Thursday, April 27, 2017

வசந்தமும் வறட்சியும்

கோடைக்கால காலை பயணங்கள்  5.30 மணிக்கு தொடங்கும் சில நாட்களில் 6 மணிக்கு தொடங்கும் சாலையோர மரங்களின் புதிய பூக்கள் என்னை வரவேற்கும் .

பக்கத்து கிராமங்களி்ன் ஆள் அரவமற்ற சாலைகள் அவ்வப்போது தென்படும் முதிர்ந்த முண்டாசுகள் அர்த்தபுஷ்டியின் கூடிய பார்வையில் யார் இந்த புதுமுகம்? என்ற கேள்விகள் தொக்கி நிற்க சிறிய புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவேன்.

காலைப்பனி குளிர்ந்த காற்றில் உடம்பும் மனமும் சில்லிட  அதிக சில்லிப்பாய் காற்று வீச சாலையின் இருமங்கிலும் பச்சை விரியும். போர்வெல் பாசன நடவில் குறிப்பிட்ட பகுதியின் பசுமை வறட்சியில் வசந்தம்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் எனது இருசக்கர வாகனம் முன்னேறி செல்லும் பல்வேறு பறவைகளின் சத்தம் எப்போதாவது கடந்து பேருந்தின் இரைச்சல் இளைஞர்களின் காலைநேர இருசக்கர விரைவு பயணம் சிறுவர்களின் சைக்கிள் சவாரி எல்லாமே இசைதான்.

குளிர்நத காற்றில் உடலும் உள்ளமும் லேசாகும் வரை இலக்கு தெரியாத பயணமாய்  எனது வாகனம் பயணிக்க இயற்கையில் தான் எனைக் கரைக்கிறேன்.

செல்லிடைப்பேசியின் அழைப்பு மணி ஒலிக்க திரைப்பார்த்தால்  இல்லாள்  எனை அழைக்க ..

இருக்கும் மனநிலைக்கு தகுந்தவாறு  என்குரல் ஒலிக்கும் .

சொல்லும் சொல்லின் பதம் அறிந்து மனநிலையை படிக்கும் என் மனைவியின் குறிப்பறிந்து பயணம் முடியும் .

பயணம் தொடரும்....

Wednesday, January 18, 2017

யார் அவர் யாரோ...!!??

இரு பெரும்கழங்களின் தலைகள் இல்லா புதிய தமிழகம்.

புதிய தலைமைகளின் கீழ் இரு பெரும்கழங்கள்  .

தமிழக அரசியல்களம் நொண்டுகிறது.

புதிய தி.மு.க தலைமை தன்னுடைய அரசியல் அனுபவத்தினால் செயல்தலைவராய் முன்னிறுத்திக் கொள்ள...

அ.தி.மு.க வின் புதிய தலைமை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தடுமாறுகிறது.

பகட்டு அரசியல் வெற்று வாதங்களும் இனி தமிழகத்தில் எடுபடா சூழலில் தமிழக மக்களின் துயர் களைய...தமிழக முன்னேற்றத்தில் பங்கெடுத்து செல்லும் ஓரு புதிய தலைமையின் தேவை தமிழகத்திற்கு அவசியம்

Friday, May 27, 2016

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து என்ன பயன்?- தமிழக அரசுக்கு நீதிபதிகள் 5 கட்டளை- பகிர்வு

"அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 'உலகத் தமிழ் மாநாடு' நடத்துவதால் என்ன பயன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழ் மொழியை அஞ்சல் வழியில் உலகம் முழுவதும் பரப்புவது தொடர்பாக 5 கட்டளைகளை பிறப்பித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ஆர்.லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ் 'செம்மொழி' அந்தஸ்து பெற்று தன்னிகரில்லாத மொழியாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை தவிர வேறு மாநிலத்தில் தமிழ் தெரிவதில்லை. மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.50, ரூ.200 கட்டணத்தில் இந்தி மொழியை இந்தியா முழுவதும் அஞ்சல் வழியில் போதித்து வருகிறது. அதுபோல தமிழையும் சலுகைக் கட்டணத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ரூ.37.36 லட்சம் நிதி ஒதுக்கீடு கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழை வளர்க்க, உலகம் முழுவதும் பரவச் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பயன்?
முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாம் நூற்றாண்டில் தோன்றியது என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 11 ஆயிரம் ஓலைச் சுவடிகள் தமிழ் தொன்மை வாய்ந்த செம்மொழி என்பதற்கு கூடுதல் ஆவணங்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிஜி, மியான்மர், ஆப்பிரிக்கா, மாலத் தீவுகள், அமெரிக்கா என தமிழ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் தமிழ் மொழி பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லை.
ஹரியாணா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தமிழ்தான் இரண்டாவது அலுவல் மொழியாக கடந்த 2010 வரை இருந்துள்ளது. தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
எனவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்.
மாநில அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை யுடன் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் நிதி ஒதுக்க வேண்டும். தமிழறிஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பல் கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தமிழை சலுகை கட்டணத்தில் உலகம் முழுவதும் கொண்டு செல்ல கோரியுள்ள நிதி ஒதுக்கீட்டை உடனடியாக செய்து கொடுத்து, மனுதாரரின் கோரிக்கையை 12 வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

நன்றி- தி இந்து

LinkWithin

Related Posts with Thumbnails