Monday, April 11, 2016
Thursday, April 07, 2016
வை .கோ -நாவன்மை
இரண்டு நாட்களாய் ஊடகங்களுக்கு வை.கோ போட்ட தீனி அவரது உணர்ச்சி வசப்படலில் வெளிவந்த வார்த்தைகள்.
உளறுகிறார் என்று விசயகாந்தை சொல்வார்கள். வை.கோ வை சொல்ல நாட்கள் வெகு தூரமில்லை என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.
தி்மு.க வில் இருக்கும்போது தஞ்சை திலகர் திடலில் வை.கோ பேசுகிறார் என்றால் எங்கள் ஊர் இளவட்டங்கள் பஸ் ஏறி சென்று கேட்பார்கள்.
அவரது நாவன்மை அவரை அடையாளப்படுத்தியது என்பது தான் உண்மை.
இன்று எங்கே போனது..??!!
அரசியல் எதிரி தி்.மு.க என்று ஆனபிறகு அவர்கள் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் எத்தகைய தந்திரத்தையும் பயன்படுத்தலாம் . எதிர்ப்பவர் நிதானத்தில் தான் அவருடைய வெற்றி.
அத்தகைய நிதானம் வைகோவிடம் எங்கே போனது..???
மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய அவரது ஆளுமை...அவரது பேச்சினால் ஒன்றுமே இல்லாத கூட்டணியாகி விடக்கூடாது என்பதில் தான் அவருடைய முழுகவனமும் இருக்கவேண்டுமே தவிர அவசரப்பட்டுக் கொட்டும் வார்த்தைகளில் அல்ல..
ஆகா...எப்படியோ திராவிட கட்சிகளுக்கு எதிரான சரியான போட்டியாக மக்கள் நலக் கூட்டணியை தமிழக மக்கள் மனதில் விதைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் வைகோவின் நாவன்மை செயல்பட வேண்டும்.
பார்க்கலாம்....
Tuesday, April 05, 2016
Subscribe to:
Posts (Atom)


