Monday, August 03, 2009

பிடித்த வாசகம்


மாலை நேரம் போக்குவரத்து அதிகமாக இருந்தது. பொறுமையாய் போய் கொண்டிருந்தேன் என் முன்னால்
கதிர் அறுக்கும் இயந்திரம் ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது பின்புறம் வாசகம் ஒன்று எழுதியிருந்தார்கள்.

பெரும்பாலும் வண்டிகளில் “ வளைவில் முந்தாதே” “ மரம் நடுவோம்” அப்புறம் குடும்ப கட்டுபாடு வாசகங்களாக இருக்கும்.

இந்த லாரியின் பின்புறம் “ நெருப்பு மட்டும் காயப்படுத்தாது சிரிப்பும் தான் காதலித்து பார் தல ”
என்று எழுதியிருந்தார்கள்.

உண்மை தாங்க.…

Sunday, August 02, 2009

அன்பு மறைய …


உயிர் வாழும்
காலம்
கசந்த உறவுகள்
உயிர் போன
பின்
நினைத்த உறவுகள்
இருந்தபொழுது
அகந்தையின்
இடிபாடுகளில்
சிக்கி தவித்து
அன்பு தெரிய
வீம்பாய் உரிமை
பிடிவாதம்
அன்பு மறைய
இறந்தபொழுது
நான்யார்?
நீ யார்?
பொய் வாழ்க்கை
போலி வேடங்கள்
உணர்வுகளில்
கரைந்து
மனம் நெகிழ
வாழ்ந்த கணங்கள்
எத்தனை?

Saturday, August 01, 2009

இன்னியிலிருந்து பத்தாவது நாள்

காலை கடைக்கு கிளம்பும் போது பையை ஊதிப்பார்த்தான். ஒரு நூறு ஒரு ஐம்பது நோட்டும் இருந்தது. அன்றைக்கு அவன் செய்ய வேண்டிய செலவு தொகை 1000 ஆகும்.

யாரிடம் கேட்பது அவனுக்கு தெரிந்தவர்களிடம் முதல் நாள் வரையிலும் முயற்சித்தான் எல்லாம் கைவிரித்தார்கள். ஏற்கனவே வாங்கியதை சரியானப்படி நாணயம் செலுத்ததால் கொடுக்க மனம் இருந்தவர்கள்கூட மறுத்துவிட்டார்கள்.

காலையில் எழுந்த போதே யோசனையுடன் எழுந்தான். யோசனை செய்து என்ன ஆகப்போகிறது. குழப்பம் குழப்பம் குடிப்பழக்கம் உண்டு அவனுக்கு நேராக போய் குடித்தான் இருந்த 150 காலி என்ன செய்ய..

தெரிந்தவர் ஒருவரிடம்போதையுடன் போய் கேட்டான் . அய்யா பாத்து குடுங்க நான் திரும்ப கொடுத்துவிடுகிறேன். முடியாது என்று மறுத்து விட ..

அய்யா நான் இன்னைக்கு தேவைக்கு பண்ணியே ஆகனும் கொடுங்கய்யா என்று அழ ஆரம்பித்தான்.

மிகுந்த சங்கடம் உருவானது. அவர் சத்தம் போட்டு பணம்கொடுத்தார். இன்னியிலிருந்து பத்தாவது நாள் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.

சொல்லிவிட்ட போன நான்காம் நாள் கடுமையான நெஞ்சுவலி ஏற்ப்பட்டது இவனுக்கு குடியினால் வந்த வினை .

அவர்கள் வீட்டில் செலவு செய்தார்கள். மருத்துவர் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்தான்.

பத்துநாட்களும் கடந்துவிட பணம் வந்தபாடில்லை நாட்கள் போய் கொண்டிருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails