Wednesday, November 25, 2015

என் வீட்டு வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே...

மாலை 5.45 நெருங்கியது கைப்பேசிஒலித்தது.

இன்னும் விளக்கேற்ற வரவில்லையா… அன்பான கண்டிப்பு குரலில் இல்லாள் அழைக்க வேலை பார்க்கும் இடம் விட்டு இல்லம் நோக்கி விரைந்தேன்.

இருள் பரவதொடங்கிய நேரம் இருள் விலக்கி வெளிச்சம் பரப்பிய தீபங்கள் எல்லோருடைய வீட்டு வாசல்களிலும் தீப ஒளி வீச அழகோ …அழகு.

தெளிந்த வானம் பௌர்ணமி வெளிச்சத்தில் கார்த்திகை தீபங்கள் நம்மைச்சாய்க்கும்.


எங்கள் வீட்டிலும் கார்த்திகை தீபங்கள் ஏற்ற அப்பொழுது க்ளிக்கியது.









மழைக்கு ஒதுங்கிய நாய்கள்

மழைக்கு ஒதுங்கிய
நாய்கள்

நனைந்த உடம்பு
நடுக்கிய குளிர்

கதகதப்பிற்கு
காய்ந்த இடம்
தேடுகையில்

கிடைத்த இடம்
கடையின் மிதியடி

தலை மடக்கி
வால் சுருட்டி
உடம்பைச் சூடாக்கியது

கடைக்காரரின்
த்தே..ச்சூ…
காற்றில்
பறந்துப்போக

தலைநிமிர்த்தி
கடைக்காரரின்
முகம்பார்கையில்

பவ்யமாய்
அனுமதி கோரல்

மீண்டும்
தலை மடக்க
உடம்பு சூடாகியது.






Tuesday, November 24, 2015

கலை நயம்மிக்க மரவேலைப்பாடு

நான் சமீபத்தில் மரவேலைப்பாடு சம்மந்தமாக இணையத்தில் தேடினேன். தேடுதலில் அதிசயமிக்க கலையம்சத்துடன் எனக்குப்படங்கள் கிடைத்தன.

கலை என்றுமே வாழும் காலம் கடந்தும்  என்கிற வார்த்தை சரிதான்.

பிரமிக்க வைத்த உழைப்பு செதுக்கப்பவர்களின்  கைவண்ணத்தில் உருவான கலைப்படைப்புக்குரியவர்கள் என்றுமே மரியாதைக்குரியவர்கள்.

படைப்பு படைப்பாளிகளை வணங்குகிறேன்.























LinkWithin

Related Posts with Thumbnails