Thursday, February 25, 2016

காலை உணவும் தொட்டுக்கையும்

அட..என்னப்பா இது சக்கரபொங்கலா..வயிறு நிறையச் சாப்பிடமுடியாதே தெவட்டுமே..


என்ற அங்கலாய்ப்புடன் தொடங்கிய காலை உணவு.



ருசியாய் பாிமாறப்பட்ட சக்கரைப்பொங்கல்  சாப்பிடும்பொழுதே தெவிட்டியது.

கொத்தமல்லி துவையல் தொட்டுகிட்டு சாப்பிடுங்க தெவிட்டாது அன்பான வேண்டுகோளினால் முதல் முறையாகத் துவையலை தொட்டு க்கொண்டு சாப்பிட மீதமிருந்த சக்கரை பொங்கலும் உள்ளேபோனது.

அட..உன் யோசனை  நல்ல யோசனையாத்தான் இருக்கே... பாராட்டினேன்.

நீங்க வேற ..இன்னும் சில வீட்டுல கூட்டு இல்லாம சக்கரை பொங்கலே கிடையாதுங்க..

அப்படியா..

சாப்பாடு எவ்வளவோ முக்கியமோ அதேமுக்கியம் தொட்டுக்கைக்கு உண்டு.


நடுந்தர குடும்பம் எங்கள் வீடுகளில் கோடை ஆரம்பித்துவிட்டாலே பழைய சோறு தான் காலை உணவு அதற்கு தொட்டுக்கை சின்ன வெங்காயம் வறுத்த மோர்மிளகாய் கருவட துவையல் மிளகாய் துவையல் அச்சு வெல்லம் பாதி வருத்த கடலை என தினம் ஒன்றாய் பட்டியல் நீளும்.


வந்த தொட்டுக்கையே ஒரு நாள் விட்டு மறுநாளும் வந்தால் வம்பு நிச்சயம்.


குளிர்காலங்களில் காலை சாப்பாடு பெரும்பாலும்இட்லி தோசை   அவ்வப்பொழுது சப்பாத்தி பூரி சுடுசாதம்
இட்லி தோசை தொட்டுக்கை என்றாலே மிளகாய் துவையல்  தேங்காய் சட்னி  நல்லெண்ணெய் ஊற்றிய இட்லி ப்பொடி அரிதாக கடப்பா என்கிற சாம்பார் வெரைட்டி.

இப்படியாக  மதிய சாப்பாடு தொட்டுக்கை பற்றி எழுத நினைக்கிறேன் பார்க்கலாம்.


Wednesday, February 24, 2016

அம்மா பொறந்த நாளும் அஇஅதிமுக-வும்

நேற்றைய தினசரிகளில்  ஆளும் முதல்வருக்கு எதிராக திமுக கொடுத்த விளம்பரங்கள்  ஹாட் என்றால் அதிமுக தரப்பு கொடுத்த வாட்ஸ் அப் பதிலடியும் ஹாட்...
அகவை -68


பேருந்து நிலையம் பகுதிகளில்  வாழ்த்துகள் தெரிவித்த ப்ளக்ஸ் பொிது பெரிதாய் கட்டப்பட ...

காலையில் எங்கள் ஊர் கோவில் வாசலில் வாகனங்கள்  அதிகமாய் நின்றது .
என்ன விசேசம் என்று போய் பார்க்க ..அட...அம்மா பொறந்தநாளுக்கு ஊரு ஒன்றியம் நகரம் கவுன்சிலருன்னு அம்மாவுக்காக எல்லாரும் சாமி கும்பிட்டாங்க..

பூசை முடிஞ்சது வாகனங்கள் புறப்பட்டது.

அஇஅதிமுக கொடிமரங்கள்  இருந்த இடங்களில் எல்லாம் அதாங்க முச்சந்தி நாற்சந்திகளில் எல்லாம் இயக்க ப்பாடல்களை ஒலி பரப்பி  ஒன்றியம் கொடி ஏற்றினார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் சத்தம் குறைந்து இயக்கப் பாடல்கள்  நின்றுவிட...வெயில் தாக்கம் நின்றவர்களும் ஓடிப்போனார்கள்.

அம்மா பொறந்த நாள் முடிவுக்கு வந்தது.

அஇஅதிமுக கொடி பறக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails