Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Saturday, October 24, 2015

சட்டை

தீபாவளி நெருங்கிவிட்டது.

வருடம் வருடம் தீபாவளி சமயத்தில் மட்டும் சட்டை பற்றிய குழப்பங்கள் நிறையவே வரும்.

குறைந்த விலையில் தரமான சட்டை எங்கு கிடைக்கும் ?

இதுதான் குறிக்கோள்.

ரோட்டில்  வண்ணசட்டைகளை டூ வீலர் வியாபாாி விற்றுசெல்ல மாத்துக்கு போட்டுகலாம்  என்று அவரிடம் பேரம் பேசி வாங்கிய சட்டையின் விலை ரூபாய் ஒரு நுாறு மட்டும்  இரண்டு வருடங்கள் மேலாகியும் இன்னமும் உழைப்பில் இருக்கிறது.

இதெல்லாம் போட்ட சமுதாயத்தில் மதிப்பு கிடையாதுப்பா...

பெரிய  கடையில போயி பெரிய பிராண்ட் சட்டை எடுத்தா மதிப்புன்னு சொன்னாங்க...

பெரிய பிராண்ட் சட்டை பற்றிய   உண்மைகளை இணையத்தில் தேடினால் அப்படி இப்படி செலவெல்லாம் சேத்தாலும்  ரூபாய் 500 க்கு மிகையாகது  ரூ 1700 கொடுத்து சட்டை வாங்கினீங்கன்னா ரூ 500 போக பாக்கி பணம்  எதுக்கு கொடுக்கிறீங்க நீங்க  புரிச்சிக்க வேண்டியதுதான் சொல்ல..

குழப்பம்...விசாரிக்கிறேன்..விசாரிக்கிறேன்.

ஆனாலும் வியாபார  தத்திரங்களின் கவர்ச்சி பிராண்ட் மனதை ஈர்க்கிறது.

பெரியகடைகளில் நிற்கும்  பல்லாயிர மனிதர்களில் ஒருவனாய்  கண்கூசும் விளக்கொளியில்  எனக்கான  சட்டைகளை  தேடுகிறேன்.

பிடித்த சட்டை வாங்கி கடையின் படிகளை விட்டு இறங்கி  தெருவை கடக்க
தெருவியாபாரி சட்டை விற்கிறார் ...

லைட் செலவு இல்லீங்கோ...

விளம்பர செலவு இல்லீங்கோ....

ஏ.சி. செலவு இல்லீங்கோ...

ஆட் செலவு இல்லீங்கோ...

அதனால சட்டையின் விலை  200 தாங்கோ...

பல்வேறு நிறங்களில் அளவுகளில் சட்டை அடுக்கி  வைக்கப்பட்டிருக்க...

நான் வாங்கிய சட்டை என்னை பார்த்து சிரித்தது.



Monday, November 08, 2010

இது எங்கள் தீபாவளி.

மாடும் மனிதரும் குளிக்கும் பொதுகுளத்தில்  எண்ணெய் தேய்த்து குளித்தலில் தொடங்கிய      தீபாவளி.

குளத்து அரசமரத்தடியில்  மிக்சர்  பாக்கெட் ஒருபீர் ஒரு குவாட்டர்ரெண்டு காளி பிளாஸ்டிக் டம்ளர் மூன்று வாட்டர்பாக்கெட்  பல் இளித்த   எங்கள்  ஊரில் வசிக்கும் ராஜ கம்பளத்தார் பையன்கள்.

அறிமுகம் ஆனாதல்   எண்ணா  இன்னிக்கு     தீபாவளி அதான் காலையிலே ?

நீ குடிக்கிறியா?

  பதில் சொல்லாது  பல் இளித்தலுடன் நான்.

குடிச்ச பாட்டில  ஒடைச்சு போடாது ஓரமா போட்டுட்டு போங்க  என்ற ஒரு வேண்டுகோளுடன்  விடுவித்து   கொள்ள
அப்புறம் என்ன செய்தார்கள் என்று தெரியாது வீடு நோக்கிய பயணம்.

எங்கள் வீட்டிலும்  தீபாவளி  தெரிய  கடமைக்கு வெடித்த பட்டாசுகள்  பட….ப்பட..பட  என  வெடித்தலில் குறை  இல்லை தான்.

வாழை  இலை பரப்பி வைத்த  எண்ணெய் பலகாரங்கள்  ஒதுக்கி இட்லியை ம ட்டும்   உட்கொண்டு எழுந்திருக்க  

ஏன் பலகாரம் பிடிக்கலையா ?  என வீட்டாரின் பதிலுக்கு இன்றைக்கு எதுவும் பிடிக்காது  என்று சொல்லி இடம் நகர்ந்தேன்.

நண்பர்களுக்கு போன் செய்து ஓர் இடம் கூடச்சொல்லி வண்டிக்கு இருவராய்  பக்கத்து  ஊரில் உள்ள பிரசித்த பெற்ற  கோவிலுக்கு   சென்று அரட்டை அடித்தது. 


மதிய சாப்பாட்டிற்குள் திரும்பி அவர் அவர்  வீட்டிற்கு  செல்ல  மாலையில் இங்கு கூடுவோம் என்று ஒரு நண்பர் கடையை குறிப்பிட்டு விட்டு  கலைந்தோம்.





இரவு  7.30 நண்பர் கடையில் ஒன்று கூடி டீ குடித்து  நண்பர் கொண்டு வந்த மத்தாப்பு  அயிட்டங்களை  ஆளக்கொன்றாய்  பத்த  வைத்த மத்தாப்புகள்  எங்கள்    தீபாவளி ஹைலைட்.

இரவு பத்து மணி   வரை அரட்டை பேசி   கலைந்ததுடன்  எங்கள் தீபாவளி முடிவு பெற்றது.

Wednesday, November 03, 2010

பட்ஜெட் தீபாவளி.



நிறைந்த கூட்டம் வேறுவழியில்லை  உள்நுழைந்து மனைவிக்கென ஒதுக்கிய பட்ஜெட்டில் கலர் புடவைகளின் தேடல்  மனதுக்கு பிடித்த கலர்..

இது எடுங்க?

விலை  கேட்டவுடன்  இல்லீங்க  இன்னும் கொஞ்சம் கம்மியா...

சார் கூட்டநேரத்துல வந்து...பட்ஜெட் சொல்லுங்க நான் எடுத்துவரேன்.

சொன்னவுடன் ...

எடுத்து வந்த புடவைகளில்  நல்லதாய் எடுத்துவீட்டிற்கு கொண்டு சொல்கையில் கலர் பிடிக்கவில்லையென்று  சொன்ன மனைவி.

அப்பா இது புடிச்சிருக்கு..

இது வேண்டா தம்பி ..இத எடுத்துக்க..



இரண்டு வருடம் கழித்து போடவேண்டிய துணியை  எடுத்து காட்டிய  அப்பா.

அப்பா வெடியும்    கம்பி மத்தாப்பும் நிறைய  வாங்கிதா.

ஒதுங்கிய பட்ஜெட்டில் ஒற்றை  கம்பி மத்தாப்பும் ஒற்றை   பட்டாசும் நாலு கலர்  தீப்பெட்டியும்.

ஊர்கடையில் போட்டிருந்த     தீபாவளி  ஸ்பெசல் பலகாரம் பாக்கெட் ரூ 50   வாங்கிய இரண்டு பாக்கெட் பலகாரம்.

பெருமூச்சு விட்ட    குடும்ப தலைவர். அப்படா  தீபாவளிய ஓட்டியாச்சு.

LinkWithin

Related Posts with Thumbnails