Monday, September 28, 2009

குடும்ப போர்


அவனிடமிருந்து அவனது குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் அடைந்ததாய் நினைக்க போர்கொடி தூக்கினார்கள். வெள்ளைகொடி இவன் தூக்க இல்லை போர்தான் என்று சங்கு ஊதினார்கள்.

மிரட்டல்கள் உருட்டல்கள் துவங்கின ஆனாலும் வெள்ளைகொடியை தாங்கி பிடித்தே நின்றான். இவன் போரி்ல் ஈடுபடுவதற்கான எந்த ஆயுத்தம் செய்யவில்லை சங்கும் ஊதவில்லை.

போரின் முடிவு யார் ஒருவருக்கோ வெற்றியாக முடியும். குடும்ப போரில் பாதிக்கப்போவது இருதரப்பாருடைய மன நிம்மதி தான்.

எதிர்தரப்பிடமிருந்து மிரட்டல் உருட்டல்களும் நின்றபாடில்லை ஆனாலும் இவன் வெள்ளைகொடியை பிடித்தவாறே ஒற்றைஆளாய்..

அன்புள்ள..




















இதுவரை கிடைக்கா தனிமை இன்று கிடைக்க நான் உனை அழைக்கிறேனடா காற்று வாக்கினில் விரைந்து வா என் காதலனே..

இயற்கை அன்னை விரிந்திருந்த பசும்புல்வெளியில் தனிமையில் நான் என் மனது மட்டும் உன் வரவை எதிர்நோக்கியப்படியே காத்திருக்க ஏமாற்றாமல் வந்துவிடு என் காதலனே..

நான் தனிருந்திருந்த போது மர நிழலோட உண்டான எனது சிநேகம் தொடர்ந்துவிடாபடி இருக்க வந்து விடுவாயா என் காதலனே…

நிறைந்திருந்த மௌனபயத்தின் பிடியில் நான் என்பயம் களைய விரைந்து வா என் காதலனே..

அன்புடன்..




Thursday, September 24, 2009

பயம் குழப்பம் செய்யும்.



வீதியின் நீண்ட மௌனம் தூரத்து சத்தமாய் நாயின் குரைப்பு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையேயான ராக்கோழிகளின் சத்தம் இருள் விட்டு வெளிச்சம் காட்டிய விளக்குகள்ஒற்றை ஆளாய் இவனின் பயணம்.

மனது விழிப்புணர்வுடன் வீதியின் இரு ஓரங்களிலும் கண்களால் ஆராய்ந்தப்படி இவனின் பயணம் பயத்துடன் நினைக்க ஆசைகள் ஆயிரம் கவலைகள் ஆயிரம் எதுவும் எண்ணங்களின் பிடியில் சிக்காமல் ஒதுங்கி இருக்க இருள் பற்றிய பயம் இவனில் அதிகம்.

சிறு பூச்சி ஊர்ந்து செல்ல இவனின் மனதில்தேளாய் உருவகம் பெற்று ஒரு நிமிடம் தன் நடைவேகம் குறைத்தான் விளக்கின் வெளிசத்தில் சிறுபூச்சியென தெரிந்துதொடர்ந்த பயணம் மனதில் வீற்றிருந்த இரவின் ஆதிக்கம்.

பயம் குழப்பம் செய்யும்.

LinkWithin

Related Posts with Thumbnails