Wednesday, March 23, 2011
பெண்களே நடத்திய இறுதி ஊர்வலம்
Sunday, November 28, 2010
பெண் பார்க்க போறீங்களா...
Friday, July 16, 2010
மாறும் பெண் தலைமுறை
Monday, April 19, 2010
என்னுடைய பெண் அல்ல அவள்
Monday, April 12, 2010
பெண் பிடிவாதம்
Sunday, November 08, 2009
பெண்-4- அத்தினி

கால்களை உதறி உதறி நடக்கின்ற நடையினையும் மேலுயர்ந்து வளைந்து தடித்த நீண்ட விரல்கள் பொருந்தியுள்ள பாதங்களையும் நடுக்கம் அமைந்த பேச்சினையும் குட்டையான கழுத்தினையும் அடர்த்தியற்று சிதறிய செம்பட்டை மயிரோடு தோன்றும் கூந்தலையும் உடையவள் தீமைபயக்கின்ற இயல்புகளையுடையதான தொழில்களையே எப்போதும் செய்கின்ற வழக்கமும் நாக்குக்கு எரிப்பும் துவர்ப்பும் பெரிதும் விருப்பந்தருவதாயிருக்கின்ற தன்மையும் அவள் உண்பதைகாணும் பிறபாவையர் எல்லாம் அச்சங்கொள்ளுமாறு உண்ணும் இயல்பும் உடையவள். நாணத்தை அறவே கைவிட்ட இயல்பும் உடையவள்.
இது அத்தினி வகை.
Wednesday, November 04, 2009
பெண்-3- சங்கினி

உயரமும் பருமனும் என்றில்லாமல் நடத்தரமாக விளங்குகின்ற அழகுடன் எல்லா உறுப்புகளும் சம நிலையிலே அமைந்து கவர்ச்சி மிகுந்த உடலமைப்பும் நடந்து போகின்ற போது பூமியிலே பதிக்கின்ற காலடிதடங்கள் அகன்று பதியுமாறு செல்லும் நடையும் சிறப்பு மிகுந்த நரம்புகள் புடைத்த மேனியிலே தோன்றுகிற வளமான கட்டுடல் அமைப்பும் கொண்டவள். சமைத்த உணவுகளைக் கூடுதல் குறைதல் இன்றி சம்மாக அருந்தும் தன்மையும் அமைந்தவள்.
சிவந்த மலர்களால் தொடுக்கபட்ட மலர்களையும் சிவந்த நிறம் பொருந்திய ஆடைகளையும்தன் மனத்திலே ஆர்வமுடன் விரும்புகின்ற தன்மையும் கோபப்பட வேண்டாததற்கெல்லாம் அடிக்கடி கோபப்படும் இயல்பும் பொய்ம்மையும் கோட் சொல்லுகையும் கொருந்தியிருக்கின்ற நாவும் உடையவள். வஞ்சகம் பொருந்திய மனத்தினையும் நாளுக்கு நாள் பித்தம் வளர்த்து பெருகும் உடலும் வெஞ்சினகொண்ட கழுதையினைப்போல உரத்துக் கொடூரமாக கத்துகின்ற கடுஞ்சொல்லும் அச்சம் என்பதே சற்றுமில்லாது உள்ளமும் சமூக மரபுகளை மதியாது நடக்கும் தன்மையும் உடையவள்.
இது சங்கினிவகை.
Thursday, October 29, 2009
பெண்-2- சித்தினி

பிடியானைப்போலும் என்று உவமிக்குமாறு நடக்கும் தளர்ந்த அசைந்த நடையும் பெண்மையின் பண்புகள் மிகுதியாக அமைந்திருக்கின்ற பண்பும் மென்கொடி போலத்தளர்ந்து ஓசிகின்ற அழகுமிக்க திருமேனியும் வலம்புரிச் சங்கு போன்று விளங்கும் கழுத்தும் எப்போதுமே நன்மை விளைவிக்க கூடியதான சொற்களை பேசும் இயல்பும் நடனம் இசை ஆகிய கலைகளில் ஈடுபாடும் உயர்ந்த இதழ்களும் உயரமோ குட்டையோ என்று சொல்ல இயலாதபடி நடுத்தரமாக விளங்கும் தோற்றமும் சுருக்கமாக உண்ணும் இயல்பும் இனிமையான சுவைப் பண்டங்களை விரும்பும் விருப்பமும் சித்திர வேலைப்பாடுகளில் நிறைந்த ஆடைகளை விரும்பும் தன்மையும் உடையவள்.
இது சித்தினி வகை.
Tuesday, October 27, 2009
பெண் -1- பத்மினி

பெண்களில் நான்கு வகை பத்மினி , சித்தினி , சங்கினி , அத்தினி என்று வகைப்படுத்தபட்டுள்ளனர்.
செண்பக மலரோ என்று சொல்லும்படியான சிவந்த மேனி வண்ணமும் பண்பட்ட சொற்களையே பேசும் இயல்பும் எப்போதும் பொய்மையே கலவாத வாய்மையும் பிறர் கண்பார்வையிலே வீழ்ந்தரியாத கானகத்து மானைப்போன்ற மிரண்ட சுபாவமும் உடைய மாதர்கள்.
அறிவழகு உடையவரான சான்றோரையும் வேதசாஸ்திர விற்பன்னர்களையும் பல பல தேவர்களையும் உள்ளத்து அன்புடன் பணிந்து போற்றும் பக்தியும் எள்ளுச் செடியிலே விளங்கும் புத்தம்புது மலர் போன்று விளங்கும் மூக்கினையும் நடைபழகும் பிள்ளைப்போல வெள்ளையன்னம் போன்று தளர்ந்தசையும் நடையும் வெண்மையான மெல்லிய ஆடைகளிலும் வெண்மையான மலர்களிலும் விருப்பம் தூயதும் இனிய சுவை நிறைந்ததுமான உணவினைச் சிறுகவே உண்ணும் இயல்பும் ஒளிரும் வாள் போன்ற ஒளி வீசும் நெற்றியுடையவள்.
இது பத்மினி வகை.
Saturday, July 25, 2009
ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே..
தகுதி - கான்பூர் IIT யில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.
வேலை - அமெரிக்கா பென்சில்வேனியா
செய்த குற்றமாக சொல்லபடுவது - 13 வயது பள்ளி சிறுமியைபாலுறவுக்கு அழைத்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால்- 20 ஆண்டு சிறைவாசம் 12.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
சார்..அவங்களா வந்தா அவங்க விருப்பம் நீங்க கூப்பிட்டா அது வன்முறை.
படித்தவர்கள் சிலபேர் கழனி பானைக்குள் கையை விடும் சமாச்சாரம் இதுதாங்க.
என்ன பன்னறது ஒவ்வொரு மனிதனோட தலையெழுத்த மூளை நிர்மாணிக்கல காலம் தான் சார் நிர்மாணிக்குது.
Monday, July 06, 2009
அவள் தான் அந்த வீ்ட்டு ஆம்பிள்ளை

இரண்டு. வயதான தந்தை தாய்.
இவளுக்கு கல்யாணம் நடந்தது . இவளுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று கணவன் திடீரென இறந்துவிட்டான் . இவளும்
பிறந்தகம் வந்தாள்.
இங்கு சூழல் ஆண் பிள்ளைகள் இருவரும் சிறியவர்களே. அப்பா சக்தி இருந்த வரையில் பிள்ளைகள் பெற்றுவிடடார். தொழிலுக்கு என கடை வைந்திருந்தார். அப்படியும் இப்படியுமாக குடும்பம் ஓடிவிடும்.
இவள் வந்தாள் கடையை தத்து எடுத்து கொண்டாள். தந்தைக்கு துணிகளை துவைக்கும் வேலையை மட்டும் கொடுத்து கடை வேலைகளை இவள் கவனித்து கொண்டாள்.
வீட்டு நிர்வாகம் கடை நிர்வாகம் கொடுக்கல் வாங்கல் என அத்துனையும் பார்த்தாள். கடும் உழைப்பு குடும்பத்தை நல்லபடியாக்கினாள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்வித்தாள்.
கண்கெதிரான அவளுடைய கஷ்டங்கள் சந்தித்த அவலங்கள் எந்த மனிதனுடைய கஷ்டமும் அவளுடைய கஷ்டங்களுக்கு முன் சாதரணம் தான்.
இப்பொழுதும் அவள் பிள்ளைகளை வளர்த்து அந்த குடும்பத்துடைய அத்துனை நல்லது கெட்டதுகளை சமாளிக்கிறாள்.
அந்த குடும்பத்தில் அக்கா சொல்லிடிச்சின்னு அதற்கு மறு பேச்சு யாரும் பேச மாட்டார்கள். தன் கணவனை இழந்து நின்றாலும் முடங்கி விடாது தன்னால் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேற்றினாள். காக்கும் தெய்வமாய் இவள்.


