும் மூர்க்கத்தனமாகவே இருக் கும். சுவரில் மோதி காயம் ஏற் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, குட்டிகள் குதித்துத் திரியும் பகுதி களில் மென்மையான தடுப்பு வேலி போட்டிருப்பார்கள்.
பிறந்ததுமே குதிரை குட்டி களின் பிறப்பை பதிவு செய்ய வேண் டும். இதற்காகவே புணேயில் பதிவு மையம் உள்ளது. குதிரை குட்டி யின் இனம் அதன் தாய், தந்தை குறித்த விவரங்கள் அனைத்தையும் இங்கே பதிவு செய்து முறைப்படி பாஸ்போர்ட் பெற்றால்தான் அந்தக் குதிரையானது பந்தயத்தில் ஓட அனுமதிக்கப்படும்.
இரண்டு வயது தொடக்கத் திலேயே ’ஸ்டேபிள்’ எனச் சொல்லப் படும் பிரத்யேக அறைகளுக்குள் குதிரைக் குட்டிகள் அடைக்கப் படும். அப்போதே ரேஸ்கோர்ஸ் மைதானங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கே பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியும் அளிக்கப்படும். காலை யில் ஓட்ஸ், கொல்லு, மதியம் வெறும் தண்ணீர், மாலையில் கேரட், இரவில் புல். இவைதான் குதிரைகளுக்கான தினசரி டயட். சென்னை பண்ணையில் உள்ள குதிரைகளுக்கு மைசூரிலிருந்து பிரத்யேகமாக புல் தருவிக்கப்படு கின்றன. பராமரிப்புக்காக மட்டுமே ஒரு குதிரைக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. அதேசமயம், என்னதான் தீனி கொடுத்தாலும் குதிரையின் எடை 460 கிலோவை தாண்டவிடமாட்டார்கள்.
தினமும் குதிரைகளின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதற்கா கவே இரவு பகலாக 2 கால் நடை மருத்துவர்கள் பண்ணையில் பணியில் இருப்பார்கள். 2 வயது முடியப்போகும் தருவாயில் குதிரைகள் கிளாஸ் ஒன் ரேஸில் களமிறக்கப்படும். களத்துக்கு வரும் குதிரைகளின் திறமையைப் பொறுத்து அவற்றின் மதிப்பும், ஓடும் ரேஸ்களின் தரமும் உயரும்.
பண்ணையிலிருந்து ரேஸ் கோர்ஸ் மைதானங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் குதிரை களைக் கொண்டு செல்வதற்கு ஃப்ளோட் (Horse Float) என்று சொல்லப்படும் பிரத்யேக வாகனங் களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஃப்ளோட்டில் 6 குதிரைகள் வரை நிறுத்தலாம். உயர் வகை குதிரைகளை கொண்டு செல்வ தற்கு குளிரூட்டப்பட்ட ஃப்ளோட் களும் உண்டு.
சென்னை பண்ணையிலிருந்து கொல்கத்தாவுக்கு மட்டும் ரயிலில் பிரத்யேக வேகன்களில் பந்தயக் குதிரைகள் எடுத்துச் செல்லப்படு கின்றன. இந்த வேகன்கள் குதிரை களை நிற்கவைக்க வசதியாக மரக் கட்டைகள் அடிக்கப்பட்டு உள்ளுக் குள் ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு குளிரூட்டப்படும். ஆந்திரா சென்ற தும் மீண்டும் வேகனில் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்டு குளிரின் பதம் காக்கப்படும். அதேசமயம், என்னதான் ஊட்டி ஊட்டி வளர்த் தாலும் பந்தயக் குதிரைகளுக்கு 4 ஆண்டுகள்தான் மதிப்பு. 6 வயதுக்கு மேல் அவை பந்தயத் துக்கு லாயக்கற்றவைகளாக ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
இப்படி ஒதுக்கப்படும் குதிரை கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு குதிரை பண்ணையில் ஓரங்கட்டி நிறுத்தப்படும். பந்தயத்துக்கு தயாராகும்போது கோடி ரூபாய் வரை விலை மதிக்கப்படும் இந்தக் குதிரைகள், ஓடிக் களைத்த பிறகு ஆயிரங்களில் மதிக்கப்பட்டு பிற உபயோகங்களுக்கு விற்கப்படு வது பரிதாபத்துக்குரிய விஷயம்.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தள்ளாட்டத் துடன் ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகள் இப்படிக் கழிக்கப் பட்டவைதான். சென்னை மாநகர காவலில் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான குதிரைகள் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சொந்த மானவை. குதிரைகளின் அதிகபட்ச ஆயுள் காலம் 9 ஆண்டுகள்.
பெரிய குதிரைப் பண்ணைகள்
இந்தியாவை பொறுத்தவரை சென்னையில் எம்.ஏ.எம்.ராமசாமி யின் குதிரைப் பண்ணை, பெங்களூருவில் விஜய்மல்லையா வின் குதிரைப் பண்ணை, மும்பை யில் துஞ்சு பாய் என்பவரின் குதிரைப் பண்ணை மற்றும் துபாயைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரின் குதிரைப் பண்ணை இவைகள்தான் இந்தியா வின் பெரிய குதிரைப் பண்ணை கள். புணேயில் உள்ள குதிரை பண்ணை குளிரூட்டப்பட்டது.
உலகின் டாப் 10 பந்தயக் குதிரை இனங்கள்
இங்கிலாந்தின் துரோப்ரீட் வகை குதிரைதான் பந்தயக் குதிரைகளில் முதல் தரமானது. இதற்கு அடுத்த நிலையில் அரபு நாடுகளின் அரேபியன், அமெரிக்காவின் ஸ்டாண்டர்டுப்ரீட் மற்றும் குவார்ட்டர் ஹார்ஸ் இனங்கள் உள்ளன. இவைகளுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் பெயின்ட் ஹார்ஸ் மற்றும் அப்பாலூசா குதிரைகளும் வட அமெரிக்காவின் மஸ்தாங், நெதர்லாந்தின் ஃபிரைசியன், அமெரிக்காவின் மார்கென், அயர்லாந்தின் ஜிப்சிவேனர் குதிரைகளும் உள்ளன. குதிரை பயிற்சியாளர்களில் ஹாங்காங் பயிற்சியாளர்களும் ஜாக்கிகளில் அயர்லாந்து ஜாக்கிகளும் பிரமாதமாக பேசப்படுகின்றனர்.
கிண்டியில் கில்லி அடித்த குதிரைகள்
கிண்டியில் நேற்றுமுன்தினம் நடந்த ஸ்பிரிண்டர்ஸ் கோப்பை பந்தயத்தில் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களூரு குதிரை ஆதமும் (ஜாக்கி: டிராவர், பயிற்றுநர்: ஷராஃப்) ஸ்டேயர்ஸ் கோப்பை பந்தயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த குதிரை டின் டினாபுலேஷனும் (ஜாக்கி: சவுகான், பயிற்றுநர்: தேஷ்முக்) முதலாவதாக வந்து தலா ரூ.50 லட்சத்தைத் தட்டிச் சென்றன. நேற்று நடந்த இன்விடேஷன் கோப்பை பந்தயத்தில் பெங்களூருவைச் சேர்ந்த டெசர்ட் காட் (ஜாக்கி: டேவிட் ஆலன், உரிமையாளர், பயிற்றுநர்: பத்மநாபன்) என்ற குதிரை கோப்பையை கைப்பற்றி ரூ. 1 கோடியை தட்டிச் சென்றது.

நன்றி  : தி இந்து

Thursday, December 10, 2015

வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணியைக் காப்பாற்றிய யூனுஸ்: பிறந்த குழந்தையின் வருங்கால படிப்புச் செலவையும் ஏற்றார்-பகிர்வு


நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் சென்னையில் ‘இ-காமர்ஸ்’ நிறுவனம் நடத்தும் இளைஞர். டிசம்பர் 1-ம் தேதி இரவு சென்னையை சவட்டி எடுத்தது மழை. அந்த நேரத்தில், ஊரப்பாக்கம் பகுதியில் மக்கள் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று முகமது யூனுஸுக்கும் ‘வாட்ஸ் அப்’பில் தகவல் பகிரப்படுகிறது.
அப்போது இரவு மணி 10.30. தனது நண்பர்கள் முஸாஃபர், கோபிநாத், ரியாஸ் இவர்களைக் கூட்டிக் கொண்டு கிளம்புகிறார் யூனுஸ். நால்வரும் பெசன்ட் நகரில் மீனவர்களிடம் ஏழு படகுகளை கேட்டு வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரப்பாக்கம் நோக்கிப் புறப்படுகிறார்கள்.
அடுத்து நடந்தவைகளை யூனுஸ் விவரித்தார். ‘‘எங்களைவிட வேகமாக செயல்பட்டனர் மீனவ நண்பர்கள். நாங்கள் நால்வரும் ஆளுக்கொரு படகில் இருந்தோம். கிட்டத்தட்ட 6 அடிக்கும் மேல் சென்று கொண்டிருந்த தண்ணீர் நான் சென்ற படகை தலைகீழாக கவிழ்த்துப் போட்டது. எனக்கு நீச்சல் தெரியாது. நல்லவேளை, மீனவ நண்பர்கள் காப்பாற்றிவிட்டார்கள்.
அப்போதுதான் அங்கிருந்த பெட்ரோல் பங்க் பக்கத்தில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்த படி எங்களைப் பார்த்துக் கை அசைத்துக் கொண்டிருந்ததை கவனித்தேன். அருகில் சென்று அவர்களை படகில் ஏற்றிய பிறகு தான் அந்த பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவரது பெயர் சித்ரா. உடனி ருந்தவர் அவரது கணவர் மோகன். அதிகாலை 5.30 மணி. பெருங்களத் தூர் அருகே ஒரு பாலத்தின் அருகே சித்ராவையும் மற்றவர்களையும் இறக்கிவிட்டு விட்டு மற்றவர்களை மீட்பதற்காக மீண்டும் ஊரப்பாக்கம் நோக்கிப் படகை செலுத்தினோம். அன்று மட்டுமே எங்களது குழுவினர் சுமார் 450 பேரை ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறோம். இன்னமும் எங்களது பயணம் நிற்கவில்லை. அழைப் புகளைக் கேட்டு ஓடிக்கொண்டே இருக்கி றோம்’’ என்று சொன்னார் யூனுஸ்.
யூனுஸால் காப்பாற்றப்பட்ட சித்ரா அன்றைய தினமே பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். தங்களையும் தங்களது வாரிசையும் காப்பாற்றிக் கரை சேர்த்த யூனுஸை போற்றும் விதமாக அவரது பெயரையே தங்களது பெண் குழந்தைக்கு வைத்திருப்பதாக ‘வாட்ஸ் அப்’பில் வாஞ்சையோடு தகவல் பகிர்ந்தி ருக்கிறார் சித்ராவின் கணவர் மோகன். இதில் நெகிழ்ந்து போன யூனுஸ், அந்தக் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய யூனுஸ், ‘‘இதற்கு முந்தைய மழைக்கு நுங்கம்பாக்கத்திலும் பள்ளிக்கரணையிலும் உள்ள எனது இரண்டு வீடுகளை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடுத்திருந்தேன். அங்கு தங்கி இருந்த மக்கள் என்னை வாயாற வாழ்த்தினார்கள்.
சித்ரா - மோகன் தம்பதி தங்கள் குழந்தைக்கு என் பெயரை வைத் திருக்கிறார்கள். அந்தக் குழந்தைக் குப் படிப்புச் செலவை நான் ஏற் றுக் கொண்டிருக்கிறேன். விவசாயி களையும் மீனவர்களையும் அவர்கள் வாழும் நிலையில் இருந்து முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதும் மழை எங்களுக்குத் தந்திருக்கும் பாடம். நமக்குத் தெரிந்த டெக்னால ஜியை வைத்து அந்த இலக்கை எட்டுவதற்காக ஒரு குழுவை அமைத்துக் கொண்டி ருக்கிறோம்’’ என்று சொன்னார்.

நன்றி : http://tamil.thehindu.com/  

Monday, October 26, 2015

முடியும் நம்பு முடியும்

உலகம் சுற்றும் டீக்கடைக்காரர் தலைப்பில்  யூடியூப் காணொளி கண்டேன்.

என்னையும் யோசிக்க வைத்தது. தேவை  நம்பிக்கை மனது முடியும்  என்று நம்பு முடியும் என்று சொல்ல வைத்தது.

நீங்களும் பாருங்க...



Sunday, March 03, 2013

திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ் (பகிர்வு)


18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழைச் தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.

தூய தமிழில்  -  பிறமொழியில்
மசண்டை - பிரதோஷம்
ஆரல்விழா - கிருத்திகை
முருகுபிறை - சஷ்டி
காருவா - அமாவாசை
ஐங்கூறு - பஞ்சாங்கம்
மாழைத்தடம்  -  ரயில்வே
இரவுரி  - நைட்டி
சுருளணி   - தாயத்து
நெகிழி - பிளாஸ்டிக்
நாரிழை  - ஃபைபர்
ஈகநார் - பாலித்தீன்
மகிழுந்து - கார்
சீருந்து - டேக்சி
பேருந்து - பஸ்
தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா
ஆவிப்பானை - குக்கர்
ஆவிமூட்டி - வெயிட்
அகவை - வயது
தூவல் - பேனா
தூலிகை - பென்சில்
அரும்புரு - ஸ்கெட்ச்
விளிம்புரு - அவுட்லைன்
தற்சுட்டுமலர் - பயோடேட்டா
படிமேடை - கேலரி
பொதியுரை - கேப்ஸ்யூல்
தண்மி - ஃபிரிட்ஜ்
எழினிப்பந்தல் - ஷாமியானா
வைகல் மனை - லாட்ஜ்
சிறப்பங்காடி - சூப்பர்
மார்க்கெட்
தொகுப்பங்காடி - பிளாசா
கொள்ளிலி - இலவசம்
சுருங்கை - சப்வே
வட்டத்திட்டு - ரவுண்டானா
வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்
படிப்பேழை - அல்மைரா
வளியுருளை - கேஸ் சிலிண்டர்
வளியடுப்பு - கேஸ் ஸ்டெள

நன்றி திணமணி.

Friday, January 14, 2011

சிறிய விஷயங்களில் இருந்துதான் ஏராளம் கற்றுக் கொள்ள முடியும்: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். (பகிர்வு)

"பிரம்​மாண்​டங்​க​ளைப் பார்த்​துப் பார்த்து,​​ சிறிய விஷ​யங்​க​ளைக் கண்​டு​கொள்​வ​தில்லை;​ ஆனால்,​​ அந்​தச் சிறிய விஷ​யங்​க​ளில்​தான் ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​கி​றது' என்​றார் எழுத்​தா​ளர் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​
​ ​
​ ​ "அமெ​ரிக்க எழுத்​தா​ளர் தோரோ நடப்​பது பற்றி மட்​டும் 100 பக்​கங்​க​ளைக் கொண்ட புத்​த​கம் ஒன்றை எழு​தி​யுள்​ளார்.​ பூமி​யு​டன் நேர​டி​யா​கத் தொடர்​புள்​ளவை கால்​கள் மட்​டுமே.​ பள்​ளிக் காலங்​க​ளில் விளை​யா​டு​வ​தைத் தவிர கால்​க​ளுக்கு இப்​போது வேறெந்த வேலை​யும் நாம் கொடுப்​ப​தில்லை.​ சோம்​பேறி ஆவ​தற்கு முதல் அறி​குறி கால்​க​ளுக்கு எந்த வேலை​யும் கொடுக்​கா​த​து​தான்.​
​ ​ சைபீ​ரிய பற​வை​கூட இந்​தி​யா​வுக்கு பறந்தே வரு​கி​றது.​ நாம் இங்​குள்ள தாஜ்​ம​கா​லைக்​கூட பார்க்​கச் செல்​வ​தில்லை.​ பய​ணம் செய்​வ​தி​லுள்ள அனு​ப​வம் வேறெ​தி​லும் கிடைக்​காது.​
​ ​ கல்​விக் கூடங்​க​ளில் பயி​லும் கல்வி மனித வாழ்க்​கைக்கு நேர​டி​யாக பயன்​பட்​ட​தில்லை.​ வகுப்​பறை,​​ பாடங்​கள்,​​ தண்​ட​னைக்​குள்​ளேயே நாம் முடங்​கி​வி​டு​கி​றோம்.​
​ ​ ரஷிய எழுத்​தா​ளர் ஆன்​டன் ஷெக்​காவோ தனது வீட்​டின் முன் இருந்த காலி​யி​டத்​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​காக ஒரு முகாமை அமைக்​கப்​போ​வ​தா​கக் கூறி​னார்.​ ரஷிய ஆசி​ரி​யர்​கள் கம்​பீ​ரத்​து​டன் இருப்​ப​தில்லை;​ அவர்​க​ளைக் கண்​ட​றிய முடி​ய​வில்லை என அவர் குறிப்​பிட்​டார்.​
​ ​ கல்வி என்​பது ஊதி​யம் பெறும் வேலை என்​ப​தோடு ஆசி​ரி​யர்​கள் நின்​று​வி​டு​கி​றார்​கள்.​ பணி​யாற்​றும் ஊரின் வர​லாறு,​​ அந்த மக்​க​ளின் பண்​பாடு போன்​ற​வற்​றைத் தெரிந்து கொள்ள ஆசி​ரி​யர்​கள் முனைப்பு காட்​டு​வ​தில்லை என்​ப​தெல்​லாம் ஷெக்​கா​வோ​வின் வருத்​தங்​கள்.​
​ ​ நம் வகுப்​ப​றை​க​ளில்​தான் பேதங்​களே தொடங்​கு​கின்​றன.​ அடிமை முறையை ஒழித்து ஆயி​ரம் ஆண்​டு​க​ளா​கி​யும் தொலைக்​காட்​சி​கள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்​குக் கற்​றுக் கொடுத்து விடு​கின்​றன.​ வீடு​க​ளில் குழந்​தை​க​ளைப் பேசவே விடு​வ​தில்லை;​ தொலைக்​காட்​சி​கள்​தான் பேசிக் கொண்டே இருக்​கின்​றன.​
​ ​ நாம் பிரம்​மாண்​டங்​களை நோக்​கியே பார்க்​கி​றோம்.​ அத​னால்,​​ சிறிய சிறிய விஷ​யங்​களை கண்​டு​கொள்​வ​தில்லை.​ உண்​மை​யில் சிறிய விஷ​யங்​கள்​தான்,​​ நமக்கு நிறைய கற்​றுத் தரு​கின்​றன.​
​ ​ தன்​னை​விட 5 மடங்கு அதிக எடை கொண்​ட​வற்றை எறும்பு சுமக்​கி​றது.​ நாம் எறும்​பைக் கண்​ட​வு​டன் நசுக்​கிக் கொள்​கி​றோம்.​ அதில் நாம் சுகம் கொள்​கி​றோம்.​
​ ​ ஒரு கல்லை எடுத்​தால்,​​ அதை யார் மீதா​வது வீசிப் பார்க்​கத்​தான் நாம் முனை​கி​றோம்.​ அந்​தக் கல் பெரிய மலை​யின் ஒரு பகுதி என்​றுப் பார்ப்​ப​தில்லை.​ கொஞ்​சம் கொஞ்​ச​மாக இந்த உலகை நர​க​மாக மாற்றி வரு​கி​றோம்.​ மனி​தர்​கள் தங்​க​ளி​ட​முள்ள சில சொற்​களை,​​ சிந்​த​னை​களை,​​ செய்​கை​களை மாற்​றிக் கொள்ள முன்​வர வேண்​டும்' என்​றார் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​
​ ​

LinkWithin

Related Posts with Thumbnails