Showing posts with label கவிதைமாதிரி. Show all posts
Showing posts with label கவிதைமாதிரி. Show all posts

Thursday, December 03, 2015

பெய் மழையே பெய்




பெய் மழையே பெய்

பெய்து
உருவாக்கினாய்தடம்

மனிதர்களின் ஆசை
அழிந்ததடங்கள்

வீதிகள் ஆறாகின
குடியிருப்பு குளமாகியது

உன் தடத்தில்
அரசியல்
உன்தடம் தடுமாறிப்போனது

மக்கள்
மாக்கள் ஆகி
திரியத்தான்

அரசியலும்
அரசியல் கட்சிகளும்

பெய் மழையே பெய்
நீ இயற்கை

மனித நாகரீகத்தால்
நலிவடைந்த
உன் வழித்தடங்கள்

வீதி ஆறுகளும்
குடியிருப்பு குளங்களும்
இயற்கையே…

Wednesday, November 25, 2015

மழைக்கு ஒதுங்கிய நாய்கள்

மழைக்கு ஒதுங்கிய
நாய்கள்

நனைந்த உடம்பு
நடுக்கிய குளிர்

கதகதப்பிற்கு
காய்ந்த இடம்
தேடுகையில்

கிடைத்த இடம்
கடையின் மிதியடி

தலை மடக்கி
வால் சுருட்டி
உடம்பைச் சூடாக்கியது

கடைக்காரரின்
த்தே..ச்சூ…
காற்றில்
பறந்துப்போக

தலைநிமிர்த்தி
கடைக்காரரின்
முகம்பார்கையில்

பவ்யமாய்
அனுமதி கோரல்

மீண்டும்
தலை மடக்க
உடம்பு சூடாகியது.






LinkWithin

Related Posts with Thumbnails