Sunday, November 30, 2008

கட்டு அவிழ்த்த மாடு

கடை முடித்து வீடு திரும்புகையில் இரவு மணி பத்தாகியிருந்தது. வீடு எங்கள் ஊர் குளக்கரை வரை நடந்து சென்று திரும்ப ...

தெரு முடிவின் எதிர் புறம் நேர் கொண்ட பார்வையுடன் விரைவான நடை தெரு பாதையின் நடுவில் வந்து கொண்டிருக்கும் அந்த சிகப்பு மாடு இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஆள் இல்லா அந்த நேரம் நான் பயத்தில் ...

எண்ணற்ற கேள்விகளாய் என் மனது ஏன் இந்த வேகத்துடன் மாடு வருகிறது ? யாருடைய வயலில் போய் மேயப்போகிறதோ தெரியவில்லை என்கிற கவலை வேறு (என் வயலும் அதற்குள் அடக்கம்)

நான் யோசிக்க... மாடு நெருங்க ...

நடையின் வேகம் குறைந்து நின்று நிமிர்ந்த என்முகம் நோக்கிய மாடு அதன் இலக்கை திசை திருப்பி இரவின் பரப்புக்குள் எங்கேயோ ...

சரியான வழிகாட்டுதல் இல்லா மனசும் இப்படிதாங்க நாம தேடி போற இலக்கானது இடையில வர்ற தடையினலா திசை மாறி போயிருதுங்க சரியான வழிகாட்டுதல் அவசியங்க ...

இல்லாட்டினா சரியான வழிகாட்டிய தேடிபோறது அவசியங்க

(தொடர்வோம்)

தடுமாறிய மனம்.

29.11.2008 காலை வாய்க்கால் பக்கம் சென்றேன். வாய்க்கால் இரு கிளையாக பிரியும் இடம் அதை ஒட்டிய சிறுபள்ளம்
ஒருவர் கீழ் குனிந்து அதை கைகளால் துலாவி கொண்டிருந்தார்.

அவரது செய்கையால் ஈர்க்கப்பட்ட நான் அவர் அருகில் சென்று என்ன என்று வினவ..

விறால் மீன் ஒன்று எனச்சொல்லி தன்கைகளால் துலாவி கொண்டே இருந்தார்.

விறால் மீனும் அவருக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் செல்வதாக இருந்தது.

கடைசியில் ஒரு ஓரமாக ஒதுங்கியது எனக்கு தெரிய அவருக்கு தெரியவில்லை.

என் ஆசை நான் சொல்லவில்லை அது இருக்கும் இடத்தை..
நாம் பிடித்து கொண்டு போய்விடலாம் என்ற மனதுடன் அவர் தடுமாற்றத்தை பார்த்து கொண்டே நின்றேன்.

கடைசியாய் அது இருக்கும் இடம் அறிந்து தன்துண்டினால் அவர் பிடித்தார். தடுமாறிய மனதுடன் ஏதோ சங்கடம் ஆட்கொள்ள அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.

Saturday, November 29, 2008

நாடோடி

25,26.11.2008 கிழமைகளில் எங்கள் ஊர் பகுதிகளில் (தஞ்சை மாவட்டம்) அறிவிக்கபடாத ஊடரங்கு உத்தரவு. காரணம் மழை யும் ,மழையுடன் கூடிய அதிவேக காற்றும்.

நீங்கமற நிறைந்திருந்த தண்ணீர் , மின்சாரம் இல்லை மின்சாரம் சார்ந்த அத்தனையும் பயன் இல்லாமல் போனது.

இந்த மூன்று நாட்களிலும் நண்பர்களுடன் நான் நாடோடியாய்

பொழிந்து போன தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிய வளர்ப்பு மீன்கள். வளர்த்தவர்களை மறந்து
மற்றவர்களிடம் பிடிபட்டும். பிடிபடாத மீன்கள் வேறு இடம் நோக்கி விரைந்தது.

இரை தேடி வெளிவந்த உயிரினங்கள்தார் ரோடுகளில் சென்ற ஒரு சில வாகனங்களில் அடிப்பட்டு உடலை விட்டு உயிரை இடம் மாற்றி கொண்டது.

ரோடுகளில் சென்ற மனிதர்கள் இனம் கண்டுக்கொள்ள வைத்த
உயிரினப்பெயர்களை

“பாம்பு செத்து கிடக்கிறது, தவளை செத்து கிடக்கிறது” என திரும்பவும் ஞாபகப்படுத்தி கொண்டார்கள்.

தன்பணி முடித்த மரங்கள் நிம்மதியாய் தலை சாய்த்து படுக்கையில் வீழ்ந்தது.

ஒன்று இரண்டு கடைகள் வியாபாரிகள் திறந்து வைக்க எல்லாவற்றிலும் அவசரப்பட்ட மனிதர்கள் இதிலும் முன்டியடித்து பொருட்கள் வாங்கி தானும் தன்னைச்சார்ந்தவர்களையும் காப்பாற்றினார்கள்.

நாடோடியாய் நான் திரிஞ்சாலும் நேரத்திற்கு வீட்டுக்கு போய் சாப்பிட்டேன். எனக்கு சாப்பாடு போட மற்றவர்கள் இல்லாததால் எனது வீடு நோக்கி நான் போக வேண்டிய அவசியம்.

LinkWithin

Related Posts with Thumbnails