காலை 7.30 மிதமான காலைவெயில் மெல்லியதாய்
குளு குளு காற்று வீசி கொண்டிருந்தது.
ஐந்தரை அல்லது ஆறடி தோகையுள்ள ஆண்மயில்கள் இரண்டு விளையாடி கொண்டிருந்தது.
மயில்கள் என் அனுபவத்தில் திருச்சி விராலி மலைபக்கம் அ திகம் இருக்கும்
என்றும் சொல்ல கேள்விபட்டுள்ளேன். தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். நேரடியாக
தஞ்சை சிவகங்கை பூங்காவில் தோகை இல்லாத
மயில்களை பார்த்தது.
வானாந்திர அழிப்பினால் மயில்கள் தங்க இடம் இல்லாது
கும்பலாய்எங்கள் ஊர் பகுதிகளில் சகஜமாய் நடமாடுவதை பார்க்கமுடியும்.
கும்பலாய்எங்கள் ஊர் பகுதிகளில் சகஜமாய் நடமாடுவதை பார்க்கமுடியும்.
மயில்கள் நாட்டியம் நான் நேரில் பார்த்தது இல்லை. இன்றைக்கு அந்த வாய்ப்பு
கிடைத்தது.
தன்னுடைய ஐந்தரைஅடி தோகையை விரித்து அதுஆடிய ஆட்டமும் அதன் தோகையில் இருந்த
அதன் கலர்கண்கள் காலை வெயில்பட்டுஎதிரொலித்தஅதனுடைய ஜொலிப்பு....அய்யோ...என்ன தவம்
செய்துவிட்டேன் இதை கண்டு மகிழ
என்றிருந்தது.
மெதுவாக தன்னுடைய தோகையை விரிக்க
விரிக்க என்னுடைய கைகள் தனாக கைகூப்பி
இயற்கையை வண ங்கதான் தோன்றியது.