சமுதாய மாற்றத்தின் முதல் தொடக்கம் தனிமனித மாற்றத்தில் தான்.
தன்னளவில் தனக்கு போதுமான அளவிற்கு பொருள் இடம் என்று வந்தவுடன் தன்னுடைய பார்வை யை அடுத்து சிரமப்படும் சக உயிர்ப்பின் மீது தொடங்கினால் அவர்களால்பயன்பெறுபவர்கள் பல போ்.
இந்த மனோபாவம் அரிது. சொல்வது அதைபற்றி எழுதுவது அல்லது அதைப்பற்றி வாதிடுதல் மிக எளிது.
நாம் வாழுகிற இடத்தில் பலவித குறைப்பாடுகள் உண்டு. யாரும் மறுக்கமுடியா உண்மை.
இத்தகைய குறைப்பாடுகளிலிருந்து மேல் வந்தவர்கள் தான். சமுதாயத்தை ப்பற்றி அதிகம் கவலை படுபவர்கள்அல்லது வாதிடுபவர்கள்.
சமுதாயத்திற்காக செயல்படுபவர்கள் எத்தனைப்பேர் ? இதுவும் அரிது.
தன்னளவில் நிறைவடைந்தவர்கள் எல்லை விஸ்தரிப்பு செய்யாது மேற்கொண்டு விலை உ யர்ந்த ஆடம்பரங்களுக்கு காசு தேவை என்று செல்லாது சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டபவர்களாக மாறினால் மாற்றம் நிச்சயம்.
