Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Saturday, December 13, 2014

அப்பா கேட்ட கணக்கு

புள்ள 65000 சம்பளம் வாங்குறான் பெருமையாத்தான் இருக்கு ஆனா நமக்கு ஒன்னும்  ஆவலயே  என்று பையனின் அப்பா புலம்பல்.

என்னப்பா பணம் ஒன்னுமே அனுப்பல....

இருப்பா ஊருக்கு வர்றப்ப பேசிக்கலாம் மகனின் பதில்...

பையன் நல்ல வேலையில் சேர்ந்த பிறகு  உழைக்கும் உடம்பு இருந்தும்  கொஞ்சம் சோம்பல் அடித்தார் . சரியாக கடை திறப்பதில்லை. காலை திறந்து மதியம் மூடி கிடக்கும்.

அவர் கடை நாடி நம்பிசெல்வோர்கள் ஏமாந்து திரும்புவார்கள்.

மகன் தன் கடமை உணர்ந்து கல்யாண வயது தங்கையை நல்ல செலவு செய்து கரை சேர்த்தான்.

வீட்டுக்கும் பணம் அனுப்பி கொண்டிருந்தான்.

அவனுக்கு கல்யாணம் நடந்து குடும்பத்துடன்  வேலை பார்க்கும் இடத்துக்கு தன் மனைவியுடன் குடியிருப்பை மாற்றி கொள்ள மாதம் அவன் அப்பாவுக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் துண்டு விழுந்து.

வேட்டி விழுந்த இடத்தில் துண்டு விழுந்து துண்டும் கோவணமாகி போனது.

அப்பாவுக்கு ஆயிரதெட்டு சிந்தனைகள்  என்னடா  பணம் அனுப்பிய பையன் அனுப்பவில்லையே என்று.

அவருக்கு தெரிந்தவர்களிடம் அவர் பேசாமல் இல்லை.

மகன் வந்தான் ...

அப்பா வீட்டு தவணை  .....கார் தவணை....கரண்ட் பில்....என்று குறிப்பு எழுதி செலவு கணக்குகளை ஒப்படைக்க...

பார்த்தார்..படித்தார்...

அவர் கடை திறக்க எழுந்தார்.

Saturday, May 21, 2011

நடுத்தர வர்க்கம்


நடுத்தரவர்க்கத்தினனாய்  ஓடும் வாழ்வு. சமுதாயகட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டு வாழும்போது பெரிதும் குறுக்கீடாய் அமை வது அவர் அவர்களது சுயமரியாதை.


எதைப்பற்றியும் அலட்டி கொள்ளாத கீழ்தட்டு மக்களாய் இருக்கவேண்டும் அல்லது காசைக்காட்டி வாயைமூடும் பெரும்தனக்காரர்களாய் இருக்கவேண்டும் என்ற நடுத்தரவர்கத்தின் முனுமுனுப்புகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

தன்னுடைய   வழி என்பதைவிடவும் தன்சுதந்திரம்  என்றெல்லாம் பார்க்காது  அருகில் உள்ளவர்கள் என்னசொல்வார்களோ  என்ற மற்றவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பதில் நடுத்தரவர்க்கம் என்றும் நடுத்தரவர்க்கமே…

நட்டத்திலும் துன்பத்திலும் யாரும் பங்கெடுக்கமுன்வரமாட்டார்கள். அவர்கள் வார்த்தை தான் வேதாந்தமாய்  வாதமாய் முன்வை க்கப்படும்  .

எவ்வளவு புரிதல்களோ டு எடுத்து சொ ன்னாலும் அவர்களுக்கு உரிமையுடைகளின் வார்த்தைகள் குப்பை தான்.
இன்றளவிலும் நடுத்தரவர்க்கங்களில்  நடக்கும் குடும்ப சண்டைக்கு மற்றவர்களின் வார்த்தையும் ஒரு காரணம்.

நடுத்தரவர்க்கத்தின் பிரச்சனை  க்கு மிகமுக்கியபங்கு பொருளாதாரம். வரும் வரவு அறிந்து செலவு செய்யதெடங்கினால் இன்றைய சமுதாயத்தின் கவர்ச்சியான அம்சங்களை பாதிக்கு மேல் இழக்கதொடங்கினால் ஏதோ  குடும்ப வண்டியை ஓட்டலாம்.

குடும்பநபர்களின் அவசியங்களும் ஆசைகளும் எவ்வளவு தான் தடைபோடமுடியும் என்றகோண  த்தில் ஒவ்வொரு பிரச்சனையும் அணுக ஆ ரம்பித்தால் நடுத்தரவர்க்கத்தின் கடன் இல்லாத வாழ்வு என்பது ஆச்சர்யம் தான்.

நடுத்தரவர்க்கம் என்பது எப்பொழுதும் ஆச்சர்யமும் அவல மும் நிறைந்த வர்க்கம் தான்.

இன்பங்களும் துன்பங்களும் முழுவதுமாய் அனுபவிக்க கூடிய பக்குவம் படைத்தவர்கள் நடுத்தரவர்க்கம்.

Wednesday, November 03, 2010

பட்ஜெட் தீபாவளி.



நிறைந்த கூட்டம் வேறுவழியில்லை  உள்நுழைந்து மனைவிக்கென ஒதுக்கிய பட்ஜெட்டில் கலர் புடவைகளின் தேடல்  மனதுக்கு பிடித்த கலர்..

இது எடுங்க?

விலை  கேட்டவுடன்  இல்லீங்க  இன்னும் கொஞ்சம் கம்மியா...

சார் கூட்டநேரத்துல வந்து...பட்ஜெட் சொல்லுங்க நான் எடுத்துவரேன்.

சொன்னவுடன் ...

எடுத்து வந்த புடவைகளில்  நல்லதாய் எடுத்துவீட்டிற்கு கொண்டு சொல்கையில் கலர் பிடிக்கவில்லையென்று  சொன்ன மனைவி.

அப்பா இது புடிச்சிருக்கு..

இது வேண்டா தம்பி ..இத எடுத்துக்க..



இரண்டு வருடம் கழித்து போடவேண்டிய துணியை  எடுத்து காட்டிய  அப்பா.

அப்பா வெடியும்    கம்பி மத்தாப்பும் நிறைய  வாங்கிதா.

ஒதுங்கிய பட்ஜெட்டில் ஒற்றை  கம்பி மத்தாப்பும் ஒற்றை   பட்டாசும் நாலு கலர்  தீப்பெட்டியும்.

ஊர்கடையில் போட்டிருந்த     தீபாவளி  ஸ்பெசல் பலகாரம் பாக்கெட் ரூ 50   வாங்கிய இரண்டு பாக்கெட் பலகாரம்.

பெருமூச்சு விட்ட    குடும்ப தலைவர். அப்படா  தீபாவளிய ஓட்டியாச்சு.

Monday, September 20, 2010

சகோதரன்.

மருத்துவரிடம் செல்லவேண்டும்.  கடை  வாடகை   வீட்டு வாடகை  பாக்கி தரவேண்டும்.  வீட்டுல  அரிசி வேற தீரப்போவுது. மளிகை  சாமான்   வேற ஒரு லிஸ்ட் போட்டு வைக்சுருக்கா என் பொண்டாட்டி.

இன்சூரன்ஸ் கட்டியாகனும் வண்டி இன்சூரன்ஸ் முடிஞ்சு போச்சு வண்டி பேக் வீல் டயர் எப்ப  வெடிக்கபோவுதுன்னு தெரியல…

புள்ளக்கு பால்டின் வாங்கியாவுனும்   நெற்றியில்  நகங்களால் கீறியப்படி  ஆழ்ந்து   யோசித்து கொண்டிருந்தான்.

அவனால் முடிந்தவரை போராடி சம்பாதித்தாலும் பற்றாகுறையே வாழ்வாக இருந்தது.  தன் காலி்ல் நிற்கவும் அப்பாவின் சம்பாத்தியம்  அண்ணன்களுக்கு உதவிய அளவுக்கு இவனுக்கு உதவில்லை.

குடும்பத்தின் கடைசிபிள்ளையாக மாட்டியதால் மூத்தவர்கள் தேவை முடிந்து இவன் முறை  வருவதற்குள்  அப்பார் மேல் உலகம்  போய்விட தன்னுடைய அம்மாவை  கவனிக்கும் பொறுப்பும் இவன் தலையில் விழ    சொந்தவளர்ச்சிக்கு  தன்னை உட்படுத்தி கொள்ளாமல் இருந்தான்.

அப்பாருடைய   இறுதி சடங்கு தேவைகள்  முடிந்தவுடன்  தான் உண்டு தன் குடும்பம் என ஒதுங்க இவன்  இவன் அம்மாவும் தனியே...

சில வருடங்கள் அம்மாவும்   இவனை  தனியே விட்டு இறந்து விட  சகோதரிகளால் இவனுக்கு திருமணம் செய்விக்கபட்டது. அண்ணன்கள்  திருமணத்தில் கலந்து க
ொண்டார்கள்.


இவனால் முடிந்தவரை கஷ்டப்பட்டு உழைத்தும் பற்றாகுறை  வாழ்வு தான் நிச்சயம். கொடுத்து உதவ கூட ஆள்கள் கிடையாது.

யோசனையான முகம் நிரந்தரமானது.

யோசனை யாய் தன்னுடைய  கடையில் உட்கார்ந்திருந்தான்.
அவனுடைய  கைப்பேசி ஒலிக்க...

 உம் சொல்லுகண்ணா   .....என்றான்.

என்னய்யா.. என்று விசாரிக்க

அண்ணன் பேசுனாரு...

அவரோட குடும்பத்தோடு கோவிலுக்கு போறாராம்  ஏ.சி.வசதி உள்ள சுமோ   ஒன்று வேண்டுமாம்  டிராவல்ஸ்ல   விசாரிக்க சொல்லுறார் என்றான்.

Friday, March 26, 2010

என்னது நீங்களுமா?

ஒரு வாரமாவது நம்மசைடு பைப்ல தண்ணி வந்து பயங்கர கஷ்டமா இருக்கு.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது குடிக்கவாவதுதண்ணி தூக்கி குடுங்க என்று சொல்ல..

திருவாளர் குடத்தை தூக்கிகொண்டு கிணற்றடி நோக்கி நடந்தார். தெருவில் எல்லோருக்கும் ஆச்சர்யம் சில பேர் பார்த்ததுடன் சரி .. சில பேர் கேட்டார்கள்.

என்னது நீங்களுமா?

திருவாளர் ஏன் ? கேள்வியுடன் கிணற்றடி நோக்கி முன்னேறினார். திருவாளர் கிணற்றடி சென்றடைந்தவுடன் அங்கு அய்யராத்தம்மா ஒருவர் தண்ணி தூக்க வந்தார்.

ஏன்டாப்பா உன் ஆத்துகாரி வாரமாட்டாளோ நீ வந்துருக்க

என்று கேட்க ...

அப்போது தான் புரிந்தது திருவாளருக்கு ஆகா ...நம்ம ஏன் ?ஆச்சரியமாக பார்த்தார்கள் கேட்டார்கள் என்று

நினைத்தவாறு ,அது இல்லம்மா ஒருத்தருக்கு ஒருத்தர்

ஒத்தசையா இருந்துக்க வேண்டியது தான் என்று சொன்னவுடன்

ஆமான்டா கல்யாணம் ஆன பிறகு பொண்டாட்டி சொன்னா அப்படின்னு குடம் தூக்கினஇன்னிக்கு ....

இதுக்கு முன்னாடி ஒரு நாளவாது தூக்கினியடா என்று கேட்க..

சுருக்கென்று தைத்தது திருவாளருக்கு..ஆகா கல்யாணத்துக்கு முன்னாடி குடம் தூக்கமா விட்டாச்சே என்று நினைத்தவாறு நிலைமைய சமாளிக்க வேண்டுமே என்றகவலை . நீங்க வேற அப்ப அக்கா , தங்கச்சி இருந்தாங்க அதனால நாம செய்யல இப்ப யாரு இருக்கா அதனாலதான் நாம செய்யிற மாதிரி இருக்கு என்றவாறு நிரம்பிய நீர் குடத்தை தூக்கியவாறு நடையை கட்டினார்.

தனி மனிதவாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் எவ்வளவு எடை போடப்படுகிறதே என்ற சிந்தனைக்குள்ளனார் திருவாளர்.

Saturday, March 06, 2010

தப்பு தப்பா

வீட்டுல வைந்திருந்த மீன் குழம்பு நல்லா இருந்திச்சு. சாப்பிட சந்தோசமா இருந்திச்சி. குழம்பு வைத்தவர்களுக்கு ஓர் பாராட்டு.

திட்டு வாங்கவும் அவங்க ரெடியா இருப்பாங்க.

அப்படியும் இப்படியும் இருந்ததாங்க மதிக்கிறாங்க. பாருங்க குழம்பு சரியா வைக்கலேன்னு சொல்லாமவ விட்டுட்டு இன்னொரு நாள் சரியி்ல்ல அப்படின்னு சொன்னா..

அன்னிக்கு உப்பு இல்லாம காரம் இல்லாமஇருந்திச்சு

அன்னிக்கு சொல்லல இப்பமட்டும் குறை சொல்றீங்க என்று பேச்சு வேற..

மூடுக்கு தவுந்த மாதிரி நாம பேசுறதாங்க இது. ஜாலியா இருந்தா தப்பு தப்பா தெரியறதே இல்ல அதே இங்க கொஞ்சம் மூடு அப்செட் ஆயிடுச்சுன்னா உர் மேட்டர் தான்.

அவங்களும்யாரும் பண்ணாத தப்ப பண்ணிட்ட மாதிரி இவங்க வாங்கி வச்ச சேர் ஆயிரத்துல இருந்து அம்பது காசுக்கு வந்துட்ட மாதிரி மூஞ்சு போற போக்கு இருக்கே யப்பா..

பேசுறப்ப நிதானமா இருக்கனும் போலிருக்கு நினைச்சிகிட்டே பேச்ச கொறைச்சா ஏங்க கோவமா ங்கிற பீலிங் வேற ..

எது எப்படியா இருந்தாலும் குடும்பத்துல நிதானம் கொஞ்சம் கஷ்டம் இல்ல நிறைய கஷ்டம் தான் போங்க.

இடை இடையே நித்தியானந்தாவுக்கு திட்டு வேற அந்த சாமியாரு பயல பாத்தீங்கிளா எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க ..

ஒரு படி மேல போயி இந்த சன் டீவி காரன் இருக்கான் பாருங்க அய்யோ போட்டுகிட்டே இருகாங்க அந்த கன்றாவிய...

சன் டீவியாம் ...சன் டீவி..

Wednesday, March 03, 2010

நாம்

















சுழற்றி அடிக்கும்

சோதனைக்கு

இடையே குடும்ப

நபர்களின்சந்தோசம்

வேதனைகள்

மறந்த மனது

பிள்ளையின் பிடிவாதம்

மனைவியின் சிரிப்பு

உறவுகளின் பகிர்தல்

காசுக்கான அலைதலில்

காணாமல் போன

குடும்ப அமைதி

காலங்கள் குறுகலாய்

பேச பகிர

நேரமில்லாது அலையும்

உயிர்ப்புகளாய் நாம்

Monday, February 01, 2010

பணம் பணம் என அலைந்து



















மற்றவர் வாழ தன்னையே அழித்துக் கொண்டவர்கள். தங்களது சொந்த வாழ்வில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்றி கொள்ளலாம். ஆனால் அவனைச் சேர்ந்தவர்கள் அவனது கூட்டம் என நினைத்து தன்னையே அழித்து கொண்டவர்கள் அவர்கள்.

தம்பி நன்றாக இருக்க வேண்டும் நினைத்த அண்ணன்களும் அண்ணன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த தம்பிகளும் இத்தகைய உணர்வுகளுக்கு விதை போட்டு பயிராக்கிய பொற்றோர்களும் இருக்கவே செய்தார்கள்.

இன்றைக்கு உள்ள சமுதாய சூழலில் ஒற்றுமை உணர்வுடன் செயல்படும் குடும்பங்கள் மண்ணில் வாழும் சொர்க்கம்.

கூட்டு குடும்பாய் இருப்பதில் சிரமங்கள் இருக்கவே செய்யும் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகவும் பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாக குறையும்.

கால மாற்றங்கள் மனிதனுடைய தேவைகள் அதிமாக தன்னை மட்டுமே நினைத்து பணம் பணம் என அலைந்து தன்னை நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம்.

அதனால் வாய்ப்புள்ள சில மனிதர்கள் மட்டுமே சேர்த்து சேர்த்து தன்னிடம் இருத்திக் கொள்ள நடுத்தரவர்க்கமும் அதற்கு கீழ் உள்ளவர்களும் படும்பாடு சொல்லமுடியாது.

பணம் தான் வாழ்வு என்று மாறிவிட்ட சூழலில் உணர்வுகள் மழுங்கிபோய் மனிதர்கள் வாழ்க்கையை தள்ளவேண்டிய நிர்பந்தம்.

குடும்பம் ஆவது உணர்வாவது இன்றைக்கு சாப்பிட சோறு கிடைத்ததா உடுத்த உடை கிடைத்ததா இன்றைக்கு ஜெயித்து விட்டோம் என கொண்டாட வேண்டிய நிலைமை தான் இன்றைக்கு இருக்கிறது.

தேவைகள் அதிமாக கொண்டே போகிறது மனித உணர்வுகளும் மழுங்கி கொண்டே போகிறது. இது காலத்தின் கட்டாயம்.

Thursday, October 08, 2009

குடும்பம் சுமப்பவன்




















குடும்பம்

சுமப்பவனுக்கு

கோபம் கிடையாது

குடும்பம்

சுமப்பவனுக்கு

உணர்வுகள் கிடையாது

குடும்பம்

சுமப்பவனுக்கு

ஆசைகள் கிடையாது

குடும்பம் சுமப்பவனுக்கு

குடும்பமே கிடையாது

காசு இல்லா

நடுத்தர குடும்பம்

சுமப்பவனுக்கு..

Tuesday, October 06, 2009

ஆளக்கொரு பக்கம்



மிகுந்த சிரமமத்திற்கு இடையே குடும்பத்தை வழி நடத்தினான். ஆகா..ஓஹே..என்று இல்லாவிட்டாலும் பிற மனிதர்கள் குறை சொல்லாத அளவிற்கு குடும்ப நிர்வாகம் செய்தான்.

ஆளக்கொரு பக்கம் வசை பாடவே செய்தார்கள் இவன்பொறுத்துகொள்வான். ஆனால் வந்தவள் உள்ளுக்குள் கோபபட்டாள் இரவானதும் இவர்கள் திட்டினார்கள் உங்களை எப்படி திட்டலாம் என்று கேட்க அவன் படும் சிரமங்கள் அவனுக்கு தெரியும். அதனாலயே இவனுக்கு உள்ளுக்குள் கோபம் கிளம்பும்.

மனைவி மீது எரிந்து விழுவான் ஆமா..நான் எத சொல்ல வந்தாலும் ஏன் என்னகிட்ட பாய்றீங்க..எனக்கு நேரா உங்கள சொல்லறது பொறுத்து கொள்ள முடியல அதனால தான் உங்ககிட்ட சொல்றேன்.

நீ சொல்வது சரிதான் அந்தமாதிரி சொல்லாத புள்ள. நீ சொல்ல சொல்ல அவங்க மேல கோபதான் அதிகம் வரும். குடும்ப உறவுல இதெல்லாம் சகஜம் என்பான். நீ ஊமையா இருந்துக்க வேண்டியது தான் என்று அவள் வாயை மூடினான்.

Monday, September 28, 2009

குடும்ப போர்


அவனிடமிருந்து அவனது குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் அடைந்ததாய் நினைக்க போர்கொடி தூக்கினார்கள். வெள்ளைகொடி இவன் தூக்க இல்லை போர்தான் என்று சங்கு ஊதினார்கள்.

மிரட்டல்கள் உருட்டல்கள் துவங்கின ஆனாலும் வெள்ளைகொடியை தாங்கி பிடித்தே நின்றான். இவன் போரி்ல் ஈடுபடுவதற்கான எந்த ஆயுத்தம் செய்யவில்லை சங்கும் ஊதவில்லை.

போரின் முடிவு யார் ஒருவருக்கோ வெற்றியாக முடியும். குடும்ப போரில் பாதிக்கப்போவது இருதரப்பாருடைய மன நிம்மதி தான்.

எதிர்தரப்பிடமிருந்து மிரட்டல் உருட்டல்களும் நின்றபாடில்லை ஆனாலும் இவன் வெள்ளைகொடியை பிடித்தவாறே ஒற்றைஆளாய்..

Monday, July 06, 2009

அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை


அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை . அந்த வீட்டு தொழில் துணி வெளுத்தல். பெண்கள் நான்கு பேர் ஆண்கள்
இரண்டு. வயதான தந்தை தாய்.

இவளுக்கு கல்யாணம் நடந்தது . இவளுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று கணவன் திடீரென இறந்துவிட்டான் . இவளும்
பிறந்தகம் வந்தாள்.

இங்கு சூழல் ஆண் பிள்ளைகள் இருவரும் சிறியவர்களே. அப்பா சக்தி இருந்த வரையில் பிள்ளைகள் பெற்றுவிடடார். தொழிலுக்கு என கடை வைந்திருந்தார். அப்படியும் இப்படியுமாக குடும்பம் ஓடிவிடும்.

இவள் வந்தாள் கடையை தத்து எடுத்து கொண்டாள். தந்தைக்கு துணிகளை துவைக்கும் வேலையை மட்டும் கொடுத்து கடை வேலைகளை இவள் கவனித்து கொண்டாள்.

வீட்டு நிர்வாகம் கடை நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என அத்துனையும் பார்த்தாள். கடும் உழைப்பு குடும்பத்தை நல்லபடியாக்கினாள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்வித்தாள்.

கண்கெதிரான அவளுடைய கஷ்டங்கள் சந்தித்த அவலங்கள் எந்த மனிதனுடைய கஷ்டமும் அவளுடைய கஷ்டங்களுக்கு முன் சாதரணம் தான்.

இப்பொழுதும் அவள் பிள்ளைகளை வளர்த்து அந்த குடும்பத்துடைய அத்துனை நல்லது கெட்டதுகளை சமாளிக்கிறாள்.

அந்த குடும்பத்தில் அக்கா சொல்லிடிச்சின்னு அதற்கு மறு பேச்சு யாரும் பேச மாட்டார்கள். தன் கணவனை இழந்து நின்றாலும் முடங்கி விடாது தன்னால் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேற்றினாள். காக்கும் தெய்வமாய் இவள்.

Saturday, July 04, 2009

உங்களுக்கு என்ன காரணம்?

அவன் சம்பாதிக்க ஓடி கிட்டே இருப்பான். என்ன எல்லாருக்கும் ஒரே விதமா வாழ்க்கை அமையறது இல்ல அது போல இவனுக்கு அமைஞ்ச வாழ்க்க அந்த மாதிரி ஓடுவான் ஓடுவான் ஓடி கிட்டே இருக்கிறான்.

இன்னொருத்தர் இருக்கார் அவர் வாய் தொறந்து பேசுனாரு நீங்க காசு எடுத்துட வேண்டியதான் உங்க பாக்கெட்லேந்து.. அட ..ஏங்க இப்படின்னு கேட்டா..நீ வேற..
நான் அவசரத்துக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் கிட்ட காசு கேட்டேன் அவன் யாரோ மாதிரி பேசுறான்.

நடுத்தர குடும்பம் அந்த பையன் வயசுல ஓடி சம்பாதிக்கல எப்படியோ குடும்பத்துல அவனுக்கு கல்யாணத்த பண்ணிவக்க பொண்ணு போட்டு வந்த நகை ஆறு மாதம் ஜேரா
ஓடிச்சி அப்புறம் பாக்கணும் இவன் சம்பாதிக்கணும்
சம்பாதிக்கணும் எல்லோருரிடம் ஐடியா கேக்கிறான் என்ன செய்ய..

பெரிய குடும்பம் வருமானம் பத்தல வயசு ஆர்வம் ஆசை எல்லாம் இருக்கும் அத்தனையும் விட்டாதான் நாள காலை அடுப்பு எரியும். அவனுக்குள்ள வாய்ப்பு எங்கிருந்தாலும் ஓடுவான்.

அத வாங்கி கொடுடா ..நான் வாங்கி தர்றேன் நீ எவ்வளோ கமிசன் தர்ற சொல்லு ..பத்து தர்றேன்..பத்தாது ..ஏதாச்சும் சேத்து போட்டு கொடு முடிச்சிடுறேன். எனக்கு தேவை கமிசன் வேல கச்சிதமா முடியும். நான் சம்பாதிச்ச தான் நாலு பய மதிக்கிறான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் ஓடி சம்பாதிக்க.. ஆமா உங்களுக்கு என்ன காரணம்?

LinkWithin

Related Posts with Thumbnails