Showing posts with label திருவிழா. Show all posts
Showing posts with label திருவிழா. Show all posts

Monday, March 21, 2011

பங்குனி உத்திரம்



பொங்கல் செலவு முடிந்தவுடன்  பத்துநாட்களில் கும்பாபிஷேகம் வரச் செலவு 48 நாட்கள் மண்டாலபிஷேகம் முடிந்து இரண்டு நாட்களில் பங்குனி உத்திர செலவு.

நடுத்தர வர்க்கத்திற்கும்  கீழ்தட்டு மக்களுக்கும் அவசியமில்லாத திருவிழா  ஆ னால் வரும் நாளில் வந்து உற்சவம் கொ ண்டாடிய  முருகன்.

கோவில் புண  ரமைக்கும் பணி பத்துவருடங்களாக நடைப்பெற்றதால் சாமி வீதிக்கு வரமுடியாது  அவர் வீட்டினுள் இருக்க  இந்த வருடம் தான் அ ருள் பாலிக்கும் தகுதியடைந்தார். பக்தர்களுக்கு எல்லோ ருக்கும் காட்சி தந்து ஆ ச்சரியப்படுத்தினார்.

காலை  மதியம் அ வ்வளவாக கூட்டம் இல்லை  மாலையில் கூட்டம் தெரிய  திருவிழா களை க்கட்டியது.

பூக்கள் விற்பனைக்கு..

கடைத்தெரு

அடையாளம்

கிராமத்து ஸ்பெசல்

திறந்தவெளிகடையும் பிழைப்பும்

தப்பு

காவடி

ஓய்வின் போது..

பலூன் சிறுவன்

அலங்காரமாய் சாமி

அருள்செய்ய தயார்.

மணிகள் விற்பனைக்கு..

மாலை சூரியன்

ஒருநாள் பிழைப்பு

ஊர் கோவில்

வேடிக்கை சிறுவன்.

பூக்கள் விற்பனைக்கு..

Thursday, January 27, 2011

சிவாச்சாரியார்களின் குசும்பு கும்பாபிஷேகம்.


கிட்டதட்ட  65    ண்டுகளுக்கு பிறகு நடந்த   குடமுழுக்கு   நீராட்டு விழா.   ஏற்கனவே குடியிருந்த  சிவன் , சிவன் பொ ண்டாட்டி சௌ  ந்தரநாயகி, தொ ந்தி கண பதி, ரெண்டு பொ ண்டாட்டிகாரர்  சிவன் மகன் முருகன் அ ப்புறம்  சனி கோ ள்காரர் இ வர்களுடன் நவ க்கிரக கோள்காரர்கள் , துர்கை , குரு தெட்சிணாமூர்த்தி புதிததாக குடியேறினார்கள்.
ஏற்கனவே குடியிருந்தவ ர்களுக்கு  அ வ்வப்போ து விள க்கு எரியாது இ ருளில் முழ்கிவிடுவார்கள்.  இதில் புது குடியேறி களுக்கு என்ன நிலைமை ஆகப்போகிறதோ  எதிர்காலத்தில் தான் தெரியும்.
சாமிய குளிப்பாட்டுற ஆசாமியே  அ ப்ப அப்ப சாமிய  குளிப்பாட்ட மறந்துருவாரு… எதித்து கேக்க ஆ  சாமி அவ ங்க  கல்லு தானே… கட்டாயம் காசு வரும் கல்லுக்கு குளிப்பாட்டி    பூ வச்சு  பொட்டு வச்சு முதல் மரியாதை   உண்டு.
யாக ச்சாலை    பூசையின் இரண்டாவது நாள்.அக்கினி குண்டங்களை  சுற்றி சிவாச்சாரியார்கள் உட்கார்ந்திருக்க ஒரு சிவாச்சாரியார்  மை க் பிடித்து மந்திரம் சொ ன்னார்.  இ டையே ..இடையே..   கீழே குனிந்தப்படி மந்திரங்களை   வாய் சொ ல்ல கை ஏதோ  செய்ய 
என்னடா  கிட்டக்க போய் பார்க்க சாம்சங்  டச் போனில் யாருக்கோ    கால் செய்து தொ டர்பு கிடைக்கிறதா என்பதை  ஆராய்ந்து கொண் டிருந்தார்.
யாகச்சாலை க்குள் இ ருந்த சிவாச்சாரியார்களில் ஒரு சிலரை தவிர   சிரிப்பும் பேச்சுமாய் அ க்கினி குண்டங்களில் எதை  எதையோ  ஊற்றி கொ ண்டிருந்தார்கள்.
கும்பாபிஷேகம் என்பது என்ன?
இ தையெல்லாம்  தாண்டி முள்ள மாரி  முடிச்ச அவிக்கி  சிவாச்சாரியார்களுக்கு  ஆளுயர மாலை  ப் போ ட்டு தாரை தப்பட்டை முழங்க யானை  முன் நடக்க கிராம  வீதிகளில் ஊ ர்வலம் வேறு.
உண்மையிலே இது கலியுகம் தாங்க….

Monday, November 08, 2010

இது எங்கள் தீபாவளி.

மாடும் மனிதரும் குளிக்கும் பொதுகுளத்தில்  எண்ணெய் தேய்த்து குளித்தலில் தொடங்கிய      தீபாவளி.

குளத்து அரசமரத்தடியில்  மிக்சர்  பாக்கெட் ஒருபீர் ஒரு குவாட்டர்ரெண்டு காளி பிளாஸ்டிக் டம்ளர் மூன்று வாட்டர்பாக்கெட்  பல் இளித்த   எங்கள்  ஊரில் வசிக்கும் ராஜ கம்பளத்தார் பையன்கள்.

அறிமுகம் ஆனாதல்   எண்ணா  இன்னிக்கு     தீபாவளி அதான் காலையிலே ?

நீ குடிக்கிறியா?

  பதில் சொல்லாது  பல் இளித்தலுடன் நான்.

குடிச்ச பாட்டில  ஒடைச்சு போடாது ஓரமா போட்டுட்டு போங்க  என்ற ஒரு வேண்டுகோளுடன்  விடுவித்து   கொள்ள
அப்புறம் என்ன செய்தார்கள் என்று தெரியாது வீடு நோக்கிய பயணம்.

எங்கள் வீட்டிலும்  தீபாவளி  தெரிய  கடமைக்கு வெடித்த பட்டாசுகள்  பட….ப்பட..பட  என  வெடித்தலில் குறை  இல்லை தான்.

வாழை  இலை பரப்பி வைத்த  எண்ணெய் பலகாரங்கள்  ஒதுக்கி இட்லியை ம ட்டும்   உட்கொண்டு எழுந்திருக்க  

ஏன் பலகாரம் பிடிக்கலையா ?  என வீட்டாரின் பதிலுக்கு இன்றைக்கு எதுவும் பிடிக்காது  என்று சொல்லி இடம் நகர்ந்தேன்.

நண்பர்களுக்கு போன் செய்து ஓர் இடம் கூடச்சொல்லி வண்டிக்கு இருவராய்  பக்கத்து  ஊரில் உள்ள பிரசித்த பெற்ற  கோவிலுக்கு   சென்று அரட்டை அடித்தது. 


மதிய சாப்பாட்டிற்குள் திரும்பி அவர் அவர்  வீட்டிற்கு  செல்ல  மாலையில் இங்கு கூடுவோம் என்று ஒரு நண்பர் கடையை குறிப்பிட்டு விட்டு  கலைந்தோம்.





இரவு  7.30 நண்பர் கடையில் ஒன்று கூடி டீ குடித்து  நண்பர் கொண்டு வந்த மத்தாப்பு  அயிட்டங்களை  ஆளக்கொன்றாய்  பத்த  வைத்த மத்தாப்புகள்  எங்கள்    தீபாவளி ஹைலைட்.

இரவு பத்து மணி   வரை அரட்டை பேசி   கலைந்ததுடன்  எங்கள் தீபாவளி முடிவு பெற்றது.

Sunday, March 28, 2010

பங்குனி உத்திர திருவிழா




















ஊரின் ஒதுக்குபுறமாய் உள்ள அந்த முருகன்கோவிலில்

பங்குனி உத்திர திருவிழா நாளைக்கு நடக்கவிருக்கிறது.

ராட்டினகாரர்கள் ஊரினுடைய சிறுவர் ,சிறுமியர்களின் காசை காலிபண்ணி கொண்டிருந்தார்கள்.

கடைவிரிப்பவர்கள் தனக்கான இடத்தைகம்புகள் கட்டி பதிவு செய்தார்கள்.வளையல் விற்பனை வண்டியும் காரம் இனிப்பும் விற்பனைவண்டியும் தன்வருகையை பதிவு செய்தது.

திருவிழா பிரசித்தம் இனிப்பு கலர் பானமும் கலர் பாயசமும் விற்பதற்கான மேசை அதற்குரிய இடத்தில் தன் இருப்பை பதிவுசெய்ய திருவிழாவின் காலையை எதிர்பார்த்து கொண்டிருந்தது.

நான்கு ஆண்கள் ஐந்து பெண்கள் நான்கு சிறுவர்கள் என நறிகுறவர் பட்டாளம் வந்திறங்கியது. வந்தவுடன் தன் உடைமைகளை இறக்கி வைத்து குழுவாய் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

திறந்தவெளி சமையல் முடிந்தவுடன் வட்டமாய் உட்கார்ந்து ஆடு-புலி ஆட்டம் தொடங்கியது.

ஏ...அஞ்சு கேளு....

தாயக்கட்டை உருட்டியவர் அஞ்சு...அஞ்சு... என சொல்லியவாறு கட்டைகளை தரையில் உருட்ட எல்லோருடைய பார்வையும் கட்டைகளின் மேல்

நான்கு என்று சொல்ல....

அய்யோ..

ஒரு சேர குரல் உயர்ந்து அந்த இடத்தை கலகலப்பாக்கி கொண்டிருக்க சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக வெள்ளையும் சொல்லையும் அணிந்திருந்தவர்கள் இவர்களின் சந்தோசத்தை பார்த்து பொறமைபட..

வாழ்க்கையின்னா இப்படிதான் இருக்கனும்என அங்கலாயத்து கொண்டார்கள்.

பல்வேறு மனிதர்கள் பல்வேறுவிதமான சிந்தனைகள் என

அந்தஇடம் அல்லகோலப்பட திருவிழாவின் நாயகன் முருகனுக்கு என்ன சிந்தனையோ தெரியவில்லை அவர்மட்டும் மௌனமாய் அமர்ந்திருந்தார்.

கோவிலின் அய்யர் மட்டும் அவ்வப்போது அவருடைய இடத்திற்கு போய்வந்தார்.

LinkWithin

Related Posts with Thumbnails